Total Pageviews
Thursday, December 31, 2015
CORPORATE அலுவலகம் முதல் கன்னியாகுமரி வரை
BSNLலில் SERVICE WITH A SMILE
SWAS என்னும் 100 நாள்
இன்முக சேவைக்காலத்திட்டம் துவங்கப்பட்டுள்ளது.
MRS மருத்துவத்திட்டத்தை மறு ஆய்வு செய்யும் குழுவின்
கூட்டம் 08/01/2016 அன்று டெல்லியில் நடைபெறும் என
அறிவிக்கப்பட்டுள்ளது.
தேக்க நிலை STAGNATION பற்றி 11/01/2016 அன்று சங்கங்களுடன்
BSNL நிர்வாகம் விவாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
தமிழக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நமது BSNL
சேவையைச் சீரமைக்க
சிறப்பு நிதி உதவி அளித்திட நமது இலாக்கா அமைச்சரை
மத்திய சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.
தவிப்பெயர் மாற்றக்குழுவின் பரிந்துரைகள்
BSNL நிர்வாகக்குழுவின் ஒப்புதல் பெறப்பட்டு
வாரிய ஒப்புதலுக்காக
BOARD APPROVAL அனுப்பப்பட்டுள்ளது.
01/01/2016 முதல் 3.5 சதம் முதல் 5 சதம் வரை
IDA உயர வாய்ப்புள்ளதாக செய்திகள் கூறுகின்றன.
JTO பதவியில் தற்காலிகப் பதவி உயர்வு வகிக்கும் TTA
தோழர்களுக்கு Phase -I பயிற்சி வகுப்பு சென்னை RGMTTCயில்
04/01/2016, 11/01/2016 மற்றும் 18/01/2016
ஆகிய தேதிகளில் துவங்குகின்றன.
S.சிவகுருநாதன் ,மாவட்ட செயலர்
Tuesday, December 29, 2015
30.12.15 பனி நிறைவு பாராட்டு ... வாழ்த்துக்கள் ...
1. S.அழகுமலை ,SDE , DDG
2. J .எபினேசர் ரவீந்திரன் ,SSS, O /o GM ,BSNL ,Madurai
3. G .வெள்ளைசாமி ,TM, DDG
4. A .செல்வமுத்தையா,TS , O /o GM ,BSNL ,Madurai
5. K .ஹரி கிருஷ்ணன் ,TM, மேலூர் ( VRS )
அருமைத் தோழர்களே ! 2015 - டிசம்பர் (30.12.15) இம் மாதம் நமது மதுரை தொலை தொடர்பு மாவட்டத்தில் பனி நிறைவு பெறும் தோழர்களுக்கு ஒருங்கிணைந்த பனி நிறைவு பாராட்டு விழா 30.12.15 காலை 11 மணிக்கு மதுரை பொது மேலாளர் அலுவலக
மனமகிழ் மன்றத்தில் நடை பெற உள்ளது.
மனமகிழ் மன்றத்தில் நடை பெற உள்ளது.
அனைவரின் பணி ஒய்வு காலம் சிறக்க,
எல்லாவளங்களும் பெற்று நெடிய காலம் நீடுழி வாழ்க
NFTE மதுரை மாவட்ட சங்கத்தின்
மனபூர்வமான . . .வாழ்த்துக்கள் . . .
எல்லாவளங்களும் பெற்று நெடிய காலம் நீடுழி வாழ்க
NFTE மதுரை மாவட்ட சங்கத்தின்
மனபூர்வமான . . .வாழ்த்துக்கள் . . .
S.சிவகுருநாதன் ,மாவட்ட செயலர்
Wednesday, December 23, 2015
Monday, December 21, 2015
Saturday, December 19, 2015
NFTE - BSNL
மதுரை மாவட்ட சங்கம்
ஓய்வு பெற்ற தோழர்களுக்கு
78.2 சத IDA இணைப்பை வழங்கக்கோரி
உணவு இடைவேளையில்
மதுரை மாவட்ட சங்கம்
ஓய்வு பெற்ற தோழர்களுக்கு
78.2 சத IDA இணைப்பை வழங்கக்கோரி
22-12-2015 - செவ்வாய்கிழமை -
அன்று மதியம் 01.00மணிக்கு
உணவு இடைவேளையில்
நாடு தழுவிய ஆர்ப்பாட்டம்...
நாளை நாம் அனைவரும் பென்சனர்கள் !!
