Total Pageviews

Thursday, December 10, 2015

           BSNL அதிகாரிகள் ஊழியர் சங்கங்களின்
        
                கூட்டமைப்புதமிழ் மாநிலம்


தமிழகத்தில் சமீபத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பினால் நமது BSNL நெட்வொர்க் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளைக்காண 09-12-2015 அன்று சென்னை வந்திருந்த நமது BSNL சேர்மன் திரு.அனுபம்ஸ்ரீவத்சவா அவர்களை தமிழ்மாநில அதிகாரிகள் / ஊழியர்கள் சங்கங்களின்  கூட்டமைப்பு சார்பில் அதன் நிர்வாகிகள் நேரில் சந்தித்து கொடுத்த கடிதத்தின் தமிழாக்கம்.

BSNL அதிகாரிகள் ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்புதமிழ் மாநிலம்
 09—12—2015

பெறுநர்
சேர்மன் மற்றும் மேனேஜிங் டைரக்டர்,
BSNL புதுடெல்லி.

மரியாதைக்குரிய ஐயா,
பொருள்:        தமிழக மழை வெள்ளம் பாதித்த பகுதிகளில் BSNL  சேவையை  மீண்டும்புனரமைத்தல் --  மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட
BSNL ஊழியர்களுக்கு நிவாரணம் வழங்குதல் --- தொடர்பாக
•••    •••    •••
                ஐயாதமிழகத்தின் மழை வெள்ளம் பாதித்த பகுதிகளையும் சென்னைநகரையும் நீங்களே நேரடியாகப் பார்வையிட வருகை தந்துள்ளதை மிகுந்தமரியாதையோடு பாராட்டக் கடமைப்பட்டிருக்கிறோம்.  BSNL  சந்தாதாரர்களுக்குசிறந்த தொலைத் தொடர்பு சேவையை அளிப்பதில் நீங்கள் காட்டும்உண்மையான முயற்சிகளுக்காகதமிழகத்தின் BSNL  சந்தாதாரர்கள் சார்பிலும்ஊழியர்கள் சார்பிலும் நாங்கள் நன்றி பாராட்டுகிறோம்.  இது தொடர்பாக சிலகருத்துகளை உங்களுடைய தகவலுக்காகவும்  மேலான பரிசீலனைக்கும்முன்வைக்கிறோம்.
        அனைத்திற்கும் மேலாக இந்த உறுதியை முதலில் நாங்கள் தருகிறோம்தமிழக BSNL அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் BSNL  சேவையை மேம்படுத்துவதில்கடுமையாக உழைத்து வருவது மட்டுமல்லBSNL கம்பெனியை ஒரு லாபம்ஈட்டும் நிறுவனமாக நிச்சயம் மாற்றிக் காட்டுவோம் எனவும் உறுதி தருகிறோம்.தமிழகத்தின் வெள்ளம் பாதித்த பகுதிகளில் BSNL சேவையை புனரமைப்புசெய்வதில் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் ஓய்வின்றிகுறிப்பாககடலூர்,வேலூர் மற்றும் புதுச்சேரி மாவட்டங்களில்கடுமையாகப் பணியாற்றிவருகின்றனர்.  பாதிப்படைந்த பகுதிகளில் மேலும் அர்ப்பணிப்போடு பணியாற்றி,சந்தாதாரர்கள் மகிழும் சேவையை அளிப்போம் எனவும் நாங்கள் உறுதிகூறுகிறோம்.
1.                    தங்களின் மேலான அதிகாரத்தைப் பயன்படுத்தி தேவையானஸ்டோர் தளவாடப்பொருள்களையும் தேவையான நிதியையும் ஒதுக்கிடு செய்யவேண்டுகிறோம்.
2.                   தமிழகத்தின் சில பகுதிகளில் NGN சேவை வழங்கப்பட்டுவருகிறது;அதுநல்ல பயனையும் தந்து வருவதைக் காண்கிறோம்எனவே ஐயா அவர்கள்NGN சேவையை தமிழகம் முழுவதும் விஸ்தரிக்க தகுந்த முன்முயற்சிகளையும்ஏற்பாடுகளையும் செய்து தருமாறு வேண்டுகிறோம்.
3.                   லீ்ஸ்டு லைன், இன்டர்நெட் இணைப்புகளின் BSNL கட்டண விகிதம்மற்றவர்களை விட ஒப்பீட்டளவில் அதிகமாக உள்ளது.  இந்த கட்டணம்குறைக்கப்பட்டால் இந்த சேவையில் நம்மால் மேலும் சந்தாதாரர்களை ஈர்க்கமுடியும்.
4.                  சமீபத்தில் நேசம் கோல்டு மொபைல் திட்டத்தில் எப்போதும் ரூ200/= முழு டாக் மதிப்பு பெறும் சலுகை திரும்பப் பெறப்பட்டுள்ளதுசந்தாதாரர்களை மிகவும் கவர்ந்த திட்டமாக இது விளங்கியது.  எனவே  மீண்டும்அந்த சலுகை அமல்படுத்தப்பட வேண்டும்.
5.                   ரூ110 வவுச்சர் பெருமளவில் வாடிக்கையாளர் சேவைமையங்களிலும் முகவர்களிடமும் இருப்பு உள்ளது.  இதன் வேலிடிட்டி இம்மாதஇறுதியில் முடிய உள்ளது,  எனவே ரூ110 வவுச்சர்களின் வேலிடிட்டி தேதிநீட்டிக்கப்பட வேண்டும்.

