Total Pageviews
Friday, February 26, 2016
Thursday, February 11, 2016
கருணை அடிப்படை வேலை
மரணமுற்ற ஊழியர்களின் வாரிசுகளுக்கு பணி வழங்குவதில்
உள்ள விதிகளைத் தளர்த்த வேண்டும் என நமது NFTE சங்கம் தொடர்ந்து
குரல் கொடுத்து வருகிறது. 33-வது NJCM தேசியக்குழுக் கூட்டத்திலும்
இப்பிரச்சனை விவாதிக்கப்பட்டது. தற்போது இது தொடர்பாக
BSNL நிர்வாகம் 05-02-2016 அன்று புதிய உத்திரவு
ஒன்றைப் பிறப்பித்துள்ளது.
அந்த உத்திரவின் படி...
- பணி செய்து கொண்டிருக்கும் போது ஏற்படும் மின் விபத்து...
- தொலைபேசி மற்றும் கேபிள் பழுது நீக்கும் போது ஏற்படும் விபத்து...
- பயங்கரவாத தாக்குதல்...
- தொலைபேசி நிலையத்தில் தீ விபத்து...
- மின் சாதனங்களைப் பழுது நீக்கும் போது ஏற்படும் மின் விபத்து...
போன்றவற்றால் உயிர் இழக்கும் ஊழியர்களின் வாரிசுகளுக்கு...
உடனடியாக... நேரடியாக... கருணை அடிப்படையில் வேலை வாய்ப்பு
அளிக்கப்படும் என BSNL நிர்வாகம் உத்தரவில் தெரிவித்துள்ளது. மேலும்
இத்தகைய விண்ணப்பதாரர்களுக்கு தற்போதைய மதிப்பெண்
வழங்கும் முறை பொருந்தாது. எனவும்
விளக்கமளித்துள்ளது.
மரித்தவர்களின் வாரிசுகளுக்கு... பணி தரும் முறை... மெல்ல... மெல்ல...
மரித்து வரும் நிலையில்... இப்பிரச்சனைக்கு உயிரூட்டி தீர்வு கண்ட...
நமது மத்திய, மாநில சங்கங்களுக்கு...
நமது மனமார்ந்த... நன்றிகள்...
Friday, February 05, 2016
நமது சேவை CUG கைபேசியிலிருந்து...
MDF-க்கு இலவச அழைப்பு...
நமது குரூப் C மற்றும் D ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள இலவச
சேவை CUG கைபேசியிலிருந்து, தொலைபேசி நிலைய
MDF / TEST ROOM-ல் உள்ள தரைவழி தொலைபேசி இணைப்பை
தொடர்பு கொண்டால் அந்த அழைப்பிற்கு கட்டணம்
வசூலிக்கப்பட்டு வந்தது.
இப்பிரச்சனையால்... நமது TM ஊழியர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு
வந்தனர். ஊழியர்களின்... இப்பிரச்சனைக்கு... தீர்வு கண்டிட...
நமது மத்திய சங்கம் 33-வது தேசிய குழு கூட்டத்தில்
இப்பிரச்சனையை எடுத்ததின் விளைவாக...
நமது கோரிக்கை ஏற்கப்பட்டு 03-02-2016 அன்று நிர்வாகத்தால்
இதற்கான உத்திரவு வெளியிடப்பட்டுள்ளது.
இனி... நமது TM ஊழியர்கள் MDF / TEST ROOM-ல் உள்ள
தரைவழி தொலைபேசி இணைப்புகளை இலவசமாக
தொடர்பு கொள்ளலாம்.
ஜனவரி சம்பளத்தில்...
விட்டுப் போன... ரூபாய்.500...
நமது குரூப் C மற்றும் D ஊழியர்களுக்கு... ஒவ்வொரு வருடமும்...
சோப்பு, துண்டு, டம்ளர், பேனா, டைரி மற்றும் வாட்டர் பாட்டில்
ஆகியவற்றை வழங்குவதற்கு பதிலாக ரூபாய். 500/-
(குரூப் C ஊழியர்களுக்கு) மற்றும் ரூபாய். 300/-
(குரூப் D ஊழியர்களுக்கு) வழக்கமாக ஜனவரி மாத சம்பளத்தில்
சேர்த்து வழங்கப்படும். ஆனால் 2016 ஜனவரி சம்பளத்தில்
இந்த தொகை வழங்கப்படவில்லை.
உடனடியாக... நமது மாநில சங்கம் இந்த பிரச்சனையை
நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றது. பிரச்சனையின்
தன்மையை உணர்ந்து 02-02-2016 அன்று நிர்வாகம்
இதற்கான உத்தரவை வெளியிட்டது.
2016 பிப்ரவரி மாத சம்பளத்தில்... குரூப் C ஊழியர்களுக்கு
ரூபாய். 500/-ம் குரூப் D ஊழியர்களுக்கு
ரூபாய். 300/-ம் வழங்கப்படும்.
Subscribe to:
Posts (Atom)