இடம் : CTMX நுழைவாயில் ,
தல்லாகுளம், மதுரை
தல்லாகுளம், மதுரை
இன்று நாம் ஊழியர்கள் !
நாளை நாம் அனைவரும் பென்சனர்கள் !!
தோழர்களே...! அணி திரள்வீர்...!!
பெருந்திரள் ஆர்ப்பாட்டம்...!
பெருந்திரளாய் கூடுவீர்...!!
Tuesday, December 15, 2015
இன்று 15/12/20152 சென்னை CGM அலுவலகத்தில்
அனைத்து தொழிற்சங்கத் தலைவர்களின்
கருத்துக்கேட்புக் கூட்டம்
OPINION LEADERS MEETING நடைபெறுகின்றது.
01/01/2016 முதல் 100 நாட்களை BSNLலில்
கனிந்த சேவைக்காலமாக
வாடிக்கையாளர்களுக்கு அளித்திட
அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு
வேண்டுகோள் விடுத்துள்ளது.
ஓய்வு பெற்ற தோழர்களின் 78.2 சத IDA இணைப்பில்
ஏற்படும் தாமதத்தைக் கண்டித்து
22/12/2015 அன்று நாடு முழுக்க
கறுப்பு அட்டை அணியவும்
கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திடவும்
அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு
அறைகூவல் விடுத்துள்ளது.
கருணை அடிப்படை வேலைத்தேர்விற்கான
HPC உயர்மட்டக் குழுவில்
SC/ST பிரிவிற்கான பிணைப்பு அதிகாரியும்,
LO (SCT) உறுப்பினராக நியமிக்கப்பட வேண்டும் என
மத்திய நிர்வாகம் மாநில நிர்வாகங்களுக்கு உத்திரவிட்டுள்ளது.
11/12/2015 அன்று நமது மத்திய சங்கத்தலைவர்கள்
மனிதவள இயக்குநரை சந்தித்து
தமிழக வெள்ள நிவாரணத்திற்கு உதவுதல்,
JTO மற்றும் JAO காலியிடங்களை கணக்கிடுதல்,
JAO தேர்வில் வெற்றி பெற்று காலியிடம் இல்லாததால்
பயன் கிட்டாத தோழர்களுக்கு
தற்காலிகப் பதவி உயர்வு வழங்குதல்
ஆகியன பற்றி விவாதித்துள்ளனர்.
ஒப்பந்த ஊழியர்களுக்கான சட்டங்களை
முறையாக அமுல்படுத்தக்கோரியும்,
ஒப்பந்தக்காரர்கள் விதிமுறைகளை
ஒழுங்காக பின்பற்றுகின்றர்களா
என்பதைக் கண்காணிக்க வேண்டியும்
மத்திய நிர்வாகம் மாநில நிர்வாகங்களை வலியுறுத்தியுள்ளது.
S.பத்ரிநாராயணன்,மாவட்ட செயலர் (பொறுப்பு )
Saturday, December 12, 2015
கேடர் பெயர் மாற்றம்.
11-12-2015 அன்று நடைபெற்ற கேடர் பெயர் மாற்ற கூட்டத்தில்
கீழ்க்கண்ட உடன் பாடுகள் ஏற்பட்டு உள்ளது .
Sr.ToA cadre:-
1) NE7 & NE 8 = Senior Office Associate.
2) NE9 & NE 10 =AssistantOfficeSuperintendent.
3) NE 11 & NE 12 = Office Superintendent.
RM: Assistant Telecom Technician
TM : Telecom Technician.
TTA : JE.
S.பத்ரிநாராயணன்,மாவட்ட செயலர்(பொறுப்பு )
Thursday, December 10, 2015
BSNL அதிகாரிகள் ஊழியர் சங்கங்களின்
கூட்டமைப்பு, தமிழ் மாநிலம்
தமிழகத்தில் சமீபத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பினால் நமது BSNL நெட்வொர்க் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளைக்காண 09-12-2015 அன்று சென்னை வந்திருந்த நமது BSNL சேர்மன் திரு.அனுபம்ஸ்ரீவத்சவா அவர்களை தமிழ்மாநில அதிகாரிகள் / ஊழியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் அதன் நிர்வாகிகள் நேரில் சந்தித்து கொடுத்த கடிதத்தின் தமிழாக்கம்.
