Total Pageviews

Thursday, April 30, 2015

மதுரை தொலைதொடர்பு மாவட்டசங்கத்தின் புரட்சிகர மே தின நல்வாழ்த்துக்கள்...

தொழிலாளர் போராட்டம்



க‌டந்த‌ 18ஆம் நூற்றாண்டின் இறுதியி லும் – 19ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தி லும் வேகமாக வளர்ச்சியடைந்த நாடு களில் தொழிலாளிகள் பலரும் நா ளொன்றுக்கு 12 முதல் 18 மணி நேரக் கட்டாய வேலை செய்ய நிர்ப்பந்திக் கப் பட்டனர். இதற்கெதிரான குரல்க ளும் பல்வேறு நாடுகளில் ஆங்காங் கே எழத் துவங்கியது. இதில் குறிப்பி டத்தக்கது இங்கிலா ந்தில் தோன்றிய சாசன இயக்கம் (chartists). சாசன இயக்கம் 6 முக் கிய கோரிக்கைகளை முன் வைத்து தொடர் இயக்கங்களை நடத்தியது. அதில் குறிப்பிடத் தக்கது 10 மணி நேர வேலை கோரிக்கை.



பிரான்சில் தொழிலாளர் இயக்கம்

1830களில் பிரான்சில் நெசவுத் தொழி லில் ஈடுபட்டிருந்த தொழி லாளிகள் தினமும் கட்டாயமாக 15 மணி நேரம் உழைக்க வேண்டி இருந்தனர். இதை எதிர்த்து அவர் கள் பெரும் வேலை நிறுத்தப் போராட்ட த்தை நடத்தினர். 1834இல் ஜனநாய கம் அல்லது மரணம்என்ற கோஷத் தை முன் வைத்து பெரும் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். இவையனைத்தும் தோல்வியில் முடிவ டைந்தன.






ஆஸ்திரேலியாவில் தொழிலாளர் இயக்கம்

ஆஸ்திரேலியாவில் மெல்பேர்னில் கட்டி டத் தொழிலில் ஈடுபட்டிருந்த தொழிலா ளிகள் உலகிலேயே முதன் முதலாக 8 மணி நேர வேலை கோரி க்கையை முன் வைத்து 1856இல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு, வெற்றியும் பெற்றனர். இது தொழிலாளி வர்க்க போராட்டத்தின் மைல் கல்லாக அமைந்தது.






ரஷ்யாவில் மே தினம்

முதல் மே நாளின் போது உருசியா வில் ஒட்டப்பட்ட சுவரொட்டி
சார் மன்னரின் ஆட்சியின் கீழ் ரஷ்யத் தொழிலாளிகள் பெரும் துன்பங்களுக்கு ஆளானார்கள். இங்கும் 1895 – 1899க்கு இடைப் பட்ட காலத்தில் நூற்றுக்கணக்கான வேலை நிறுத்தங்க ள் நடை பெற்றன. 1896 ஏப்ரல் மாதத்தில் லெனின் மே தினத்திற்காக எழுதிய சிறு பிரசுரத் தில், ரஷ்யத்தொழிலாளிகளின் நிலை மை குறித்து விரிவாக அலசிய தோடு, ரஷ்யத் தொழிலாளர்களின் பொருளா தார போராட்டம் – அரசியல் போராட்டமாக எழுச்சிக் கொள்ள வேண் டும் என்பதையும் வலியுறுத்தினர். தொழி லாளி களின் 8 மணி நேர வேலை க்கான போராட்டங்களே ரஷ்யப் புரட் சிக்கு வித்திட்டது என்பது குறிப்பிடத் தக்கது.

அமெரிக்காவில்

அமெரிக்காவில் 1832இல் பொஸ்டனில் கப்பலில் பணி யாற்றிய தச்சுத் தொழிலா ளர்கள் 10 மணி நேர வேலை கோரிக்கையை முன் வைத்து வேலை நிறுத்தம் செய்தனர். அதே போல், 1835இல் பில டெல்பியாவிலும், பென்சில் வேனியாவிலும் இதே கோரி க் கையை முன்வைத்து இயக் கம் நடத்தப்பட்டது. பென்சில்வேனியாவில் நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளர்களும், இரயில்வே தொழி லாளர்களும் குறைவான வேலை நேரத் தை வலியுறுத்தி 1877 இல் வேலை நிறு த்தத்தில் ஈடுபட் டனர்.
இதைத் தொடர்ந்து அமெரிக்காவின் பல் வேறு மாநிலங்களில் உள்ள தொழி லாளர் இயக்கங்களை இணைத்து “அமெரிக்க தொழிலாளர் கூட்ட மைப்பு” என்ற இயக்கம் உருவாக்கப் பட்டது. இவ்வியக்கம் 8 மணி நேர வேலை கோரிக்கையை முன்வைத்து தொட ர்ந்து இயக்கங்களை நடத்தியது. அத் தோடு மே 1, 1886 அன்று நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்கு அறைகூவல் விடுத்தது. இவ்வியக்கமே மே தினம் பிறப்பதற்கு காரணமாகவும் அமைந் தது.

