Wednesday, August 29, 2018


கேரளா வெள்ள  நிவாரண நிதியாக ஒரு நாள் 

அடிப்படை சம்பளத்தை வழங்கி.

கேரள மக்களுக்கு உதவுவோம்


Saturday, August 25, 2018


செய்திகள்

கேரள வெள்ள நிவாரணத்திற்கு BSNL ஊழியர்களின் பங்களிப்பாக ஒரு நாள் அடிப்படைச்சம்பளத்தை BASIC PAY பிடித்தம் செய்திடக்கோரி BSNL அனைத்து சங்க கூட்டமைப்பு  நிர்வாகத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.
 ----------------------------------------------------------------------------------------
BSNL அனைத்து சங்க கூட்டமைப்பு 24/08/2018 அன்று CMDயுடன் சந்திப்பு நிகழ்த்தியது. ஊதியமாற்றம்ஓய்வூதிய மாற்றம்ஓய்வூதியப்பங்களிப்பு மற்றும் 4G அலைக்கற்றை ஒதுக்கீட்டில் இலாக்கா அமைச்சர் அளித்த உறுதிமொழி நடைமுறைப்படுத்தப்படாத அவலநிலை சுட்டிக்காட்டப்பட்டது. இது சம்பந்தமாக DOT செயலருடன் கூட்டமைப்பு சந்திப்பு நிகழ்த்த ஆவண செய்திட கோரிக்கை விடுக்கப்பட்டது. மேலும் BSNL நேரடி நியமன ஊழியர்களின் ஓய்வூதியத்திட்டத்திற்கு BSNL நிர்வாகம் கூடுதல் பங்களிப்பு செய்திடவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
-------------------------------------------------------------------------------------
NFTE தேசிய செயற்குழுக் கூட்டம் 2018 அக்டோபர் 24 மற்றும் 25 தேதிகளில் உத்தரகாண்ட மாநிலம் ஹரித்துவார் நகரில் நடைபெறுகின்றது.
-------------------------------------------------------------------------------------
தொலைத்தொடர்பு அதிகாரிகளுக்கு சீனாவில் தகவல் தொழில்நுட்பத்தில் பயிற்சி அளிக்க DOT உத்தேசித்துள்ளது. அலிபாபா மற்றும் HUAWEI நிறுவனங்களில் பயிற்சி அளிக்கப்படும்.
-------------------------------------------------------------------------------------
மத்திய அரசின் ஓய்வூதியத்திட்டத்தில் இல்லாத தனியார் மற்றும் பொதுத்துறை ஊழியர்களின் பணிக்கொடை உச்சவரம்பு மத்திய அரசு ஊழியர்களுக்கு  உயர்த்தப்பட்டதைப் போலவே ரூ.20 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
-------------------------------------------------------------------------------------
பரிவு அடிப்படை வேலைக்கு விண்ணப்பித்து உரிய தகுதி பெற்றவர்களுக்கு பணி நியமனம் வழங்கிட CORPORATE அலுவலகம் ஒப்புதல் வழங்கியுள்ளது.
காலியிடங்களைப் பொறுத்து 30க்கும் குறைவான எண்ணிக்கையில்தான் தமிழகத்தில் பணி நியமனம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
-------------------------------------------------------------------------------------
BSNL ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட அலைபேசி ரூ.600/- PREPAID திட்டம் ஓட்டுநர்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

Tuesday, August 21, 2018


6வது மாவட்ட கூட்டு


ஆலோசனை குழு கூட்டம்


6வது மாவட்ட கூட்டு

ஆலோசனை குழு

(LJCM) இன்று 21.08.2018 

முதன்மை பொது மேலாளர் 

அலுவலகத்தில் காலை  10.00 

மணிக்கு  நடைபெறுகிறது.
-------------------------------------------- 
தலைவர்- : 
 தோழர்.S.சிவகுருநாதன் , NFTE


செயலர் -:
தோழர்.C. செல்வின் சத்யராஜ்
BSNLEU   
-------------------------------------------- 

Friday, August 17, 2018

அஞ்சலி



முன்னாள் பிரதமர்

திரு. அடல் பிகாரி வாஜ்பாய்

அவர்களது மறைவிற்கு

 நமது அஞ்சலி.

Wednesday, August 15, 2018


தொடர்புடைய படம்
சுதந்திர தின 
நல்வாழ்த்துக்கள் 








Tuesday, August 14, 2018


கோடனக்கோடி மக்களுக்கு வேலை வாய்ப்புகள்.....

விவசாயத்தை செழிக்க நதிநீர் இணைப்புகள்.....

ஏழைகளுக்கு தொழில் முனைய வங்கி கடன்......

பெண்களுக்கு பிரத்தியோக சுதந்திரம்......

கிராமப்புற மக்களுக்கு அடிப்படை வசதி......

ஜாதி மத பேதம்மின்மை......

கருத்து சுதந்திரம்......

சுதந்திரம் அடைந்து 71 ஆண்டுகள் உருண்டுவிட்டன.

இந்தியர்கள் அடிமைகளாக வாழ்கின்றனர்.

இந்தியர்கள் அன்னியர் ஆகின்றனர்.

மாட்டு வியாபாரி கைதி ஆகிறான்.

மோசடி செய்தவன் உல்லாசமாக வாழ்கிறான்.

காமகொடூரனுக்கு காவல் பாதுகாப்பு.

கஞ்சா விற்றவன் கடவுள் ஆகிறான்.

அதானி அம்பானி ஆகிறான்.

அம்பானி அசுரன் ஆகிறான்.

