Total Pageviews

Thursday, December 27, 2018






2019 ஜனவரி 8 – 9

இந்திய தேசத்தின்

அனைத்து தொழிற்சங்கங்கள் 

ஒன்றிணைந்த

மாபெரும்  தேசம் தழுவிய

இரண்டு நாள்

வேலை நிறுத்தம்

BSNL தொழிற்சங்கங்கள் 

பங்கேற்பு

Monday, December 24, 2018




னைருக்கும்  

னி  

கிறிஸ்துஸ்


நல்வாழ்த்துக்ள்

Tuesday, December 11, 2018


குறுந்தகவல்
            


சென்னையில் முதன்மைப்பொதுமேலாளர் அலுவலகத்தில் உள்ள 

 NFTE சங்க அலுவலகத்தில்  மாவட்டச்செயலர்கள் கூட்டம்  

இன்று  11/12/2018  செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு 

  நடைபெறுகிறது.


********************

நிர்வாகச் செலவுகளை குறைக்கவும் , ஊழியர்களை திறமையாக 

பயன்படுத்தும் நோக்கில் கல்கத்தா டெலிகாம் ஸ்டோர்ஸ் மேற்கு 

வங்க மாநில நிர்வாகத்துடன் இணைக்கப்படுகிறது. இதற்கான 

உத்தரவு  06.12.2018ல் வெளியிடப்பட்டுள்ளது. 

*********************

2019ம் ஆண்டுக்கான அரசு விடுமுறைகள் மற்றும் RH விடுமுறை 

நாட்களின் பட்டியலை மாநில நிர்வாகம்  05.12.2018ல் 

வெளியிட்டுள்ளது.

********************

இந்திய நாட்டின் முதல் தொழிற்சங்கமான AITUC சங்கத்தின் 19வது 

தமிழ் மாநில மாநாடு  2019-ஜனவரி மாதம் 23…24…25  தேதிகளில் 

வேலூரில் நடைபெறுகிறது .

**********************



Tuesday, December 04, 2018


மீண்டும் தொடர்ந்து செல்வோம் ..

                              ஒற்றுமை பாதையில்...



                  03/12/2018 அன்று   நமது இலாக்கா அமைச்சருடன்

அனைத்து சங்க கூட்டமைப்பு பேச்சுவார்த்தை நடத்தியது.

நமது கோரிக்கைகளில் கீழ்க்கண்ட முன்னேற்றங்கள் 

ஏற்பட்டுள்ளன.



4G அலைக்கற்றை ஒதுக்கீடு:

BSNL நிறுவனத்திற்கு 4G அலைக்கற்றை ஒதுக்கீடு 

சம்பந்த மாக மத்திய அமைச்சரவைஒப்புதல் விரைவில்

பெறப்படும்.இதற்கான பணியை செய்து முடிக்க DOTயின் 

மூத்த அதிகாரிஒருவர் சிறப்பு அதிகாரியாக  

நியமிக்கப்படுவார்.




ஓய்வூதிய மாற்றம்:

ஓய்வூதிய மாற்றம் விரைவில் அமுல்படுத்தப்படும்.

ஊதியமாற்றத்திற்கும் ஓய்வூதிய மாற்றத்திற்கும்

இனி யாதொரு சம்பந்தமுமில்லை...

ஓய்வூதியமாற்றம் ஊதியமாற்றத்தோடு இனி 

இணைக்கப்படாது.




ஓய்வூதியப்பங்களிப்பு:

வாங்கும் சம்பளத்தின் அடிப்படையில்

ஓய்வூதியப்பங்களிப்பு என்ற மத்திய அரசு உத்திரவு

BSNLலிலும் இனி அமுல்படுத்தப்படும்.