மேற்கண்டவைகளோடு ஊழியர் பிரச்சனைகள் சிலவற்றையும் தாங்கள் பரிசீலிக்கவேண்டுகிறோம்.

6.    சமீபத்திய கடும் மழை வெள்ளத்தில் பொது மக்களோடு BSNLஊழியர்களும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.  எனவே BSNL நிர்வாகம்வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கும் நிவாரண உதவி வழங்கவேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம்.
7.    தமிழக தொலைத் தொடர்பு வட்டத்தில்மழை வெள்ளத்தில்பாதிக்கப்பட்ட பகுதிகளின் BSNL ஊழியர்களுக்குவெள்ள பாதிப்பு முன்பணம்(அட்வான்ஸ் குறைந்த பட்சம் ரூ.25,000/=) வழங்கிட BSNL நிர்வாகம் தேவையானநிதியை விடுவிக்க வேண்டும் எனவும் நாங்கள் வேண்டுகிறோம்.
8.    ஊழியர்களின் உடைமைகள்மோட்டார் வாகனங்கள்கம்ப்யூட்டர்,குளிர் சாதனப் பெட்டிகள் மற்றும் மதிப்பு மிக்க வீட்டு உபயோகப் பொருட்கள்முதலிய பலவும்மழை வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டு கடும்இழப்புக்குள்ளாகி உள்ளனர்பல பொருட்கள் உபயோகிக்க முடியாதபடிகடுமையாகச் சேதமாகி உள்ளன.  இதனால் முக்கியமாக தேவையானவற்றைவாங்கவும் பழுது நீக்கம் செய்துகொள்ளவும் ஊழியர்கள்  GPF முன்பணம்கோரலாம்.  எனவே நிர்வாகம் GPF முன்பணம் / திரும்ப எடுத்தல்கோரிக்கைகளை நிபந்தனை வரம்பு ஏதுமின்றி அனுமதிப்பது மட்டுமல்லாது GPFமுன்பணம் தாமதமின்றி பெற போதுமான நிதியை உடனே தமிழக வட்டத்திற்குவழங்க வேண்டும்.
9.    சில ஊழியர்கள் தங்கள் அனைத்து உடைமைகளையும் (டிவி,வாஷிங் மெஷின்,மிக்ஸிகிரைண்டர்கட்டில் பீரோ முதலிய பல பலஉடைமைகளையும் ) முற்றாக இழந்து தவிக்கின்றனர்.  எனவே அத்தகையஊழியர்களுக்கு மட்டும் வட்டி இல்லாத முன்பணமாக ரூபாய் ஒரு லட்சம்வழங்கிட வேண்டுகிறோம்,
10.  சென்னையின் பலபகுதிகள் மற்றும் கடலூர் SSA விலும் மழைவெள்ளத்தால் போக்குவரத்து சேவை மிகக் கடுமையாக பாதிப்படைந்தது.  பலபகுதிகளில் போக்குவரத்து வசதி முற்றாக , குறிப்பாக டிசம்பர் 1 முதல் 5வரைதடைப்பட்டிருந்தது.  பல ஊழியர்களின் வசிப்பிடங்கள் முற்றாக நீரால்சூழப்பட்டு யாரும் வெளியே வரமுடியாத நிலை ஏற்பட்டது,  இதனால் பலஊழியர்களால் பணிக்கு வரமுடியாத சூழல்இந்நிலையிலும் தயக்கமின்றிபணிக்கு வந்து கடமையாற்றிய மற்றவர்கள் பாராட்டப்பட வேண்டும்.வரமுடியாதவர்களுக்கு DP & AR OM No.28016/1/79 – Estt (A) தேதி 28-05-1979உத்தரவுபடி தேவையான சிறப்பு விடுப்பினை தயவு செய்து வழங்கிடவும்கேட்டுக்கொள்கிறோம்,
                               நன்றியுடன்,
                            
