Total Pageviews

Monday, May 28, 2018


சட்டரீதியான போராட்டம்


     
                  
செல்கோபுரங்களைத் தனிநிறுவனமாகப் பிரிக்கும்  

அரசின் முடிவினை எதிர்த்து  அனைத்து சங்கங்களின் 

முடிவின்படி டெல்லி உயர்நீதிமன்றத்தில்AIBSNLEA, SNEA 

மற்றும் AIGETOA அதிகாரிகள் சங்கங்களின் சார்பாக 

வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு 25/05/2018 

அன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.  

புதிய செல்கோபுரம் துணைநிறுவனம் ஆரம்பிப்பது 

என்பது நீதிமன்ற முடிவிற்கு உட்பட்டது என டெல்லி 

நீதிமன்றம் உத்திரவிட்டுள்ளது.

அடுத்த கட்ட விசாரணை 25/09/2018 அன்று நடைபெறும்.

Friday, May 18, 2018





 NFTE- BSNL
மாவட்ட செயற்குழு

மதுரை தொலைத்தொடர்பு மாவட்டம்

அருமை தோழர்களே ! தோழியர்களே  !

வணக்கம்,
                
        நமது மாவட்ட செயற்குழு வருகின்ற 22.05.2018 

அன்று செவ்வாய் கிழமை காலை 10.00  மணியளவில் 

திருமங்கலத்தில் உள்ள V.S.R. திருமண மண்டபத்தில்  

மாவட்ட தலைவர் தோழர். S. சிவகுருநாதன், 

தலைமையில் நடைபெற உள்ளது. அனைத்துகிளை 

செயலர்கள் மாவட்ட, மாநில சங்க நிர்வாகிகள் 

மற்றும்முன்னணி தோழர்கள் கலந்து கொண்டு 

சிறப்பிக்க வேண்டுகிறோம்.


செயற்குழு ஆய்படு பொருள் :-


 Ø முன்றாவது ஊதியமாற்றம் மற்றும் தனிடவர் துணைநிறுவனம்.

Ø அகிலஇந்திய மாநாடு முடிவுகள்.

Ø  அமைப்பு நிலை.

Ø  இன்னபிற ......

***************************************************************** 
முன்றாவது ஊதியமாற்றம்

மற்றும் தனிடவர் துணைநிறுவனம்

சிறப்புரை:-
தோழர்.K. நடராஜன் மாநிலசெயலர்.
----------------------------------------------------------------------------------------------------


அகிலஇந்திய அளவில் நமது இயக்கம்

விரிவுரை:
தோழர்.P.காமராஜ்

அகிலஇந்திய சமேளன செயலர்
---------------------------------------------------------------------------------------------------------------



அகிலஇந்திய மாநாடு முடிவுகள்

நிறைவுரை:

தோழர்.S.பழனியப்பன்

அகிலஇந்திய உதவி தலைவர்
***************************************************************************

நகல் :-


கிளை செயலர்கள் ,மாவட்ட சங்க நிர்வாகிகள், 

தோழர் .K. நடராஜன், மாநிலசெயலர்.

முதன்மை பொது மேலாளர், BSNL மதுரை.




தோழமையுள்ள.

G.ராஜேந்திரன்
NFTE –BSNL
மாவட்ட செயலர்

Friday, May 11, 2018



TOWER


31/03/2018 அன்று BSNL நிறுவனத்தில் உள்ள  

செல்கோபுரங்கள் எண்ணிக்கை 66707 ஆகும்.

வடக்குப்பகுதியில் 18001 கோபுரங்கள்.

தெற்குப்பகுதியில் 20363 கோபுரங்கள்.

கிழக்குப்பகுதியில் 11585 கோபுரங்கள்.

மேற்குப்பகுதியில் 16758 கோபுரங்கள்.

இந்தியாவிலேயே மகாராஷ்டிரா மாநிலத்தில் 

அதிகபட்சமாக 5897 கோபுரங்கள் உள்ளன.

தமிழகத்தில் 4821 கோபுரங்களும்... 

சென்னையில் 1518 கோபுரங்களும் உள்ளன.

மேலே கண்ட 66707 கோபுரங்களில்... 15268 கோபுரங்கள் 

தனியார்கள்  பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளது.

இதற்காக கட்டணம் வசூலிக்கப்படுகின்றது.

கேரளாவில் அதிகபட்சமாக 1910 கோபுரங்கள் தனியார்   

 பயன்பாட்டிற்கு விடப்பட்டுள்ளன.
                            
  தமிழகத்தில் 1309 கோபுரங்களும்.. சென்னையில் வெறும் 134 கோபுரங்களும் 

தனியாருக்கு வாடகைக்கு விடப்பட்டுள்ளன. சென்ற நிதியாண்டில் மட்டும் 

4780 கோபுரங்கள் தனியார் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளது.

