Total Pageviews

Tuesday, January 12, 2016


BSNL MRS... மருத்துவத்திட்டதின்...


மறு ஆய்வுக்கூட்ட முடிவுகள்...

medical mri images க்கான பட முடிவு

BSNL MRS... மருத்துவத் திட்டத்தை மறு ஆய்வு செய்யும் குழுவின்
கூட்டம் 08-01-2016 வெள்ளிக்கிழமை அன்று 
டெல்லியில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில்... ஊழியர் தரப்பு சார்பாக...
  • தோழர். C.சந்தேஷ்வர் சிங், பொது செயலர், NFTE-BSNL
  • தோழர். P.அபிமன்யூ, பொது செயலர், BSNLEU
நிர்வாக தரப்பு சார்பாக...
  • திரு. S.K.சின்ஹா, GM (Admn)
  • திரு. ராம் சக்ஹல் Addl.GM (SR)
  • திரு. S.H.ராவ், DGM (EF)
  • திரு. சுஅலெஹ், DM - ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஊழியர் தரப்பு சார்பாக... கீழ்க்கண்ட பிரச்சனைகள் 
விவாதிக்கப்பட்டன.
  • தற்போது மருத்துவ பில்கள் CGHS நிர்ணயம் செய்துள்ள குறைந்த விலையின் அடிப்படையிலே தான் பட்டுவாடா செய்யப்படுகிறது. எனவே குறைந்த தொகையில் நமக்கு சிகிச்சை அளிக்கத் தரமான மருத்துவமனைகள் தயங்குகின்றன. மேலும் சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகளும் BSNL நிர்வாகம் தரும் தொகை போக மிச்சத்தை ஊழியர்களிடமிருந்து கறந்து விடுகின்றன.
  • தற்போதுள்ள நிதி நெருக்கடியாலும், ERP மென்பொருள் அமுலாக்கத்தாலும் மருத்துவ பில்கள் குறித்த நேரத்தில் பட்டுவாடா ஆவதில்லை. பணம் உரிய தேதியில் கிட்டாத மருத்துவமனைகள் சலித்துப்போய் BSNL ஊழியர்களுக்கான தங்களது சேவையை நிறுத்திக் கொள்கின்றன.
  • டெல்லியில் மற்ற பகுதி ஊழியர்களுக்கு கிடைக்கும் சிகிச்சை அங்கேயே பணிபுரியும் NTR பகுதி ஊழியர்களுக்கு கிடைப்பதில்லை.
மேலும்... இது... போன்ற பல பிரச்சனைகள்
ஊழியர் தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டன.

முடிவில் கீழ்க்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன:
  • BHEL, SBI, COAL INDIA போன்ற பொதுத்துறைகளில் மருத்துவத் திட்டங்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. எனவே அங்குள்ள நடைமுறைகளைக் கேட்டறிவது.
  • தற்போது தேங்கிக்கிடக்கும் அனைத்து மருத்துவ பில்களையும் மாநிலங்கள் உடனடியாக பட்டுவாடா செய்வது.
  • பல இடங்களில் அமுலில் உள்ள MEDI CLAIM என்னும் மருத்துவக் காப்பீடுத்திட்டத்திற்கு மாறுவது பற்றி ஆலோசிப்பது.
  • அடுத்த பிப்ரவரி மாத இறுதியில் மீண்டும் கூடி இது பற்றி மேலும் விவாதிப்பது.

S.சிவகுருநாதன்,மாவட்டசெயலர்   

Tuesday, January 05, 2016

ஜனவரி 6...

பிதாமகன்...! குப்தாவின்...!

 மூன்றாம் ஆண்டு நினைவு தினம்...! 




















BSNL தொழிலாளியின்  தானைத் தலைவன் !

தோழர். O P குப்தா  நினைவை போற்றுவோம் !


S.சிவகுருநாதன் ,மாவட்ட செயலர்  

Monday, January 04, 2016


புதிய TTA தோழர்களை... 
வாழ்த்தி வரவேற்போம்...

TTA இலக்கா போட்டித் தேர்வில் தேர்ச்சி பெற்று..., 
சென்னை RGM TTC பயிற்சி வகுப்பில் பயிற்சி முடித்த முதல் வகுப்பு
தோழர்கள் 04-01-2016 அன்று பணியில் சேர உள்ளார்கள்.

நமது மாவட்டத்திற்கு 3 தோழர்கள் வருகிறார்கள். 
அவர்களை மதுரை  NFTE மாவட்ட சங்கம் 
வாழ்த்தி, அன்போடு வரவேற்கிறது.



