Tuesday, September 17, 2019


உள்ளம் நிறைந்த நன்றியைக் காணிக்கையாக்குகிறோம்...
நன்றி...! நன்றி...! நன்றி...!

8-வது உறுப்பினர் சரிபார்ப்புத் தேர்தலில்., தங்களது தொழிற்சங்க ஜனநாயகக் கடமையை ஆற்றிட்ட., தோழர் மற்றும் தோழியர்களுக்கு உள்ளம் நிறைந்த நன்றியைக் காணிக்கையாக்குகிறோம்.

நமது NFTE பேரியக்கம் வெற்றி பெற பேராதரவு அளித்து., ஒத்துழைத்த TEPU சங்கத் தலைவர்கள் மற்றும் தோழர்களுக்கு நெஞ்சு நிறை நன்றிகள்.

தேர்தலை நியாயமாகவும் நேர்மையாகவும் சுமூகமாகவும்... நடத்தி முடித்த... நிர்வாகத்திற்கு நமது நன்றி பாராட்டுக்கள்...

திருமணம்., வரவேற்பு நிகழ்ச்சி என பல்வேறு. தங்கள் இல்ல., உறவினர்கள்., நண்பர்கள் இல்ல சுப நிகழ்ச்சி முடித்து... வாக்களிக்க வந்த தோழர்., தோழியர்கள்
இப்படி...
சிரமம் பாராது பல முக்கிய குடும்ப நிகழ்வுகளுக்கு
மத்தியில் வாக்களிப்பதை மையமாகக் கொண்டு.
வாக்களித்த தோழர், தோழியர்களின் அற்புத செயல்கள்
நம் நெஞ்சை நிறைக்கிறது.
எல்லாவற்றிற்கும்... மேலாக...

ஐம்பதைக் கடந்தாலும்... அறுபதைத் தொட்டாலும்...
எந்நிலையிலும் NFTE இயக்கம் சுமந்த வேர்களாக...
தேர்தல் பணியாற்றிய மூத்த தோழர்கள்...
மாநில சங்க நிர்வாகிகள்,மாவட்ட சங்க நிர்வாகிகள், கிளைச் செயலர்கள்,மற்றும் முன்னணி தோழர்களுக்கு...
இயக்கத்தின் செந்நன்றிகள்...

                                                                                                              NFTE BSNL
மாவட்ட செயலர்
G.இராஜேந்திரன்

No comments:

Post a Comment