Total Pageviews
Monday, November 27, 2017
Friday, November 24, 2017
1954 நவம்பர் 24ல் தபால் மற்றும் தந்தித்துறையில் செயல்பட்டுவந்த 9சங்கங்களை ஒற்றுமைப்படுத்தி ஒரே குடையின் கீழ் கொண்டுவந்துஉருவாக்கப்பட்டதுதான் NFPTE சம்மேளனம்.
தபால்-தந்தி- தொலைபேசி தொழிலாளர்கள் பெற்றுள்ள உரிமைகள் - சலுகைகளுக்கு NFPTE தலைமையின் தொலைநோக்குப்பார்வையும் அனைவரையும் அரவணைத்து நடத்திய இயக்கங்கள், போராட்டக்கள் தான் காரணமென்றால் அது மிகையாகாது.
தபால் துறை - தொலைபேசித்துறை என தனியாக பிரிக்கப்பட்டபின்
NFPE-NFTE என்றானது.
மின்னணுத்தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சியின் காரணத்தால் தொலைபேசித்துறை தகவல்தொழில்நுட்ப மையமானது.
உலகநாடுகளிடையே நடந்துவந்த பனிப்போரின் தன்மை மாற்றத்தால் அரசுதுறைகள் பொதுத்துறைகளாக மாற்றப்பட்டு தனியார் நிறுவனங்கள் ஊக்கப்படுத்தப்பட்டன.
பன்னாட்டு பகாசூர நிறுவனங்கள் வளர்ந்திட அதீத வாய்ப்புக்கள் வழங்கிட வழிவகைகள் செய்யப்பட்டன.
தொலைபேசித்துறை MTNL-BSNL என பிரிக்கப்பட்டது.
NFTE சம்மேளனம் NFTE(BSNL)லாக மாறியது.
"எதைக்கொடுத்தும் ஒற்றுமை என்னையே கொடுத்ததும் ஒற்றுமை" என்ற தரகமந்திரத்திற்கு உதாரணமாக வாழ்ந்து மறைத்த தொழிற்சங்க பிதாமகன் தோழர் O.P.குப்தா அவர்களின் சீரிய வழிகாட்டலின் அடிப்படையில் ஒன்றுபட்ட இயக்கங்கள் காட்டுவோம்.
BSNLலை காப்போம்.
இதுவே சம்மேளனதின சூளுரை.
Wednesday, November 15, 2017
மனிதச்சங்கிலி - போராட்டம்
16/11/2017 அன்று நாடு முழுவதும்
நடைபெறவிருந்த
மனிதச்சங்கிலி போராட்டம் 23/11/2017 அன்று
நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
14/11/2017அன்று டெல்லியில் நடைபெற்ற
அனைத்து சங்க கூட்டத்தில்
மேற்கண்ட முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
கூடுதல் தயாரிப்புடன்…
கூடுதல் பங்கேற்புடன்…
கூடுதல் எழுச்சியுடன்…
மனிதச்சங்கிலி போராட்டத்தை
வெற்றிகரமாக்குவோம்..
Friday, November 10, 2017
மத்திய அரசின் தொழிலாளர்
விரோதப் போக்கை கண்டித்து
நவம்பர் 9, 10, 11 தேதிகளில்…
தலைநகர் டெல்லியில்...
12 அம்சக்கோரிக்கைகளை வலியுறுத்தி….
அனைத்து மத்திய சங்கங்கள் பங்கேற்கும்…
மூன்று நாள் முற்றுகைப்போர்…
தமிழகம் மற்றும் சென்னை பகுதியில் இருந்து நமது சங்க தலைவர்கள், தோழர்கள் கலந்துகொண்டனர்.