தொழில் நகரங்களான நியூயார்க், சிகாகோ, பிலடெல்பியா

மில் விக்கி, சின்சினாட்டி, பால்டி மோர் என அமெரிக்கா முழுவதும் 3,50,000 தொழி லாளர்கள் பங்கேற்ற மாபெரும் வேலை நிறுத்தம் துவங் கியது. இவ்வேலை நிறுத்தத்தில் 1200 க்கும் மேற் பட்ட நிறுவனங்களில் உள்ள தொழிலாளர் கள் பங்கெடுத்துக் கொண்டனர். தொழி லாளர்களின் எழுச்சிமிக்க வேலை நிறுத்தத் தினால், அமெரிக்க பெரு நிறுவனங்கள் மூடப்பட்டன. 





இரயில் போக்குவரத்து நடைபெறவில்லை. வே லை நிறுத்தத்தில் பங்கேற்ற தொழிலாளர் ஊர்வலங்கள் அமெரிக்காவை உலுக்கிய து. மிச்சி கனில் மட்டும் 40,000 தொழி லாளர்களும், சிக்காகோவில் 70 ஆயிர த்தி ற்கும் மேற்பட்ட தொழிலாளர்களும் கலந்துக் கொண்டனர்.

சிக்காகோ பேரெழுச்சி

மே 3, 1886 அன்று “மெக்கா ர்மிக் ஹார் வஸ்டிங் மெஷி ன் நிறுவனத்தின்” வாயி லில் 3000-க்கும் மேற்பட்ட தொ ழிலாளர்கள் அணி திரண்டு கண்டனக் கூட்டத்தை நடத் தினர். இங்கு இடம் பெற்ற கலவரத்தில் 4 தொ ழிலாள ர்கள் காவல் துறை யினரின் துப்பாக்கிச் சூட்டிற்குப் பலி யாயினர். இச்சம்பவத்தை கண்டிக்கும் வகையில் ஹே மார்க்கெட் சதுக்கத்தில் மே 4 அன்று மாபெரும் கண்டன கூட்டம் ஒன்றை நடத்தினர் தொழிலா ளர்கள். 2500 தொழிலாளர்கள் கல ந்து கொண்ட கண்டனக்கூட்டம் அமைதியான முறையில் நடை பெற்றது. இந் நேரத்தில் காவல் துறையினர் அனை வரையும் கலைந்து செல்லுமாறு கூறினர். இவ் வேளையில் திடீரெ ன்று கூட்ட த்தில் வெடிகுண்டு வீசப் பட்டதில் அந்த இடத்திலேயே ஒரு காவல் துறையினர் பலியானார். பின் னர் போலீசார் கூட்டத்தினர் மீது துப் பாக்கிச் சூடு நடத்தித் தொழிலாளரை த் தாக்கினர். அத்துடன் தொழிலாளர் தலைவ ர்களை கைது செய்து வழக்குத் தொடுத்தனர். இந்த வழ க்கு ஜூன் 21, 1886 அன்று துவங்கியது. 7 பேருக்கு தூக்குத் தண்டனை வழங்கப் பட்டது.

அமெரிக்காவின் கறுப்பு தினம்

நவம்பர் 11, 1887 அன்று தொ ழிலாளர் தலைவர்கள் ஆகஸ்ட் ஸ்பைஸ், ஆல் பேர்ட் பார்ச ன்ஸ், அடொல்ஃப் ஃபிஷர், ஜோர் ஜ் ஏங்கல் ஆகியோர் ஆகியோர் தூக் கிலிடப்பட்டனர். நவம்பர் 13, 1887 அன்று நடைபெற்ற இறுதி ஊர்வலத்தில் அமெ ரிக்க தேசமே அணி திரண் டது. நாடு முழுவதும் 5 லட் சம் பேர் இவர்களது இறுதி ஊர்வலத் தில் கலந்து கொண்டதோடு,அமெரிக்கா முழு வதும் கறுப்பு தினமாக அனு ஷ்டிக் கப்பட்டது.
அமெரிக்க தொழிலாள ர்களின் 8 மணி நேர வேலைக்கான போராட்டமும், சிகாகோ தியாகி களின் தியாகமும்தான் இன் றைக்கு மே தினமாக – உழை ப்பவர் தினமாக நம்முன் நிற்கிறது.

