Total Pageviews
Wednesday, July 25, 2018
Tuesday, July 24, 2018
Monday, July 23, 2018
BSNL அனைத்து சங்க
கூட்டமைப்பு
மதுரை தொலைத்தொடர்பு
மாவட்டம்
தொடர் உண்ணாவிரதம்
---------------------------------------------------------------------------
24/07/2018 – செவ்வாய் – காலை 10 மணி
தல்லாகுளம் - மதுரை
---------------------------------------------------------------------------
25/07/2018 – புதன் –
காலை 10 மணி
தொலைபேசி நிலையம் – திண்டுக்கல்
---------------------------------------------------------------------------
26/07/2018 – வியாழன் – காலை 10 மணி
தொலைபேசி நிலையம் – தேனி
---------------------------------------------------------------------------
கோரிக்கைகள்
BSNL ஊழியர்கள் மற்றும்
அதிகாரிகளுக்கு
01/01/2017 முதல் ஊதிய மாற்றம்…
01/01/2017 முதல் BSNL ஓய்வூதியர்களுக்கு
ஓய்வூதிய மாற்றம்….
ஊழியர்களுக்கு வழங்கும் சம்பளத்தில் ஓய்வூதியப் பங்களிப்பு…
BSNL நிறுவனத்திற்கு 4G அலைக்கற்றை ஒதுக்கீடு…
தோழர்களே… அணி திரள்வீர்….
Saturday, July 21, 2018
முதலாவது இருதரப்பு ஊதியக்குழுக்கூட்டம்
BSNL ஊழியர்களின்
நீண்ட
போராட்டத்திற்குப்பின்…
20/07/2018 அன்று
டெல்லியில்
இருதரப்பு
ஊதியக்குழுக்கூட்டம்
ஊதியக்குழுத் தலைவர் CGM திரு.H.C.பந்த்
அவர்களின் தலைமையில் நடைபெற்றுள்ளது.
நிர்வாகத்தரப்பில் 5
உறுப்பினர்கள்
கலந்து
கொண்டனர்.
ஊழியர் தரப்பு சார்பாக
8
உறுப்பினர்கள்
கலந்து
கொண்டனர்.
குறுகிய கால
இடைவெளியில்
ஊதியக்குழு
அமைத்து…
வெகு விரைவிலேயே
முதல்
கூட்டத்தையும்
கூட்டியதற்காக
ஊழியர்கள் தரப்பின்
சார்பில்
நிர்வாகத்திற்கு
நன்றி
தெரிவிக்கப்பட்டது.
நிர்வாகத்தரப்பில் ஊதியக்குழு
சம்பந்தமான
DPE வழிகாட்டுதல்கள்
விவரிக்கப்பட்டன.
விலைவாசிப்படி சம்பந்தமாக
ஊழியர்
தரப்பில்
எழுப்பப்பட்ட சந்தேகங்களுக்கு
DPE
இலாக்கவிடம்
உரிய விளக்கம்
கேட்கப்படும்
என
உறுதியளிக்கப்பட்டது.
ஊதியக்குழு சம்பந்தமான
பேச்சுவார்த்தை
ஆகஸ்ட் 2018 மாத
இறுதிக்குள்
முடிவு
செய்யப்பட்டு
உடன்பாடு போடப்பட
வேண்டும்
என
ஊழியர் தரப்பில்
கோரிக்கை
எழுப்பப்பட்டது.
அடுத்த
கூட்டம்
09/08/2018
அன்று
நடைபெறும்
என்று
அறிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த கூட்டத்தில்
புதிய
ஊதிய
விகிதங்களைக்
கட்டமைப்பது
பற்றி
விவாதிக்கப்படும்.
மொத்தத்தில்…
தாமதமானாலும்…
தடைகள்
வந்தாலும்…
ஊதியக்குழு
கூட்டம்
நல்லதொரு
துவக்கம்….
Monday, July 16, 2018
செய்திகள்
*************************
*************************
3வது ஊதிய
மாற்றக்குழு
(GroupC’&’D’ஊழியர்களின்)
அறிமுகக் கூட்டம் 20.07.2018
வெள்ளியன்று நடைபெறவுள்ளது.
------------------------------------------------------------------------------------------------------
JE போட்டித்
தேர்வு
நடத்துவது குறித்து நமது சங்கம் நிர்வாகத்துடன் தொடர்ந்து விவாதித்து வந்ததன் அடிப்படையில், 2017ம் வருட
ஆளெடுப்பிற்கான 50%
ஒதுக்கீடு அடிப்படையிலான இளநிலைப் பொறியாளர்களுக்கான இலாகா போட்டித் தேர்வு நடத்துவதற்கான ஒப்புதலை கார்ப்பேரேட் அலுவகம் 13.07.2018
அன்று
வழங்கியுள்ளது.
31.03.2018
வரையிலான
காலிப்பணியிடங்களை கணக்கீடு செய்ய மாநில நிர்வாகங்களுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஆளெடுப்பு விதிகளின் படி தேர்வு எழுதுபவர்களின் தகுதியை நிர்ணயிப்பதற்கான கெடு தேதி 01.07.2017
ஆகும்.
---------------------------------------------------------------------------------------------
மத்திய
அரசு
ஊழியர்களுக்கு 7வது ஊதியக்குழுவின் அடிப்படையில் குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.9000/-
ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது BSNL ஊழியர்களுக்கும் பொருந்தும் என மத்திய சங்கம் நிர்வாகத்துடன் இன்று 13.07.2018
அன்று
விவாதித்துள்ளது. இது குறித்து DOT இலாகாவுடன் விவாதிப்பதாக நிர்வாகம் தெரிவித்துள்ளது.
------------------------------------------------------------------------------------------------------
ஊழியர்
தரப்பு
கோரிக்கைக்கு
இணங்க
3வது
ஊதியக்குழுவிற்கான
ஊழியர்
தரப்பு
உறுப்பினர்களின்
எண்ணிக்கைக்கைய
ஐந்து
என்பதிலிருந்து
எட்டு
என BSNL
நிர்வாகம் உயர்த்திட
ஒப்புக்கொண்டுள்ளது.
இதில்
BSNLEU
சங்கத்திலிருந்தும் 5
உறுப்பினர்கள் ,
NFTE சங்கத்திலிருந்தும் 3 உறுப்பினர்கள்
பங்கு
பெறுவர்.
-------------------------------------------------------------------------------------------
பெரும்பாலான ஊழியர்கள் ஊதிய தேக்கப்பிரச்சினையால்
பாதிப்படைந்துள்ளனர்.
இந்நிலையில் ஊழியர்கள் எந்தெந்த
ஊதிய விகிதங்களில் தேக்கநிலை அடைந்துள்ளனர்
என்ற விபரத்தை கொடுக்குமாறு மாநிலச் சங்கத்தை
மத்திய சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.
Subscribe to:
Posts (Atom)