Total Pageviews

Monday, November 30, 2015




BSNL 2018ல் நிகர லாபம் பெறும் என்று

தொலைதொடர்புத்துறை அமைச்சர்

நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

சென்ற நிதியாண்டில்  2014-15ல் 
 
நமது நிறுவனம் 27,242கோடி  வருமானமும் 

672 கோடி OPERATIVE PROFIT எனப்படும்

கூட்டு லாபமும் அடைந்திருப்பது 

குறிப்பிடத்தக்கது.




SR.TOA, TTA மற்றும் PM  கேடர்களில்

RULE 8 எனப்படும் வெளிமாற்றல்கள்

அனுமதிக்கப்படாமல் இருந்து வந்தது.

16/10/2015 அன்று நடைபெற்ற

JCM  தேசியக்குழுக்கூட்டத்தில்

RULE 8 மாற்றல்களுக்கு தடையேதும் இல்லை

என நிர்வாகம் தெரிவித்துள்ளது.

எனவே அதனை தனி விளக்க உத்திரவாக

மாநில நிர்வாகங்களுக்கு அனுப்பிட

நமது மத்திய சங்கம் நிர்வாகத்தை 

வலியுறுத்தியுள்ளது.




நாலு கட்டப்பதவி உயர்வில் 

உள்ள குளறுபடிகளை 

நீக்குவதற்காக அமைக்கப்பட்ட அதிகாரிகள் 

குழு தனது அறிக்கையை இன்னும் 

நிர்வாகத்திற்கு அளிக்காமல் உள்ளது. 

எனவே அதனை விரைவு படுத்திட 

நமது மத்திய சங்கம் வலியுறுத்தியுள்ளது. 

 


வங்கிகளைப் போலவே நமக்கும் 

2வது மற்றும் 4வது சனிக்கிழமைகள் 

விடுமுறை என அறிவிக்கப்பட்டதாக கூறி 

போலியான டுபாக்கூர் உத்திரவு 

ஒன்று நம்மிடையே வலம் வந்தது. BSNLலில் 

எத்தனையோ பணிகள்இருக்கும்போது 

தங்களது பொன்னான நேரத்தை 

இது போன்ற வீண் செயல்களில் 

தோழர்கள் செலவிடுவது வருத்தத்திற்குரியது.



2016 புத்தாண்டிற்கானநாட்காட்டி மற்றும் 

நாட்குறிப்புகளை  (தமிழில் சொல்வதென்றால்... 

காலண்டர் மற்றும் டைரி )அச்சிட்டு வெளியிட 

BSNL  தலைமை அலுவலகம்மாநிலங்களுக்கு 

அனுமதி அளித்துள்ளது.



கருணை அடிப்படையிலான பணிகளுக்கு 

மரணமுற்ற ஊழியரின் 

மகன் அல்லது மகள் விண்ணப்பித்தால் 

அவர்களுக்கு பணி கிடைப்பதில்லை. 

மேலும் சொந்த வீடு இருந்தால் எதிர்மறை 

மதிப்பெண்கள் வழங்கப்பட்டு 

கருணைப்பணிக்கான மனுக்கள் தள்ளுபடி 

செய்யப்பட்டு வந்தன.இந்த நடைமுறையை 

மறுபரிசீலனை செய்துபுதிய மதிப்பெண் 

நடைமுறையை அமுல்படுத்திட

நமது மத்திய சங்கம் நிர்வாகத்தை 

வலியுறுத்தியுள்ளது.




போன் மெக்கானிக் இலாக்காத்தேர்வு எழுத

தற்போது SSLC கல்வித்தகுதியாக நிர்ணயம் 

செய்யப்பட்டுள்ளது.GR'D மற்றும் RM பதவிகளில் 

SSLC படித்த தோழர்கள் மிக மிகக்குறைவு. 

எனவே மேற்கண்ட கல்வித்தகுதியை சிறப்பு 

அனுமதியாக ஒரு முறை தளர்த்தி அனைவரும் 

தேர்வு எழுதிட வாய்ப்பு அளிக்கக்கோரி

நமது சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.


S.பத்ரிநாராயணன்,மாவட்ட செயலர் (பொறுப்பு )  



Thursday, November 26, 2015


30.11.15 பனி நிறைவு பாராட்டு . . . வாழ்த்துக்கள் . . .