                    தங்கள் உண்மையுள்ள 
 
S.பத்ரிநாராயணன்,மாவட்ட செயலர் (பொறுப்பு )  

Saturday, December 05, 2015

               
                                      டிசம்பர்  6 

     Dr. B.R.அம்பேத்கர் நினைவு  நாள் 

ambedkar images க்கான பட முடிவு
                           
பாபா சாகேப் என்றுழைக்கப்படும் 

பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் 

                  (14 ஏப்ரல் 1891 - 6 டிசம்பர் 1956)

'எனக்குத் தாயகம் உண்டு என்று நீங்கள் கூறுகிறீர்கள். ஆனால், நான் மீண்டும் கூற விரும்புகிறேன், எனக்கு அது இல்லை… நாய்கள்,பூனைகளைவிட நாங்கள் மோசமாக நடத்தப்பட்டால், குடிதண்ணீர் பெறவும் உரிமை இல்லை என்றால் சுயமரியாதையுள்ள எந்த தீண்டப்படாதவன் இந்த நாட்டைத் தன் நாடாகக் கருதுவான்? இந்த நாடு எங்களுக்கு அளித்த உதவி, இன்னல்களையும் அநீதிகளையும்மலைபோல் எங்கள் மீது சுமத்தியதே ஆகும். யுகயுகமாகக் காலால் மிதித்து நசுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட என் மக்களுக்கு மனித உரிமைகளுக்காக நான் செய்யும் முயற்சிகளின் காரணமாக இந்த நாட்டுக்கு எவ்விதத் தீங்கும் நேர்ந்துவிடாது.’
1931-ம் ஆண்டு மகாத்மா காந்தியைச் சந்தித்தபொழுது டாக்டர் அம்பேத்கர் முன் வைத்த கருத்துகள் இவை.
S.பத்ரிநாராயணன்,மாவட்ட செயலர் (பொறுப்பு )

Thursday, December 03, 2015



தனித் தீவானது சென்னை !  

