Total Pageviews

Sunday, January 20, 2019


BSNL நிறுவன புத்தாக்கம் மற்றும்
மறுகட்டமைப்பு குறித்த
IIM அகமதாபாத் இடைக்கால அறிக்கை...

நமது BSNL நிறுவனத்தை புத்தாக்கம் மற்றும் மறுகட்டமைப்பு குறித்த., இடைக்கால அறிக்கையை IIM அகமதாபாத் (Indian Institute of Management Ahmedabad - இந்திய மேலாண்மை கழகம் அகமதாபாத்) வெளியிட்டுள்ளது.
இந்த அறிக்கையின் நோக்கம் என்னவெனில்., BSNL நிறுவனத்தை புத்தாக்கம் செய்வது மற்றும் மறுகட்டமைப்பு குறித்து ஆய்வு செய்து., புதிய வியாபார செயல்பாடு மற்றும் நிதி மேம்பாட்டுத் திட்டங்களை பரிந்துரைப்பது. மேலும்., BSNL நிறுவனத்தை புத்தாக்கம் மற்றும் மறுகட்டமைப்பு செய்வதில் தேவையான மாற்றங்களைத் தருவது.
IIM-ன் அறிக்கை பின்வரும் நான்கு கேள்விகளுக்கு விடை
 காண முற்படுகிறது.
தொலைத்தொடர்பு துறையில் BSNL நிறுவனத்தின் பாத்திரம் என்ன...?
BSNL நிறுவனத்திற்கு 4-G அலைக்கற்றை ஒதுக்கப்பட வேண்டுமா...?
புத்தாக்கம் மற்றும் மறுகட்டமைப்பு தேவைப்படும் அளவிற்கு BSNL முன் நிற்கும் சவால்கள் என்ன...?
புத்தாக்கம் மற்றும் மறுகட்டமைப்பிற்கு என்ன மாதிரியான முன்னெடுப்புகள் தேவை மற்றும் மறுகட்டமைப்பிற்கான நிதியாதாரத்திற்கு என்ன வழி...?
இந்த ஆய்விற்கு தேவையான தகவல்களைத் திரட்டுவதற்காக., IIM நிறுவனத்தின் சார்பாக குழு ஒன்று., நமது BSNL நிறுவனத்தின் CMD., இயக்குனர் (மனிதவளம் மற்றும் நிதி) மற்றும் இயக்குனர் (சந்தைப்படுத்தல்) ஆகியோரைச் சந்தித்துள்ளது. குஜராத்., கேரளா., வடகிழக்கு-I., கல்கத்தா போன்ஸ் மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களை ஆய்விற்கான களங்களாக., அதன் செயல் திறன் அடிப்படையில் தேர்ந்தெடுத்துள்ளது.
  

அறிக்கையில்., தொலைத்தொடர்பு துறையில் BSNL வகிக்கும் பங்கு.,  இத்துறையில் நிகழும் போட்டிக்கான தேவை., ஆரோக்கியமான போட்டிக்கான காரணிகள்., போட்டியை தீர்மானிக்க தேவையான போட்டியாளர்களின் எண்ணிக்கை மற்றும் போட்டிச் சூழ்நிலையில் BSNL வகிக்கப்போகும் இடத்திற்கான சாதகமான சூழ்நிலை ஆகியவை ஆராயப்பட்டுள்ளன.
BSNL-க்கு அலைக்கற்றை ஒதுக்கப்பட வேண்டுமா...? என்ற கேள்வி முக்கியமானது. ஏனெனில் மற்ற போட்டியாளர்கள் இச்சேவையை தந்து வாடிக்கையாளர்களை தன்வசப்படுத்தி உள்ள சூழ்நிலையில் வாழ்வா...? சாவா...? என்ற நிலையில் BSNL-க்கு 4-G அலைக்கற்றை முக்கியமாகிறது. அதற்காக அரசு சற்று கனிவு காட்டலாம் என்கிறது இந்த அறிக்கை.
தொலைத்தொடர்பு துறையில்., துள்ளிக்குதிக்கும் தொழில்நுட்ப மாற்றம்., தன்னிச்சையான முடிவு எடுக்க அதிகாரமற்ற சூழ்நிலை மற்றும் அமைப்புச் சிக்கல்கள் ஆகியவை BSNL சந்தித்து வரும் மிகப் பெரும் சவால்களாக அறிக்கை முன்னிறுத்துகிறது.
தொலைத்தொடர்பு (DOT) துறையின் பெயரில் உள்ள சொத்துக்களை., BSNL பெயருக்கு மாற்றுதல்., டவர் நிறுவனத்தை செயல்படுத்துதல்., கண்ணாடி இழை கேபிள் (OFC) உட்கட்டமைப்பை நிர்வகிக்க தனிப் பிரிவை உருவாக்குதல்., 4-G அலைக்கற்றை பெறுவதில் துரித செயல்பாடு ஆகியவை புத்தாக்கத்திற்கான வழிகளாக சுட்டிக் காட்டப்பட்டுள்ளன.
BSNL ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 60-இல் இருந்து 58-ஆக குறைப்பது (அல்லது) 50 வயதிற்கு மேல் VRS திட்டத்தை அமுல்படுத்துவதுஆகியவை BSNL நிறுவனத்தின் அமைப்பு ரீதியான மறுகட்டமைப்பிற்கு உதவும் என அறிக்கை குறிப்பிடுகிறது. இவற்றை., அமுல்படுத்துவதன் மூலம்., BSNL அடுத்த 6 ஆண்டுகளில் ரூபாய். 13,895.44/- கோடி- மிச்சப் படுத்த முடியும் என இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.