Total Pageviews

Sunday, April 30, 2017

உழைக்கும் வர்க்கத்தின் உலகளாவிய காவியநாள் 

மேதினம் -
உழைக்கும் வர்க்கத்தின் உலகளாவிய காவியநாள்
உழைக்கும் வர்க்கத்தின்
உரிமைகளை வென்றெடுத்திட
உயிரை உறிஞ்சிடும்
உழைப்புச்சுரண்டலை
ஒழித்து
விடுதலை பெற்றிட
8 மணி நேர உழைப்பு
8 மணி நேர ஓய்வு
8 மணி நேர சமூகக்கடமை - வர்க்கக்கடமை என
8 மணி நேர வரையரை முழக்கத்தால்
உறங்கியிருந்த உழைப்பாளிகளை
உசுப்பிவிட்டு நாள்
உலகத்தொழிலாளர்களை
ஒன்றுபடுத்திய தியாக நாளில்  
உழைக்கும் வர்க்க விடுதலைக்கு 
உறுதியேற்போம் 



Wednesday, April 26, 2017

மத்திய சங்க செய்திகள்

NFTE அகில இந்திய மாநாடு பஞ்சாப் மாநிலத்தில் நடைபெறும் என்று 21/04/2017 அன்று நடைபெற்ற பஞ்சாப் மாநில செயற்குழுவில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இடம் மற்றும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
------------------------------------------------------------------------------------------
போன்மெக்கானிக் இலாக்காத் தேர்வு அறிவிப்பில் உள்ள குளறுபடிகளை நமது மத்திய சங்கம் நிர்வாகத்திற்கு சுட்டிக்காட்டி.. உரிய திருத்தம் வெளியிட கேட்டுக்கொண்டுள்ளது.
------------------------------------------------------------------------------------------
விரைவில் நடைபெறவுள்ள விளையாட்டுக்குழுக் கூட்டத்தில் விவாதிக்கப்படுவதற்காக நமது மத்திய சங்கம் பல்வேறு கோரிக்கைகளை நிர்வாகத்திடம் அளித்துள்ளது. விளையாட்டு வீரர்களுக்கு இரயிலில் AC II வகுப்பில் பயணம் செய்வது… தினப்படியை  உயர்த்துவது உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை நமது சங்கம் விவாதப்பொருளாக அளித்துள்ளது.
------------------------------------------------------------------------------------------
SR.ACCOUNTANT கேடர்களை அதிகாரிகளாக மேல்நிலைப்படுத்த வேண்டும் என்ற CAT தீர்ப்பினை எதிர்த்து BSNL நிர்வாகம் மேல்முறையீடு செய்ய முடிவு செய்துள்ளது. அவ்வாறு மேல்முறையீடு செய்வது அவர்களுக்கு இழைக்கப்படும் அநீதி என்றும் அவர்களை அதிகாரிகளாக மேல்நிலைப்படுத்துவதுதான் சரியானது என்றும் நமது சங்கம் நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

Tuesday, April 25, 2017

இன்று - 25.04.2017- நடைபெறும் முழுஅடைப்பிற்கு ஆதரவு

டெல்லியில் 41நாட்கள்  போராடி - தமிழக முதல்வரின் உத்திரவாதத்திற்கு பின்- போராட்டத்தை விவசாயிகள் ஒத்திவைத்துள்ளனர். அவர்களுக்கு ஆதரவாக இன்று நடைபெறும் முழுஅடைப்பிற்கு ஆதரவு ஆர்ப்பாட்டம் நடத்த நமது  சங்கங்கள் அழைப்புவிடுத்துள்ளன. பங்கேற்போம் தோழர்களே!

Saturday, April 22, 2017

நேர்மை வளையுதடா

ஏப்ரல் 21 
பாவேந்தர் பாரதிதாசன்
நினைவு நாள்…

பாழாய்ப்போகும் நேர்மை பற்றி…
பாவேந்தரின் கவிதை….

நேர்மை வளையுதடா

ஊழலே தொழிலாச்சு
உலகம்
கொள்ளையடிப்பவர்க்கு நிழலாச்சு

வறுமைக்கு மக்கள் நலம் பலியாச்சு ..
எங்கும் வஞ்சகர் நடமாட வழியாச்சு..

சோகச் சுழலிலே...
ஏழைச் சருகுகள் சுற்றுதடா...
கண்ணீர் கொட்டுதடா

மோசச் செயலாலே...
முன்னேற்றம் கண்டோரின்..
ஆசைக்கு நீதி இரையாகுதடா ..

அன்பை அதிகார வெள்ளம்
கொண்டு போகுதடா 

பழந்துணி அணிந்தாலும்
பசியாலே இறந்தாலும்
பாதை தவறாத பண்பு உள்ளம்...