ஏழைகளுக்கு பிழைக்க வழியில்லை.

ஒடுக்கப்பட்டோர் வாழ வழியில்லை.

விசாரணைக்கு முன்பே கைதி கைலாயம் செல்கிறான்.

பெண்ணுக்கு சுதந்திரம் இருக்கு ஆனால் இல்லை.

நாம் மீண்டும் சுதந்திர அடைய...

நம் நாட்டில் நாம் சுதந்திரமாக வாழ

நமது போராட்ட களம்.    

தேர்தல் களம்.

ஜனநாயக தேர்தலில் களம் காண வேண்டும்.

நம் நாடு காவி பிடிகளில் இருந்து 

சுதந்திர அடைய வேண்டும்.





தோழர்.சோம்நாத் சாட்டர்ஜி

அவர்களின் மறைவிற்கு

நமது ஆழ்ந்த அஞ்சலி….

Friday, August 10, 2018


தேசியக்குழுவின் நிலைக்குழு

கூட்டமும் - முடிவுகளும்

நமது தேசியக்குழுவின் (NJCM) நிலைக்குழு கூட்டம் 08-08-2018 

அன்று டெல்லியில் நடைபெற்றது. இக் கூட்டத்தில் ஊழியர் 

தரப்பு உறுப்பினர்களாக உள்ள NFTE மற்றும் BSNLEU 

சங்க உறுப்பினர்கள் பங்கேற்றனர். தேசியக்குழு கூட்டத்தில் 

எடுக்கப்பட்ட முடிவுகளின் அமுலாக்கம் தொடர்பாக விவாதம் 

நடைபெற்றது. இவ் விவாதத்தில்., ஊழியர் தரப்பு 

உறுப்பினர்கள்., 35-வது தேசியக்குழு கூட்ட முடிவுகள் 

அமுலாக்கத்தில் உள்ள கால தாமதத்தை சுட்டிக்காட்டி 

தங்களின் அதிருப்தியை தெரிவித்தனர். 

இறுதியாக.தேசியக்குழுவின் (NJCM) நிலைக்குழு கூட்டத்தில் 

கீழ்கண்ட முடிவுகள் - தீர்வுகள் எடுக்கப்பட்டன.


தேசியக்குழுவின் நிலைக்குழு 

கூட்டத்தில் 

எடுக்கப்பட்ட முடிவுகள்


E-1 ஊதிய விகிதத்தில் ஊழியர்களின் பதவி உயர்வு குறித்து 

இயக்குனர் குழுவிற்கான குறிப்பு இந்த வார இறுதிக்குள் 

அனுப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


விடுபட்ட கேடர்களுக்கான கூடுதல் ஒரு ஆண்டு உயர்வுத் 

தொகை வழங்குவதற்கான குறிப்பு இயக்குனர் குழு 

கூட்டத்திற்கு அனுப்பப்பட்டு விட்டது.


கேசுவல் ஊழியர்களின் பணிக்கொடை பிரச்சனை CA 

பிரிவிற்கு அனுப்பப்பட்டுள்ளது. அதன் ஒப்புதல் கிடைத்த 

உடன் இயக்குனர் குழுவிற்கு அனுப்பப்படும் என 

தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் ஏற்பட்டுள்ள 

மாற்றல் பிரச்சனைகள் விரைவில் தீர்க்கப்படும்.


TOA (G) கேடர்களுக்கான Confirmation மற்றும் Sr.TOA (G)-க்கான 

பதவி உயர்வு தேர்வுகள் நடத்துவது குறித்து TOA (G) 

கேடர்களுக்கானConfirmation தேர்வை 31-08-2018 க்கு 

முன்பாகவும்., Sr.TOA (G)-க்கான பதவி உயர்வு தேர்வை 

31-12-2018 க்கு முன்பாகவும் நடத்திட மாநில நிர்வாகங்களுக்கு 

கடிதம் எழுதப்பட்டுள்ளது.


28-01-2018 அன்று நடைபெற்ற JE தேர்வு முடிவுகள் 

பரிசீலிக்கப்பட்டு இயக்குனர் (மனிதவளம்) ஒப்புதல்-க்கு 

அனுப்பப்பட்டுள்ளது.


RTP சேவை காலத்தை., சேவைக் கணக்கில் எடுத்துக் கொள்ள 

வேண்டும் என்ற நீதிமன்ற தீர்ப்பை அமுல்படுத்திட DOT-க்கு 

அனுப்பப்படும்.


"On line Exam" இணையத் தேர்வுக்கு ஊழியர்களை தயார் செய்திட 

15 நாட்கள் பயிற்சி வழங்கப்படும்.


IQ பராமரிப்பு மற்றும் IQ-வை Online (இணையத்தில்)-ல் பதிவு 

செய்வது குறித்து விவாதிக்கப்பட்டது.


BSNL CDA விதி 2006-ல் விதி 55(A) இணைப்பது குறித்து 

பரிசீலனை குழு., மாநில மட்டத்தில் குழுவை உருவாக்கிட 

மற்றும் மறுபரிசீலனை செய்திட வழிகாட்டுதல் 

கோரப்பட்டுள்ளது.


மாநில மற்றும் மாவட்ட மட்டங்களில் உதவி மேலாளர் 

(Assistant Manager) பதவிகள் உருவாக்கம் குறித்து குழு அமைக்க 

வேண்டும்.


அங்கீகரிக்கப்பட்ட சங்கங்களின் பிரதிநிதிகளுக்கு இலவச 

சேவை சிம் இணைப்பு வழங்குவதில் பாரபட்சம் நீக்க 

வேண்டும்.