Total Pageviews

Friday, July 28, 2017

                                பணித்தன்மைக்கேற்ப  கூலி

                                                          ஒப்பந்த ஊழியர்களுக்கு அவரவர்கள் செய்யும் பணித்தன்மைக்கேற்ப UNSKILLED/SEMI SKILLED/SKILLED எனத்தரம் பிரித்து அதற்கேற்ற கூலி வழங்க வேண்டும் என சென்னையில் உள்ள மத்திய துணை முதன்மைத்தொழிலாளர் ஆணையர் அவர்களிடம் NFTCL சங்கத்தின் மாநிலச்செயலர் தோழர்.ஆனந்தன் வழக்குத் தொடுத்திருந்தார்.
பல கட்டப்பேச்சுவார்த்தைகளுக்குப்பின் 26/07/2017 அன்று மகிழ்வான முடிவு எட்டப்பட்டுள்ளது. தமிழ் மாநில நிர்வாகம் தஞ்சைப் பொதுமேலாளர் திரு.வினோத் அவர்கள் தலைமையில் ஒரு குழுவை அமைத்து ஒப்பந்த ஊழியர்களை அவர்கள் செய்யும் பணிக்கேற்பத் தரம் பிரிப்பதற்குப் பணித்திருந்தது. குழுவின் முடிவின் அடிப்படையில் ஊழியர்கள் தரம் பிரிக்கப்பட்டு தமிழகம் முழுவதும் அதனை அமுல்படுத்துவதற்கு உத்திரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தைப் போலவே சென்னைத்தொலைபேசியிலும் இது போன்றதொரு உத்திரவு பிறப்பிக்கப்பட வேண்டும் என்ற நமது கோரிக்கை DY.CLC அவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு உரிய வழிகாட்டுதல் தரப்பட்டுள்ளது.
அடுத்த கட்டப்  பேச்சுவார்த்தை சென்னைத்தொலைபேசி நிர்வாகத்துடன் 24/08/2016 அன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒப்பந்த ஊழியர்களுக்கு
நல்லதொரு நியாயம் வழங்கிய..
தமிழ்மாநில நிர்வாகத்திற்கும்
தஞ்சைப் பொதுமேலாளர் திரு.வினோத் அவர்களுக்கும்
உதவிப்பொதுமேலாளர் திரு.இராஜசேகரன் அவர்களுக்கும்….
மத்திய துணை முதன்மைத் தொழிலாளர் ஆணையர் அவர்களுக்கும்
NFTCL தமிழகத்தலைவர்களுக்கும்
வழக்கின் இடையில் நம்முடன்
இணைந்து பணியாற்றிய
TNTCWU தோழர்களுக்கும்
நமது மனமார்ந்த நன்றிகள் உரித்தாகுக.
தரம் பிரிக்கப்பட்ட பணிகள்
UNSKILLED தொழிலாளர்கள்
துப்புரவுப்பணியாளர்கள் மற்றும் அலுவலக உதவியாளர்கள்.
SEMI SKILLED தொழிலாளர்கள்
கேபிள் குழி தோண்டுபவர்கள், TM தோழர்களுக்கு உதவியாளர்கள் மற்றும் காவல் பணியாளர்கள்.
தற்போதைய UNSKILLED கூலி
பிரிவு நகரம் – ரூ.536/-
பிரிவு நகரம் – ரூ.448/-
பிரிவு நகரம் – ரூ.359/-

கிடைக்கவிருக்கும் SEMI SKILLED கூலி
பிரிவு நகரம் – ரூ.593/- ரூ.57 நாளொன்றுக்கு உயர்வு
பிரிவு நகரம் – ரூ.506/- ரூ.58 நாளொன்றுக்கு உயர்வு
பிரிவு நகரம் – ரூ.420/- ரூ.61 நாளொன்றுக்கு உயர்வு

SEMI SKILLED தொழிலாளர்கள் ஓட்டுநர்கள், CABLE JOINT இணைப்பாளர்கள்,எழுத்தர்கள்கணிணியில் பணி புரிபவர்கள், ELECTRICIANS, CALL CENTREகளில் பணிபுரிபவர்கள்,
அகன்ற அலைவரிசை பழுது நீக்குபவர்கள்

தற்போதைய UNSKILLED கூலி
பிரிவு நகரம் – ரூ.536/-
பிரிவு நகரம் – ரூ.448/-
பிரிவு நகரம் – ரூ.359/-

கிடைக்கவிருக்கும் SKILLED கூலி
பிரிவு நகரம் – ரூ.653/- ரூ.117 நாளொன்றுக்கு உயர்வு
பிரிவு நகரம் – ரூ.593/- ரூ.145 நாளொன்றுக்கு உயர்வு
பிரிவு நகரம் – ரூ.506/- ரூ.147 நாளொன்றுக்கு உயர்வு


