Total Pageviews

Thursday, February 11, 2016


கருணை அடிப்படை வேலை


மரணமுற்ற ஊழியர்களின் வாரிசுகளுக்கு பணி வழங்குவதில் 
உள்ள விதிகளைத் தளர்த்த வேண்டும் என நமது NFTE சங்கம் தொடர்ந்து
குரல் கொடுத்து வருகிறது. 33-வது NJCM தேசியக்குழுக் கூட்டத்திலும்
இப்பிரச்சனை விவாதிக்கப்பட்டது. தற்போது இது தொடர்பாக 
BSNL நிர்வாகம் 05-02-2016 அன்று புதிய உத்திரவு
ஒன்றைப் பிறப்பித்துள்ளது.

அந்த உத்திரவின் படி...
  • பணி செய்து கொண்டிருக்கும் போது ஏற்படும் மின் விபத்து...
  • தொலைபேசி மற்றும் கேபிள் பழுது நீக்கும் போது ஏற்படும் விபத்து...
  • பயங்கரவாத தாக்குதல்...
  • தொலைபேசி நிலையத்தில் தீ விபத்து...
  • மின் சாதனங்களைப் பழுது நீக்கும் போது ஏற்படும் மின் விபத்து...

போன்றவற்றால் உயிர் இழக்கும் ஊழியர்களின் வாரிசுகளுக்கு...
உடனடியாக... நேரடியாக... கருணை அடிப்படையில் வேலை வாய்ப்பு
அளிக்கப்படும் என BSNL நிர்வாகம் உத்தரவில் தெரிவித்துள்ளது. மேலும்
இத்தகைய விண்ணப்பதாரர்களுக்கு தற்போதைய மதிப்பெண்
வழங்கும் முறை பொருந்தாது. எனவும்
விளக்கமளித்துள்ளது.

மரித்தவர்களின் வாரிசுகளுக்கு... பணி தரும் முறை... மெல்ல... மெல்ல...
மரித்து வரும் நிலையில்... இப்பிரச்சனைக்கு உயிரூட்டி தீர்வு கண்ட...
நமது மத்திய, மாநில சங்கங்களுக்கு... 
நமது மனமார்ந்த... நன்றிகள்...

Friday, February 05, 2016


நமது சேவை CUG கைபேசியிலிருந்து...
 
MDF-க்கு இலவச அழைப்பு...


நமது குரூப் C மற்றும் D ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள இலவச
சேவை CUG கைபேசியிலிருந்து, தொலைபேசி நிலைய
MDF / TEST ROOM-ல் உள்ள தரைவழி தொலைபேசி இணைப்பை
தொடர்பு கொண்டால் அந்த அழைப்பிற்கு கட்டணம்
வசூலிக்கப்பட்டு வந்தது.

இப்பிரச்சனையால்... நமது TM ஊழியர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு
வந்தனர். ஊழியர்களின்... இப்பிரச்சனைக்கு... தீர்வு கண்டிட...
நமது மத்திய சங்கம் 33-வது தேசிய குழு கூட்டத்தில்
இப்பிரச்சனையை எடுத்ததின் விளைவாக...

நமது கோரிக்கை ஏற்கப்பட்டு 03-02-2016 அன்று நிர்வாகத்தால்
இதற்கான உத்திரவு வெளியிடப்பட்டுள்ளது.
இனி... நமது TM ஊழியர்கள் MDF / TEST ROOM-ல் உள்ள
தரைவழி தொலைபேசி இணைப்புகளை இலவசமாக
தொடர்பு கொள்ளலாம்.



தமிழ் மாநில செயற்குழு - வேலூர்



ஜனவரி சம்பளத்தில்... 

விட்டுப் போன... ரூபாய்.500...





நமது குரூப் C மற்றும் D ஊழியர்களுக்கு... ஒவ்வொரு வருடமும்...
சோப்பு, துண்டு, டம்ளர், பேனா, டைரி மற்றும் வாட்டர் பாட்டில்
ஆகியவற்றை வழங்குவதற்கு பதிலாக ரூபாய். 500/- 
(குரூப் C ஊழியர்களுக்கு) மற்றும் ரூபாய். 300/- 
(குரூப் D ஊழியர்களுக்கு) வழக்கமாக ஜனவரி மாத சம்பளத்தில்
சேர்த்து வழங்கப்படும். ஆனால் 2016 ஜனவரி சம்பளத்தில் 
இந்த தொகை வழங்கப்படவில்லை.

உடனடியாக... நமது மாநில சங்கம் இந்த பிரச்சனையை 
நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றது. பிரச்சனையின்
தன்மையை உணர்ந்து 02-02-2016 அன்று நிர்வாகம் 
இதற்கான உத்தரவை வெளியிட்டது.

