Total Pageviews
Monday, April 13, 2015
பாபாசாகேப் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்
அவர்களின் 125 வது பிறந்த நாள் வாழ்த்துக்கள்
அவர்களின் 125 வது பிறந்த நாள் வாழ்த்துக்கள்
அம்பேத்கர் பிரித்தானிய இந்தியாவில் மாவ் (Mhow) எனுமிடத்தில் (இப்போது மத்தியப் பிரதேசம் அம்பாவாதே என்னும் கிராமத்தில் 1891 ஏப்ரல் 14 அன்று ராம்ஜி மாலோஜி சக்பால் - பீமாபாய் ஆகியோரின் 14-வது குழந்தையாகப் பிறந்தார். அம்பேத்கரின் குடும்பப் பின்னணி தற்போதைய மகாராட்டிர மாநிலம் ரத்னகிரி மாவட்டத்தில் அம்பேவாதே வட்டத்தைச் சேர்ந்த மராத்தியர் குடும்பத்தைச் சேர்ந்ததாகும்
இராம்ஜி சக்பால் இராணுவப்பள்ளி ஒன்றின் தலைமை ஆசிரியராகப் பணிபுரிந்து வந்தார். இவர் 'சுபேதார் மேஜர்' என்ற தகுதி பெற்றவர். மகர் என்னும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் பிறந்த பீமாராவ் இராம்ஜி இளம் வயதில் பல்வேறு துன்பங்களை அனுபவித்தார். டாக்டர் அம்பேத்கர் தனது இளம் வயதில் ஒரு முறை மாட்டு வண்டியில் சகோதரருடன் பயணம் செய்து கொண்டிருந்தபொழுது, இவர்கள் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை வண்டிக்காரன் அறிந்ததும் உடனேமாட்டை அவிழ்த்து விட்டு அச்சிறுவர்களை குப்பையைக் கொட்டுவது போலக் கொட்டிய கொடுமை நிகழ்ந்தது.
கல்வி
1900 ஆண்டில் சாத்தாராவில் உள்ள ஒரு பள்ளியில் தனது தொடக்கக் கல்வியைத் முடித்த அம்பேத்கர் உயர்நிலைப்பள்ளியில் சேர்ந்து பயின்றார். அங்கு தாழ்த்தப்பட்ட மாணவர்கள் தனியே அமர்த்தப்பட்டனர். மற்ற மாணவர்களுடன் பேசவோ விளையாடவோ முடியாது. அவர்களின் குறிப்பேடுகளையும் புத்தகங்களையும் தொடமாட்டார்கள். கேள்விகள் கேட்பதும் கிடையாது. தண்ணீர் வேண்டுமென்றாலும் பிறர் ஊற்ற கையால் பருகவேண்டும். அமருவதற்கு இம்மாணவர்கள் ஒரு கோணிப்பையைத் தங்கள் வீட்டிலிருந்தே கொண்டு வர வேண்டும். வடமொழி கற்கவும் தடை இருந்தது. இக்கொடுமைகளைக் கண்ட அம்பேத்காரின் பிஞ்சுமனம் வெம்பியது.
பீமாராவ் சக்பால் அம்பேவாதேகர் என்பது அம்பேத்கரின் இயற்பெயராகும். அம்பேவாதேகர் என்பது இவரது சொந்த ஊரின் நினைவாக வழங்கப்படும் குடும்பப் பெயராகும். இவர்மீது அன்பும் அக்கறையும் கொண்ட பிராமண ஆசிரியரான மகாதேவ அம்பேத்கர் இவரின் குடும்பப் பெயரான அம்பேகர் என்பதை மாற்றி தன் குடும்ப பெயரான அம்பேத்கர் என்பதை இவரின் பெயரில் சேர்த்தார். 1904 ஆம் ஆண்டு அவரது குடும்பம் மும்பைக்குச் சென்றது. அங்கு எல்பின்ஸ்டன் உயர்நிலைப்பள்ளியில் சேர்ந்து தனது கல்வியைச் தொடர்ந்தார் அம்பேத்கர். குடும்பத்தில் மிகவும் வறுமை சூழ்ந்த நிலையிலும் கல்வியை விடாமல் மெட்ரிக்குலேசன் தேர்வில் தேர்ச்சி பெற்றர். இவரது குடும்பமே அம்பேத்கரின் கல்வியில் ஆர்வம் காட்டியது. மெட்ரிகுலேசன் தேர்வு முடிந்ததும் அம்பேத்கருக்கும் ஒன்பது வயதான ராமாபாய் என்ற பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றது. கல்லூரியில் சேர்ந்து கல்வியைத் தொடர விரும்பிய அம்பேத்கருக்கு பரோடா மன்னர் உதவி புரிந்தார். சாதிக் கொடுமை கல்லூரியிலும் தொடர்ந்தது. ஆயினும் பேராசிரியர் முல்லர் என்பவர் அன்புடனும் அனுதாபத்துடனும் நூல்கள், உணவு மற்றும் உடைகள் கொடுத்து உதவினார். இவரின் உதவியால் அம்பேத்கர் நன்கு படித்து பி.