போராட்ட களத்தில்
NFTE அகிலஇந்திய சமேளன தலைவர்
தோழர் .இஸ்லாம்
NFTE அகிலஇந்திய சமேளன செயலர்
தோழர் . C.சிங்
NFTCL அகிலஇந்திய சமேளன செயலர்
தோழர் .மதிவாணன்
NFTE தமிழ் மாநிலசெயலர் தோழர்.நடராஜன்
NFTE தமிழ் மாநில தலைவர். தோழர். காமராஜ்
கலந்துகொண்டனர்
போராட்ட களத்தில்
காரைக்குடி மாவட்ட செயலர் தோழர் .வெ .மாரி , தோழர் .சுப்பிரமணி,
தோழர் .முருகன்,
தோழர் .முருகேசன்,
போராட்ட களத்தில்
NFTE அகிலஇந்திய சமேளன அமைப்பு செயலர்
S . S . கோபாலகிருஷ்ணன்
NFTE அகிலஇந்திய சமேளன அமைப்பு செயலர்
S . S . கோபாலகிருஷ்ணன்
மாநில பொருளாளர்
தோழர் .L .சுப்புராயன்
NFTCL மாநிலசெயலர் தோழர் .ஆனந்தன்
Monday, November 06, 2017
உழைக்கும்
வர்க்கத்தின்
உணர்ச்சிப்போர்
கோரிக்கைகள்
மத்திய.. அரசே…
வேலைவாய்ப்பை உருவாக்கு…
விலைவாசியைக் கட்டுப்படுத்து…
பொதுவினியோக முறையை சீராக்கு…
வேலைவாய்ப்பின்மையைக் கட்டுப்படுத்து…
சமூகக்காப்பீட்டுத் திட்டங்களை நிறைவேற்று…
ஒப்பந்த முறையை முழுமையாக ரத்து செய்…
போனஸ் உச்சவரம்பை அனைவருக்கும் நீக்கு…
ILO மாநாட்டு முடிவுகளை நடைமுறைப்படுத்து…
EPF வைப்புநிதிக்கான சம்பள உச்சவரம்பை நீக்கு…
பொதுத்துறைகளில் தனியார் மயத்தைப் புகுத்தாதே…
குறைந்த பட்ச ஓய்வூதியம் மாதம் ரூ.3000/= வழங்கு…
குறைந்த பட்சக்கூலி மாதம் ரூ.18000/- நிர்ணயம்
செய்….
இரயில்வே துறையில் அந்நிய முதலீட்டைப் புகுத்தாதே…
தொழிலாளர் நலச்சட்டங்களை முழுமையாக அமுல்படுத்து
ஒப்பந்த ஊழியர்களுக்கு சமவேலைக்கு சம ஊதியம் வழங்கு….
இராணுவத்தில் அநியாய அந்நிய முதலீட்டை அனுமதிக்காதே…
நடைமுறையில் உள்ள தொழிலாளர் சட்டங்களைத் திருத்தாதே…
தொழிற்சங்கங்களை 45 நாட்களுக்குள்
கட்டாயமாகப் பதிவு செய்…
ஆயுள் காப்பீட்டுத்துறைகளில் அந்நிய முதலீட்டை அதிகப்படுத்தாதே…
ESI மருத்துவத்திட்டத்தில் சேருவதற்கான ஊதிய உச்சவரம்பை நீக்கு…
திட்டப்பணிகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கும் உரிமைகள் வழங்கு…
NFTE
அகில இந்திய
மாநாடு
2018 - மார்ச்
14...
15... 16...
அமிர்தசரஸ் –
பஞ்சாப்
சிரம் நிமிர்த்திய
சங்கம்…
கரம் உயர்த்திய
சங்கம்…
வாழ்வு தந்த
சங்கம்…
வளம் பெருக்கிய
சங்கம்…
ஊணாய்… உயிராய்…
உணர்வோடு கலந்த
சங்கம்…
இதயக்கோவிலாம்….
NFTEயின்...
அகில இந்திய
மாநாடு…
பொற்கோவில் நகரிலே…
பொலிவோடு நடைபெறுகிறது…
பொற்கோவில் நகர்
திணறட்டும்…
புறப்படுவீர்… தோழர்களே…
Subscribe to:
Posts (Atom)