Total Pageviews
Thursday, August 31, 2017
இரவு நேர இலவச அழைப்பு
BSNL வாடிக்கையாளர்களுக்கும்…
ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கும் வழங்கப்பட்டது போல…
BSNLலில் பணிபுரியும் ஊழியர்களுக்கும்...
GROUP ‘B’ அதிகாரிகளுக்கும்...
இரவு நேர இலவச அழைப்பு வசதி அவர்களின் இல்லங்களில் உள்ள தொலைபேசிகளில் வழங்கப்படும்
என CORPORATE அலுவலகம் 29/08/2017
அன்று உத்திரவிட்டுள்ளது.
மிக நீண்ட நாட்களாக எழுப்பப்பட்ட மேற்கண்டகோரிக்கை
அகில இந்திய JCMல் விவாதிக்கப்பட்டு முடிவுகள்
மேற்கொள்ளப்பட்டு தற்போது உத்திரவிடப்பட்டுள்ளது.
JCM ஊழியர் தரப்பிற்கு நமது நன்றிகள்...
Sunday, August 27, 2017
போராட்ட
விளக்க கூட்டம்
ஊழியர் மாற்றலில் பாராபட்சம் காட்டும்
மாவட்ட
நிர்வாகத்தை எதிர்த்து
30-08-2017 புதன்
கிழமை நடைபெறும் ஆர்ப்பாட்டத்திற்கான விளக்க கூட்டம்.
இடம் :-
தல்லாகுளம் CSC மனமகிழ்
மன்றம்
28.08.2017 மாலை
5.3௦ மணியளவில்
போராட்ட விளக்க கூட்டம்
நடைபெறும்.
மதுரை GM அலுவலக
கிளை ,
GM [
DEVLOPMENT] அலுவலக கிளை,
CSC TKM அலுவலக
கிளை,
NORTH - TKM அலுவலக
கிளை,
CTMX -TKM அலுவலக
கிளை,
DE RM மதுரை
அலுவலக கிளை,
அனைத்து கிளை உறுப்பினர்களும், கிளை
செயலர்களும் அனைவரும் தவறாமல்
கலந்து கொள்ளுங்கள் தோழர்களே.
Wednesday, August 23, 2017
Saturday, August 19, 2017
வீரத்திருமகன்
ஆகஸ்ட்... 18
அருமைத்தலைவர் நேதாஜி
மறைக்கப்பட்ட நாள்
|
சுபாஷ் சந்திர போஸ்….
நீங்கள் இரத்தத்தைக் கொடுங்கள்…
நான் உங்களுக்கு சுதந்திரத்தை தருகின்றேன்…
என்று முழங்கிய வீரத்திருமகன்…
ஆயுதம் ஏந்தாமல் விடுதலையை
அடைய முடியாது என்ற
அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டவர்…
எல்லாம் கிடைக்க வேண்டும்…
அல்லது ஒன்றுமே தேவையில்லை என முழங்கியவர்….
மகாகவி தாகூரால்...
நேதாஜி எனப் பட்டம் சூட்டப்பட்டவர்…
1938ம் ஆண்டு… நேதாஜி...
இந்திய தேசிய காங்கிரசின் தலைவரானார்..
1939ல் இரண்டாம் முறையும் போட்டியிட்டார்…
நேதாஜியை விரும்பாத காந்திஜி...
அவருக்கு எதிராகப் போட்டியிட...
நேருவையும்... இராஜேந்திரபிரசாத்தையும்...வற்புறுத்தினார்...
ஆனால் அவர்கள் இருவரும்....
அவருக்கு எதிராகப் போட்டியிட மறுத்தனர்….
எனவே காந்தியடிகள் பட்டாபி சீத்தாராமையாவை
நேதாஜிக்கு எதிராக நிறுத்தினார்….
பட்டாபி சீத்தாராமையா தோல்வியுற்றார்….
பட்டாபியின் தோல்வியை தனது பெரும் இழப்பாக
கருதிய காந்தியடிகள் உண்ணாவிரதம் மேற்கொண்டார்….
இந்த நாடகங்களைக் கண்டு மனம் வெறுத்த
நேதாஜி காங்கிரஸ் இயக்கத்தை விட்டு வெளியேறினார்…
1940ம் ஆண்டு சிறையிலடைக்கப்பட்டார்…
1941ம் ஆண்டு சிறையிலிருந்து தப்பித்தார்…
ஆப்கானிஸ்தான் சென்றார்…..
அங்கிருந்து ரஷ்யா சென்றார்…
அங்கிருந்து ஜெர்மன் சென்றார்…
ஹிட்லரை சந்தித்தார்…
1941ல் சுதந்திர இந்திய மையம் தொடங்கினார்…
சுதந்திர இந்திய வானொலியை பெர்லினில் தொடங்கினார்..