ஏ இளங்கலைப் பட்டதாரியானார்.1900 ஆண்டில் சாத்தாராவில் உள்ள ஒரு பள்ளியில் தனது தொடக்கக் கல்வியைத் முடித்த அம்பேத்கர் உயர்நிலைப்பள்ளியில் சேர்ந்து பயின்றார். அங்கு தாழ்த்தப்பட்ட மாணவர்கள் தனியே அமர்த்தப்பட்டனர். மற்ற மாணவர்களுடன் பேசவோ விளையாடவோ முடியாது. அவர்களின் குறிப்பேடுகளையும் புத்தகங்களையும் தொடமாட்டார்கள். கேள்விகள் கேட்பதும் கிடையாது. தண்ணீர் வேண்டுமென்றாலும் பிறர் ஊற்ற கையால் பருகவேண்டும். அமருவதற்கு இம்மாணவர்கள் ஒரு கோணிப்பையைத் தங்கள் வீட்டிலிருந்தே கொண்டு வர வேண்டும். வடமொழி கற்கவும் தடை இருந்தது. இக்கொடுமைகளைக் கண்ட அம்பேத்காரின் பிஞ்சுமனம் வெம்பியது.
படிப்பு முடிந்ததும் குடும்பச் சுமையை ஏற்பதற்காக சிறிது காலம் பரோடா மன்னரின் அரண்மனையில் படைகளுக்குத் தலைவராக 'லெப்டினன்ட்' பதவியில் வேலைக்குச் சேர்ந்தார். அங்கும் நிலவிய சாதி வேற்றுமையால் மனம் நொந்து மும்பைக்கே திரும்பினார். பின்னர் மும்பைக்கு வந்த பரோடா மன்னரை நேரில் சந்தித்து தான் வேலைக்கு வர இயலாத சூழ்நிலையை எடுத்துக் கூறினார். மிகவும் வேதனையடைந்த மன்னர், மிகச் சிறந்த கல்வியாளரான அம்பேத்கர் கொலம்பியா பல்கலைக் கழகத்தில் உயர் கல்வி பயில ஏற்பாடு செய்தார். தாழ்த்தப்பட்ட சமூகத்தில் உயர்கல்வி பயின்றவர் என்ற பெருமையும் பெற்றார்.
1913 ஆம் ஆண்டு ஜூன் 4 ஆம் நள் அம்பேத்கர் அமெரிக்கா சென்றார். உயர்கல்வி பெறுவதற்காக அமெரிக்கா சென்ற முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார். கொலம்பியா பல்கலைக்கழகத்தில் சேர்ந்து பொருளாதாரம், அரசியல், தத்துவம் மற்றும் சமூகவியல் ஆகிய பாடங்களைப் படித்தார். அங்கு அவர் 1915-ல் 'பண்டைய இந்தியாவின் வாணிகம்’ என்ற ஆய்வுக்கு முதுகலைப் பட்டம் பெற்றார். இந்தியாவின் சாதிகள் என்ற தலைப்பில் கருத்தாழமிக்க ஒரு கட்டுரையை எழுதினார். பின்னர், 'இந்திய தேசியப்பங்கு விகிதம் ஒரு வரலாற்றுப் பகுப்பாய்வு’ என்ற தலைப்பில் பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்டு ஓர் ஆய்வுக்கட்டுரை வெளியிட்டார். இந்த ஆய்வுக்கு கொலம்பியா பல்கலைக் கழகம் அவருக்கு டாக்டர் பட்டம் வழங்கியது. இக்கட்டுரை ஆங்கிலத்தில் 'இந்தியாவில் மாகாண நிதி வளர்ச்சி' என்ற தலைப்பில் நூலாக வெளியிடப்பட்டது. இன்று இந்தியாவில் நிதிநிலை அறிக்கை வெளியிடும் பொழுது ஒவ்வொருவரும் புரட்டிப்பார்க்கும் உயர் நூலாக இன்றும் உள்ளது. மேலும் அம்பேத்கர் 'பிரிட்டிஷ் இந்தியாவில் அரசு நிதியைப் பரவலாக்குதல்’ என்ற ஆய்வுரைக்கு 1921-ல் முது அறிவியல் பட்டம் பெற்றார். 'ரூபாயின் பிரச்சினை’ என்ற ஆய்வுரைக்கு 1923-ல் டிஎஸ்சி பட்டம் பெற்றார்.
