Total Pageviews

Wednesday, September 30, 2015


அக்டோபர்  2015 IDA  உயர்வு 


01/10/2015 முதல் 

5.3 % சதவீதம்  IDA  உயர்ந்துள்ளது.

இத்துடன் மொத்தப்புள்ளிகள் 
(102.6 %+5.3 %)107.9 %சதவீதம் ஆகும்.

S .சிவகுருநாதன் ,மாவட்ட செயலர் 

புதுவை மாவட்ட மாநாட்டில்...

வாகை சூடிய தோழர்களுக்கு... 

வாழ்த்துக்கள்...



29-09-2015 அன்று நடைபெற்ற... 
புதுவை மாவட்ட மாநாட்டில்...
புதிய நிர்வாகிகள் தேர்வில்... 
கருத்தொற்றுமை ஏற்படாத காரணத்தால்...
ஜனநாயக வழியில் தேர்தல் நடைபெற்றது.தோழர். P.காமராஜ் அவர்களின் தலைமை ஏற்று...தேர்தலில் போட்டியிட்டு 
வெற்றி பெற்ற... தோழர்களுக்கு... 
நமது மதுரை  மாவட்ட சங்கத்தின் 
நல் வாழ்த்துக்கள்.

மாவட்ட தலைவர்: தோழர். தண்டபாணி

மாவட்ட செயலர்: தோழர். செல்வரங்கன் 

மாவட்ட பொருளர்: தோழர். தேவதாஸ் 

ஆகியோர் தலைமையிலான...
புதிய நிர்வாகிகள் சிறப்புடன்... 
செயல்பட... நமது வாழ்த்துக்கள்...

S .சிவகுருநாதன் ,மாவட்ட செயலர் 
 
NFTE - BSNL மதுரை மாவட்ட சங்கம் 

போனஸ் வழங்கக்கோரி... போராட்டம்...

தற்காலிக போனஸ் வழங்கக்கோரி... 
06-10-2015 - செவ்வாய்கிழமை - 
அன்று மதியம் 01.00மணிக்கு 
உணவு இடைவேளையில் 
நாடு தழுவிய ஆர்ப்பாட்டம்...
இடம் : CTMX  நுழைவாயில் ,தல்லாகுளம்   மதுரை
போனஸ்... போராடிப் பெற்ற நமது உரிமை...
மீண்டும் போராடிப்பெறுவது... நமது கடமை...
போராடுவோம்... போனஸ் பெறுவோம்...
தயாராவீர்... தோழர்களே...
போராட்ட வாழ்த்துகளுடன் 
S .சிவகுருநாதன் ,மாவட்ட செயலர் 
புதிய  T.M. நியமனத் திற்கான  

கவுன்சிலிங்  3.10.15 சனிக்கிழமை 

காலை 10.30மணிக்கு 


அருமைத் தோழர்களே ! நமது மாவட்ட 

சங்கத்தின் தொடர் முயற்சியின் காரணமாக,

 நமது மதுரை மாவட்டத்தில் மீண்டும் புதிய  T.M.

 நியமனத் திற்கான  கவுன்சிலிங் 

  3.10.15 சனிக்கிழமை காலை 

10.30 மணிக்கு, மதுரை G.M. அலுவலக 

கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது என்பதை 

தெரிவித்துக் கொள்கி றோம்.   இதற்கான 

அறிவிப்பை நமது மதுரை மாவட்ட நிர்வாகம் 

அறிவித்துள்ளது.

(G.M / MA .Lr.No: E9 / E / TM / HRD-I / 2015-16 /25 dt. 

25.09.2015.) 

இக் கவுன்சிலிங் முடிந்த 

உடன் 8 பேருக்கான TM நியமன உத்தரவு 

வெளியிடப்படும். கவுன்சிலிங் வரும் தோழர்கள் 

அலுவலக அடையாள அட்டையுடன் குறித்த 

நேரத்தில் வருகையை உத்தரவதப்படுத்தவும். . 


S .சிவகுருநாதன் ,மாவட்ட செயலர் 

Monday, September 28, 2015

               30.09.2015 பணிநிறைவு செய்பவர்கள்

 1. I .CARMEL MARY , STS (O ), O /o  SDE ,(Extl -II ) ,North ,Tallakulam ,Madurai 
2. JANAKI  JAYARAMAN , STS (O ), O /o  AO  ,(TR  -Computer  ),Tallakulam ,Madurai 
3. K . SHANMUGAVALLI ,TM , O /o  SDE  ,(Groups ),Vadamadurai ,(Eriodu )
4. K . PALRAJ ,TM , O /o  SDE  ,Ponmeni ,Madurai,      ( VRS  )
5.  P. SELVI , SDE , O /o  GM , BSNL , Madurai ,           ( VRS )

அனைவரின் பணி ஓய்வு காலம் சிறக்க ,எல்லாவளங்களும் 

பெற்று நெடிய காலம் நீடுழி வாழ்க NFTE மதுரை மாவட்ட 

சங்கம் உளமார வாழ்த்துகிறது .