இருந்த நிலை மறந்து
இழுக்கான குற்றம் தன்னைப்
புரிந்திடலாமென்று துணியுதடா 

நேர்மை
பொல்லாத சூழ்நிலையால்
வளையுதடா

Friday, April 21, 2017


வைப்புநிதி
GPF  வைப்புநிதி BSNL ஊழியர்களுக்கு இனிமேல் நேரடியாக 
DOTCELL மூலமாகப் பட்டுவாடா செய்யப்படும் என
 CORPORATE அலுவலகம் அறிவித்துள்ளது. ஊழியர்கள் ESS எனப்படும் ONLINE மூலம் விண்ணப்பித்தவுடன் சம்பந்தப்பட்ட கணக்கு அதிகாரி அதனை ஒப்புதல் செய்து நேரடியாக DOTCELLக்கு E-MAIL மூலம் அனுப்பிவிடுவார். DOTCELL நேரடியாக ஊழியர்களின் வங்கிக்கணக்கில் வைப்புநிதியை வரவு வைத்துவிடும். 

இந்தப்பணி இரண்டு கட்டமாக அமுல்படுத்தப்படும். முதற்கட்டமாக ஏப்ரல் 2017க்குள்  12 மாநிலங்களிலும், இரண்டாம் கட்டமாக ஏனைய மாநிலங்களிலும் அமுல்படுத்தப்படும். தமிழகம் இரண்டாம் கட்ட அமுலாக்கத்தில் உள்ளது. வைப்புநிதி DOTCELL மூலமாகப் பட்டுவாடா செய்வதன் மூலமாக ஊழியர்கள் விரைவாக பட்டுவாடா பெறமுடியும். ஆனால் தற்போதுள்ள நடைமுறைப்படி மாதாமாதம் 
விண்ணப்பிக்க முடியுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.
--------------------------------------------------------------------------------------------------------------------------------
ஏப்ரல் IDA
ஏப்ரல் 2017 முதல் 117.1 சதமாக குறைந்துவிட்ட
 IDA உத்திரவை BSNL நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
--------------------------------------------------------------------------------------------------------------------------------
கேடர் பெயர் மாற்றம்
விடுபட்ட கேடர்களுக்கான பெயர்மாற்றம் பற்றி அதற்காக நியமிக்கப்பட்ட குழுவில் 18/04/2017ல் விவாதிக்கப்பட்டது. 
தற்போது 19 வகையான GROUP ‘D’ கேடர்கள் உள்ளன. இவை அனைத்தையும் ஒருங்கிணைத்து ஒரே கேடராக அறிவிக்கும்படி உழியர் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனைப்போலவே GROUP ‘C’ கேடரிலும் பெயர் மாற்றம் செய்யப்படாத பல கேடர்கள் உள்ளன. இதனைப் பற்றி விவாதித்து முடிவு செய்யவும் கோரிக்கை வைக்கப்பட்டது. அடுத்த கூட்டம் 26/06/2017ல் நடைபெறும் என்றும் அதில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
 ------------------------------------------------------------------------------------------------------------------------------
அங்கீகாரமற்ற சங்கங்களின் கோரிக்கைகள்
அங்கீகாரமற்ற சங்கங்கள் தங்களது ஊழியர் பிரச்சினை பற்றி எடுத்துச்சொல்வதைக் காது கொடுத்துக் கேட்க வேண்டும் என BSNL நிர்வாகம் அனைத்து மட்ட நிர்வாகங்களையும் அறிவுறுத்தியுள்ளது. அவர்களின் கோரிக்கையை செவிமடுக்க மறுப்பது தவறு என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதே நேரம் அங்கீகாரமற்ற சங்கங்களுடன் எழுத்துப்பூர்வமாக எந்தக் கடிதத்தொடர்பும் கூடாது 
எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
------------------------------------------------------------------------------------------------------------------------------
போன்மெக்கானிக் இலாக்காத்தேர்வு
நடைபெறவுள்ள போன்மெக்கானிக் இலாக்காத்தேர்வு எழுதுவதற்கான கல்வித்தகுதியைத் தளர்த்த வேண்டும் எனவும்…. தேர்வுக்கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என சங்கங்களின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. நிர்வாகம் சாதகமாக பரிசீலிக்கும் என நம்புவோம்.

Thursday, April 13, 2017

அண்ணல் அம்பேத்கர்
பிறந்த தினம்

ஏப்ரல் 14


Thursday, April 06, 2017

ஏப்ரல் 08 -தொழிற்சங்க இமயம் தோழர் குப்தா பிறந்த நாள்          

தபால் - தந்தி - தொலைபேசி  - தொலைதொடர்பு  
என  வளர்ந்திட்ட தகவல் தொழிற்நுட்பப் பகுதியின்  
தொழிற்சங்கங்களின் ஆசான் 
தோழர் குப்தா பிறந்தநாள் -ஏப்ரல் 08 

எதைக்கொடுத்தும் ஒற்றுமை 
என்னையே கொடுத்தும் ஒற்றுமை  

இது 
ஆசானின் தராகமந்திரம் 
சங்கச்செயல்பாட்டில் 
கடைப்பிடித்திட 
கடுமையாய் முயற்சிப்போம் 

என் . எப் .பி .டி  ஒரு வானவில்  
ஆசான் அடிக்கடி சொல்லும் வரி 

நயவஞ்சகமின்றி நடைமுறைப்படுத்துவோம்

 இமயத்தின் உதயநாளிள்
உறுதியேற்போம்.