Total Pageviews

Friday, June 30, 2017

சிறப்பான ஆர்ப்பாட்டம் 

 சம்பள பேச்சுவார்த்தை  குழு அமைத்திட 


04.07.2017 அன்று மாலை நேசனல் போராம் ( NFTE - TEPU - SEWA ) சார்பாக தல்லாகுளம் வடக்கு வளாகத்தில் சிறப்பான ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அகிலஇந்திய, மாநில, மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். 
பங்கேற்று சிறப்பித்த தோழர்கள் தோழியர்கள்
அனைவருக்கும் போரத்தின் சார்பாக நன்றி. 
அடுத்தகட்ட இயக்கத்திற்கும் போராட்டத்திற்கும் தயாராவோம். 

ஊக்கத்தொகை திட்டம்

புதிய தரைவழி மற்றும் அகன்ற அலைவரிசை
இணைப்புக்களைப் பெற்றுத்தரும் ஊழியர்களுக்கு
ஊக்கத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.
தரைவழி இணைப்பு ரூ.100/=
அகன்ற அலைவரிசை இணைப்பு ரூ.100/=
தரைவழி & அகன்ற அலைவரிசை இணைப்பு ரூ.200/=
மேற்கண்ட ஊக்கத்தொகை
OUTDOOR பகுதிக்கு 70 சதம்
INDOOR பகுதிக்கு 20 சதம்
COMMERCIAL பகுதிக்கு 10 சதம் என பிரித்து வழங்கப்படும்.
புதிய இணைப்புக்கள் விண்ணப்பித்த
24 மணி நேரத்திற்குள் வழங்கப்பட வேண்டும்.
48 மணி நேரத்திற்குள் கொடுக்கப்பட்ட இணைப்புக்களுக்கு
50 சதம் மட்டுமே ஊக்கத்தொகையாக வழங்கப்படும்.
SDCA மற்றும் SSA அளவில்
கூடுதல் இணைப்புக்களைப் பெற்றுத்தரும் ஊழியர்களுக்குப்
பாராட்டுப்பத்திரங்கள் வழங்கப்படும்.
3 மாதங்கள் கழித்து மேற்கண்ட திட்டம் பரிசீலனை செய்யப்படும்.

நிறுவன வளர்ச்சிக்கு உதவிடும் 
புதிய இணைப்புக்கள் பெறும் முயற்சியில்
தோழர்கள் புதிய வேகத்தோடும் செயலாக்கத்தோடும்
தங்கள் பங்களிப்பை சிறப்பாகவும் கூடுதலாகவும் 
ஆற்றிட கேட்டுக்கொள்கின்றோம்.

Sunday, June 25, 2017

மாவட்ட மாநாட்டு அழைப்பிதழ்   


Thursday, June 22, 2017

சமூக பாதுகாப்புத் திட்டம்

நமது நிறுவனத்தில் பணியில் உள்ள
ஊழியர்கள் பணிக்காலத்தில்
உயிர் இழக்க நேர்ந்தால்
அவர்களின் குடுபம்பத்துக்கு
சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ உதவித்தொகை வழங்கும் திட்டம்
குறித்து அனைத்து சங்கங்களும்
ஆலோசனைகளை வழங்குமாறு
 நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது..

விருப்பம் உள்ள ஊழியர்களும் தங்கள் கருத்துக்களைத் தெரிவிக்கலாம்.

இதற்கான கடைசி தேதி 30.06.2017.

கருத்துக்களை அனுப்ப
வேண்டிய ம்ன்னஞ்சல் முகவரி
restg@bsnl.co.in

Wednesday, June 21, 2017

மாவட்டமாநாடு - சுவரொட்டி    


Tuesday, June 06, 2017

மூன்றாவது சம்பளமாற்றம் (3PRC) நமக்கு கிடைக்குமா?      

இலாக்கச்செயலர்களின் கூட்டம் தலைமைச்செயலாரின் (cabinet secretary) தலைமையில் 12.05.2017 அன்று நடைபெற்றது. கூட்ட விவாதக் குறிப்பு (minutes of the meeting) பத்திரிக்கைகளில் வெளியாகியுள்ளது. BSNL சம்பளப் பேச்சுவார்த்தை தொடர்பாக எந்த குறிப்புமில்லை. அதிர்ச்சியடைந்த டெல்லியில் இருந்த நம் தலைவர்கள் 05.06.2017 அன்று மேலாண்மை இயக்குநர் (CMD) அவர்களை 10.30 மணிக்கு சந்தித்து பேசினர். மூன்றாவது சம்பளமாற்றம் (3PRC) குறித்து கேட்டறிந்தனர்.  மேலாண்மை இயக்குநர் (CMD) அவர்கள் தொடர்ந்து முயற்சிப்பதாக உறுதியளித்துள்ளார். சம்பளமாற்றம் (3PRC) கிடைக்குமா?