ஒப்பந்த ஊழியர்கள் பலவகையிலும் சுரண்டப்படுகின்றார்கள்.
அத்தகைய சுரண்டலின் ஒரு வடிவம்தான்
அவர்கள் அனைவருக்கும்
UNSKILLED என்ற வகையில்
ஒரேமாதிரியான கூலி வழங்கியது.
அதனைத் தடுத்து நிறுத்தியதில் நமக்கு மிக்க மகிழ்ச்சி.
இது ஒரு துளியே
அவர்களது உரிமைகளை முழுமையாக அடைவதற்கான நமது போராட்டம் என்றும் தொடரும்
                                                                                             நன்றி 
                                                                               காரைக்குடி வலை தளம் 

Thursday, July 27, 2017

அமைச்சருடன் சந்திப்பு    

நேஷனல் போராம் ஆப்  பி.எஸ்.என்.எல் யூனியன்ஸ் அண்ட் அஸோஸியேஷன்ஸ் கூட்டமைப்பு சார்பாக கன்வீனர் தோழர் சந்தேஸ்வர் சிங்(NFTE) தலைவர் சுப்புராமன்(TEPU) பிடியியூ(BTEU), சேவா(SEWA-BSNL) பொதுச்செயலர்கள்  மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் இளங்கோவன் ஆகியோருடன் துணை அமைச்சரை 26.07.17 அன்று சந்தித்து 3 வது சம்பளமாற்றம் குறித்து பேசி கோரிக்கையை வலியுறுத்தினர். அமைச்சர் தக்க  நடவடிக்கை  எடுப்பதாக  உறுதியளித்துள்ளார்.

Saturday, July 22, 2017

மத்திய பொதுத்துறை நிறுவனங்களுக்கு மூன்றாவது சம்பளமாற்றம் 

பிசினெஸ் லைன் பத்திரிக்கை 19.07.17 அன்று வெளியிட்டுள்ள செய்தி    
மத்திய மந்திரிசபை பொதுத்துறை நிறுவனங்களுக்கு 15% சம்பள உயர்வு  வழங்க ஒப்புதல் அளித்துள்ளது.  
அதிகாரிகளுக்குமட்டுமா? சாதாரண ஊழியர்களுக்குமா? 
இழப்பில் (நட்டத்தில்) இயங்கும் பி.எஸ்.என்.எல். போன்ற நிறுவனங்களுக்குமா?    
எந்த விபரமும் இல்லை. 
சென்ற முறை 30% உயர்வு அதில் பாதியாக 15% இம்முறை 
ஆத்திரம் கொண்டு ஆர்ப்பரித்து அனைவரையும் ஒன்று திரட்டி காலவரையற்ற வேலைநிறுத்த அறிவிப்பு கொடுக்கவேண்டாமா- முதன்மை அங்கீகாரச்சங்கம். 
ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம்! யாரை ஏமாற்ற? 
சிந்திப்போம் தோழர்களே! 
   

Wednesday, July 19, 2017

அசுரவேக… அகன்ற அலைவரிசை 


எங்கும் வேகம்… எதிலும் வேகம்… 
என்பதே மக்களின் இன்றையத் தாகம். 
மக்களின் தீராத தாகத்தை நிறைவேற்றும் வகையில் 
BSNLன் அகன்ற அலைவரிசை சேவை 
பத்து மடங்கு அசுர வேகத்தில்.. அசரா வேகத்தில் 1000mbps வேகத்திறனோடு தரம் உயர்த்தப்பட்டுள்ளது. 
NG-OTH என்னும் இந்த சேவையை 
இலாக்கா அமைச்சர் திரு.மனோஜ் சின்கா
மும்பையில் துவக்கி வைத்துள்ளார். 

தற்போது பொதுமக்களுக்கும் மத்திய மாநில அரசுகளுக்கும் நாம் அளித்து வரும் அகன்ற அலைவரிசை சேவை புதிய வேகத்தோடு மேலும் செழுமையடையும். பேரிடர் காலங்களில் ஏற்படும் பழுதுகளை மேற்கண்ட தொழில்நுட்பத்தில் உடனடியாக 
சரிசெய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய நிர்வாகிகள் அறிமுகம்   

மாவட்ட மாநாட்டில் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்ட பொறுப்பாளர்கள் மாவட்டநிர்வாகத்துடன் 17.07.17 அன்று சந்தித்துப் பேசினோம். அறிமுகத்திற்குப்பின், மாவட்ட அளவில் நிர்வாகத்தின் கவனத்திற்கும் தீர்விற்கும் கொண்டுசெல்ல வேண்டிய சில பிரைச்சனைகளை விவாதித்தோம். இனிய சந்திப்பிற்கு உதவிய மாவட்ட நிர்வாகத்திற்கு நன்றி. 