1. N. Dhamotharan ,TM, O /o SDE (Groups ), Periyakulam 

2.K.R. Gridharan ,SDE,Civil ,Madurai 

3.G. Martin Dhanaraj, DGM (HR),O/oGM,BSNL,Madurai 

4.R.Prema,SSS, SDE(CSC),O/oGM,BSNL,Madurai   

5.V .Soundararajan,TM,O /o SDE (Groups ),Nilakottai ,(AYK)

6.M. Arulmani, SE(E),Electrical Circle,Madurai (VRS)                  
அருமைத் தோழர்களே ! 2015 - நவம்பர்  (30.11.15) இம் மாதம் நமது மதுரை தொலை தொடர்பு மாவட்டத்தில் பனி நிறைவு பெறும் தோழர்களுக்கு ஒருங்கிணைந்த பனி நிறைவு பாராட்டு விழா 30.11.15 காலை 11 மணிக்கு மதுரை பொது மேலாளர் அலுவலக 
மனமகிழ் மன்றத்தில் நடை  பெற உள்ளது. 
அனைவரின்  பணி  ஒய்வு காலம் சிறக்க, 
எல்லாவளங்களும் பெற்று நெடிய காலம் நீடுழி வாழ்க  
NFTE  மதுரை மாவட்ட சங்கத்தின் 
மனபூர்வமான  . . .வாழ்த்துக்கள் . . . 

S.பத்ரிநாராயணன்,மாவட்ட செயலர் (பொறுப்பு ) 

Wednesday, November 25, 2015


மாவட்ட செயலர்கள் கூட்டம்

நவம்பர் 27 - கடலூர்





மாவட்ட செயலர்களின்... சிறப்புக்கூட்டம்...

சிறக்க... பங்கேற்போம்...

S.பத்ரிநாராயணன்,மாவட்ட செயலர்(பொறுப்பு)    

Tuesday, November 24, 2015


61-வது சம்மேளன தினம்..
.
(ஒன்பது சங்கங்கள் ஒன்றுபட்ட நாள் - 24.11.1954)


nfpte க்கான பட முடிவுnfpte க்கான பட முடிவு

UPTW என்ற பெயரில் இயங்கி வந்த சங்கத்தை தபால், தந்தி, தொலைத்தொடர்பு, ஆர்.எம்.எஸ், நிர்வாக பகுதி என அனைத்தையும் ஒன்று சேர்த்து (P3 & P4, T3 & T4, E3 & E4, R3 & R4, நிர்வாக தொழிற்சங்கம் என 9 சங்கங்களை  ஒன்றிணைத்து) NFPTE சம்மேளனத்தை தோழர். ஓம் பிரகாஷ் குப்தா உருவாக்கினர்.

நவம்பர் 24, 1954 அன்று  கூடிய   பெடரல் கவுன்சிலில் பாபு ஜெகஜீவன்ராம் அவர்களால் NFPTE சம்மேளனம் துவங்கப்பட்டது. 25 ஆம் தேதியும் பெடரல் கவுன்சில் தொடர்ந்தது.   கடுமையான விவாதம்.   தோழர்கள். தாதாகோஷ் - K. ராமமூர்த்தி-க்கு இடையே போட்டி நிலவியது. 45  வாக்குகள் வித்தியாசத்தில் தோழர். தாதாகோஷ் வெற்றி பெற்றார்.  S.A. டாங்கே அவர்கள் தலையீட்டில் S.V.G. டால்வி அவர்கள் போட்டியின்றி   தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

சக்திமிக்க ஒற்றுமைச் சின்னமாக NFPTE பிறந்தது. அன்றைக்கு தோழர் குப்தா AITEEU CLASS III மற்றும் AIRMSEU CLASS III சங்கத்துக்கு அகில இந்திய பொதுச் செயலராக இருந்தார். 
   
தொழிலாளர் இயக்க வரலாற்றில் இது ஒற்றுமைச் சின்னமாகப் பார்க்கப்பட்டது.  அப்போதைய காங்கிரஸ் அரசாங்கம் இதை உடைத்திட முயலவில்லை என்பதோடு எந்த ஒரு புதிய சங்கத்திற்கும் அங்கீகாரம் வழங்கிடாமல் இருந்தது.
    
9 சங்கங்களை ஒன்றிணைத்து உருவாக்கிய NFPTE சம்மேளனம் மத்திய தொழிற் சங்கங்களில் மிகப் பெரிய சக்தியாக விளங்கியது.   

எத்தனை போராட்டங்கள்... எத்தனை தடைகள்... பல பிரதமர்கள், பல துறை மந்திரிகள், எண்ணற்ற அதிகாரிகள் என பலரையும் சந்தித்து அடைந்த சாதனைகளை அளவிட முடியாது. 

