செல் கோபுரங்களை பி.எஸ்.என்.எல் நிறுவனத்திலிருந்து தனியாக பிரித்து நம்மை முடக்கிடநினைக்கும் மத்திய அரசின் நிலைப்பாட்டை எதிர்த்து 27.03.2018 அன்று அனைத்துச்சங்க கூட்டமைப்பு சார்பாக நாடுமுழுவதும் ஆர்ப்பாட்டம் சிறப்பாக நடைபெற்றது.
27.03.2018 அன்று மாலை FNTO சங்க அலுவலகத்தில் நடைபெற்ற
அனைத்துச்சங்க கூட்டமைப்பு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்
3 வது சம்பளமாற்றம் தொடர்ப்பாக தொலை தொடர்பு துறை (DOT ) பொதுத்துறை ( DPE ) அலுவலகத்திற்கு பரிந்துரை அனுப்பியுள்ளது. தொடர்ந்து மேல் முயற்சிகளை எடுப்பது.
செல் கோபுரங்களை பி.எஸ்.என்.எல் நிறுவனத்திலிருந்து தனியாக பிரித்து நம்மை முடக்கிடநினைக்கும் மத்திய அரசின் நிலைப்பாட்டை எதிர்த்து
கடும் தொடர் போராட்டத்தை நோக்கி
பெருந்திரள் தர்ணா
தலைமை அலுவலகம் ( CO ) மாநிலத்தலைமையகம் ( CGM OFFICE ) மாவட்ட தலைமையகம் ( GM OFFICE ) ஆகிய 3 இடங்களில் 12.04.18 அன்று பெருந்திரள் தர்ணா நடத்துவது.
ஆளுநர் மளிகை நோக்கி பேரணி
19.04.18 அன்று ஆளுநர் மாளிகை நோக்கி பேரணியாகச்சென்று கோரிக்கை மனு சமர்ப்பித்தல்.
தேசிய கருத்தரங்கம்
மே மாதம் 9 அல்லது 10 தேதியில் டெல்லியில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொள்ளும் கருத்தரங்கம் நடத்துவது.
நம் மத்தியில் நிலவும் சுணக்கம் நீக்கிட தொடர் கூட்டங்கள், பரப்புரைகள் மூலம் கடும் போராட்டத்திற்கு தயாராவோம். நம்மை முடக்கிடும் முயற்சிதனை முறியடிப்போம்.