2016 பிப்ரவரி மாத சம்பளத்தில்... குரூப் C ஊழியர்களுக்கு
ரூபாய். 500/-ம் குரூப் D ஊழியர்களுக்கு 
ரூபாய். 300/-ம் வழங்கப்படும்.

Monday, February 01, 2016

7 வது உறுப்பினர் சரிபார்ப்பு தேர்தல் 

 
தேர்தல் நடைபெறும் நாள் : 10.05.2016
வாக்கு எண்ணிக்கை நாள் :12.05.2016
முடிவு அறிவிக்கும் நாள் :   12.05.2016

VOTE FOR NFTE 
இணைந்த கரங்களில் வாக்களிப்போம்... 
முதன்மை சங்கமாக
வெற்றி பெற செய்வோம்...  

Saturday, January 30, 2016

லாபம் இல்லையென்றால் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு கிடையாது; 

பி.எஸ்.என்.எல். அதிரடி முடிவு

logo

நிறுவனம் லாபத்தில் இல்லையென்றால் அடுத்த ஆண்டு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு கிடையாது என அரசு பொதுத்துறை தொலைதொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல் அறிவித்துள்ளது. 
இதுகுறித்து, கர்நாடகாவில் மொபைல் டேட்டா ஆப்லோடு வசதியை துவக்கி வைத்து  அந்நிறுவனத்தின் தலைவரும், இயக்குனருமான அனுபம் ஸ்ரீவத்சவா தெரிவித்தவை பின்வருமாறு:- 


பி.எஸ்.என்.எல். வரலாற்றில் இந்த ஆண்டு மிகவும் சவால்கள் நிறைந்த ஆண்டாகும். 2017-ம் ஆண்டு என்பது 3-வது முறையாக சம்பள மறுஆய்வு கமிட்டி மூலம் பி.எஸ்.என்.எல். ஊழியர்களின் சம்பளத்தை மறுஆய்வு செய்வதற்கான ஆண்டு. ஆனால், நிறுவனமானது லாபத்தில் இல்லையென்றால் சம்பளம் உயர்த்தப்பட மாட்டாது. இதற்கு முன்னர் ஏர் இந்தியா நிறுவனமும் இதேபோல் செயல்பட்டிருக்கிறது. 2017-ம் ஆண்டு நமக்கு மிகவும் முக்கியமான ஆண்டு. இந்த ஆண்டு நமது லாப நட்டக் கணக்கை நன்றாக வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம். நிறுவனத்தை வருமானப் பாதையில் கொண்டு செல்வதே ஊழியர்களின் முதன்மைப் பணி. இருக்கையில் உட்கார்ந்து கொண்டு கோப்புகளில் கையெழுத்திட்டு மட்டுமே சென்ற நாட்கள் போய்விட்டன. வருவாய் மட்டுமே இனி முதல் இலக்கு. இவ்வாறு அவர் தெரிவித்தார். 


4 ஆண்டுகள் தொடர் நட்டத்திற்கு பின் முதல்முறையாக சென்ற நிதியாண்டில் ரூ.672 கோடி லாபத்தை பி.எஸ்.என்.எல். நிறுவனம் சந்தித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

No revision in salary next year if company not profitable - CMD., BSNL Click here.


JTO இலாக்காத்தேர்வு...


நமது தோழர்கள்... மிக ஆவலோடு... எதிர்பார்த்திருந்த...
JTO 50% சத இலாக்காத்தேர்வு, நடத்திட...
BSNL நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.

தேர்வு புதிய JTO ஆளெடுப்பு விதி 2014-ன் படி நடைபெறும்.

2013-14, 2014-15 மற்றும் 2015-16 ஆகிய ஆண்டுகளுக்கான... 
JTO காலியிடங்களை கணக்கீடு செய்யவும், தேர்வுக்கான அறிவிப்பு
செய்யவும் மாநில நிர்வாகங்களுக்கு, வழிகாட்டுதல்கள்
வழங்கப்பட்டுள்ளன.

BSNL நிர்வாகம் 28-01-2016 அன்று வெளியிட்டுள்ள கடிதத்தின்படி...
  • மாநிலங்கள் தேர்விற்கான அறிவிப்பு செய்யும் நாள்: 15-02-2016
  • இணையதளம் மூலம் விண்ணப்பிக்கும் நாள்: 22-02-2016
  • இணையதளம் மூலம் விண்ணப்பிக்க கடைசி நாள்: 22-03-2016
  • தேர்வு நடைபெறும் நாள்: 08-05-2016
  • தேர்வு இணையதளத்தின் வாயிலாக நடைபெறும் (ONLINE EXAMINATION)  
  • தேர்வு EXAMINATION AGENCY வாயிலாக நடத்தப்படும்.
  • தற்போது பயிற்சியில் இருக்கும் OFFICIATING JTO தோழர்களை நிரந்தரம் செய்தது போக மீதமுள்ள காலியிடங்கள் கணக்கிடப் படவேண்டும்.