S.சிவகுருநாதன்,மாவட்ட செயலர்   

Sunday, January 03, 2016

சிவப்பு சிந்தனைக்கு... செவ்வணக்கம்...
தோழர். A.B.பரதன் மறைவிற்கு... 
நமது அஞ்சலி...
(25.09.1925 - 02.01.2016)

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் பொது செயலாளரும், 
AITUC சங்கத்தின் முன்னாள் பொது செயலாளருமான...,
தோழர். A.B. பரதன் தனது 92-வது வயதில் உடல் 
நலக்குறைவு காரணமாக டெல்லியில் உள்ள GB பந்த்
மருத்துவமனையில் 02-01-2016 அன்று இரவு 08-13 
மணிக்கு உயிரிழந்தார். 

1925 ஆம் ஆண்டு செப்டம்பர் 25 ஆம் தேதி வங்காள தேசத்தில் 
உள்ள சில்கெட்டில் பிறந்தார். சமத்துவ இந்தியாவை படைக்க மாணவ
பருவத்திலிருந்தே போராடி வந்தவர். வங்களாதேசம் பூர்வீகம்
என்றாலும் மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் தான் 
இவரது பொது மற்றும் அரசியல் வாழ்க்கைக்கு 
அடித்தளம் அமைத்த இடம். 

1957 ஆம் ஆண்டு மகாராஷ்டிரா மாநில சட்ட மன்றத்திற்கு
தேர்ந்தெடுக்கப்பட்டவர். தோழர்.இந்திரஜித் குப்தா அவர்களுக்கு 
பின் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொது செயலராக 
12 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றியவர். 
ஏராளமான கட்டுரைகளையும், நூல்களையும் 
எழுதி குவித்தவர்.

பொது வாழ்வில் நொடி தோரும் தூய்மையை நூற்றவர். வகுப்பு 
வாத மதவெறிக்கு எதிராக தொடந்து போராடியவர். அடக்கப்பட்ட 
மக்கள் மற்றும் தொழிலாளி வர்க்கத்திற்காக தனது இறுதி 
முச்சு வரை உறுதியாக போராடியவர்.

தோழர். பரதனின் மறைவு இந்திய தொழிற்சங்க இயக்கத்திற்கும்
உழைப்பாளி மக்களுக்கும் பேரிழப்பாகும். 

அவரது மறைவிற்கு... மதுரை மாவட்ட NFTE சங்கம்... 
தனது அஞ்சலியை உரித்தாக்குகிறது.

செவ்வணக்கம்...! சிவப்பு சிந்தனைக்கு...!! செவ்வணக்கம்...!!!  
செவ்வணக்கம்...! சிவப்பு மனிதனுக்கு...!! செவ்வணக்கம்...!!!

S.சிவகுருநாதன்,மாவட்ட செயலர்  

Saturday, January 02, 2016



விழாக்கால முன்பணம் 
 விண்ணப்ப தேதிகள் 

விழாக்கால முன்பணம் FESTIVAL ADVANCE விண்ணப்பிப்பதற்கு 
மாநில நிர்வாகம் கீழ்க்கண்டவாறு தேதி நிர்ணயம் செய்துள்ளது. 
தோழர்கள் உரிய தேதிக்குள் விண்ணப்பிக்கவும்.

பொங்கல் மற்றும் குடியரசு தினம்       - 04/01/2016

புனித வெள்ளி                                                 - 03/03/2016

தமிழ் வருடப்பிறப்பு                                     - 01/04/2016

ரம்ஜான்                                                              - 01/07/2016

சுதந்திர தினம்                                                 - 01/08/2016

விநாயகர் சதுர்த்தி மற்றும் பக்ரீத்        - 25/08/2016

தசராமுகரம் மற்றும் தீபாவளி             - 03/10/2016

மிலாடி நபி,கிறிஸ்துமஸ்புது வருடம் - 07/12/2016

Friday, January 01, 2016



7-வது உறுப்பினர் சரிபார்ப்பு தேர்தல்...


7-வது உறுப்பினர் சரிபார்ப்பு 
தேர்தலுக்கான பணிகள் தொடங்கி விட்டன. 
11-01-2016 அன்று அனைத்து 
தொழிற்சங்ககூட்டத்தை 
BSNL நிர்வாகம் கூட்டி உள்ளது.
 6-வது உறுப்பினர் சரிபார்ப்பு தேர்தலில் பங்கேற்ற 
18 தொழிற்சங்கங்களுக்கு 
அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


S.சிவகுருநாதன் ,மாவட்ட செயலர் 


01-01-2016 முதல் IDA 4.5% உயர்வு...


01-01-2016 முதல் 

IDA 4.5% சதவீதம் உயந்துள்ளது.

இத்துடன் மொத்த IDA...

(107.9%+4.5%)112.4%சதவீதம் ஆகும்.



S.சிவகுருநாதன்,மாவட்டசெயலர்