சம்மேளன தினத்தை அனைத்து கிளைகளிலும் கொடியேற்றி கொண்டாடுங்கள்.  NFPTE மற்றும் NFTE ன் தியாகத்தை,  செயல்திறத்தை ஊழியர்களுக்கு எடுத்துச் சொல்லுங்கள்.

அனைவருக்கும் மதுரை  மாவட்ட சங்கத்தின்... 
NFPTE சம்மேளன தின நல்வாழ்த்துக்கள்...

S.பத்ரிநாராயணன் ,மாவட்ட செயலர் (பொறுப்பு )

Friday, November 20, 2015


மத்திய அரசு ஊழியர்களுக்கு 

23.55% ஊதிய உயர்வு...

7-வது ஊதியக் குழு பரிந்துரை...




மத்திய அரசு மற்றும் 
ஓய்வூதியதாரர்களுக்கு ஊதிய 
விகிதங்களை மாற்றி அமைப்பதற்காக 
கடந்த ஆண்டு பிப்ரவரி 
மாதம் முன்னாள் பாரத பிரதமர் 
உயர்திரு. மன்மோகன் சிங்
ஆட்சிக்காலத்தில் நீதிபதி 
ஏ.கே. மாத்தூர் தலைமையில்
7-வது ஊதியக்குழு நியமிக்கப்பட்டது.

இந்நிலையில்... 7-வது ஊதியக்குழு தனது 
900 பக்க அறிக்கையை 19-11-2015
 அன்று மத்திய
அரசிடம் தாக்கல் செய்தது.

7-வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளில்... சில முக்கிய அம்சங்கள்:

  • 7-வது ஊதியக்குழுவின் பரிந்துரைகள் 01-01-2016 முதல் அமுல் படுத்தப்படும். 
  • மத்திய அரசு ஊழியர்களுக்கு 23.55% சதவீத ஊதிய உயர்வு   (ஊதியம்: 16% சதவீதம் - இதர படிகள்: 63% சதவீதம்)
  • ஓய்வூதியர்களுக்கு 24% சதவீத ஓய்வூதிய உயர்வு.
  • குறைந்த பட்ச ஊதியம் ரூ. 18,000/- (தற்போது ரூ. 7000/-)
  • அதிக பட்ச ஊதியம் ரூ. 2,50,000/- (தற்போது ரூ. 90,000/-)
  • தர ஊதியம் (Grade Pay) ரத்து.
  • குறைந்த பட்ச ஓய்வூதியம் ரூ. 9000/- (தற்போது ரூ. 3500/-)
  • புதிய ஊதியம் பொருத்துவதற்கான கணக்கீடு முறை: (தற்போதைய ஊதியம் + தர ஊதியம் (7-வது ஊதியக்குழுவில் ரத்து செய்யப்பட்டுள்ளது) X 2.57)
  • ஆண்டு உயர்வுத் தொகை 3% சதவீதம் (மாற்றம் இல்லை)
  • ஏற்கனவே அமுலில் இருந்த 196 படிகளில் 52 படிகள் ரத்து செய்யப்படும். மேலும் 36 படிகள் தற்போதைய அல்லது புதிய படிகளுடன் இணைக்கப்படும்.
  • பதவி உயர்வுக்கான ஊதியம் பொருத்துதலில் (Fixation on Promotion) எந்த வித மாற்றமும் இல்லை. 
  • வீட்டு வாடகைப்படி X,Y,Z நகரங்கள் முறையே 24%, 16%, 8% எனவும் கிராக்கிப்படி 50% உயர்ந்தால் 27%, 18%, 9% எனவும் கிராக்கிப்படி 100% உயர்ந்தால் 30%, 20%, 10% எனவும் மாற்றப்பட்டுள்ளது.
  • கிராக்கிப்படி (Dearness Allowance) Formula-வில் எந்தவித மாற்றமும் இல்லை.
  • போக்குவரத்துப்படி A, A1 நகரங்களுக்கு NE-1 & NE-2, NE-3 to NE-8, NE-9 & above முறையே ரூ. 1350/-, 3600/-, 7200/- மற்ற நகரங்களுக்கு NE-1 & NE-2, NE-3 to NE-8, NE-9 & above முறையே ரூ. 900/-, 1800/-, 3600/- என மாற்றப்பட்டுள்ளது.
  • தற்காலிக விடுப்பு (Casual Leave)-இல் எந்தவித மாற்றமும் இல்லை.
  • குழந்தை பராமரிப்பு விடுப்பு, (CCL) எடுக்கும் பெண் ஊழியர்களுக்கு முதல் குழந்தைக்கு 100% முழு ஊதியமும், 2-வது குழந்தைக்கு 80% ஊதியமும் வழங்கப்படும்.
  • மகப்பேறு விடுப்பில் (Maternity Leave) எந்தவித மாற்றமும் இல்லை.
  • LTC மற்றும் Leave Encashment-இல் எந்தவித மாற்றமும் இல்லை.
  • ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு புதிய மருத்துவ காப்பீட்டு திட்டம் அறிமுகம்.
  • குடும்பக் கட்டுப்பாடு படி (Family Planning Allowance) ரத்து.
  • ஓய்வூதியர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட மருத்துவப்படி (FMA) மாதம் ரூ. 500/- வழங்கப்படும்.
  • குழுக் காப்பீட்டு திட்டத்திற்கான காப்பீட்டு முறையே 15 லட்சம் (மாதம் ரூ.1500/-), 25 லட்சம் (மாதம் ரூ.2500/-), 50 லட்சம் (மாதம் ரூ.5000/-) என உயர்த்தப்பட்டுள்ளது.
  • வட்டி இல்லாத அனைத்து கடன் திட்டங்களும் ரத்து செய்யப்படும்.
  • பணிக்கொடை உச்சவரம்பு ரூ. 10 லட்சத்தில் இருந்து ரூ. 20 லட்சமாக உயர்வு. அத்துடன் அகவிலைப்படி 50% சதவீதம் உயருகின்ற பொழுது பணிக்கொடை உச்சவரம்பு 25% சதவீதம் உயரும்.        
  • வட்டியுடன் கூடிய வீட்டுக்கடன் ரூ. 7.50 லட்சத்தில் இருந்து ரூ. 25 லட்சமாக உயர்வு.
இந்த ஊதிய உயர்வால் 47 லட்சம் 
மத்திய அரசு ஊழியர்களும், 
52 லட்சம் ஓய்வூதியர்களும் பலன் அடைவார்கள்.

