உண்ணாவிரதம்
ஒத்திவைப்பு
18/10/2019 அன்று நாடு முழுவதும்
நடைபெறவிருந்த BSNL அனைத்து சங்க
உண்ணாவிரதப் போராட்டம் நிர்வாகத்துடன் நடந்த
பேச்சுவார்த்தையின் அடிப்படையில்
விலக்கிக்கொள்ளப்பட்டுள்ளது.
அன்று 17/10/2019 நடந்த பேச்சுவார்த்தையில்
NFTE,
BSNLEU, AIBSNLEA , SNEA, FNTO, BSNLMS, SNATTA, ATM
BSNL, BSNL
OA மற்றும் TOA BSNL ஆகிய சங்கங்கள்
கலந்து கொண்டன. காலை 10 மணியளவில்
DIRECTOR(HR)
இயக்குநர்(மனிதவளம்)மற்றும் உயர்
அதிகாரிகளுடனும்... மாலை 03 மணியளவில்
CMDயுடனும் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
பிரச்சினைகளின்
தீர்வில் நிர்வாகம் அளித்த
உறுதிமொழிகளின் பேரில் நமது
உண்ணாவிரதப்போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நிர்வாகத்தின் உறுதிமொழிகள்:
செப்டம்பர் மாதச்சம்பளம் 23/10/2019 அன்று
வழங்கப்படும்.
ஒப்பந்த ஊழியர் சம்பளத்திற்கான நிதி விரைவில் வழங்கப்படும்.
BSNL புத்தாக்கம் குறித்து
23/10/2019ம் தேதி வாக்கில்
நடைபெறவுள்ள மத்திய
அமைச்சரவைக் கூட்டத்தில்
முடிவு செய்யப்படும்.
மத்திய அமைச்சரவைக் கூட்ட முடிவிற்குப்பின்
BSNLக்கு வங்கிக்கடன் கிடைக்கும் வாய்ப்புள்ளது.
நிர்வாகத்தின் வேண்டுகோள்:
சேவைத்தரத்தை உயர்த்த வேண்டும்.
செலவினங்களைக் கட்டுப்படுத்த வேண்டும்.
வருவாயை உயர்த்த வேண்டும்.
பேச்சுவார்த்தையில் ஒப்பந்த
ஊழியர்களுக்கு சம்பளம்
வழங்காதது மேலும் அவர்களின் எண்ணிக்கையைக்
குறைப்பது போன்ற
செயல்களால் BSNL சேவை
முற்றாக முடங்கிப்போயுள்ள நிலை நிர்வாகத்திடம்
சுட்டிக்காட்டப்பட்டது. நிர்வாகம் ஆவண செய்வதாக
உறுதி அளித்துள்ளது.
மேலும் BSNL நிர்வாகத்தின் வெளிப்படையற்ற
தன்மையும், நடவடிக்கைகளும், தொழிற்சங்கங்களை
மதிக்காத போக்கும் தவறு
என்று சுட்டிக்காட்டப்பட்டது.
வருங்காலங்களில் நிர்வாகத்திற்கும் சங்கங்களுக்கும்
இடையில் நல்லுறவு பேணப்படும் எனவும்,
COMMUNICATION GAP எனப்படும் பரிமாற்ற இடைவெளி
இனி இருக்காது எனவும் நிர்வாகத்தால் உறுதி
அளிக்கப்பட்டுள்ளது.
மேற்கண்ட முன்னேற்றங்களின் அடிப்படையில்
18/10/2019 அன்று நடைபெறவிருந்த அகில இந்திய
உண்ணாவிரத அறப்போராட்டம்
ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
30/10/2019
அன்று AUAB அனைத்து சங்க கூட்டமைப்பு கூடி அடுத்தகட்ட நடவடிக்கைகள் பற்றிமுடிவெடுக்கும்.