Wednesday, July 12, 2017

   சிறப்புடன் நடைபெற்ற
7 வது மதுரை மாவட்ட் மாநாடு  

              மாவட்ட தலைவர் தோழர் G.ராஜேந்திரன் தலைமையேற்க,  தேசியக்கொடியை தோழர் இளங்கோவனும்,  சம்மேளனக்கொடியை தோழர் போஸ் ஏற்றிவைக்க 08.07.2017 காலை எழுச்சிமிகு முழக்கங்களுடன் 7வது மாநாடு தொடங்கியது.

         முழக்கங்களுடன் தோழர் தோழியர்கள் கூட்டம் மாநாட்டு அரங்கிற்குள் சென்றமர்ந்தது. சம்மேளன செயலர் தோழர் ஜெயராமன் போராளி தோழர். D.ஞானைய அவர்களின் மறைவிற்கு அஞ்சலி சமர்ப்பித்தார். அரங்கே அமைதியாய் எழுந்து நின்று அஞ்சலி சமர்ப்பித்தது. பின்னர் தோழர். G.ஜெயராமன் துவக்கவுரை நிகழ்த்தினார். 

                     மாவட்ட செயலர்கள் தோழர்கள்   மாரி(காரைக்குடி)  பழனியப்பன்(திருச்சி)  கணேசன் (நெல்லை)  ஆகியோருடன் மாநிலச்சங்கபொறுப்பாளர்கள்தோழியர்.பரிமளம், தோழர்.சுபேதார் அலிகான் மற்றும்  சகோதர சங்க பொறுப்பாளர்களும் மாவட்ட மாநாட்டை வாழ்த்தினர்
பொதுமேலாளர் திருமதி S.E ராஜம் ITS, யூனியன் வாங்கி மண்டல  மேலாளர் திரு ஜித்தேந்தர் மணிராம் கலந்து கொண்டது சிறப்பு.

                 23 கிளைகளிலிருந்து 142 சார்பாளர்கள்  
உள்ளிட்ட 220 தோழர்கள் பங்கேற்றனர். செயல்பாட்டறிக்கை, நிதிநிலையறிக்கை விவாதத்திற்கு பின் ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.                                                                  
                                                         மாவட்ட சங்க நிர்வாகிகள் தேர்வை செயல்மிகு  மாநிலச்செயலர் தோழர் .K.நடராஜன்அவர்கள் நடத்திவைத்தார்.   இனி வரும் ஆண்டுகளுக்கான மாவட்ட சங்க நிர்வாகிகள்  ஒருமனதாக தேர்வுசெய்யப்பட்டனர்.  

          மாநிலச்செயலர்  தோழர். K.நடராஜன் அவர்களின்  சிறப்புரைக்குப்பின்      மாவட்ட பொருளர்  தோழர் . D. செந்தில் குமார்  நன்றிகூற  மாநாடு இனிதே நிறைவுற்றது. 



மாவட்ட சங்க நிர்வாகிகள்  பட்டியல்

             தலைவர்:       
தோழர் S.சிவகுருநாதன். AOS(G)  மதுரை 


உதவித்தலைவர்கள்
தோழர் C.விஜயரெங்கன், OS(P)          திண்டுக்கல் 

தோழர் B.சுருளிராஜ்,  TT                      கம்பம் 

 தோழியர் M.மாகாலட்சுமி, OS(TG)    மதுரை 

தோழர் M.பூவலிங்கம், TT                நிலக்கோட்டை 

செயலர்:     
தோழர் G.ராஜேந்திரன், TT     மதுரை 


துணைசெயலர்கள்:  
  
தோழர் T. ஆறுமுகம் ,OS(T)         மதுரை  

தோழர் M.அஸ்கர் அஹமத் கான், AOS(P) மதுரை 

தோழர் O.மச்சக்காளை,  TT          வத்தலக்குண்டு  
                                 
தோழர் S. ஜோதிநாதன்,  TT           மதுரை    



பொருளர்:    
தோழர். D.செந்தில் குமார், TT          மதுரை    



அமைப்புச்செயலர்கள்: 

தோழர். V. வேலுச்சாமி , TT                     மதுரை 

தோழியர்K.R. கலாவதி,   OS(P)          மதுரை  

தோழர். T.வெள்ளைச்சாமி , TT              வடமதுரை 

தோழர்S.M ஆனந்தகுமார்,  JE                 மதுரை