Total Pageviews

Friday, November 23, 2018



தேசிய தொலை தொடர்பு ஊழியர்கள் சங்கம்
     
       மதுரை மாவட்டம்    
                             
                                                 தேதி : 17.11.2018
வணக்கம்,

                         
நமது மாவட்ட செயற்குழு 27-11-2018 அன்று 

செவ்வாய்க்கிழமை காலை 10.00 மணியளவில் மாவட்ட 

தலைவர் தோழர். S. சிவகுருநாதன், தலைமையில் மதுரை 

தல்லாகுளம்   வாடிக்கையாளர் சேவை  மையத்தில் உள்ள, 

மனமகிழ் மன்றத்தில் நடைபெற உள்ளது. அனைத்து  மாவட்ட 

சங்க நிர்வாகிகளும்,  கிளைசங்க நிர்வாகிகளும், மற்றும் 

முன்னணி தோழர்களும் கலந்து கொண்டு சிறப்பிக்க 

வேண்டுகிறோம்.


***************************************************************************************************

சிறப்புரை:

தோழர். K.நடராஜன், மாநிலசெயலர்


*********************************************************************


ஆய்படு பொருள் :


1. மூன்றாவது ஊதியமாற்றம்

2. டிசம்பர்-3  காலவரையற்ற வேலைநிறுத்தம்

3. அமைப்பு நிலை

4. தீர்க்கப்படவேண்டிய பிரச்சனைகள்.

5. இன்ன பிற....... 


                                                    தோழமையுள்ள.

     G.ராஜேந்திரன்.

மாவட்ட செயலர்.


Thursday, November 01, 2018


AUAB  தலைவர்கள்   DOT 

செயலாளர்  சந்திப்பு


நாளை 02.11.2018  அன்று மாலை 05.00 மணிக்கு AUAB 

தலைவர்கள் DOTயின் செயலாளர் திருமிகு அருணா 

சுந்தரராஜன் அவர்களை சந்திக்கின்றனர், என BSNL 

கார்ப்பரேட் அலுவலகம் தெரிவித்துள்ளது. AUAB 

விடுத்துள்ள போராட்ட அறைகூவல்களில் உள்ள 

பிரச்சனைகள் தொடர்பாக இந்தக் கூட்டத்தில் 

விவாதிக்கப்படும். 2018, நவம்பர் 30ஆம் தேதிக்குள் 

கோரிக்கைகள் நிறைவேற்றப் படவில்லை எனில் 

வேலை நிறுத்தப் போராட்டத்தில் இறங்குவது என்கிற 

முடிவை DOTயின் செயலாளருக்கு ஏற்கனவே 

தெரிவிக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.




DOTயின் செயலாளருக்கும் AUAB 

தலைவர்களுக்கும் இடையே பேச்சு வார்த்தைநடப்பது 

என்பது உண்மையில் நல்லதொருமுன்னேற்றம் தான். 

ஆனால் 02.11.2018 அன்று நடைபெறக் கூடிய 

கூட்டத்திலேயே நமது அனைத்து கோரிக்கைகளும் 

தீர்த்து வைக்கப்படும் என நமது தோழர்கள் கருதி 

விடக்கூடாது. மத்திய அமைச்சர் கொடுத்த 

உறுதிமொழியின் மீது எந்த ஒரு நடவடிக்கையையும் 

எடுக்காமல் எட்டு மாதம் கால தாமதம் செய்தது  DOT 

என்பதுதானே நமது கடந்த கால அனுபவம். 




எனவே 3வது ஊதிய மாற்றம், 4G ஸ்பெக்ட்ரம் 


ஒதுக்கீடுஓய்வூதிய மாற்றம், நமது அடிப்படை 

சம்பளத்தில் (Actual Basic Pay) ஓய்வூதிய பங்கீடு மற்றும் 

நேரடி நியமன ஊழியர்களின் ஓய்வு கால பலன்கள் 

தொடர்பான 2வது ஊதிய மாற்றத்தில் விடுபட்ட   

பிரச்சனைகள் ஆகிய நமது கோரிக்கைகளை 

வென்றடைவதற்கான வேலை நிறுத்த 

போராட்டங்களுக்கு ஊழியர்களை தயார் படுத்தும் 

பணியில் தங்கு தடை ஏதும் இன்றி 

தொடர்ந்து ஈடுபடுவோம். 

ஒன்று பட்ட உறுதியான போராட்டங்களே 

நமது கோரிக்கைகளை வென்றெடுக்க முடியும்.