மார்ச் 17... காலவரையற்ற வேலைநிறுத்தம்...
ஒத்திவைப்பு...
ஏப்ரல் 21 & 22 இரண்டு நாட்கள் வேலை
நிறுத்தம்...
கூட்டமைப்பு முடிவு...
நமது ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சங்கங்களின்
கூட்டமைப்பின் கூட்டம் நமது பொதுச் செயலர் மற்றும் கூட்டமைப்பின்
தலைவர் தோழர். C.சந்தேஷ்வர் சிங் அவர்களின் தலைமையில்
27-02-2015 அன்று நடைபெற்றது. அனைத்து சங்க பிரதிநிதிகள்
பங்கேற்ற இக்கூட்டத்தில் காலவரையற்ற வேலை நிறுத்தம்
தொடர்பாக நீண்ட... நெடிய... விவாதம் நடைபெற்றது.
இன்றைய சூழ்நிலைகளை... கருத்தில் கொண்டு...
நடைபெற்ற... இந்த விவாதத்தில்...
கீழ்க்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
- ஏப்ரல் 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் இரண்டு நாட்கள் வேலை நிறுத்தம் நடத்துவது.
- வேலை நிறுத்தத்திற்கான அறிவிப்பை மார்ச் 12 ஆம் தேதி வழங்குவது.
- மார்ச் 12 ஆம் தேதி நாடு முழுவதும் மாவட்ட... மாநில... தலை நகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்துவது.
- மார்ச் 12 ஆம் தேதி மாநில தலை நகரங்களில் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பை நடத்துவது.
- மாநில மற்றும் மாவட்ட அளவிலான கருத்தரங்கங்களை நடத்தாத மாநிலங்கள் மற்றும் மாவட்டங்கள் உடனடியாக கருத்தரங்குகளை நடத்திட வேண்டும்.
- பொது மக்களிடம் இருந்து கையெழுத்துக்களை பெறுவதற்கான கடைசி தேதி 31-03-2015 என்று நீட்டிக்கப்பட்டுள்ளது.
S.சிவகுருநாதன்,மாவட்ட செயலர்