 S .சிவகுருநாதன் ,மாவட்ட செயலர் .


வெல்க ... வெல்க 



   புதுச்சேரியின்  6வது மாவட்ட மாநாடு வெற்றிபெற

   மதுரை மாவட்ட சங்கத்தின் 

   புரட்சிகர வாழ்த்துக்கள் 

தோழமையுடன் 

S .சிவகுருநாதன் ,மாவட்ட செயலர் 

Wednesday, September 23, 2015

மயிலாடுதுறையில் நடைபெற்ற 

மாநிலச் செயற்குழுவில் பணி ஓய்வு பெற்ற 

தோழர்கள் .S .S .கோபாலகிருஷ்ணன் ,

லட்சம், மனோகரன், முனியன் 

ஆகியோருக்கு பாராட்டு வழங்கப்பட்டது









மயிலாடுதுறையில் நடைபெற்ற 
மாநில செயற்குழுவில்  நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் 
 காண இங்கே சொடுக்கவும்
S.சிவகுருநாதன்,மாவட்ட செயலர்  

எழுச்சியுடன் துவங்கி  இனிதே முடிந்த 

குடந்தை  3 வது மாவட்ட மாநாடு


 குடந்தை மாவட்ட மாநாடு புதிய நிர்வாகிகள்தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

 
மாவட்ட தலைவர்  தோழர் . C.கணேசன் 

மாவட்டச் செயலர் தோழர்.  M .விஜய்  ஆரோக்கியராஜ் 

மாவட்ட பொருளர் தோழர் . .பாலமுருகன்  


உள்ளிட்ட 15  புதிய நிர்வாகிகள் தேர்வில்  
ஒருமனதாகத்தேர்ந்தெடுக்கப்பட்ட 
மாவட்ட சங்க நிர்வாகிகள்அனைவரையும் மனதார 
மதுரை NFTE மாவட்ட சங்கம் பாராட்டுகின்றது 

S .சிவகுருநாதன் ,மாவட்ட செயலர் 

Tuesday, September 22, 2015

பக்ரீத் பண்டிகை 
விடுமுறைத் தேதி  மாற்றம் 


25/09/2015 அன்று   
அறிவிக்கப்பட்டிருந்த 
பக்ரீத் பண்டிகை விடுமுறை

24/09/2015 
அன்று விடுமுறையென  
 BSNL  நிர்வாகத்தால் 
தேதி மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது.

S .சிவகுருநாதன் ,மாவட்ட செயலர் 

Monday, September 21, 2015



வெல்க ... வெல்க 
களம் பல கண்ட குடந்தையின்    
3வது மாவட்ட மாநாடு வெற்றிபெற
   மதுரை மாவட்ட சங்கத்தின் 
   புரட்சிகர வாழ்த்துக்கள் 
தோழமையுடன் 
S .சிவகுருநாதன் ,மாவட்ட செயலர் 

Friday, September 18, 2015



JTO ஆளெடுப்பு விதி 

திருத்தங்கள்  ஒப்புதல் 


இன்று 18/09/2015 நடைபெற்ற BSNL வாரியக்கூட்டத்தில் 
 JTO ஆளெடுப்பு விதிகளில்மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களுக்கு 
ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக நமது 
NFTE மத்திய சங்கம் தெரிவித்துள்ளது.


17/09/2015 அன்று CMDஐ சந்தித்த 
நமது சங்கத்தலைவர்கள்  ஓராண்டுக்கும் மேலாக கிடப்பில் 
கிடந்த மேற்கண்ட ஆளெடுப்பு விதி திருத்தத்திற்கு உரிய 
ஒப்புதல் அளிக்க கோரிக்கை விடுத்தது குறிப்பிடத்தக்கது.


இன்றைய கூட்டத்தில்...
JTO ஆளெடுப்பு விதிகளில் மேற்கொள்ளப்பட்ட
திருத்தங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டதாகவும்...

JTO இலாக்காத்தேர்வு எழுத தற்போதுள்ள 
7 ஆண்டு கல்வித்தகுதி என்பது 
5 ஆண்டுகளாக குறைக்கப்பட்டுள்ளதாகவும்...

இவற்றுக்கெல்லாம் மேலாக 
மிக நீண்ட நாட்களாக 
 அகலிகையாக காத்திருக்கும்
 JTO தற்காலிகப் பதவி வகிக்கும் 
நமது TTA தோழர்களை
நிரந்தர  JTOவாக நிரந்தரம் செய்யவும் 
ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

மிக நீண்ட நாள் கோரிக்கைகள் நிறைவேற
தொடர் முயற்சி செய்த நமது மத்திய சங்கத்திற்கு நன்றிகள்.