BSNL நேரடி நியமன ஊழியர்களுக்கு

கூடுதல் ஓய்வூதியப்பங்களிப்பு:

BSNL நேரடி நியமன ஊழியர்களுக்கு மார்ச் 2019 முதல்

கூடுதலாக 3 சத ஓய்வூதியப்பங்களிப்பு செய்யப்படும்.

நாளடைவில் மீதமுள்ள 4 சத பங்களிப்பும் வழங்கப்படும்.






புதிய சம்பள விகிதங்களுக்கு ஒப்புதல்:


BSNL பரிந்துரைத்துள்ள புதிய சம்பள விகிதங்களுக்கு

உரிய ஒப்புதல் வழங்கிட நடவடிக்கை எடுக்கப்படும்

இதற்கான பணியை செய்து முடிக்க DOT அதிகாரிகளை 

அமைச்சர் பணித்துள்ளார்.




3வது ஊதிய மாற்றம்:-

BSNL ஊழியர்களின் முக்கியக் கோரிக்கையான

3வது ஊதிய மாற்றம் அமுல்படுத்துவது பற்றி

BSNL மற்றும் DOT இடையே ஒருமித்த கருத்து

உருவாவதற்கு கூடுதல் கால அவகாசம் 

தேவைப்படுகிறது.



எனவே ஊதியமாற்றத்தில் நல்லதொரு

முடிவினை எட்டிட

BSNL மற்றும் DOTக்கு  கூடுதல் அவகாசம் வழங்க 

வேண்டிய அவசியம் இருப்பதால் டிசம்பர் 10 அன்று 

நடைபெறவிருந்தகாலவரையரையற்ற 

வேலைநிறுத்தத்தைமறு அறிவிப்பு வரும்வரை ஒத்தி 

வைத்திடஅனைத்து சங்க கூட்டமைப்பு

முடிவு செய்துள்ளது.

தோழர்களே

நாடு முழுவதும் நமது அனைத்து சங்க கூட்டமைப்பு

காலவரையரையற்றவேலைநிறுத்தத்திற்கு

முழுமுனைப்புடன் ஊழியர்களையும் அதிகாரிகளையும் 

தயார்படுத்தியது. மிகப்பெரும்பகுதி  தோழர்கள் போராட்ட 

உணர்வோடு களம் காண கடமை உணர்வோடு 

காத்திருந்தனர்.உரிமை உணர்வு மிக்க



தோழர்களுக்கும், தோழியர்களுக்கும்,

நமது வாழ்த்துக்கள்….


அனைத்துக் கருத்து வேற்றுமைகளையும் மறந்து….

ஒன்றுபட்ட அமைப்பாக இன்றுவரை திகழ்ந்து

இன்றைய சூழலைக் கணக்கில் கொண்டு….

போராட்டம் இல்லாமலேயே


ஊதியமாற்றம் இல்லாமல் ஓய்வூதிய மாற்றம்

என்ற மாபெரும் சாதனையை நிகழ்த்தி

அலைக்கற்றை ஒதுக்கீட்டை முடிவுக்கு கொண்டுவந்து..

இழுத்தடிக்கப்பட்ட ஓய்வூதியப்பங்களிப்பை 

முறைப்படுத்தி..

நேரடி ஊழியர்களுக்கு ஓய்வூதியப்பங்களிப்பைக் 

கூடுதலாக்கி

மிகப்பெரும் சாதனைகளை

கத்தியின்றி இரத்தமின்றி

போராட்ட அறைகூவல் மூலமே சாதித்த

நமது தலைவர்களுக்கும்...

AUAB கூட்டமைப்புக்கும்...

நமது மனமார்ந்த வாழ்த்துக்கள்….

இனி… 

ஊதியமாற்றம் என்ற நமது ஒற்றைக்கோரிக்கை மட்டுமே

     நம் முன்னே எதிர்நிற்கின்றது

        அதையும் நாம் வென்றாக வேண்டும்


        மீண்டும் தொடர்ந்து செல்வோம் ..
                                
                                        ஒற்றுமை பாதையில்...