S.பத்ரிநாராயணன்,மாவட்ட செயலர்(பொறுப்பு) 

Wednesday, November 18, 2015

பி.எஸ்.என்.எல். செயல்பாட்டு லாபம் ரூ.672 கோடி: மார்ச் மாதத்துக்குள் 4ஜி சேவை தொடக்கம்
மத்திய அரசுக்கு சொந்தமான தொலைத் தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல்., கடந்த 2014-2015 நிதி ஆண்டில் செயல்பாட்டு லாபமாக ரூ. 672 கோடியைப் பெற்றது என்று அறிவித்திருக்கிறது.
 எனினும் நிகர அளவில் நிறுவனம் ரூ. 8,234 கோடி இழப்பை சந்தித்தது என்று அதன் தலைவரும் நிர்வாக இயக்குநருமான அனுபம் ஸ்ரீவாஸ்தவா தெரிவித்தார்.


 புது தில்லியில் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை அவர் தெரிவித்ததாவது: 2006-ஆம் ஆண்டு, நாட்டில் தொலைத் தொடர்பு சேவை வழங்குவதில் முதலிடத்தில் இருந்தது பி.எஸ்.என்.எல். ஆனால் 2006-ஆம் ஆண்டு முதல் 2012 வரை, சேவைகளை விரிவாக்கம் செய்ய உதவும் வகையில், புதிய தொழில்நுட்ப சாதனங்களை வாங்காததால் போட்டியில் பின் தங்கி, வீழ்ச்சி அடைந்துவிட்டோம். அந்த காலகட்டத்தில்தான் நாட்டின் தொலைத் தொடர்பு சேவை அதிவேக வளர்ச்சி அடைந்தது.

 சென்ற சில ஆண்டுகளாக பி.எஸ்.என்.எல். நஷ்டத்தில் இயங்கி வந்தது. ஆனால் கடந்த 2014-2015 நிதி ஆண்டில் பி.எஸ்.என்.எல். நிறுவனம் அளித்து வரும் சேவைகளின் மூலம் பெற்ற வருவாய் 4.16 சதவீதம் அதிகரித்து ரூ. 27,242 கோடியாக இருந்தது. கடந்த 5 ஆண்டு அளவில் இதுவே மிக அதிக வருவாயாகும்.