கூட்டமைப்பு, தமிழ் மாநிலம்
தமிழகத்தில் சமீபத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பினால் நமது BSNL நெட்வொர்க் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளைக்காண 09-12-2015 அன்று சென்னை வந்திருந்த நமது BSNL சேர்மன் திரு.அனுபம்ஸ்ரீவத்சவா அவர்களை தமிழ்மாநில அதிகாரிகள் / ஊழியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் அதன் நிர்வாகிகள் நேரில் சந்தித்து கொடுத்த கடிதத்தின் தமிழாக்கம்.
BSNL அதிகாரிகள் ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு, தமிழ் மாநிலம்
09—12—2015
பெறுநர்
சேர்மன் மற்றும் மேனேஜிங் டைரக்டர்,
BSNL புதுடெல்லி.
மரியாதைக்குரிய ஐயா,
பொருள்: தமிழக மழை வெள்ளம் பாதித்த பகுதிகளில் BSNL சேவையை மீண்டும்புனரமைத்தல் -- மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட
BSNL ஊழியர்களுக்கு நிவாரணம் வழங்குதல் --- தொடர்பாக
••• ••• •••
ஐயா, தமிழகத்தின் மழை வெள்ளம் பாதித்த பகுதிகளையும் சென்னைநகரையும் நீங்களே நேரடியாகப் பார்வையிட வருகை தந்துள்ளதை மிகுந்தமரியாதையோடு பாராட்டக் கடமைப்பட்டிருக்கிறோம். BSNL சந்தாதாரர்களுக்குசிறந்த தொலைத் தொடர்பு சேவையை அளிப்பதில் நீங்கள் காட்டும்உண்மையான முயற்சிகளுக்காக, தமிழகத்தின் BSNL சந்தாதாரர்கள் சார்பிலும்ஊழியர்கள் சார்பிலும் நாங்கள் நன்றி பாராட்டுகிறோம். இது தொடர்பாக சிலகருத்துகளை உங்களுடைய தகவலுக்காகவும் மேலான பரிசீலனைக்கும்முன்வைக்கிறோம்.
அனைத்திற்கும் மேலாக இந்த உறுதியை முதலில் நாங்கள் தருகிறோம். தமிழக BSNL அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் BSNL சேவையை மேம்படுத்துவதில்கடுமையாக உழைத்து வருவது மட்டுமல்ல, BSNL கம்பெனியை ஒரு லாபம்ஈட்டும் நிறுவனமாக நிச்சயம் மாற்றிக் காட்டுவோம் எனவும் உறுதி தருகிறோம்.தமிழகத்தின் வெள்ளம் பாதித்த பகுதிகளில் BSNL சேவையை புனரமைப்புசெய்வதில் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் ஓய்வின்றி, குறிப்பாக, கடலூர்,வேலூர் மற்றும் புதுச்சேரி மாவட்டங்களில், கடுமையாகப் பணியாற்றிவருகின்றனர். பாதிப்படைந்த பகுதிகளில் மேலும் அர்ப்பணிப்போடு பணியாற்றி,சந்தாதாரர்கள் மகிழும் சேவையை அளிப்போம் எனவும் நாங்கள் உறுதிகூறுகிறோம்.
1. தங்களின் மேலான அதிகாரத்தைப் பயன்படுத்தி தேவையானஸ்டோர் தளவாடப்பொருள்களையும் தேவையான நிதியையும் ஒதுக்கிடு செய்யவேண்டுகிறோம்.
2. தமிழகத்தின் சில பகுதிகளில் NGN சேவை வழங்கப்பட்டுவருகிறது;அது, நல்ல பயனையும் தந்து வருவதைக் காண்கிறோம். எனவே ஐயா அவர்கள்NGN சேவையை தமிழகம் முழுவதும் விஸ்தரிக்க தகுந்த முன்முயற்சிகளையும்ஏற்பாடுகளையும் செய்து தருமாறு வேண்டுகிறோம்.
3. லீ்ஸ்டு லைன், இன்டர்நெட் இணைப்புகளின் BSNL கட்டண விகிதம்மற்றவர்களை விட ஒப்பீட்டளவில் அதிகமாக உள்ளது. இந்த கட்டணம்குறைக்கப்பட்டால் இந்த சேவையில் நம்மால் மேலும் சந்தாதாரர்களை ஈர்க்கமுடியும்.
4. சமீபத்தில் நேசம் கோல்டு மொபைல் திட்டத்தில் எப்போதும் ரூ200/= முழு டாக் மதிப்பு பெறும் சலுகை திரும்பப் பெறப்பட்டுள்ளது. சந்தாதாரர்களை மிகவும் கவர்ந்த திட்டமாக இது விளங்கியது. எனவே மீண்டும்அந்த சலுகை அமல்படுத்தப்பட வேண்டும்.
