Sunday, October 07, 2018


JE(TTA) இலாக்காத்தேர்வு மறுபரிசீலனை முடிவுகள்



28/01/2018 அன்று நடைபெற்ற 2016ம் ஆண்டிற்கான

JE(TTA) இலாக்காத்தேர்வு மிகக்கடினமாக இருந்ததாலும்

தவறான கேள்விகள் கேட்கப்பட்டதாலும் தேர்வு 

முடிவுகளை மறுபரிசீலனை செய்து மதிப்பெண் தளர்வு 

செய்து புதிய முடிவுகளை வெளியிட நமது சங்கம் 

தொடர்ந்து நிர்வாகத்தை வலியுறுத்தி வந்தது.

அதனடிப்படையில் மதிப்பெண் தளர்வு

செய்யப்பட்டு தேர்வு முடிவுகள் இன்று

03/10/2018 வெளியிடப்பட்டுள்ளன.

தமிழகத்தில் 22 தோழர்களும்,

அகில இந்திய அளவில் 250 தோழர்களும்

ஒருகட்ட விலக்கு அடிப்படையில்

தேர்ச்சி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த தேர்வு முடிவிலும் சில குளறுபடிகள் இருக்கின்றன

உதாரணமாக 2013ல் பணிநியமனம் பெற்ற தோழர்கள்

2016 காலியிடங்களுக்குத் தேர்வு எழுத 

தகுதி பெற்றவர்கள் அல்ல. ஏனெனில்

5 வருடம் சேவை முடித்திருக்க வேண்டும்.

ஆனால் 2013 நியமன தோழர்களும் தேர்ச்சி

பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆயினும் 250 தோழர்கள் கூடுதலாக பதவி

உயர்வு பெற்றுள்ளது மிகவும் மகிழ்வுக்குரியது.

இதனை செய்து முடித்த 

நமது மத்திய சங்கத்திற்கு நமது வாழ்த்துக்கள்.


No comments:

Post a Comment