Monday, January 25, 2016


 திருத்தியமைக்கப்பட்ட

மாற்றல் கொள்கை வெளியீடு !



கிராமப்புற மற்றும் பிரபலமில்லாத ஊர்களுக்கு மிகவும் தேவையான 

ஊழியர்களை பணியில் அமர்த்தவும்,


அந்த ஊர்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு மாற்றல் தர 

ஏதுவாகவும், 


BSNL தலைமை அலுவலகம் கீழ்க்கண்ட திருத்தியமைக்கப்பட்ட 

மாற்றல் கொள்கையை  வெளியிட்டு உள்ளது.


அதன் முக்கிய அம்சங்கள்:


1. பிரபலமில்லாத ஊர்களுக்கான  கட்டாய மாற்றல் இரண்டு வருட 

டென்யூர் மாற்றலாக ஆக்கப்படுகிறது. அவை எந்த எந்த ஊர்கள் 

என்பதை மாநில தலைமை மேலாளர் நிர்ணயிப்பார்.



2. பிரபலமில்லாத ஊர்களாக நிர்னயிக்கப்படாத கிராமப்புற

 ஊர்களுக்கான கட்டாய மாற்றல் டென்யூர் 3 வருடங்களாக

நிர்ணயிக்கப்படுகிறது.அவை எந்த எந்த ஊர்கள் என்பதையும் 

மாநில தலைமை மேலாளர் நிர்ணயிப்பார்.


3.டென்யூர் முடிந்த ஊழியர்களுக்கு 3 விருப்ப ஊர்கள் கேட்க வாய்ப்பு 

அளிக்கப்படும்.நிர்வாகம் இயன்றவரை அவர் கேட்ட இடத்திற்கு 

மாற்றல் தரும். நிர்வாகரீதியாக இயலாது என்றால் அதற்கான காரணம்

எழுத்துபூர்வமாக தெரிவிக்கப்படும்.



4. டென்யூர் காலத்திற்குரிய லீவுகளை எடுக்கலாம். அதற்கு மேல் 

எடுத்தால் அது டென்யூர் காலத்திலிருந்து கழித்துக்கொள்ளப்படும். 


5.முடிந்தவரை , விருப்பமில்லாத பெண் ஊழியர்களும் 55 வயது 

கடந்தவர்களும் மாற்றப்படமாட்டார்கள்.

No comments:

Post a Comment