5. ரூ110 வவுச்சர் பெருமளவில் வாடிக்கையாளர் சேவைமையங்களிலும் முகவர்களிடமும் இருப்பு உள்ளது. இதன் வேலிடிட்டி இம்மாதஇறுதியில் முடிய உள்ளது, எனவே ரூ110 வவுச்சர்களின் வேலிடிட்டி தேதிநீட்டிக்கப்பட வேண்டும்.
மேற்கண்டவைகளோடு ஊழியர் பிரச்சனைகள் சிலவற்றையும் தாங்கள் பரிசீலிக்கவேண்டுகிறோம்.
6. சமீபத்திய கடும் மழை வெள்ளத்தில் பொது மக்களோடு BSNLஊழியர்களும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். எனவே BSNL நிர்வாகம்வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கும் நிவாரண உதவி வழங்கவேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம்.
7. தமிழக தொலைத் தொடர்பு வட்டத்தில், மழை வெள்ளத்தில்பாதிக்கப்பட்ட பகுதிகளின் BSNL ஊழியர்களுக்கு, வெள்ள பாதிப்பு முன்பணம்(அட்வான்ஸ் குறைந்த பட்சம் ரூ.25,000/=) வழங்கிட BSNL நிர்வாகம் தேவையானநிதியை விடுவிக்க வேண்டும் எனவும் நாங்கள் வேண்டுகிறோம்.
8. ஊழியர்களின் உடைமைகள், மோட்டார் வாகனங்கள், கம்ப்யூட்டர்,குளிர் சாதனப் பெட்டிகள் மற்றும் மதிப்பு மிக்க வீட்டு உபயோகப் பொருட்கள்முதலிய பலவும், மழை வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டு கடும்இழப்புக்குள்ளாகி உள்ளனர். பல பொருட்கள் உபயோகிக்க முடியாதபடிகடுமையாகச் சேதமாகி உள்ளன. இதனால் முக்கியமாக தேவையானவற்றைவாங்கவும் பழுது நீக்கம் செய்துகொள்ளவும் ஊழியர்கள் GPF முன்பணம்கோரலாம். எனவே நிர்வாகம் GPF முன்பணம் / திரும்ப எடுத்தல்கோரிக்கைகளை நிபந்தனை வரம்பு ஏதுமின்றி அனுமதிப்பது மட்டுமல்லாது GPFமுன்பணம் தாமதமின்றி பெற போதுமான நிதியை உடனே தமிழக வட்டத்திற்குவழங்க வேண்டும்.
9. சில ஊழியர்கள் தங்கள் அனைத்து உடைமைகளையும் (டிவி,வாஷிங் மெஷின்,மிக்ஸி, கிரைண்டர், கட்டில் பீரோ முதலிய பல பலஉடைமைகளையும் ) முற்றாக இழந்து தவிக்கின்றனர். எனவே அத்தகையஊழியர்களுக்கு மட்டும் வட்டி இல்லாத முன்பணமாக ரூபாய் ஒரு லட்சம்வழங்கிட வேண்டுகிறோம்,
10. சென்னையின் பலபகுதிகள் மற்றும் கடலூர் SSA விலும் மழைவெள்ளத்தால் போக்குவரத்து சேவை மிகக் கடுமையாக பாதிப்படைந்தது. பலபகுதிகளில் போக்குவரத்து வசதி முற்றாக , குறிப்பாக டிசம்பர் 1 முதல் 5வரை, தடைப்பட்டிருந்தது. பல ஊழியர்களின் வசிப்பிடங்கள் முற்றாக நீரால்சூழப்பட்டு யாரும் வெளியே வரமுடியாத நிலை ஏற்பட்டது, இதனால் பலஊழியர்களால் பணிக்கு வரமுடியாத சூழல். இந்நிலையிலும் தயக்கமின்றிபணிக்கு வந்து கடமையாற்றிய மற்றவர்கள் பாராட்டப்பட வேண்டும்.வரமுடியாதவர்களுக்கு DP & AR OM No.28016/1/79 – Estt (A) தேதி 28-05-1979உத்தரவுபடி தேவையான சிறப்பு விடுப்பினை தயவு செய்து வழங்கிடவும்கேட்டுக்கொள்கிறோம்,
நன்றியுடன்,
தங்கள் உண்மையுள்ள
S.பத்ரிநாராயணன்,மாவட்ட செயலர் (பொறுப்பு )
Subscribe to:
Posts (Atom)