Total Pageviews

Friday, May 29, 2015



BSNL உருவான 15 ஆண்டுகள் கழித்து விழித்தெழும் DOT, GPF சம்மந்தமான அனைத்து பணிகளையும் தங்களிடம் மாற்றித்தருமாறு கேட்டுள்ளது. GPF-லிருந்து கடன் பெறுவதும் DOT CELL-களுக்கு மாற்றப்படும். இதன் மீது கருத்து கூறுமாறு தொழிற்சங்கங்களை BSNL கேட்டுள்ளது. நமது சங்கம்இந்த மாற்றலை ஏற்க முடியாது எனவும், இது ஊழியர்களுக்கு பெரும் பாதிப்பினை ஏற்படுத்தும் எனவும் கூறிவிட்டது.

DOT- இதனை வற்புறுத்தும் எனறே தெரிகிறது. 

நிரந்தர ஊழியர்கள் அதிகம் இல்லாததால்
, பெரும்பாலான ஓய்வூதியர்களை பணியமர்த்தி செயல்படும் DOT CELL-களுக்கு இந்த பணி மாற்றப்பட்டால் GPF-ல் பெரும் சிக்கல்களை ஊழியர்கள் சந்திக்க நேரிடும் என்பதால் இந்த பணி மாற்றப்படக்கூடாது என்பதே நம் சங்கத்தின் நிலைபாடு.

S . சிவகுருநாதன் ,மாவட்ட செயலர் 


Thursday, May 28, 2015


செப்டம்பர்  2

நாடு தழுவிய பொது வேலை நிறுத்தம் 




மந்திரி சூளுரை 

BSNL... MTNL நிறுவனங்களை 
உயர.. உயர.. வைப்போம்..

அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா...

மோடி அரசின் ஓராண்டு நிறைவையொட்டி...
நமது இலாக்கா மந்திரி திருவாய் மலர்ந்தருளியுள்ளார்...

BSNL மற்றும் MTNL நிறுவனங்களின் வளர்ச்சியில் 
ஆறேழு ஆண்டுகளை காங்கிரஸ் வீணடித்து விட்டது.
நாங்கள் ஓராண்டை மட்டுமே வீணாக்கியுள்ளோம்...

செயல்பாடு மிக்க வாஜ்பாய் ஆட்சியில் 
பல கோடி லாபம் ஈட்டிய BSNL நிறுவனம்...
செல்வாக்கு மிக்க எங்கள் ஆட்சியில் 
செயலிழந்த நிலையில் இருப்பது வருத்தம் அளிக்கிறது...

கடந்த ஓராண்டாக...
இதைப்பற்றியே சிந்தித்துக்கொண்டிருப்பதால்..
என்னால் தொழிற்சங்கப்பிரதிநிதிகளைக் கூட சந்திக்க முடியவில்லை...

BSNL மற்றும் MTNL நிறுவனங்களை...
ஒரு வழி பண்ணிய பின்புதான்..
நான் ஊழியர் பிரதிநிதிகளை சந்திப்பேன்..

இது சம்பந்தமாக எங்கள் அரசு..
அம்பானியுடனும்.. 
அதானியுடனும்...
அதி தீவிரமாக ஆலோசித்து வருகிறது...

பிரதமர் வெளிநாட்டில் இருந்து...
5 ஆண்டுகள் கழித்து இந்தியா 
திரும்பும்போது நிச்சயம் BSNL நிறுவனத்திற்கு 
திருப்புமுனை அமையும்...

அகண்ட பாரத கண்டம் வாழ்க.. வாழ்க..

S . சிவகுருநாதன் ,மாவட்ட செயலர் 

30.05.2015 பணி நிறைவு பாராட்டுவிழா 



R. அரசன் ,TM / DDG 
G .பானுமதி ,Sr .AO / GM (O ) 
A .தேவராஜ் ,STS / PLN 
D. ஜான் சேவியர் ,STS  / DDG 
S .கல்பனா ,TM / TKM 
A .மாரிமுத்து ,TM / PLN 
A .முபாரக் ,TM / TKM
P .முருகவேல் ,TM  / புதூர் 
M .முருகேசன் ,TM / ELLIS 
S .நாராயணசாமி ,TM / ALPN
R .பாண்டியன் ,JTO / Aundipatti 
S .பெரியசாமி ,TM / TKM 
S .ராஜாமணி , TM / Melur 
K .ஷாகர்தீன் ,TM / SLR 

M.சேதுராஜ் ,TM / BTL 
B .சென்னிகிருஷ்ணன் ,TM  / TKM 
K .தர்மலிங்கம் ,TM / EMM
S .வசந்தி , SSS (O ) / NMP  


அனைவரின் பணி ஓய்வு காலம் சிறக்க ,எல்லாவளங்களும் பெற்று நெடிய காலம் நீடுழி வாழ்க NFTE மதுரை மாவட்ட சங்கம் உளமார வாழ்த்துகிறது .