அனைத்து நாடுகளிலும் மே தினம்

1889 ஜூலை 14 அன்று பாரீசில் சோசலிசத் தொழிலாளர்களின் ‘’சர்வ தேச தொழிலாளர் பாராளு மன் றம்’’ கூடியது. 18 நாடுகளில் இருந்து 400 பிரதிநிதிகள் இக்கூட் டத்தில் பங்கே ற்றனர். பிரெட் ரிக் ஏங்கெல்ஸ் உட் படப் பலர் கலந்து கொண்ட இக்கூட் டத்தில் கார்ல் மார்க்ஸ் வலியுறுத்திய 8 மணி நேர போராட்டத்தை முன் னெடுத்துச் செல்வது என்றும், சிக்கா கோ சதியை இம்மாநாடு கடுமையாக கண் டித்ததோடு, 1890 மே 1 அன்று அனைத்துலக அளவில் தொழிலாளர் கள் இயக்கங்களை நடத்திட வேண்டும் என்றும் அறைகூவல் விடப் பட்டது.
இந்த அறைகூவலே மே முதல் நாளை, சர்வதேச தொழிலாளர் தினமாக, மே தினமாக அனுஷ்டிப்பதற்கு வழிவகுத்தது.


உலகத்தொழிலாளர்கள் அனைவருக்கும் இனிய மே  தின நல்வாழ்த்துக்கள் 
S .சிவகுருநாதன் ,மாவட்ட செயலர் 

Wednesday, April 29, 2015

29.04.2015 அன்று  CGM அலுவலகம் சென்னை 
காலை 10.00 முதல் பெருந்திரள் பட்டினிப்போர் நடைபெற்ற  காட்சிகள் 








S .சிவகுருநாதன் ,மாவட்ட செயலர் 

Tuesday, April 28, 2015

29.04.2015 பணி நிறைவு பாராட்டுவிழா 















A .பாலசுப்பிரமணியன்,JTO /TKM
C .பாலசுந்தரம் ,STS /PLN 
K .பாஸ்கரன் ,SSS /GM (O )
S .மலையாண்டி ,TM / CNP 
A .முருகையா ,TM / TNR 
G .நாகராஜன் ,TM / PLN 
P .பால்பாண்டி ,TM / PON 
E .ராமதாஸ் ,STS / TKM 
K .ராமசாமி ,TM / PRY 
M .சங்கர் ,TM / GM (O )
V .செல்வராஜ் ,TM / CNP 
A .சண்முகசுந்தரம் ,SDE / ELLIS 
C .சிலம்பன் , TM / TKM 
K .சிவராமன் ,TM / EMM 
S .சிவராமன் ,TTA /KDL 
A .சையது இமாம் ,TM /BTL 
M .தமிழ்நேசன் TM / BBK 

அனைவரின் பணி ஓய்வு காலம் சிறக்க ,எல்லாவளங்களும் பெற்று நெடிய காலம் நீடுழி வாழ்க NFTE மதுரை மாவட்ட சங்கம் உளமார வாழ்த்துகிறது .

 S .சிவகுருநாதன் ,மாவட்ட செயலர் .

சென்னை CGM அலுவலகம் முன்பு.. பெருந்திரள் பட்டினிப்போர்..




அருமைத்  தோழர்களே ! தோழியர்களே !! இந்திய நாடு முழுவதும் நடைபெற்றஏப்ரல் 21,22 வேலைநிறுத்தம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளது.தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் வேலை நிறுத்தம் வெற்றிகரமாகநடைபெற்றுள்ளதுசென்னையில் வேலை நிறுத்தம் மிகவும் சிறப்பாகநடைபெற்றதுவேலை நிறுத்தத்தை சீர்குலைக்கும்வேலைகளை 
சென்னைCCMஅலுவலகத்தில்  அமுதவாணன் போன்றசிலர் முயற்சி செய்தனர்எனினும் நமது தோழர்கள் மிகவும் கவனமாக வேலைநிறுத்தத்தை வெற்றிகரமாக்கியுள்ளனர்ஆனால் அமுதவாணன் காவல் துறையில்நமது தலைவர்கள் Forum கன்வீனர் S.செல்லப்பா 
Forum தலைவர் R.பட்டாபிராமன்உள்ளிட்ட ஐந்து பேர் மீது 
பொய்புகார் கொடுத்துள்ளார்அதன் விசாரனைக்காகநமது தலைவர்களை காவல் துறை திங்கள் கிழமை (27.04.2015) அன்றுஅழைத்திருக்கிறதுபல பொய்புகார்களை இதற்கு முன் சந்தித்திருக்கிறோம்இந்தபொய்புகாரையும் எதிர்கொள்வோம்நமது போராட்டங்களை தகர்க்க முயலும் எந்தசக்தியையும் அனுமதியோம். Forum மிகவும் ஒற்றுமையாக இந்த பொய்புகாரைசந்திக்கும்தவிடுபொடியாக்கும்..இயக்க மாண்பை காக்க... 
29.04.2015அன்று CGMஅலுவலகம்முன்பு..பெருந்திரள்பட்டினிப்போர்.

