Tuesday, February 13, 2018

NFTCL 
மாநில செயற்குழு முடிவுகள்


                       கோரிக்கை மனு – 20/02/2018  ஒவ்வொரு மாவட்டத்திலும்

ஒப்பந்த ஊழியர்களுக்குப் பல்வேறு பிரச்சினைகள் சிக்கல்கள் உள்ளன.

அவற்றை முழுமையாகத் தொகுத்து அந்தந்த மாவட்ட நிர்வாகத்திடம்

கோரிக்கை மனு அளிக்க வேண்டும். அதன் நகல் அந்தந்த பகுதி 

தொழிலாளர் நல ஆணையர்களுக்கும் ...(ALC/RLC)  சென்னை DY.CLC

துணைத் தொழிலாளர்  ஆணையருக்கும்  அனுப்பப்பட வேண்டும்.


பெருந்திரள் போராட்டம் – 02/03/2018…

தமிழகம் முழுவதும் கடந்த இரண்டு மூன்று மாதங்களாக

சம்பளம்  பட்டுவாடா செய்யப்படாத கொடுமையைக் கண்டித்தும்

ஒவ்வொரு மாதமும் 7ம்தேதி சம்பளம் வழங்கக்கோரியும்

ஆட்குறைப்பு என்ற தமிழ் மாநில நிர்வாகத்தின் கவைக்குதவாத

புதிய பூச்சாண்டித்தனத்தைக் கடுமையாக கண்டித்தும்….


சென்னையில் உள்ள தமிழ்மாநில முதன்மைப்பொதுமேலாளர்

அலுவலகம் முன்பாக  தமிழகம் முழுவதுமுள்ள ஒப்பந்த ஊழியர்கள்

திரண்டு பெருந்திரள் போராட்டம் நடத்துவது.


தோழர்களேஅணி திரள்வோம்…. அநீதி களைவோம்….

No comments:

Post a Comment