Total Pageviews

Friday, August 10, 2018


தேசியக்குழுவின் நிலைக்குழு

கூட்டமும் - முடிவுகளும்

நமது தேசியக்குழுவின் (NJCM) நிலைக்குழு கூட்டம் 08-08-2018 

அன்று டெல்லியில் நடைபெற்றது. இக் கூட்டத்தில் ஊழியர் 

தரப்பு உறுப்பினர்களாக உள்ள NFTE மற்றும் BSNLEU 

சங்க உறுப்பினர்கள் பங்கேற்றனர். தேசியக்குழு கூட்டத்தில் 

எடுக்கப்பட்ட முடிவுகளின் அமுலாக்கம் தொடர்பாக விவாதம் 

நடைபெற்றது. இவ் விவாதத்தில்., ஊழியர் தரப்பு 

உறுப்பினர்கள்., 35-வது தேசியக்குழு கூட்ட முடிவுகள் 

அமுலாக்கத்தில் உள்ள கால தாமதத்தை சுட்டிக்காட்டி 

தங்களின் அதிருப்தியை தெரிவித்தனர். 

இறுதியாக.தேசியக்குழுவின் (NJCM) நிலைக்குழு கூட்டத்தில் 

கீழ்கண்ட முடிவுகள் - தீர்வுகள் எடுக்கப்பட்டன.


தேசியக்குழுவின் நிலைக்குழு 

கூட்டத்தில் 

எடுக்கப்பட்ட முடிவுகள்


E-1 ஊதிய விகிதத்தில் ஊழியர்களின் பதவி உயர்வு குறித்து 

இயக்குனர் குழுவிற்கான குறிப்பு இந்த வார இறுதிக்குள் 

அனுப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


விடுபட்ட கேடர்களுக்கான கூடுதல் ஒரு ஆண்டு உயர்வுத் 

தொகை வழங்குவதற்கான குறிப்பு இயக்குனர் குழு 

கூட்டத்திற்கு அனுப்பப்பட்டு விட்டது.


கேசுவல் ஊழியர்களின் பணிக்கொடை பிரச்சனை CA 

பிரிவிற்கு அனுப்பப்பட்டுள்ளது. அதன் ஒப்புதல் கிடைத்த 

உடன் இயக்குனர் குழுவிற்கு அனுப்பப்படும் என 

தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் ஏற்பட்டுள்ள 

மாற்றல் பிரச்சனைகள் விரைவில் தீர்க்கப்படும்.


TOA (G) கேடர்களுக்கான Confirmation மற்றும் Sr.TOA (G)-க்கான 

பதவி உயர்வு தேர்வுகள் நடத்துவது குறித்து TOA (G) 

கேடர்களுக்கானConfirmation தேர்வை 31-08-2018 க்கு 

முன்பாகவும்., Sr.TOA (G)-க்கான பதவி உயர்வு தேர்வை 

31-12-2018 க்கு முன்பாகவும் நடத்திட மாநில நிர்வாகங்களுக்கு 

கடிதம் எழுதப்பட்டுள்ளது.


28-01-2018 அன்று நடைபெற்ற JE தேர்வு முடிவுகள் 

பரிசீலிக்கப்பட்டு இயக்குனர் (மனிதவளம்) ஒப்புதல்-க்கு 

அனுப்பப்பட்டுள்ளது.


RTP சேவை காலத்தை., சேவைக் கணக்கில் எடுத்துக் கொள்ள 

வேண்டும் என்ற நீதிமன்ற தீர்ப்பை அமுல்படுத்திட DOT-க்கு 

அனுப்பப்படும்.


"On line Exam" இணையத் தேர்வுக்கு ஊழியர்களை தயார் செய்திட 

15 நாட்கள் பயிற்சி வழங்கப்படும்.


IQ பராமரிப்பு மற்றும் IQ-வை Online (இணையத்தில்)-ல் பதிவு 

செய்வது குறித்து விவாதிக்கப்பட்டது.


BSNL CDA விதி 2006-ல் விதி 55(A) இணைப்பது குறித்து 

பரிசீலனை குழு., மாநில மட்டத்தில் குழுவை உருவாக்கிட 

மற்றும் மறுபரிசீலனை செய்திட வழிகாட்டுதல் 

கோரப்பட்டுள்ளது.


மாநில மற்றும் மாவட்ட மட்டங்களில் உதவி மேலாளர் 

(Assistant Manager) பதவிகள் உருவாக்கம் குறித்து குழு அமைக்க 

வேண்டும்.


அங்கீகரிக்கப்பட்ட சங்கங்களின் பிரதிநிதிகளுக்கு இலவச 

சேவை சிம் இணைப்பு வழங்குவதில் பாரபட்சம் நீக்க 

வேண்டும்.


No comments:

Post a Comment