Total Pageviews

Tuesday, June 09, 2015




   பெருந்திரள் தர்ணா போராட்டம் 


ஒப்பந்த ஊழியர் போராட்டம் 

ஒத்திவைப்பு 



10/06/2015 அன்று சென்னையில் நடைபெறவிருந்த
 ஒப்பந்த ஊழியர் பிரச்சினை தீர்விற்கான போராட்டம் 
ஒரு மாத காலம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

08/06/2015 அன்று நிர்வாகத்துடன் 
நடைபெற்ற பேச்சு வார்த்தையின் அடிப்படையில்
 மேற்கண்ட முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அடுத்த கட்டப்பேச்சுவார்த்தை 
12/06/2015 அன்று நடைபெறும்.


S .சிவகுருநாதன்,மாவட்ட செயலர் 

Monday, June 08, 2015


                       BSNL to Offer 

   Free National Roaming   From June 15



S .சிவகுருநாதன் ,மாவட்ட செயலர் 

Saturday, June 06, 2015

ஜூன் 7 அன்புத்தோழர்  ஜெகன் 

நினைவு நாள் 





 தோழர் ஜெகனின் நினைவுகள் நமக்கு மாறாத 

 உற்சாகத்தையும்       

 தெம்பையும்அளித்த காலம் நிழலாடுகிறது.
   
பொறுமையும்சகிப்புத் தன்மையும்போர்க்குணமும்
சக தோழரிடம்,தொழிற்சங்கத்திடம்   பழகும் பாங்கும்நேர்மையான அரசியலும் நாம் இன்னும் கற்றுத்தேற வேண்டியிருக்கிறது  என்பதை உணர்வோம்ஒப்புக் கொள்வோம்.  


S.சிவகுருநாதன், மாவட்டசெயலர்   




ஜூன் 10 பெருந்திரள் தர்ணா போராட்டம் 

S .சிவகுருநாதன்,மாவட்ட செயலர் 

Thursday, June 04, 2015


        ஜூன் 10                அறப்போர் 


தோழனே.. 

ஏந்திடு நெஞ்சில் எரிதழல்..

சேர்ந்திடு... 

சென்னையில்..பெருந்திரள்..

ஒப்பந்த ஊழியனே...

நீ.. திரள வேண்டும்...

உன்னைக்கண்டு...

நிர்வாகம் மிரள வேண்டும்...

தொடரும்..

உனது துன்பங்கள் அகல வேண்டும்...

சென்னை செல்வோம்.. சேர்ந்து வெல்வோம் 

S .சிவகுருநாதன் ,மாவட்ட செயலர் 


செய்திகள் 


இரவு நேர இலவச அழைப்புகளை அமுல்படுத்தியதையொட்டி 

ஜூன் 15 முதல் நாடு தழுவிய இலவச ஊர்சுற்றும் 

ROAMING வசதியை  BSNL அறிவித்துள்ளது. 

---------------------------------------

2014-15ம் நிதியாண்டில் BSNLன் வருமானம் 2.1 சதம் 

உயர்ந்துள்ளதாக இலாக்கா மந்திரி கூறியுள்ளார். 

பின்னோக்கிச்செல்லும் நிலையிலிருந்து BSNL முன்னோக்கி 

அடியெடுத்து வைப்பதாக அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

----------------------------------------

2011ம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 

25 நகரங்களை தரம் உயர்த்தி மத்திய அரசு உத்திரவிட்டுள்ளது.

தமிழகத்தில் ஈரோடு,கோவை ஆகிய நகரங்கள் தரம் 

உயர்த்தப்பட்டுள்ளன. 2011ம் ஆண்டு மக்கள்தொகை கணக்காக 

இருந்தாலும் 01/04/2015ல் இருந்துதான்

 பணப்பலன் ஊழியர்களுக்கு கிடைக்கும். 

----------------------------------------

வருமான வரித்தாக்கல் செய்வதற்காக ஏற்கனவே உள்ள 

விண்ணப்பத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டு புதிய 

விண்ணப்பங்கள் நடைமுறைபடுத்தப்பட்டுள்ளன. வருமான 

வரித்தாக்கல் செய்வதற்கான காலக்கெடு ஆகஸ்ட் 31 ஆகும்.

-----------------------------------------

விலைவாசிப் புள்ளிகளின் உயர்வையொட்டி ஜூலை 2015 

முதல் 1.6  முதல் 2 சதம் வரை  

IDA  உயர வாய்ப்புள்ளதாக செய்திகள் கூறுகின்றன.

-------------------------------------------

4G சேவை வசதியை  அடுத்த ஆண்டு துவக்குவதற்கு 

BSNL  திட்டமிட்டுள்ளது. இதற்காக 39000 கோடி அடுத்த 5 

ஆண்டுகளில் முதலீடு செய்யப்படும். AIRTEL நிறுவனம் 

ஏற்கனவே 23 நகரங்களில் 

இந்த சேவையை துவங்கி விட்டது. RELIANCE நிறுவனம் 

அடுத்த மாதம் துவக்குவதற்கு திட்டமிட்டுள்ளது.

------------------------------------------

பதவிப்பெயர் மாற்றக்குழு DESIGNATION COMMITTEE  மற்றும் 

போனஸ்குழுக்கூட்டங்களை உடனடியாக கூட்டக்கோரி 

நமது மத்திய சங்கம் நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

-------------------------------------------

ஆந்திர மாநில அரசு 01/07/2013 முதல்  தனது ஓய்வூதியர்களுக்கு
 
43 சத ஓய்வூதிய உயர்வை அறிவித்துள்ளது. 

02/06/2014 முதல் நிலுவை வழங்கப்படும். 

--------------------------------------------

BSNLலில் ஓய்வு பெற்ற தோழர்களுக்கு  78.2 சத IDA இணைப்பு 

வழங்குவதற்கான குறிப்பு DOT நிதிப்பிரிவால் ஒப்புதல் 

அளிக்கப்பட்டுள்ளது. வழக்கமான சம்பிரதாயங்களுக்குப்பின் 

மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும்.  


S.சிவகுருநாதன் ,மாவட்ட செயலர் 

Friday, May 29, 2015



BSNL உருவான 15 ஆண்டுகள் கழித்து விழித்தெழும் DOT, GPF சம்மந்தமான அனைத்து பணிகளையும் தங்களிடம் மாற்றித்தருமாறு கேட்டுள்ளது. GPF-லிருந்து கடன் பெறுவதும் DOT CELL-களுக்கு மாற்றப்படும். இதன் மீது கருத்து கூறுமாறு தொழிற்சங்கங்களை BSNL கேட்டுள்ளது. நமது சங்கம்இந்த மாற்றலை ஏற்க முடியாது எனவும், இது ஊழியர்களுக்கு பெரும் பாதிப்பினை ஏற்படுத்தும் எனவும் கூறிவிட்டது.

DOT- இதனை வற்புறுத்தும் எனறே தெரிகிறது. 

நிரந்தர ஊழியர்கள் அதிகம் இல்லாததால்
, பெரும்பாலான ஓய்வூதியர்களை பணியமர்த்தி செயல்படும் DOT CELL-களுக்கு இந்த பணி மாற்றப்பட்டால் GPF-ல் பெரும் சிக்கல்களை ஊழியர்கள் சந்திக்க நேரிடும் என்பதால் இந்த பணி மாற்றப்படக்கூடாது என்பதே நம் சங்கத்தின் நிலைபாடு.

S . சிவகுருநாதன் ,மாவட்ட செயலர்