தனியார் நிறுவனப் பயன்பாட்டிற்கு அனுமதிக்கப்பட்டுள்ள 15268 

கோபுரங்களில் பாதிக்கும் மேற்பட்ட

அதாவது  7988 கோபுரங்கள் RJIL நிறுவனத்திற்கு மட்டும் விடப்பட்டுள்ளன.

அதிகபட்சமாக இராஜஸ்தான் மாநிலத்தில் 607 கோபுரங்களும்

தமிழகத்தில் 553 கோபுரங்களும்

சென்னையில் வெறும் 53 கோபுரங்களும்
RELIANCE நிறுவனத்திற்கு வாடகைக்கு விடப்பட்டுள்ளன.

நமது செல்கோபுரங்களைப் பயன்படுத்தும் தனியார் நிறுவனங்களில் 

RJIL நிறுவனம் மட்டுமே அனுமதிக்கப்பட்ட 

எண்ணிக்கையில் பாதிக்கும் மேற்பட்ட 

கோபுரங்களைப் பயன்படுத்துகின்றது

இதிலிருந்தே BSNL நிறுவனத்தின் 

செல்கோபுரங்கள் மீது கண்ணாக இருப்பது யார் என்பது புரிய வரும்

செல்கோபுரங்களைத் தனியாருக்கு வாடகைக்கு விடுவதற்காக ஒவ்வொரு 

மாநிலத்திற்கும் ஆண்டு தோறும் இலக்கு நிர்ணயிக்கப்படுகின்றது. இதில் 

கேரள மாநிலம் தன் இலக்கைத் தாண்டி கூடுதல் கோபுரங்களை வாடகைக்கு 

விட்டுள்ளது. தமிழகத்தில் 69 சத இலக்கு மட்டுமே எட்டப்பட்டுள்ளது.

தற்போதுள்ள விதிமுறைகளின்படிநடைமுறைகளின்படி… 

செல்கோபுரங்களைத் தனியாருக்கு வாடகைக்கு விடுவதில் பல்வேறு 

அலுவலக நடைமுறைச்சிக்கல்கள் உள்ளன. எனவே தாமதம் உண்டாகிறது

செல்கோபுரங்கள் BSNLன் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்கப்பட்டு விட்டால் 

மிக எளிதாக அவைகளை தனியாருக்கு வாடகைக்கு விட முடியும். குறிப்பாக 

RJIL நிறுவனத்திற்கு உடனடியாக TOWERகளைத் தாரை வார்க்க முடியும்

தற்போது செல்கோபுரங்களை வாடகைக்கு விடுவதால் நமக்கு வருமானம் 

கிடைக்கின்றது. ஆனாலும் இதிலும் அரசியல் புகுத்தப்படும். வாடகைக்கு 

விடப்பட்டுள்ள 15268 கோபுரங்களில் ஜனவரி 2018 வரை 13190 கோபுரங்களுக்கு 

மட்டுமே வாடகைக்கான பில்கள் அனுப்பப்பட்டுள்ளன

முழுமையாக பில்கள் அனுப்பப்படவில்லை.

வாடகைக்கு விடப்பட்ட கோபுரங்களுக்கான கட்டணம் முழுமையாக 

வருகின்றதா என்பதுவும் தெரியவில்லை. மேலும் செல்கோபுரங்கள் தனி 

நிறுவனமாகப்  பிரிக்கப்பட்டு தனியாருக்கு வாடகைக்கு விடப்பட்டு நாட்கள் 

நகர்ந்தவுடன் செல்கோபுரங்களுக்கு வாடகை செலுத்த வேண்டியதில்லை... 

எல்லோரும் எல்லா கோபுரங்களையும் சேர்ந்து அனுபவிக்கலாம் … 

கட்டணமில்லை என்று அரசு முடிவெடுக்கலாம். அத்தகைய நிலையில் 

தனியாருக்கு மிக மிக சாதகமாக அரசின் முடிவு அமையும்.


அரசு தவறு செய்யாது என்பது பிரிட்டிஷ் பழமொழி.

ஆனால் இந்திய தேசத்தில்...

பல்வேறு தவறுகளைச் செய்துதான் ஒரு அரசு அமைகின்றது.

அரசு மக்களுக்கான அரசு என்றால் நமக்கு சந்தேகம் எழாது.

ஆனால் அரசு அம்பானிகளின் அரசு என்பதால்தான்

நமக்கு எல்லாவற்றிலும் சந்தேகம் எழுகின்றது.

எனவே மக்கள் சொத்தைக் காப்பாற்ற...

களம் காண வேண்டியது நமது கடமையாகும்

களம் காண்போம் தோழர்களே



 நன்றி காரைக்குடி வலைத்தளம்