இலாக்காத்தேர்வுகள்... இணையதளத்தின் வழியாக...
AGENCY மூலமாக நடத்தப்படும் என்பது நெருடலாக உள்ளது.

தொடர்ந்து நிர்வாகத்தை வலியுறுத்தி...
JTO இலாக்காத்தேர்வு... அறிவிப்பு செய்ய வைத்த...
நமது மத்திய சங்கத்திற்கு... நமது நன்றிகள்...

JTO இலாக்காத்தேர்விற்கான... 

நிர்வாக கடிதம் காண... இங்கே சொடுக்கவும்...

Thursday, January 28, 2016


மத்திய சங்கத்தின் கடிதங்கள் ....



1.1.2007  மற்றும்  7.5.2010 பணியமர்த்தப்பட்ட NON  EXECUTIVE  ஊழியர்க்கு,  நேரடி நியமன TTA க்களுக்கு வழங்கப்பட்டது போல ஒரு ஆண்டு உயர்வு (ONE  INCREMNET ) வழங்கிட வேண்டும் .நேரடி நியமன TTA க்களுக்கு  பரிந்துரை செய்த குழுவே ...இதற்கும் பரிந்துரை செய்திடவேண்டும் என 33 வது NJCM ல் ஏற்று கொண்டு 3 மாத காலமாகிவிட்டதை சுட்டி காட்டி.. விரைவில் கமிட்டி பரிந்துரை பெற்று தேக்க நிலை ஊழியர்க்கு தீர்வு  வலியுறுத்தி  மத்திய சங்கம் கடிதம் எழுதியுள்ளது .

24 வருடங்களாக மாற்றபடாத OTA  விகிதம் மாற்றப்படவேண்டும் .BSNL நிறுவனம் தனெக்கென OTA விகிதம் உருவாக்காமல் ,15 ஆண்டுகள் உருண்டோடி விட்டது என்பதை மத்திய சங்கம் நிர்வாகத்திற்கு கடிதம் எழுதியுள்ளது .

22.1.2016 அன்று BSNL  அமல்படுத்தியுள்ள புதிய மாற்றல் கொள்கையில் (TRANSFER POLICY ) " மாநகராட்சி மற்றும் நகராட்சி எல்லை தாண்டிய பகுதியினை "RURAL " பகுதியெனவும் ... " ஊழியர் மற்றும் அதிகாரிகள் மாற்றல் கொள்கையில் உள்ள முரண்பாடுகள் களையவும் ,திருத்தங்கள் மேற்கொள்ளவும் வலியுறுத்தியுள்ளது. 

விரிவடைந்த மத்திய செயற்குழு...

பாட்னா - பீகார்

Anticlockwise from top: South-West Gandhi Maidan Marg, Stupa of Buddha Smriti Park, Skyline near Biscomaun Bhawan, Patna Museum, Statue of Mahatma Gandhi, Gandhi Maidan, Mithapur Flyover and river Ganges

மாவட்டச் செயலர்கள்... பங்கேற்கும்...
விரிவடைந்த மத்திய செயற்குழு

நாள்: 01-03-2016 முதல் 02-03-2016 வரை
இடம்: பாட்னா - பீகார் மாநிலம்

-: தலைமை :-

தோழர். இஸ்லாம் அகமது

அகில இந்திய தலைவர்

-: ஆய்படுபொருள் :-

  • அமைப்புநிலை
  • ஊழியர் பிரச்சனைகள் 
  • 7-வது உறுப்பினர் சரிபார்ப்பு தேர்தல்   
  • PLI போனஸ்   
  • SWAS - 100 நாள் திட்டம்    
  • தனியார் மயமாகும் BSNL சேவைகள்  
  • DELOITTEE பரிந்துரைகள் 
  • புதிய செல் கோபுர நிறுவனம்
  • BSNL மற்றும் MTNL இணைப்பு    
  • ஏனைய பிரச்சனைகள்     


Wednesday, January 27, 2016


தமிழ் மாநில செயற்குழு...


நமது தமிழ் மாநில செயற்குழுக் கூட்டம்
06-02-2016 அன்று வேலூர் கே.பி.எஸ்., திருமண மஹாலில் 
நடைபெற உள்ளது.