S. சிவகுருநாதன் ,மாவட்ட செயலர் 

Saturday, April 25, 2015


தரைவழித்  தொலைபேசியில்  இரவு நேர அழைப்புகள் இலவசம் பி.எஸ்.என்.எல் 

நாடு முழுவதிலுமுள்ள அனைத்து 
நிறுவன தொலைபேசி,
 செல்லிடப்பேசிகளுக்கு , இரவு நேரத்தில் 
தங்களது 
நிறுவனத் தரை வழித் தொலைபேசி மூலம் 
அழைக்கும் 
சேவையை மே 1ஆம் தேதியிலிருந்து 
பி.எஸ்.என்.எல். 
நிறுவனம் இலவசமாக வழங்க 
உள்ளது.இதுகுறித்து 
பி.எஸ்.என்.எல். நிறுவனம் வெளியிட்ட 
அறிக்கையில் கூறியுள்ளதாவது:

எங்களது தரைவழித் தொலைபேசி மூலம், 
நாடு முழுவதும் 
உள்ள அனைத்து செல்லிடப்பேசி, தொலைபேசி 
நிறுவனத்திற்கும் மேற்கொள்ளும் இரவு நேர 
அழைப்புகளை,மே 1ஆம் தேதியிலிருந்து 
இலவச அழைப்பு 
சேவையாக பி.எஸ்.என்.எல் வழங்கஉள்ளது.
இந்தத் திட்டத்தின்படி பி.எஸ்.என்.எல். நிறுவன 
தொலைபேசியிலிருந்து 
இரவு 9 மணியிலிருந்து காலை 7 
மணிவரை மேற்கொள்ளும் அழைப்புகள் இலவச 
அழைப்பாக வழங்கப்படும்.

கிராமம் மற்றும் நகர்ப்புறப் பகுதிகளில், 
தரைவழித் தொடர்பு 
சேவையில் இணைப்பு பெறப்பட்ட குறிப்பிட்ட 
திட்டங்களில், 
தரைவழித் தொடர்பு சிறப்புத் திட்டங்கள்,  அகல 
அலைவரிசை இணையத்துடன் கூடிய தரைவழித் 
தொடர்பு 
திட்டங்கள் என அனைத்து வகையான 
திட்டங்களும் இரவு 
நேர இலவச அழைப்பு சேவைத் திட்டத்தின்  கீழ் 
கொண்டுவரப் படுகிறது என்று அந்த 
பி.எஸ்.என்.எல். அதிகாரி தெரிவித்தார்.

S .சிவகுருநாதன், மாவட்டசெயலர் 

Thursday, April 23, 2015


NFTE - BSNL
மதுரை தொலைதொடர்பு மாவட்டம் 

BSNL அதிகாரிகள் ஊழியர்கள் கூட்டமைப்பு 
சார்பில் ஏப்ரல் 21,22 இரண்டு நாள் 
வேலைநிறுத்ததில்  
கலந்து கொண்ட தோழர்களுக்கும், 
தோழியர்களுக்கும் கூட்டமைப்பு சார்பில் 
மாவட்ட சங்கத்தின் வாழ்த்துகளையும், 
நன்றிகளையும் தெரிவித்துகொள்கிறோம்.


போராடிய தோழர்களின் பொற்பாதங்களை 

வணங்குவோம்!

எத்தனைமுறை போராட்டம் வந்தாலும் சங்கப்பெருமை  
காப்போம் நிறுவனம் காப்போம் 
என சான்றுறைத்து,
 சம்பளம் வெட்டு என பூச்சாண்டி காட்டினாலும்
  சரி நிகர் என போராட்ட களத்தில்
  போராடிய எங்கள் மாணிக்கங்களே
  உங்கள் பாதம் பணிந்து  வணங்குகின்றோம்.