1943ல் சிங்கப்பூரில்….
இந்திய தேசிய சுதந்திரக் கொடியை ஏற்றினார்…
சுதந்திர இந்தியா என்று பிரகடனம் செய்தார்…
1944ல் இந்திய தேசிய இராணுவப்படைக்கு தலைமையேற்று
ஆங்கிலேயரைப் போர்க்களத்தில் சந்தித்தார்…
தோல்வி அடைந்த போதும் சோர்ந்து விடாமல் செயல்பட்டார்.
இந்தியாவை அடக்கி வைக்கும் ஆற்றல் எவருக்குமே இல்லை…
நமது தேசம் விடுதலை அடைந்தே தீரும் என
1945 ஆகஸ்ட் 15 வானொலியில் வீர முழக்கம் செய்தார்….
அவரது தீர்க்க தரிசனம் மிகச்சரியாக நடந்தேறியது..
1947 ஆகஸ்ட் 15 நமது தேசம் விடுதலை அடைந்தது..
1945 ஆகஸ்ட் 18 விமானத்தில் பயணித்த போது…
பர்மோசா தீவுக்கருகே அவரது விமானம் விபத்துக்குள்ளாகி
நேதாஜி இறந்தார் என ஜப்பான் அரசு அறிவித்தது…
இன்று வரை அவரது மரணம் மர்மம் நிறைந்ததாகவே உள்ளது…
அவரது தியாகம் அளப்பரியது…. ஒப்பிட முடியாதது…
இரத்தம் சிந்தி இந்திய தேச விடுதலைக்குப் பாடுபட்ட
வீரத்திருமகன் நேதாஜியை என்றும் நினைவு கூர்வோம்…
வாழ்க. அவரது புகழ்…. வளர்க அவரது புகழ்…
நன்றி: காரைக்குடி இணையதளம்
Tuesday, August 15, 2017
சுதந்திர தின வாழ்த்துக்கள்
இதோ… நாடு விடுதலை அடைந்து…
71 ஆண்டுகள் ஆகிவிட்டன….
நேருவின் கனவுகள்…
கனவுகளாகவே போய்விட்டன….
விழித்தெழுந்த ஒரு தேசம்….
இதோ மீண்டும் வீழ்ந்து விட்டது…
வீழ்வேனென்று நினைத்தாயோ?
என பாரதி அன்று பாடினான்…
இந்திய தேசமே…
வீழ்ந்திடாதே… விழித்தெழு….
கண்ணீரைத்துடைத்திடு…
கனவுகளை… நனவுகளாக்கு…
உன் ஆன்மாவின் மவுனம் கலைத்திடு…
அனைவருக்கும்
விடுதலைத் திருநாள்
நல்வாழ்த்துக்கள்..
Thursday, August 10, 2017
மத்திய தொழிற்சங்கங்களின் தேசிய தொழிலாளர் கருத்தரங்கம்
தொழிலாளர்களின் 12 அம்சக்கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் 08/08/2017 அன்று மத்திய தொழிற்சங்கங்களின்
அறைகூவலின்படி அனைத்து தொழிற்சங்க கருத்தரங்கம் டெல்லியில் தல்கடோரா விளையாட்டு அரங்கத்தில் சிறப்பாக நடைபெற்றது. NFTE சார்பாக பொதுச்செயலர்
தோழர்.சந்தேஷ்வர் சிங் அவர்களின் தலைமையில் ஏறத்தாழ 30 தோழர்கள் கலந்து
கொண்டனர்.தமிழகத்திலிருந்து மாநிலச்செயலர் தோழர்.நடராஜன், மாநிலத்தலைவர் தோழர்.காமராஜ், STR மாநிலச்செயலர் தோழர்.அன்பழகன், ஆகியோர் கலந்து கொண்டனர்.
கீழ்க்கண்ட முடிவுகள்
எடுக்கப்பட்டுள்ளன.
12 அம்சக்கோரிக்கைகளை வலியுறுத்தி...
நாடு
முழுக்க அனைத்து மட்டங்களிலும் கோரிக்கைகள் விளக்கவுரை மற்றும் பரப்புரை. நவம்பர் 9,10 மற்றும் 11 தேதிகளில்
டெல்லியில் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பங்கேற்கும் மூன்று நாட்கள் தொடர் தர்ணா. இறுதியாக
காலவரையற்ற நாடு தழுவிய வேலை நிறுத்தம்.
தோழர்களே… தயாராவீர்…
Subscribe to:
Posts (Atom)