மின்சாரம் துண்டிப்பு; செல்போன், 

ஏடிஎம் சேவைகள் முடக்கம் ,

உணவு, குடிநீர் கிடைக்காமல் லட்சக்கணக்கானோர் தவிப்பு





கடந்த நூறு ஆண்டுகளில் இல்லாத வகையில்சென்னையில் கனமழை கொட்டித் தீர்ப்பதால்எங்குபார்த்தாலும் வெள்ளம் கரைபுரண்டு 
ஓடுகிறதுவேளச்சேரிமடிப்பாக்கம்சைதாப்பேட்டைமீனப்பாக்கம்,
எழும்பூர்அடையாறுதாம்பரம்முடிச்சூர்குரோம்பேட்டை
மயிலாப்பூர்கிண்டி என சென்னையின் மிகமுக்கியமான பகுதிகள் 
அனைத்தும் வெள்ளத்தில் மிதக்கின்றனசில இடங்களில் வெள்ளம் 
15 அடிஉயரத்திற்கு பாய்வதால்பொதுமக்கள் வீட்டை விட்டு 
வெளியேற முடியவில்லைஆயிரக்கணக்கானோர்உணவுக்கும் 
குடிநீருக்கும் கூட வழியின்றிஉயரமான கட்டடங்களிலும்
வீடுகளிலும் அடைக்கலம்புகுந்துள்ளனர்.

S.பத்ரிநாராயணன்,மாவட்ட செயலர் (பொறுப்பு )  
 


மழை வெள்ளத்தினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள   

தமிழகத்தின் தலைநகர்  சென்னை மாநகரில் 

BSNL  ஒரு வார காலத்திற்கு இலவச சேவை வழங்கும்எனவும்...
  
BSNL  வாடிக்கையாளர்கள் கட்டணம் செலுத்தாமல் இருந்தாலும் 

அவர்களது இணைப்பு துண்டிக்கப்படாது எனவும்  

தொலைத்தொடர்பு அமைச்சர் அறிவித்துள்ளார். 



தொடர் மழை காரணமாக சென்னை,காஞ்சிபுரம் மற்றும் 

திருவள்ளூர் மாவட்டங்களில் தனியார் நிறுவனங்கள் உள்பட 

அனைத்துப் பகுதிகளுக்கும் தமிழக அரசு 2 நாட்கள் 

விடுமுறை அறிவித்துள்ளது.

எனவே சென்னை CGM அலுவலகத்தில் பணிபுரியும் 

தோழர்களுக்கு இரண்டு நாட்கள் சிறப்பு சிறுவிடுப்பு 

அளித்திட மாநில நிர்வாகத்தை 

நமது மாநிலச்சங்கம் வலியுறுத்தியுள்ளது.


அக்டோபர் 2015 விலைவாசிப் புள்ளி உயர்வின் அடிப்படையில் 

ஜனவரி 2016ல்   IDA  ஏறத்தாழ 4 சதம் உயர வாய்ப்புள்ளது.



JTO காலியிடங்களை சரிபார்த்து உடனடியாக

  JTO  இலாக்காத்தேர்வை அறிவிக்கக்கோரி
 
தோழர்.இஸ்லாம் அவர்களும் SNATTA  தலைவர்களும் 

நிர்வாகத்தை சந்தித்து  வலியுறுத்தியுள்ளனர்.



MRS  மருத்துவக்கொள்கையை 

மறுபரிசீலனை செய்வதற்காக அமைக்கப்பட்ட குழு
 
09/12/2015 அன்று கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 NFTE சார்பில் தோழர்.சந்தேஷ்வர்சிங் அவர்களும் 

BSNLEU சார்பில் தோழர்.அபிமன்யு அவர்களும் 

ஊழியர் தரப்பாக கலந்து கொள்வார்கள்.




நாடு முழுவதும் உள்ள 125 விமான நிலையங்களில்

 Wi -Fi வசதி செய்து கொடுக்கும் பணி 

நமது BSNL நிறுவனத்திடம் அளிக்கப்பட்டுள்ளது.

S.பத்ரிநாராயணன்,மாவட்ட செயலர் (பொறுப்பு )  

Tuesday, December 01, 2015


வரும் 5 ஆண்டுகளில் 
ஓய்வு பெறப்போவோர் எண்ணிக்கை...
வருடம்       எண்ணிக்கை 
2016........    13406
2017........    14622
2018..........  16784
2019........... 18392
2020............17551
 
மொத்த எண்ணிக்கை... 80755

S.பத்ரிநாராயணன்,மாவட்ட செயலர் (பொறுப்பு )