Total Pageviews

Wednesday, November 27, 2019


SAMPANN...INTEGRATED PENSION APPLICATION FOR 

TELECOM PENSIONERS

SAMPANN  ( ஸ்பீடு பென்சன் )

சென்னை CCA அலுவலகத்தில் SAMPANN திட்டம் 

அறிமுகப்படுத்தியதன் விளைவாக ஓய்வூதியப்பலன்கள் 

ஒருவாரத்தில் பட்டுவாடா செய்யப்படுகிறது.

PPO ஒரேமாதத்தில் வீட்டுக்கு அனுப்பப்படுகிறது.
ஒரேமாதத்தில் ஓய்வூதியமும்  போடப்பட்டுள்ளது.

பிப்ரவரிமாதம் முதல் இது அமுலுக்கு வந்ததால் 

பிப்ரவரி துவங்கி இனிவரும் காலங்களில் பணிநிறைவு 

பெறுகின்ற அனைவரும்  இதே வேகத்தில் அனைத்தையும் 

பெறுவார்கள்.
                    
பிப்ரவரிக்கு முன் ஓய்வுபெற்றவர்களுக்கு  எதிர்வரும்

ஜுன்மாதம் முதல்  படிப்படியாக அமல்படுத்தப்படும்.

அனைத்து ஓய்வூதியர்களுக்கும் User ID  மற்றும்
  
Password  கொடுக்கப்படும்.

User ID என்பது  அவரவர் PAN நம்பர்.  முதலில் Admn @ 123  என்ற

பொதுவான Password  கொடுக்கப்படும். பிறகு அவரவர் 

விருப்பப்பபடி  Password ஏற்படுத்திக்கொள்ளலாம்.

ஏதேனும் புகார் மற்றும்  குறைகள் பற்றி  மனு கொடுப்பதாக 

இருந்தால் User id, Password பயன்படுத்த வேண்டும்.

உங்களுடைய புகார் மற்றும் குறைதீர் மனு எந்தகட்டத்தில் 

இருக்கிறது என்பதையும்  அறிந்துகொள்ளலாம்.

PPO தொலைந்து விட்டாலும்  e PPO எடுத்துக்கொள்ளலாம்.

முகவரி மாற்றம்  எளிதில் மாற்றலாம் . 



ஓய்வு பெற்ற தோழர்களுக்கு பயனுள்ளதாக 

இந்த  (SAMPANN)  செயலி இருக்கும் .




Friday, November 22, 2019


விருப்ப ஓய்வு... 

CMDயின் அறிவுறுத்தல்கள்...

நேற்று 21/11/2019 VRS சம்பந்தமாக நடைபெற்ற தெற்கு மண்டல

காணொலிக்காட்சியில் விருப்ப ஓய்வு சம்பந்தமான 

பணிகளை விரைந்து முடித்திட BSNL CMD 

வலியுறுத்தியுள்ளார்.

CMD வலியுறுத்தியவை...


விருப்ப ஓய்வில் செல்லும் ஊழியர்களை மகிழ்ச்சியான 

மனநிலையில் அனுப்பி வைத்திட வேண்டும்.


விருப்ப ஓய்வு சம்பந்தப்பட்ட அனைத்துப் பணிகளும்

டிசம்பர் முதல் வாரத்திற்குள் முடிக்கப்பட வேண்டும்.

ஓய்வூதியம் சம்பந்தமான DOTயின் வழிகாட்டுதல்கள்

திங்கள்கிழமை வெளியிடப்படும்.


விருப்ப ஓய்வு சம்பந்தமாக ஊழியர்கள் அனைவரும் 

தெளிவுபடுத்தப்பட வேண்டும்.

டிசம்பர் மாதம் BSNLக்கு வங்கிக்கடன் 

கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளது. 

எனவே டிசம்பர் மாதம் அனைத்துப்  பிடித்தங்களும் 

பட்டுவாடா செய்யப்படும்.


விருப்ப ஓய்வில் செல்லும் ஊழியர்களின் ஓய்வூதிய 

விண்ணப்பங்களை வெகுவிரைவில் பரிசீலித்து 

ஓய்வூதியம் வழங்கிடDOTCELL 

கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.


விருப்ப ஓய்வில் செல்லும் ஊழியர்களுக்கு டிசம்பர் 

2019 மற்றும் ஜனவரி 2020 ஆகிய இரண்டு மாதங்கள் 

வைப்புநிதி GPF பிடித்தம் செய்யப்படாது.


விருப்ப ஓய்வு விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது

பற்றி இந்த வார இறுதிக்குள் ஊழியர்களின் ESS 

இணையதளத்தில் ஊழியர்கள் பார்க்கும் வகையில் 

விவரங்கள் தெரிவிக்கப்பட வேண்டும்.


விருப்ப ஓய்விற்குப்பின் மாநிலங்கள் இணைப்பு 

உள்ளிட்டநிறைய மாற்றங்கள் BSNLலில் 

நடைமுறைப்படுத்தப்பட உள்ளன.


விருப்ப ஓய்விற்குப்பின் சேவையைத் தடையின்றி 

நடத்துவதற்குத் தேவையான மனிதவளம் மற்றும் 

பல்வேறு பணிகளைத் தனியாருக்கு விடுதல் என்பவை 

பற்றி மாநிலங்கள் தங்கள் கருத்துக்களைத் தெரிவிக்க 

வேண்டும்.



Sunday, November 03, 2019



முப்பெரும் விழா

                        



கோரிக்கை மாநாடு...

நன்றி அறிவிப்பு விழா...

புத்தக வெளியீட்டு விழா...
-------------------------------------------------
06/11/2019 – புதன்கிழமை

மதியம் 03.00 மணி..
------------------------------------------------

டவுன்ஹால் கடலூர்

தோழர்களே... வருக....