 S .சிவகுருநாதன் ,மாவட்ட செயலர் .

Wednesday, May 27, 2015


எழுச்சியுடன் துவங்கி இனிதே முடிந்த 

சேலம் மாவட்ட மாநாடு




 மாவட்ட தலைவர்  தோழர் .S .சின்னசாமி 

மாவட்டச் செயலர் தோழர். C.பாலகுமார் 

மாவட்ட பொருளர் தோழர்  S .காமராஜ்  


உள்ளிட்ட   புதிய நிர்வாகிகள் தேர்வில்  
ஒருமனதாகத்தேர்ந்தெடுக்கப்பட்ட 
மாவட்ட சங்க நிர்வாகிகள்அனைவரையும் மனதார 
மதுரை NFTE மாவட்ட சங்கம் பாராட்டுகின்றது 

S .சிவகுருநாதன் ,மாவட்ட செயலர்

Sunday, May 17, 2015

மனித நேயம்  கொண்ட 
உத்தமதோழன் ஜெகன் பிறந்தநாள்
மே 17 NFTE இளைஞர் தினம் 

மே  17 உலகத்தொலைதொடர்பு நாள் 
S .சிவகுருநாதன்,மாவட்ட செயலர் 

Wednesday, May 13, 2015



NFTE  - BSNL 
CSC  தல்லாகுளம் கிளையின் ஆர்ப்பாட்டம் 
GM அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் 
மதியம்  1.00 மணிக்கு 
நடைபெற்ற காட்சிகள் 





































ஆர்ப்பட்டத்தில் கலந்து கொண்ட  
மாநில சங்க நிர்வாகிகள், 
மாவட்ட சங்க நிர்வாகிகள்,
கிளைசெயளர்கள் 
மற்றும் முன்னணி  
தோழர்கள் ,தோழியர்கள் 
அனைவருக்கும் நன்றி .
S .சிவகுருநாதன் ,மாவட்ட செயலர் 

Tuesday, May 12, 2015













எழுச்சியுடன் 

போராடுவோம்...

அநீது கண்டு ஆர்ப்பரித்து போராடாமல்

அநீது களைய முடியாது

போராட்டங்கள் இல்லாமல்

யார் ஆட்டமும் செல்லாது

போராடுவோம்! வெற்றி பெறுவோம்!!

இறுதி வெற்றி நமதே!! 

அனைவரும் திரள்வீர் 

S . சிவகுருநாதன் ,மாவட்ட செயலர் 

Saturday, May 09, 2015

எழுச்சியுடன் துவங்கி இனிதே முடிந்த 

கோவை மாவட்ட மாநாடு



கோவை மாவட்ட மாநாடு புதிய நிர்வாகிகள்தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

 
மாவட்ட தலைவர்  தோழர் .A.ராபர்ட்ஸ்

மாவட்டச் செயலர் தோழர். எல் சுப்பராயன்

மாவட்ட பொருளர் தோழர் A.செம்மல்லமுதம் 


உள்ளிட்ட 15  புதிய நிர்வாகிகள் தேர்வில்  
ஒருமனதாகத்தேர்ந்தெடுக்கப்பட்ட 
மாவட்ட சங்க நிர்வாகிகள்அனைவரையும் மனதார 
மதுரை NFTE மாவட்ட சங்கம் பாராட்டுகின்றது 

S .சிவகுருநாதன் ,மாவட்ட செயலர் 

மாற்றலில் விலக்கு...

transfer clip art க்கான பட முடிவு

அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளுக்கு 
அங்கீகார காலம் வரை மாற்றலில் இருந்து விதி விலக்கு அளித்து 
நிர்வாகம் ஏற்கனவே உத்திரவு வெளியிட்டிருந்தது. 

தற்போது தலமட்ட நிர்வாகங்களின் சம்மதத்தோடும்..  
நிர்வாக வசதியை முன்னிட்டும்...
 அங்கீகார காலத்திற்கு பின்னும் மாற்றலில் இருந்து 
விதி விலக்கு அளிக்கலாம் என 
BSNL தலைமையகம் உத்திரவிட்டுள்ளது.

அனைத்திந்திய சங்கம் 
மாநிலச்சங்கம் 
மாவட்டச்சங்கம் 
ஆகிய நிலைகளில் பொறுப்பில் உள்ள 
செயலர் - உதவிச்செயலர் - பொருளர் 
ஆகியோர் இந்த சலுகையை அடையலாம்.

