Total Pageviews

Saturday, September 29, 2018


IDA உயர்வு

அக்டோபர் 01-10-2018 முதல்

IDA 7.6% சதவீதம் உயர்ந்துள்ளது.

மொத்த- IDA  புள்ளிகள்

128.0 %  + 7.6% = 135.6 சதவீதம்


ஊதியமாற்றக் கூட்டம்
   
      
மூன்றாவது ஊதிய மாற்றக்கூட்டம்  28/09/2018

அன்று டெல்லியில் நடைபெற்றது. 

NE-4 மற்றும் NE–5 ஊதிய நிலைகளில் தேக்கநிலை 

வரும் வாய்ப்புள்ளதாக ஊழியர் தரப்பில் 

சுட்டிக்காட்டப்பட்டது. 

எனவே கூடுதலாக ஒரு ஆண்டு 

உயர்வுத்தொகை அளிக்கப்பட்டு 

உச்சவரம்பு ஊதியம் நிர்ணயிக்கப்பட வேண்டும் 

என கோரிக்கை எழுப்பப்பட்டது.  நிர்வாகம் 

பரிசீலிப்பதாக ஒத்துக்கொண்டுள்ளது. 


அடுத்த கூட்டம் 09/10/2018 அன்று நடைபெறும். 

ஊதிய நிலைகள் இறுதி செய்யப்பட்டுவிட்ட 

நிலையில்  அடுத்த கூட்டத்தில் ALLOWANCE 

படிகள் மற்றும்  இதர பிரச்சினைகள் 

விவாதிக்கப்படும்.


அனைத்து தொழிற்சங்க 

வேலைநிறுத்தம்



பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு விற்பனை

வேலையில்லாக் கொடுமை
  
  தொழிற்சங்க உரிமைகள் பறிப்பு

சமூக நலத்திட்டங்களுக்கு வெட்டு

தொழிலாளர் நலச்சட்டங்கள் அழிப்பு..

விஷம் போல் ஏறும் விலைவாசி


இன்னும் எண்ணற்ற 

தொழிலாளர் விரோத… 

மக்கள் விரோத

மத்திய அரசின் தரம் தாழ்ந்த கொள்கைகளைக் 
கண்டித்து.

அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் இணைந்து

28/09/2018 - டெல்லி  மத்திய தொழிற்சங்கங்களின் 

கருத்தரங்க முடிவின்படி...



அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்கள் முழுக்க நாடு 

தழுவிய கருத்தரங்கங்கள்

நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் வாயில் கூட்டங்கள் 

மற்றும் பேரணிகள்...

டிசம்பர் 17 முதல் 22 வரை நாடுமுழுக்க  கண்டன 

ஆர்ப்பாட்டங்கள்...



08/01/2019 மற்றும் 09/01/2019 நாடு திணறும் 

இரண்டு நாள் வேலைநிறுத்தம்


தோழர்களேதயாராவீர்
         
            இப்போது இல்லையேல்
                                          
                             இனி எப்போதுமில்லை



Friday, September 14, 2018


BSNL ஊழியர்களுக்கான மூன்றாவது ஊதிய 

மாற்றத்திற்கான  5வது கூட்டம்.


ஊதிய மாற்றக் கூட்டுக்குழுவின் 5வது கூட்டம்  முன்னதாக 

திட்டமிட்டபடி ஊதிய மாற்றக் கூட்டுக்குழு  ஐந்தாவது 

முறையாக இன்று14.09.2018 பிற்பகல் 2.00 மணி அளவில் 

கூடியது.

                       
இன்றைய  கூட்டத்தில் ஊழியர் தரப்பு 

உறுப்பினர்கள் 10.09.2018 அன்றைய கூட்டத்தில் நிர்வாகத்தரப்பு 

சார்பாக முன்மொழியப்பட்ட ஊதிய நிலைகளை ஏகமனதாக 

ஏற்றுக் கொண்டனர். எனினும் ஊதிய நிலைகளில் தேக்க நிலை 

ஏற்படுவதற்கான வாய்ப்புகள் ஏதும் உள்ளதா என ஆராய்வதற்காக 

ஒரு கால அவகாசத்தை ஊழியர் தரப்பு கோரியுள்ளது.

அடுத்த கூட்டம் 28.09.2018 அன்று நடைபெறும்.


இந்நிலையில் படிகள் திருத்தம்  (ALLOWANCES) குறித்து 

ஊழியர் தரப்பு உறுப்பினர்கள் 26.09.2018 அன்று கூடி 

விவாதிக்கவுள்ளனர்.

Tuesday, September 11, 2018


BSNL ஊழியர்களுக்கான மூன்றாவது ஊதிய 

மாற்றத்திற்கான  நான்காவது கூட்டம்.

10.09.2018 அன்று  ஊதிய மாற்றகூட்டத்தில் நிர்வாகம் 

தேக்க நிலையை தவிர்ப்பதற்காக ஊதிய நிலையில் 

உட்சபட்ச இறுதி ஊதிய அளவைக் கூட்டுவது என்ற 

ஊழியர் தரப்பு கோரிக்கையை மறுத்தது நிர்வாகம்.  


ஏனென்றால் BSNLல்பணிஓய்வு பெரும் ஊழியர்களுக்கு

அதிகப்படியான ஓய்வூதியப் பங்களிப்பை செலுத்துவதை 

தவிர்க்கும் பொருட்டு உட்சபட்ச ஊதிய அளவைக் கூட்ட 

போதிய  ஆர்வம் நிர்வாகம் காட்டவில்லை.


ஊழியர் தரப்பு சார்பாக ஊதிய நிலையில் தேக்கம் 

ஏற்படுவதை ஒருகாலும் ஏற்க முடியாது என்ற தனது 

முடிவை உறுதிப்பட எடுத்துரைத்தது

அடுத்த கூட்டம் 14/09/2018 அன்று நடைபெறும்


நிர்வாக தரப்பில் ஊதியநிலைகள் குறித்த முன்மொழிவு  

சமர்ப்பிக்கப்பட்டது.