Total Pageviews

Friday, June 29, 2018


3வது ஊதியதிருத்தப் பேச்சுவார்த்தை குழு

(JOINT WAGE REVISION COMMITTEE)





DPE  வழிகாட்டுதலின்படி… BSNL ஊழியர்களுக்கு

3வது ஊதியதிருத்தப் பேச்சுவார்த்தையை துவக்குவதற்காக

10 உறுப்பினர்களைக் கொண்ட குழு அமைக்கப்படவுள்ளது.


நிர்வாகத்தரப்பில் உறுப்பினர்களும்

அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்கள் சார்பாக

உறுப்பினர்களும் குழுவில் இடம் பெறுவார்கள்.

அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கத்தரப்பில்

BSNLEU சார்பாக உறுப்பினர்களும்

NFTE சார்பாக உறுப்பினர்களும்… இடம்  பெறுவார்கள்.


ஊதியத்திருத்தப் பேச்சுவார்த்தை என்ற மிகப்பெரிய நிகழ்வில்

ஊழியர்கள் தரப்பில் வெறும் உறுப்பினர்கள் 

மட்டுமே என்பது ஏற்புடையதல்ல.



முதலாம் ஊதியத்திருத்தத்தில்...

தோழர்.குப்தா அன்று இருந்த அனைத்து

ஒன்பதுதொழிற்சங்கங்களையும் 

பங்கேற்கச்செய்தார்.

இரண்டாவது ஊதியத்திருத்தத்தில்

BSNLEU சார்பாக 11 உறுப்பினர்கள் பங்கேற்றனர்.


மூன்றாவது ஊதியத்திருத்தம்

DOTல் இருந்து BSNLலில் பணியமர்ந்த ஊழியர்களுக்கு 

கடைசி ஊதியத்திருத்தமாகும்.

ஊழியர்களுக்கு சம்பளத்தில் பல்வேறு குறைகள் உள்ளன.

குறைகளை விட பல்வேறு குளறுபடிகளும்  உள்ளன.



இந்நிலையில் 5 உறுப்பினர்களைக் கொண்ட

 சிறிய குழு பெருமளவில் விவாதங்களை

முன்வைக்க இயலாத சூழல் உருவாகும்.

எனவே குழு உறுப்பினர்களின் எண்ணிக்கையை

தேசிய JCMல் உள்ளது போல்

BSNLEUக்கு 9 உறுப்பினர்

NFTEக்கு 5 உறுப்பினர் எனஉயர்த்தப்பட  வேண்டுமென

BSNLEU சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

ஊதியக்குழுவில் அங்கீகரிக்கப்பட்ட சங்கங்கள் பங்கேற்பு என்ற நிலையை விடஅனைத்து சங்கங்கள் பங்கேற்பு என்ற நிலையே தற்போதுள்ள சூழலில்  ஊழியர்களுக்கு கூடுதல் பலனளிக்க வல்லது.


எவ்வாறாயினும்

இணைந்த ஊதியக்குழு அமைப்பு என்பது

நமது ஒன்றுபட்ட தொடர் போராட்டத்தின் விளைவாகும்

என்பதில் நாம் பெருமை கொள்வோம்.
















Wednesday, June 27, 2018


BSNL  அனைத்து தொழிற்சங்க 

கூட்டமைப்பு முடிவுகள்.


ஜூலை மாதப் போராட்டங்கள்

ஜூலை 11 ல் 

CORPORATE அலுவலகம்

மாநிலத்தலைநகர்களில் அமைந்துள்ள CCA அலுவலகங்கள்...

மற்றும் மாவட்டத்தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம்.


ஜூலை 25,26,27ல் 

தலைநகர் டெல்லி

மாநிலத்தலைநகரங்கள்.... 

மற்றும் மாவட்டத்தலைநகரங்களில்

தொடர் உண்ணாவிரதம்.

26/06/2018 அன்று டெல்லியில் நடைபெற்ற...

BSNL  அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பில் முடிவுகள் 

எடுக்கப்பட்டன….

கோரிக்கைகள்

ஊதிய உயர்வு

ஓய்வூதிய உயர்வு

ஓய்வூதியப்பங்களிப்பு..

BSNLக்கு 4G அலைக்கற்றை ஒதுக்கீடு என

24/02/2018 அன்று அனைத்து சங்கங்களிடம் 

அளித்த வாக்குறுதியை  தொலைத்தொடர்பு

அமைச்சர் அவர்களே

நிறைவேற்றுவீர்




தோழனே

துணிந்து நில்

தொடர்ந்து செல்... 

