Saturday, July 21, 2018


முதலாவது இருதரப்பு ஊதியக்குழுக்கூட்டம்

BSNL ஊழியர்களின் நீண்ட போராட்டத்திற்குப்பின்
20/07/2018 அன்று டெல்லியில் இருதரப்பு ஊதியக்குழுக்கூட்டம்
ஊதியக்குழுத் தலைவர் CGM திரு.H.C.பந்த்
அவர்களின் தலைமையில் நடைபெற்றுள்ளது.

நிர்வாகத்தரப்பில் 5 உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
ஊழியர் தரப்பு  சார்பாக 8 உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
குறுகிய கால இடைவெளியில் ஊதியக்குழு அமைத்து
வெகு விரைவிலேயே முதல் கூட்டத்தையும் கூட்டியதற்காக
ஊழியர்கள் தரப்பின் சார்பில் நிர்வாகத்திற்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

நிர்வாகத்தரப்பில் ஊதியக்குழு சம்பந்தமான
DPE வழிகாட்டுதல்கள் விவரிக்கப்பட்டன.
விலைவாசிப்படி சம்பந்தமாக ஊழியர் தரப்பில்
எழுப்பப்பட்ட சந்தேகங்களுக்கு DPE இலாக்கவிடம்
உரிய விளக்கம் கேட்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது.

ஊதியக்குழு சம்பந்தமான பேச்சுவார்த்தை
ஆகஸ்ட் 2018 மாத இறுதிக்குள் முடிவு செய்யப்பட்டு
உடன்பாடு போடப்பட வேண்டும் என
ஊழியர் தரப்பில் கோரிக்கை எழுப்பப்பட்டது.

அடுத்த கூட்டம் 09/08/2018 அன்று 
நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த  கூட்டத்தில் புதிய ஊதிய விகிதங்களைக்
கட்டமைப்பது பற்றி  விவாதிக்கப்படும்.

மொத்தத்தில்
தாமதமானாலும்
தடைகள் வந்தாலும்…  
ஊதியக்குழு கூட்டம் நல்லதொரு துவக்கம்….

No comments:

Post a Comment