Wednesday, August 12, 2015

BSNL அனைத்து சங்க கூட்டமைப்பு...
நாடு தழுவிய ஆர்ப்பாட்டம்...

நமது BSNL நிறுவனத்தின்... 65000 செல் கோபுரங்களை...
தனி அமைப்பாக மாற்றுவதற்கு...
பரிந்துரை செய்த மத்திய அரசின்... BSNL விரோத...
பொதுத்துறை விரோத... முடிவைக் கண்டித்து...
BSNL அனைத்து சங்க
கூட்டமைப்பின் சார்பாக...

12-08-2015 - புதன்கிழமை மதியம் 1.00 மணிக்கு மதுரை பொதுமேலாளர் அலுவலகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் கிளைச்செயலர்கள், மாவட்ட சங்க நிர்வாகிகள் மற்றும் முன்னணி தோழர்களும் ,தோழியர்களும் கலந்து கொண்டு  கண்டன ஆர்ப்பாட்டம் வெற்றிபெற செய்யுமாறு  கேட்டுகொள்கிறோம்  

நாடு தழுவிய... கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திட...
மத்திய FORUM அறைகூவல் கொடுத்துள்ளது.

நமது செல்வங்கள்...
நாளும் கொள்ளை போவதோ?

நமது செல் கோபுரங்கள்...
நாளை கொள்ளை போவதோ?


நம் செல்வம் காப்பது...
நம் கடமை அல்லவோ?

தோழர்களே... ஒன்றாய் நாம் எதிர்த்து நிற்போம்...
சூழ்ச்சிகள் வென்றே... நம் செல்வம் காத்து நிற்போம்...

நிறுவன நலன் காத்திட... ஆர்ப்பரிப்போம் தோழர்களே...
அனைவரும் வருக...! ஆர்ப்பரித்து வருக...!!


காட்சிகள் 


































         
                                                      
S .சிவகுருநாதன் ,மாவட்ட செயலர் 

No comments:

Post a Comment