மா[ரி]றிப்போனது மதுரை
பேச்சுவார்த்தையால் அமைதி நிலை
24/10/2017 அன்று மதுரைப் பொதுமேலாளர்
அலுவலகத்தில் காலவரையற்ற
உண்ணாவிரதம்
திட்டமிடப்பட்டிருந்தது. உண்ணாவிரதம் துவங்கும்
முன்பே மதுரை
துணைப்பொதுமேலாளர்
திரு.சந்திரசேகரன் அவர்கள் தோழர்களை சந்தித்து
25/10/2017
அன்று BSNLEU – NFTE இணைந்த
பேச்சுவார்த்தையை மாவட்ட நிர்வாகம்
நடத்தவிருப்பதாகவும், பிரச்சினைகள் சுமுகமாக
தீர்க்கப்படும் எனவும்
உறுதியளித்தார். மேலும்
எழுத்துப்பூர்வமாகவும் வேண்டுகோள்
விடுத்தார்.
எனவே மதுரைப் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
மதுரை மாவட்ட நிர்வாகத்தின் ஆக்கப்பூர்வமான
அணுகுமுறைக்கு
நமது நன்றி.
பல்வேறு மாவட்டங்களிலும் வந்திருந்து
போராட்டத்திற்கு ஆதரவு நல்கிய
முன்னணித்தோழர்களுக்கும் நமது நன்றி.
25.10.2017 அன்று பேச்சுவார்த்தையில்
BSNLEU சங்கத்தின் சார்பாக மாவட்ட
செயலர் தோழர். செல்வின் சத்யராஜ்,
மாநில நிர்வாகி தோழர். பழனிகுமார், மற்றும்
BSNLEU மாவட்ட தலைவர் கலந்துகொண்டனர்.
NFTE-BSNL சங்கத்தின் சார்பாக
மாவட்ட தலைவர். தோழர். சிவகுருநாதன்,
மாவட்ட செயலர் தோழர். ராஜேந்திரன்,
மாவட்ட உதவி
தலைவர். தோழர். விஜயரங்கன்,
மாவட்ட அமைப்பு செயலர். தோழர். வேலுச்சாமி
மாநில அமைப்பு செயலர்.
தோழர். க.சுபேதார் அலிகான்,
காரைக்குடி
மாவட்ட செயலர். தோழர். வெ.மாரி,
கலந்துகொண்டனர்
ஆக்கப்பூர்வமான முறையில் நடைபெற்று
அமைதிவழியில்
பிரச்சினைகளில் முடிவு எட்டப்பட்டது. அமைதி வழியில்
பேச்சுவார்த்தை
நடத்திய மதுரை மாவட்ட
நிர்வாகத்திற்க்கும்,
பேச்சுவார்த்தைக்கு உறுதுணையாக இருந்த
காரைக்குடி
மாவட்ட செயலர் தோழர். வெ.மாரி,
மற்றும்
மாநிலசங்கத்திற்கும் மாநில நிர்வாகத்திற்க்கும் நமது நன்றி.