S .சிவகுருநாதன் ,மாவட்ட செயலர் 
NFTE - BSNL
மதுரை 
தொலைத்தொடர்பு மாவட்டம் 

S .சிவகுருநாதன் ,மாவட்ட செயலர் 

Thursday, May 07, 2015

  NFTE -BSNL
மதுரை தொலைத்தொடர்பு மாவட்டச்சங்கம் , மதுரை 



பெறுநர் 
                   செயலர் , நிர்வாக தரப்பு  LJCM 
                   உதவி பொதுமேலாளர்  (நிர்வாகம் )
                  பொதுமேலாளர்  அலுவலகம்  BSNL 
                   மதுரை  - 625002.

Madem ,
                   பொருள்  : 4 வது  LJCM நடத்துவது தொடர்பாக .

                    வணக்கம் 

                     இன்றைக்கு 06.05.2015 அன்று சுமார் 12.30 மணியளவில்  ஊழியர் தரப்பு செயலர் திரு . S .சூரியன் மூலமாக வருகிற 08.05.2015 அன்று  4 வது LJCM நடைபெறுவதாக அறிகிறேன் . இதில் ஊழியர் தரப்பு செயலர் மற்றும் தலைவர் கலந்தாலோசித்து நிர்வாகத்துடன் தேதி குறிப்பது என்பது மரபு . அந்த மரபு திரு .S .சூரியன் அவர்களால் மீறப்பட்டுள்ளது .

                     ஒரு நாள் கால அவகாசத்தில் LJCM  தேதி நிர்ணயம் செய்யும் நடைமுறையை  நாங்கள் ஏற்றுக்கொள்ள இயலாது . கடந்த மாவட்ட செயற்குழு முடிவின் அடிப்படையில்  உறுப்பினர் சந்திப்பு இயக்கம் நடத்துவது என்று திட்டமிடப்பட்டு இரண்டாவது கட்டமாக வருகிற 7,8 தேதிகளில் வத்தலகுண்டு கோட்டத்திற்கு உட்பட்ட தொலைபேசி நிலையங்களில் உள்ள ஊழியர்களை சந்தித்து , பிரச்சனைகளை கேட்டு அறிவது என்று திட்டமிடப்பட்டு , அதற்கான தயாரிப்புகள் முழுமையாக நடந்து முடிந்து , நாளை காலை மாவட்ட நிர்வாகிகள் புறப்படுவது என்று முடிவு செய்யப்பட்டுள்ள சூழலில் இந்த 08.05.2015 தேதி நடைபெறக்கூடிய 
LJCM கூட்டதில் நாங்கள் கலந்து கொள்ள இயலாது .

                    ஊழியர் தரப்பு செயலர் ,தலைவர் இணைந்து LJCM கூட்டத்திற்கு 
Agenda அனுப்புவது என்ற நடைமுறை மீறப்பட்டு CSC , தல்லாகுளம் பகுதியில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் சுழல் மாற்றல் பிரச்சினை ஏற்கனவே  இரண்டு சங்கங்களும் தனித்தனியே  நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டு இருக்கும் போதுஅந்தப் 
பிரச்சினையை  LJCM  கூட்டத்திற்கு Agenda வாக BSNLEU மாவட்ட செயலரும்  LJCM ஊழியர் தரப்பு செயலருமான திரு . S .சூரியன் தன்னிச்சையாக அனுப்பி உள்ளதாக நாங்கள் அறிகிறோம் .

                    மேற்க்கண்ட மூன்று காரணங்களுக்காக நாளை மறு நாள் 08.05.2015 அன்று நடை பெறுவதாக  வாய் மொழி மூலம் 
ஒரு தலைப்பட்சமாக  அறிவிக்கப்பட்ட , உள் நோக்கம் கொண்ட LJCM கூட்டத்தில் NFTE சங்க LJCM உறுப்பினர்கள் கலந்து கொள்ள இயலாது எனவே  ஊழியர் தரப்பு செயலர் , தலைவர் மற்றும் நிர்வாகம் ஆகிய மூன்று தரப்புக்கும் இசைவாக வேறு ஒரு தேதியை நிர்ணயம் செய்து நடத்தப்பட வேண்டுகிறோம் . NFTE சங்கத்தை புறக்கணித்துவிட்டு  BSNLEU செயலர் ,ஊழியர் தரப்பு செயலர் என்ற அடிப்படையில்  எடுக்கப்படும் எந்த முடிவுகளும் எங்களை கட்டுப்படுத்தாது என்பதனை வருத்தத்துடன் தெரியப்படுத்திக் கொள்கிறோம் .


நன்றி !

S .சிவகுருநாதன் ,
ஊழியர் தரப்பு தலைவர்  LJCM 

நகல் :-
               1. சேர்மன்  மற்றும்  பொது மேலாளர் ,BSNL மதுரை ,
               2.  துணை  பொது மேலாளர் ,BSNL மதுரை ,
               3.  தோழர் .R . பட்டாபி ,மாநில JCM ,தலைவர் ,சென்னை ,
               4.   அனைத்து LJCM உறுப்பினர்கள் ,NFTE -BSNL மதுரை .