S.சிவகுருநாதன் ,மாவட்ட செயலர் 

Monday, September 14, 2015



மொபைல் டேட்டா குறியீடு பற்றிய... 

ஒரு சிறிய கண்ணோட்டம்...




நம் மொபைல் டேட்டாவை ஆன் செய்தவுடன் G, 2G, E, 3G, 3G+, H, H+, 4G Symbol 
வருவதை பார்த்திருக்கிறோம். இவற்றை பற்றிய ஒரு சிறிய கண்ணோட்டம்.
  • "2G" இது 2G நெட்வெர்க் இன்டர்னெட் GPRS (General Packet Radio service) கனெக்ட் செய்ததற்கான symbol. இதன் வேகம் மிக மிக குறைவாகவே இருக்கும். இது 2000-2009 ஆண்டுகளுக்கிடையில் அதிகம் பார்த்திருக்கிறோம். இதன் மூலம் நீங்கள் 1GB dataவை டவுன்லோடிங் செய்ய 165 மணி நேரமும், 1GB dataவை அனுப்ப அதே 165 மணி நேரமும் பிடிக்கும்.
  • "E" இதுவும் 2G(2.5G) EDGE (Enhanced Data access for GSM Evaluation) மொபைல் இன்டர்நெட் ஆகும். 2008 ஆம் ஆண்டு முதல் இதன் பயன்பாடு அதிகமாக உள்ளது. இதன்மூலம் நாம் 1GB dataவை டவுன்லோடிங் செய்ய 44 மணி நேரமும், 1GB dataவை அனுப்ப 89 மணி நேரமும் ஆகும். இந்த "E" பயன்பாடு தான் இந்தியாவில் பெரும்பாலானோர் பயன் படுத்துகின்றனர்.
  • "3G" இது 3G மொபைல் இன்டர்நெட் UMTS (Universal Mobile Telecom System) கனெக்ட் செய்வதன் மூலம் தோன்றும் குறி. இதை இயங்க அவசியம் 3G இயங்குதள மொபைல் (SmartPhone) தேவை. இதன் மூலம் நாம் 1GB data வை 6 மணி நேரத்தில் டவுன்லோடும், அதே 1GB dataவை 18 மணி நேரத்தில் அனுப்ப இயலும்.
  • Symbol "H" இது 3G மொபைல் இன்டர்நெட் HSPA (High Speed Packet Aceess) கனெக்ட் செய்வதன் மூலம் தோன்றும் குறி. இதை Smart Phoneகளின் மூலம் மட்டுமே பயன்படுத்த முடியும் இதன் மூலம் நாம் 1GB dataவை 25 நிமிட நேரத்தில் டவுன்லோடும், அதே 1GB dataவை 45 நிமிட நேரத்தில் அனுப்ப இயலும்.
  • "H+" இதுவும் 3G மொபைல் இன்டர்நெட் (Evolved High Speed Packet Access) கனெக்ட் செய்வதன் மூலம் வரும் குறியீடு இதை இயங்க அவசியம் 3G இயங்குதள மொபைல் (SmartPhone) தேவை. இதன் மூலம் நாம் 1GB dataவை 5-20 நிமிடங்களில் டவுன்லோடும், 1GB dataவை 15-39 நிமிட நேரத்தில் அனுப்ப இயலும்.
  • "4G" இச்சேவை 3G network internet - LTE (Long Term Evolution) இந்தியாவில் ஒரு சில நகரங்களில் மட்டுமே கிடைக்கின்றது. இதன் வேகம் மிகவும் அதிகம். இதை இயங்க அவசியம் 3G இயங்குதள மொபைல் (SmartPhone) தேவை. இதன் மூலம் நாம் 1GB dataவை 3 நிமிடத்தில் டவுன்லோடிங் செய்திடலாம். அதே 1GB dataவை அனுப்ப 5 நிமிடம் மட்டுமே போதும்.          

S.சிவகுருநாதன் ,மாவட்ட செயலர்  


நமது BSNL நிறுவனம்... 

4G சேவையை துவங்கவுள்ளது...


நமது BSNL நிறுவனம் இந்த நிதி ஆண்டு (ஏப்ரல் 2015 - மார்ச் 2016)
இறுதிக்குள் 6 தொலைத் தொடர்பு மாநிலங்களில் 
அதிவேக நான்காம் தலைமுறை 4G சேவையை வழங்க உள்ளதாக 
நமது CMD திரு. ஸ்ரீ அனுபம் ஸ்ரீவஸ்தவா அவர்கள் 
தகவல் தெரிவித்துள்ளார்.

S.சிவகுருநாதன்,மாவட்ட செயலர்