சமூகப்பணிகள்
பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துக்கு எதிரான போராட்டத்தில் டாக்டர் அம்பேத்கர் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். அதே நேரத்தில், சமுதாய அமைப்பிலும் பொருளாதாரத்திலும் ஒடுக்கப்பட்டவர்கள் கையில் அதிகாரம் கிடைக்க வேண்டும் என்று போராடினார். 1930-ல் லண்டனில் நடைபெற்ற வட்ட மேசை மாநாட்டில் கலந்து கொள்வதற்காகப் புறப்படுகையில், 'என் மக்களுக்கு என்ன நியாயமாகக் கிடைக்க வேண்டுமோ, அதற்காகப் போராடுவேன். அதே சமயத்தில் சுயராஜ்யக் கோரிக்கையை முழு மனதுடன் ஆதரிப்பேன்’ என்று கூறிச் சென்றார். இரண்டாவதுவட்டமேசை மாநாட்டில் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் குறித்த பிரச்சினை முக்கியமாக விவாதிக்கப்பட்டது.தாழ்த்தப்பட்டோருக்குத் தனி வாக்குரிமையும், விகிதாசாரப் பிரதிநிதித்துவமும் வழங்கப்பட வேண்டுமென டாக்டர் அம்பேத்கர் வலியுறுத்தினார். இதன் விளைவாக ஒரு தொகுதியில் பொது வேட்பாளரைத் தேர்ந்தெடுக்க ஒரு வாக்கும், அதே தொகுதியில் தாழ்த்தப்பட்ட சமூக வேட்பாளரைத் தேர்ந்தெடுக்க ஒரு வாக்கும் அளிக்கும் 'இரட்டை வாக்குரிமை" தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டது. மகாத்மா காந்திஜி இதனை எதிர்த்தார். தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தனித் தொகுதிகள் ஒதுக்கப்படக் கூடாது என வலியுறுத்தி காந்திஜி உண்ணாவிரதப் போராட்டத்தைத்தொடங்கினார். இதன் விளைவாக செப்டம்பர் 24 - 1931-ல் காந்திஜிக்கும், டாக்டர் அம்பேத்கருக்கும் இடையே 'பூனா ஒப்பந்தம்’ ஏற்பட்டது. இதன்படி தாழ்த்தப்பட்டோருக்கு தனி வாக்குரிமை என்பதற்குப் பதிலாக பொது வாக்கெடுப்பில் தனித்தொகுதி ஒதுக்கீடுகள் ஒத்துக் கொள்ளப்பட்டன.வர்ணாசிரம தருமத்திலிருந்து தோன்றிய சாதியஅமைப்பையும், தீண்டாமைக் கொடுமைகளையும் எதிர்த்து டாக்டர் அம்பேத்கர் தீவிரமாகப் போராடினார். இறுதியில்1956-ல் தமது ஆதரவாளர்களுடன் புத்த மதத்தில் இணைந்தார்.
S .சிவகுருநாதன் ,மாவட்ட செயலர்
Saturday, April 11, 2015
NFTE -BSNL
திருமங்கலம் கிளை , உசிலம்பட்டி கிளை இணைப்பு மாநாடு
திருமங்கலம் தொலைபேசி நிலையம் TRC
11.04.2015 மாலை 05.00 மணி க்கு நடைபெற்றது
தோழர். சுகுமார் தலைமை யில் மாநாடு நடைபெற்றது .
மாவட்ட செயலர் தோழர். S .சிவகுருநாதன் மாநாட்டை துவக்கிவைத்தார்
மாநில உதவி தலைவர் தோழியர். T.பரிமளம் சிறப்புரை.