உரிமைக்கான உனது

போராட்டங்கள் தொடரட்டும்

போராடாமல் ஏதும் கிடைத்ததில்லை... 

Thursday, June 21, 2018


கனவு காணுங்கள்

      


   முன்னால் ஜனாதிபதி A.P.Jஅப்துல்கலாம் கனவு காண சொன்னார்.

BSNLல் பணிபுரியும் பெரும்பாலான ஊழியர்களும்  அதிகாரிகளும் 

 பணிஓய்வுவை எதிர்பார்த்து பலர், விருப்ப ஓய்வில் Golden Opportunity 

எதிர்பார்த்து சிலர், என 7 வது சம்பள மாற்றத்தை எதிர்பார்த்து தோழர்கள் 

கனவில் உள்ளனர்.
        
  7 வது சம்பள மாற்ற கனவில் இருக்கும் BSNL ஊழியர்களுக்கு கட்டி 

இருக்கும் கோவணமும் பறிபோனது போல ஒரு உத்திரவை BSNL  நிர்வாகம் 

வெளியிட்டுள்ளது.

GROUP ‘B’ C' மற்றும் ‘D ஊழியர்களுக்கு

பிரதி மாதம்முதல் தேதியில் சம்பளம் பட்டுவாடா,

GROUP  ‘A அதிகாரிகளுக்கு பிரதி மாதம்

5 ஆம் தேதியில் சம்பள பட்டுவாடா

என நிர்வாகம் உத்திரவை வெளியிட்டுள்ளது.

                  இது BSNL ஊழியர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது            


மத்திய அரசின் அலட்சியத்தினாலும்  தவறான கொள்கையினாலும் 

BSNL நிறுவனத்தை நலிவடைய செய்கிறது


மேலும் 
மத்திய அரசின் தனியார்மையம் மோகம், மேலும் தனியார்   கம்பெனியின்  போட்டி காரணமாக அதிகமான இலவசம்.
மத்திய அரசின் மூன்றாண்டு,நான்காண்டுகள் சாதனை விவரிக்க     நமது  இலாக்கா பணத்தில் கொண்டாட்டம்.
தனிடவர் துணைநிறுவனம் 
ஐந்து நட்சத்திர விடுதியில் கூட்டம், வரம்பில்லா வாகனம்செலவு,
ஊழியர்கள் பற்றாக்குறை
பழுதுகள் நீக்க தேவையுள்ள உபகரணங்கள் இன்றி தரைவழி     தொலைபேசி குறைகிறது. 
அலைபேசியில் சிக்னல் பிரச்சனை
   போன்ற வீண் செலவினத்தை குறைக்காமல்,

 BSNL பணிபுரியும் ஊழியர்களின் 

சம்பளத்தை பிற்படுத்துவது மேலும் ஊழியர்களின் மத்தியில் 

நாளை GROUP ‘B’ C' மற்றும் ‘D ஊழியர்களுக்கு இந்த நிலை 

ஏற்படுமோ?  

என்கின்ற குழப்பத்தை ஏற்படுத்தி ஊழியர்களிடையே அதிருப்தியை

                                                  BSNL நிர்வாகம் ஏற்படுத்துகிறது.

  இப்படியே நாம் அனைவரும் 

அலட்சியமாக இருந்தால்,
நேற்று
OT- இல்லை,
 LTC - இல்லை
Medical Allowance (போன்ற மினி போனஸ்) இல்லை,
PERKS- என்பது இல்லவேயில்லை ,
இன்று
GPF- தாமதம் 
FESTIVEL முன்பணம் - தாமதம்,
 GROUP  ‘A’ அதிகாரிகளுக்கு சம்பளமும் தாமதம்
நாளை 
               நமது பணி பாதுகாப்பு என்பது கேள்விக்குறியே???? ஊழியர்கள் நாம் ஓய்வுப்பெற்று விடுவோம் என்று அலட்சியமாக இருந்தால், கிடைக்ககூடிய ஓய்வூதிய பண பயன்களும் கேள்விக்குறியே!!!!!!!     



நமது ஒன்றுபட்ட போராட்டம் ஒன்றேதான்  எளிதில் 
இழந்த சலுகைகளை  அடைய முடியும் 
ஒன்றுபடுவோம் போராடுவோம். 
வெற்றிகிட்டும் வரை போராடுவோம்.