Monday, January 25, 2016

  Rd 


ஜனவரி 26

அறுபத்தி எழாவது குடியரசு 

தினத்தைகொண்டாடுகிறோம்!.


         republic day images 2016 க்கான பட முடிவு                       
           
இந்தியர்களாகிய நாம் இன்று அறுபத்தி எழாவது குடியரசு தினத்தைகொண்டாடுகிறோம்!.
இந்தியக்கொடியில் மலர்களைப்பொதித்து வைத்து உயரமான கம்பத்தின் உச்சியில் அதனை கட்டி பின் விழாவின் போது கொடிக்கயிற்றை இழுத்து பல வண்ணப்பூக்கள் பொழிய பட்டொளி வீசி இந்திய மூவர்ணக்கொடியை பறக்கவிட்டு அனைவரும் பரவசப்படும் நாள்!!.
உலக நாடுகள் ஒரே ஒரு முறை சுதந்திரம் பெற்ற நாளை மட்டும் கொண்டாடும் போது இந்தியர்களாகிய நாம் இருமுறை கொடியேற்றி இறக்கிக்கொண்டு உள்ளோம்.
இன்று நம் நாட்டின் ஆயுத பலத்தை காட்டும் விதத்தில் படை அணிவகுப்பு, இந்தியத்தலைநகரில் நடைபெறும். ஒவ்வொரு மாநிலம் சார்பிலும் அவர்களின் சாதனை அலங்கார ஊர்தி அணிவகுப்பு நடை பெறும்..
மாநிலங்களில் மாவட்ட சாதனை விளக்க அலங்கார ஊர்திகள் மற்றும் சிறந்த சேவை புரிந்தோர்க்கான விருதுகள், பாரட்டுகள், பதக்கங்கள் வழங்கும் நிகழ்ச்சிகள் என இந்தியா விழாக்கோலம் காணும் நாள் இது.
பள்ளிக் குழந்தைகளுக்கோ மூவர்ணகொடியை சட்டையில் அணிந்து, கொடியேற்ற பள்ளி சென்று, இனிப்பு மிட்டாய்கள் தின்ற பின் விடுமுறை சந்தோஷத்தையும் அனுபவிக்கும் நாள்..
அனைவருக்கும் இனிய 

67 வது குடியரசு தின வாழத்துக்கள்



 திருத்தியமைக்கப்பட்ட

மாற்றல் கொள்கை வெளியீடு !



கிராமப்புற மற்றும் பிரபலமில்லாத ஊர்களுக்கு மிகவும் தேவையான 

ஊழியர்களை பணியில் அமர்த்தவும்,


அந்த ஊர்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு மாற்றல் தர 

ஏதுவாகவும், 


BSNL தலைமை அலுவலகம் கீழ்க்கண்ட திருத்தியமைக்கப்பட்ட 

மாற்றல் கொள்கையை  வெளியிட்டு உள்ளது.


அதன் முக்கிய அம்சங்கள்:


1. பிரபலமில்லாத ஊர்களுக்கான  கட்டாய மாற்றல் இரண்டு வருட 

டென்யூர் மாற்றலாக ஆக்கப்படுகிறது. அவை எந்த எந்த ஊர்கள் 

என்பதை மாநில தலைமை மேலாளர் நிர்ணயிப்பார்.



2. பிரபலமில்லாத ஊர்களாக நிர்னயிக்கப்படாத கிராமப்புற

 ஊர்களுக்கான கட்டாய மாற்றல் டென்யூர் 3 வருடங்களாக

நிர்ணயிக்கப்படுகிறது.அவை எந்த எந்த ஊர்கள் என்பதையும் 

மாநில தலைமை மேலாளர் நிர்ணயிப்பார்.


3.டென்யூர் முடிந்த ஊழியர்களுக்கு 3 விருப்ப ஊர்கள் கேட்க வாய்ப்பு 

அளிக்கப்படும்.நிர்வாகம் இயன்றவரை அவர் கேட்ட இடத்திற்கு 

மாற்றல் தரும். நிர்வாகரீதியாக இயலாது என்றால் அதற்கான காரணம்

எழுத்துபூர்வமாக தெரிவிக்கப்படும்.



4. டென்யூர் காலத்திற்குரிய லீவுகளை எடுக்கலாம். அதற்கு மேல் 

எடுத்தால் அது டென்யூர் காலத்திலிருந்து கழித்துக்கொள்ளப்படும். 


5.முடிந்தவரை , விருப்பமில்லாத பெண் ஊழியர்களும் 55 வயது 

கடந்தவர்களும் மாற்றப்படமாட்டார்கள்.