  போராட்ட அறிவிப்பு பார்த்தாலே
  வைத்தியரிடம் கடிதம் பெற்று
  தற்காலிக நோய் என போலிக்கடிதம் பெற்று,
  தப்பித்ததாய் கற்பனை கொள்ளும்
  தற்காலிக நோயாளிகள்
  நிரந்தர நோயாளிகளாய் மாறும் முன் 
  சமூகத்தில் உள்ள நோய்களை பற்றி 
 கொஞ்சம் புரிந்து கொள்ளட்டும்.


 ஒட்டுமொத்த இந்தியாவே வேலைநிறுத்தம்
  செய்தாலும்,
  இயக்கம் காக்க மறந்து
  தன்னலம் தலைதூக்க
  நிறுவனம் நலிந்தாலும் பரவாயில்லை
  சுயநலம் நலியாது
  சம்பள வெட்டு என பயந்து
  ஒளிந்தவர்களே!
   உங்கள் சந்ததியே  
   உங்களை மதிக்காது மன்னிக்காது 
   என வருந்துகிறோம்! 

         
           S . சிவகுருநாதன் ,மாவட்ட செயலர் 


Tuesday, April 21, 2015

                                                 
       BSNL அணைத்து 
            ஊழியர்கள் ,அதிகாரிகள்              சங்கங்கள்கூட்டாமைப்பு
மதுரை தொலைதொடர்பு மாவட்டம் 

                    முதல் நாளான ஏப்ரல்-21 இன்று நமது மதுரை தொலை தொடர்பு 
                        மாவட்டத்தில் போராட்டம் வெற்றிகரமாக நடந்தேறியுள்ளது.


மதுரை பொதுமேலாளர் அலுவலக முன் வாயில்

பொது மேலாளர் அலுவலக CSC, பீபிகுளம், 

மதுரை 


பொது மேலாளர் அலுவலக CSC, பீபிகுளம், 

மதுரை 


                     
   தல்லாகுளம் வாடிக்கையாளர் சேவை மையம் 


மதுரை லெவல்-4 வளாக முன் நுழைவு வாயில், தல்லாகுளம்
=========================================

திண்டுக்கல்லில் நடைபெற்ற போராட்ட 

ஆர்பாட்டம் 







பழனியில் நடைபெற்ற போராட்ட ஆர்பாட்டம் 



நமது மதுரை தொலை தொடர்பு  மாவட்டத்தில் உள்ள 162 தொலைபேசியகங்களில் கிட்டத்தட்ட அனைத்தும் மூடிக்கிடந்தன என்ற செய்தி தான் வந்துள்ளது. எதோ ஒரு சில இடங்களில் ஒரு சில விரல் விட்டு எண்ணக்கூடிய சில நண்பர்கள் வந்ததாக செய்திகள் கிடைத்துள்ளன. மாவட்ட மையம் அதை மிக சீரியசாக பார்க்கிறது. வேலை நிறுத்தம் செய்யாமல், பணிக்கு வந்த ஒரு சிலர்கள் ஒன்றும் புரியாதவர்கள் என்று அர்த்தம் அல்ல.... மாறாக  மற்றவர்களை ஏமாற்றுவதாக  நினைத்துக்கொண்டு, அவர்களை அவர்களே! ஏமாற்றி கொண்டிருக்கிறார்கள். நமது துறை வளர்ச்சிக்காக நமது முந்தய தலைவர்கள், தோழர்கள்  தனது உடலில் உள்ள  உறுப்புக்களை இழந்து ஊனமாகி இருக்கின்றார்கள், ஏன்  உயிரை கூட இழந்திருக்கின்றார்கள். பல்வேறு தியாகத்தால் வளர்க்கப்பட்ட இந்த BSNL நிறுவனத்தை 
அரசும் + தனியார் கம்பெனிகளும் கூட்டுச் சதியால் அளிக்க முற்பட்டு இருக்கிறார்கள்.

நமது BSNL பாதுகாப்பிற்க்கான போராட்டத்தில் யாரேனும் விலகி இருந்தால் அது துரோக செயலாகும். ஆகவே, அப்படிப்பட்ட செயலை யாரும் செய்ய வேண்டாம் என மாவட்ட மையம் கேட்டுக்கொள்கிறது.....

போராடுவோம்! வெற்றி பெறுவோம்!!
இறுதி வெற்றி நமதே!! 
போராட்ட வாழ்த்துக்களுடன்
S .சிவகுருநாதன் ,மாவட்ட செயலர்