வாழ்த்துரை தோழர். K. வேலுச்சாமி , தோழர். ஆனந்தன் ,
தோழர். பத்ரிநாராயணன் , தோழர். ஆறுமுகம்
ஒரு மனதாக தலைவர் ,செயலர் ,பொருளாளர் தேர்ந்து எடுக்கப்பட்டனர்
தலைவர் . தோழர் . A. சுப்புராஜ் ,TM / T.கல்லுப்பட்டி ,
செயலர் .தோழர் . S .பத்மநாபன் ,TTA / திருமங்கலம் ,
பொருளாளர் . V . குருநாதன் ,TM / திருமங்கலம் ,
S . சிவகுருநாதன் ,மாவட்ட செயலர்
சங்கங்களின்
கூட்டமைப்பு
மதுரை தொலைதொடர்பு மாவட்டம் சார்பாக நடைபெறும்
கருத்தரங்குகளில்
திரளாகப் பங்கேற்ப்பீர்
திரளாகப் பங்கேற்ப்பீர்
13.04.2015தேனி தொலைபேசி நிலையம் மாலை 04.00 மணிக்கு ,
15.04.2015 GM அலுவலகம் TRC மதுரை
மாலை 05.00 மணிக்கு ,
17.04.2015 திண்டுக்கல் தொலைபேசி நிலையம் மாலை 05.00 மணிக்கு
S .சிவகுருநாதன் ,மாவட்ட செயலர்
Friday, April 10, 2015
NFTE - BSNL
National Executive Committee Meeting at JAIPUR 09.04.2015 & 10.04.2015
ஜெய்ப்பூரில் தமிழ் மாநில தோழர்கள் .
அசோக்ராஜ் , சென்னகேசவன் ,ஸ்ரீதர் , முரளி , பட்டாபிராமன் , செல்வம்
நடராஜன் ,காமராஜ் , SSG, லட்சம்
NFTE மத்திய செயற்குழு கூட்டம் 09-04-2014 மற்றும் 10-04-2014 தேதிகளில் Pink City என்றழைக்கப்படும் ஜெய்ப்பூரில் நடைபெற்றது. தமிழகத்திலிருந்து மத்திய செயற்குழு உறுப்பினர்கள் தோழர்கள் பட்டாபி மாநிலசெயலர்,அகில இந்திய செயலாளர் SSG, மத்திய சங்க சிறப்பு அழைப்பாளர் புதுவை காமராஜ் ஆகியோரும் மாநில தலைவர் தோழர் லட்சம், தோழர் முரளிதரன் மற்றும் தோழர் இரா ஸ்ரீதர் , தோழர் செல்வம்,தோழர் நடராஜன் ஆகியோரும் உட்பட 25 தோழர்கள் கலந்துகொண்டனர்.
தேசியக்கொடி, சம்மேளனக்கொடி, உயர்த்தியபின் பொதுசெயலர் ஆய்படு பொருளை முன் மொழிந்து விளக்கினார். மாநில , மாவட்ட மாநாடுகளை ஆகஸ்ட் மாதத்திற்குள் நடத்தி முடித்திட வலியுறுத்தினார். உறுப்பினர் சரி பார்ப்பை சந்திக்க கிளை செயலர் கூட்டத்தை மாநிலசங்கங்களும், மாவட்ட செயலர் உள்ளிட்ட விரிவடைந்த கூட்டத்தை மத்தியசங்கமும் நடத்திட திட்டமிட்டு ஜனவரி2016க்குள் நடத்திட வேண்டும். ஏப்ரல் 21&22 தேதிகளில் வேலைநிறுத்தம், டெல்லி பேரணி, மாநில கருத்தரங்கம். கோரிக்கை, நிர்வாகத்தின் நிலை, கவுன்சில்கள் செயல்பாடு மாற்று சங்க தடை செயல்பாடுகள் ஆகியவற்றை விளக்கினார்.
தலைவர் இஸ்லாம் நமது தேர்தல் அறிக்கையை செயல்படுத்திட நமது முனைப்பான செயல் பாடு, போனஸ் திட்டம், குறித்து விளக்கினார்.
பின்னர் பேசிய மாநிலசெயலர்கள் தங்கள் மாநில பிரச்சனைகள், வேலைநிறுத்தம், மாநில கருத்தரங்கம். உள்ளிட்ட அனைத்தையும் விவாதித்தனர்.
நமது மாநில செயலர் தோழர் பட்டாபி அவர்களின் உரை அனைவரும் உற்று நோக்கம் வண்ணம் சிறப்பாக இருந்தது. ஓய்வூதியத்திற்கு ஏற்பட்டுள்ள ஆபத்து குறித்தும், BSNL வருவாய் பெருக்கம் குறித்தும், ஒப்பந்த ஊழியர் பிரச்சினைகளை போக்க அதாலத் போன்ற நடைமுறை படுத்த வேண்டும் என்பது குறித்தும் அவர் ஆற்றிய உரை அனைவருக்கும் பயனுள்ளதாக இருந்தது.
STR மாவட்ட சங்கம் குறித்து மத்திய சங்கம் உறுதியான நிலைப்பாடு எடுத்துள்ளது என்று தெரிகிறது.