 செலவுகள் போக நிறுவனம் ஈட்டிய செயல்பாட்டு லாபம் ரூ. 672 கோடியாக இருந்தது. எனினும் நிகர அளவில் நிறுவனம் ரூ. 8,234 கோடி இழப்பை சந்தித்தது.

குரல் சேவை அளிப்பதில் நிறுவனம் பின் தங்கிவிட்டது. தற்போது, இணையதள அடிப்படையில், தகவல் சேவைகளில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறோம். மொத்த வருவாயில் செல்லிடப்பேசி சேவையின் பங்களிப்பு 10 சதவீதமாகும்.
பிற தொலைத் தொடர்பு நிறுவனங்கள் பெரும் கடன் சுமையில் சிக்கித் தவித்து வருகின்றன. ஆனால் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் சொத்து மதிப்பு - கடன் விகிதம் மிகவும் ஆரோக்கியமாக, 1 சதவீதத்துக்கும் குறைவாக 0.13 சதவீதமாக உள்ளது.
நிறுவனத்தின் நெட்வர்க் தொடர்புகளை அதிகரிக்கும் பணியில் ரூ. 7,700 கோடியை இவ்வாண்டு முதலீடு செய்யவுள்ளோம்.
நிதி ஆண்டின் இறுதிக்குள், அதாவது அடுத்த ஆண்டு மார்ச் இறுதிக்குள் 4ஜி தொழில்நுட்ப அடிப்படையிலான சேவைகளை அளிக்கத் தொடங்குவோம். முதல் கட்டமாக, 2600 மெகா ஹெர்ட்ஸ் அலைவரிசையில் 4ஜி தொலைத் தொடர்பு சேவைகளை சில குறிப்பிட்ட நகரங்களில் அளிப்போம். பி.எஸ்.என்.எல்.லுக்கு சொந்தமான மொபைல் கோபுரங்களைப் பிற நிறுவனங்களும் பயன்படுத்தும் விதமாக ஒப்பந்தம் ஏற்படுத்தி வருகிறோம். கோபுரப் பயன்பாடு மூலம் பெற்ற வருவாயில் 42 சதவீத வளர்ச்சி உள்ளது. தொலைத் தொடர்பு கோபுர வணிகச் செயல்பாடுகளைத் துணை நிறுவனமாக அமைக்க மத்திய அமைச்சரவை ஏற்கெனவே ஒப்புதல் வழங்கிவிட்டது. விரைவில் அது அமைக்கப்படும் என்றார் அவர்.

S.பத்ரிநாராயணன் மாவட்ட செயலர்(பொறுப்பு)   


நமது மத்திய சங்கம் 
BSNL நிர்வாகத்தைச் சந்தித்து 
கீழ்க்கண்ட பிரச்சினைகளை விவாதித்துள்ளது.

2010ம் ஆண்டிற்குப்பின் JAO இலாக்காத் தேர்வு நடைபெறவில்லை. எனவே உடனடியாக காலியிடங்களைக் கணக்கிட்டு  JAO தேர்வை அறிவிக்க மத்திய சங்கம் வலியுறுத்தியுள்ளது. மேலும் எந்தெந்த கேடர்கள் மூன்றாம் பிரிவில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்பதற்கும் விளக்கம் அளிக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

78.2 சத IDA  சம்பள நிர்ணய அடிப்படையில் வீட்டு வாடகைப்படி HRA வழங்கிட BSNL  நிர்வாகத்தை மத்திய சங்கம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

நிராகரிக்கப்பட்ட கருணை அடிப்படையிலான விண்ணப்பங்களை மீண்டும் பரிசீலிக்கவும், விபத்தில் இறந்தவர்களின் வாரிசுகளுக்கு முன்னுரிமை  அளிக்கவும் மத்திய சங்கம் வலியுறுத்தியுள்ளது.

தொழிற்சங்கங்கள் CORPORATE  அலுவலகத்தில் அதிகாரிகளை  சந்திப்பதற்கான நேரம் வரையறுக்கப்பட்டுள்ளது. இது  01/12/2015 முதல் நடைமுறைப்படுத்தப்படும்.

கேடர் பெயர்மாற்றக்குழுவின்  பரிந்துரையை மீண்டும் BSNL நிர்வாகக்குழுவிற்கு  அனுப்பிட மத்திய சங்கம்  வலியுறுத்தியுள்ளது.

புதிய இணைப்புக்கள் கொடுப்பதற்கு பல்வேறு மாநிலங்களில் கேபிள்கள் இல்லாத நிலை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
 
S.பத்ரிநாராயணன்,மாவட்ட செயலர்(பொறுப்பு)