Total Pageviews

Saturday, March 30, 2019


செய்திகள்

01-04-2019 முதல் IDA 2.6% சதவீதம் உயர்ந்துள்ளது. 

மொத்தம்141.4% சதவீதம் ஆகும்.


01/04/2019 முதல்ஒப்பந்த ஊழியர்களுக்கான VDA உயர்ந்துள்ளது.
UNSKILLED ஒப்பந்த ஊழியர்களுக்கு

பிரிவில் நாளொன்றுக்கு ரூ.26/=  உயர்ந்துள்ளது.

பிரிவில்நாளொன்றுக்கு ரூ.21/= உயர்ந்துள்ளது.

பிரிவில்நாளொன்றுக்கு ரூ.17/= உயர்ந்துள்ளது.



மார்ச்-23 வரை உள்ள LTC,TA,மருத்துவ பில் 

இன்று பண பட்டுவாடா நடைபெறும்.



 05/04/2019 டெல்லி சஞ்சார் பவன் நோக்கி 

மாபெரும்  பேரணி. அனைத்து அரசியல்

கட்சித்தலைவர்கள் பங்கேற்பு.



பென்ஷன்  பிதாமகன் தோழர். O.P.குப்தா

புத்தக நூல் வெளியீட்டுவிழா  08/04/19  

சென்னையில்  நடைபெறுகிறது.

NFTE அகில இந்திய சம்மேளன தலைவர் 

தோழர். இஸ்லாம்.

அகில இந்திய சம்மேளன செயலர்

தோழர். சந்தேஸ்வர் சிங். பங்கேற்பு.

Friday, March 08, 2019


மதுரை மாவட்ட சங்கத்தின் 

ளிர் தி வாழ்த்துக்ள்



AUAB அனைத்து சங்க கூட்டமைப்பின் கூட்டத்தில் டெல்லியில் (07/03/2019) நேற்று கூடி முடிவுகள் எடுக்கப்பட்டது.

அனைத்து சங்க கூட்டமைப்பின் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில் AUAB தலைவர்கள் நமது BSNL நிறுவனத்தின் CMDயைச் சந்தித்து ஊழியர்களுக்கு பிப்ரவரி சம்பளம் வழங்கப்படாதது குறித்த தங்களது கடும் எதிர்ப்பைத் தெரிவித்தனர்.

மேலும் மார்ச் 12 முதல் கார்ப்பரேட் அலுவலக வளாகத்தில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொள்ள முடிவெடுத்துள்ளனர். பிரச்சினைக்கு தீர்வுகாணப்படாவிடில் போராட்டத்தை கடுமையாக்கும் வகையில் மாநில , மாவட்ட மையங்களிலும் உண்ணாவிரதப் போராட்டத்தை துவக்கிட அனைத்து சங்க (AUAB) கூட்டமைப்பு அறைகூவல் விடுத்துள்ளது.

போர்ப்பதட்ட சூழ்நிலையின் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட பிரதமர் அலுவலகம் நோக்கிய பேரணியை ஏப்ரல் மாதத்தில் நடத்திடவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இதனிடையே (AUAB) தமிழ் மாநிலத்தில் பிப்ரவரி சம்பள பட்டுவாடா தாமதத்தைக் கண்டித்தும் , உடனடியாக சம்பளம் வழங்கிடக் கோரியும் தமிழ் மாநில அனைத்து சங்க கூட்டமைப்பின் சார்பாக நாளை (08/03/2019) அன்று சென்னையில் CGM அலுவலகத்தில் ஒரு நாள் அடையாள தர்ணாப் போராட்டம் நடத்திட முடிவு செய்யப்பட்டுள்ளது.

போராட்டம் இல்லாமல் 
யாராட்டமும் செல்லாது..