சிறப்பான ஏற்பாடுகளை செய்து இருந்த ராஜஸ்தான் மாநில சங்கத்திற்கு நமது பாராட்டுக்களும் நன்றிகளும்
S . சிவகுருநாதன் ,மாவட்ட செயலர்
GPF விண்ணப்பம் கடைசி நாள் 16.04.2015
GPF withdrawal / Advance Application
ஏப்ரல் மாத GPF பணத்தை எடுக்க ERP மூலம் தான் விண்ணப்பிக்க வேண்டும் விண்ணப்பத்தை சமர்ப்பிப்பது மிகவும் எளிது .
ESS ல் பெயர் ,Password அடித்தவுடன் GPF WITHDRAWAL Requset என்ற தலைப்பை கிளிக் செய்தால் அந்த படிவம் வரும் . அதில் தேவையான பணத்தை டைப் செய்து விட்டு enter கொடுத்தல் போதும்
இம்மாதம் 16.04.2015 க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
GPF application கொடுத்தவர்களும் மீண்டும் ERP மூலம் விண்ணப்பிக்க
வேண்டும்
S.சிவகுருநாதன் மாவட்ட செயலர்
Wednesday, April 08, 2015
செய்திகள்
NFTE சங்க மத்திய செயற்குழு
ஏப்ரல் 09.04.215&10.04.215 ஜெய்ப்பூரில்
ஏப்ரல் 09.04.215&10.04.215 ஜெய்ப்பூரில்
நடை பெறுகின்றது . இன்று சவாலாக
உள்ள பல பிரச்சினைகள் பற்றி விவாதித்து
முடிவுகள் எடுக்கப்படும் .
உள்ள பல பிரச்சினைகள் பற்றி விவாதித்து
முடிவுகள் எடுக்கப்படும் .
***********
01.04.2015 முதல் உயர்ந்துள்ளது 0.2 சத IDA உயர்விற்கான உத்திரவு
DPE யால் 06.04.2015 அன்று வெளியிடப்பட்டுள்ளது . BSNL உத்திரவு விரைவில் வெளியிடப்படும் .
இதனிடையே அரிசி ,முட்டை ,மீன் ,வெங்காயம் ,சீனி ,பெட்ரோல்,
மலர்கள் போன்ற பொருட்களின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளதால்
IDA அதிக அளவு உயரவில்லை எனவும் , கோதுமை ,பருப்பு ,
சமையல் எண்ணெய், இறைச்சி போன்றவைகளின் விலை உயர்ந்துள்ளதால் IDA குறையாமல் காக்கப்பட்டுள்ளது எனவும் தொழிலாளர் துறை தெரிவித்துள்ளது .
மேலும் நாட்டிலேயே திருச்சி மையத்தில் விளைவசிப்புள்ளி
7 புள்ளிகள் விழ்ச்சி அடைந்ததே IDA உயராததற்கு காரணம் என்றும்
கூறப்பட்டுள்ளது .
************
BSNL லில் உழியர்களுக்கு குடியிருப்பு வீடுகள் ஒதுக்கீட்டில் 2சதம் பெண்களுக்கு ஒதுக்கப்பட வேண்டும் என BSNL நிர்வாகம் உத்திரவிட்டுள்ளது .
************
சில நாட்களுக்கு முன் BSNL லில் வேலைக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுவதாக சில இணையதளங்களில் செய்திகள் வெளியாகின,இது தவறான செய்தி என்று BSNL நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது .
***********
ஓய்வூதியம் பெறும் தோழர்கள் தங்களுடைய வங்கிக்கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என மத்திய அரசு கூறியுள்ளது . இதன் மூலம் மின்னணு முறையில் உயிர்ச்சான்றிதழ் LIFE CERTIFICATE கொடுக்க எளிதாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது .
*********
மத்திய அரசின் மின்னணு இந்தியா DIGITAL INDIA திட்டத்தின் கீழ் இதுவரை 20000 கிராமங்களுக்கு அகன்ற அலைவரிசை
BROAD BAND வசதி கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது .
இன்னும் இரண்டு ஆண்டுகளில் 20000கோடி செலவில் 250000 கிராமங்களுக்குஇவ்வசதி அறிமுகப்படுத்தப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது .
பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கியுள்ள மாநிலங்களில் மாதம் ரூ .150/= என்ற அளவிலும்
முன்னேறிய மாநிலங்களில் மாதம்
ரூ .250/= என்ற அளவிலும்கட்டணங்கள் வசூலிக்கப்படும் .
முன்னேறிய மாநிலங்களில் மாதம்
ரூ .250/= என்ற அளவிலும்கட்டணங்கள் வசூலிக்கப்படும் .
S. சிவகுருநாதன் மாவட்ட செயலர்
Subscribe to:
Posts (Atom)




















