Total Pageviews
Sunday, October 28, 2018
NFTE மத்திய செயற்குழு
முடிவுகள்
நமது NFTE சங்க மத்திய செயற்குழுக்கூட்டம்
ஹரித்துவார் நகரில் அக்டோபர் 24 மற்றும் 25
தேதிகளில் நடந்து முடிந்துள்ளது.
கீழ்க்கண்ட
தீர்மானங்கள் இயற்றப்பட்டன…
3வது ஊதிய மாற்றம் நவம்பர் 2018க்குள் விரைந்து
அமுல்படுத்தப்பட வேண்டும். தாமதம் தொடருமானால்
காலவரையற்ற வேலைநிறுத்தத்திற்குதயாராக
ஊழியர்களை செயற்குழு அறைகூவல் விடுக்கின்றது.
அதிகாரிகளுக்கு
இணையான புதிய பதவி
உயர்வுத்திட்டம் அமுல்படுத்தப்பட வேண்டும்.
அந்த திட்டத்தில் SC/ST ஊழியர்களுக்கான இடஒதுக்கீடு
பின்பற்றப்பட வேண்டும்.
இன்றைய தொழில்நுட்ப
வளர்ச்சியைக் கணக்கில்
கொண்டு MULTI TASK பல்திறனுள்ள
ஊழியர்கள்
பணியில் அமர்த்தப்பட வேண்டும்.
அனைத்து இலாக்காத்
தேர்வுகளும் உடனடியாக
நடத்தப்பட வேண்டும்.
எதிர்மறை மதிப்பெண் முறை விலக்கப்பட
வேண்டும்.
போனஸ் குழுக்கூட்டம்
கூட்டப்பட வேண்டும்.
உடனடியாக அனைத்து ஊழியர்களுக்கும்
போனஸ் வழங்கப்பட வேண்டும்.
செல்கோபுரங்கள்
பராமரிப்பு மற்றும் SIM விற்பனை
ஆகிய பணிகளைத்தனியாருக்குத்
தாரைவார்த்துள்ள
செயலை செயற்குழு கண்டிக்கின்றது. தற்போது
பணியில் உள்ள ஊழியர்களே திறம்பட
செல்கோபுரங்களைப் பராமரிக்க முடியும். எனவே
OUTSOURCING என்னும் தனியார் நுழைவு நிறுத்தப்பட
வேண்டும்.
SR.ACCOUNTANT
பதவிகள் உடனடியாக GROUP ‘B’
அதிகாரிகளாக
மேல்நிலைப்படுத்தப் படவேண்டும்.
இந்த நீண்ட நாள்
பிரச்சினை மேலும்
தாமதப்படுத்தப்படக்கூடாது.
இலாக்காத்தேர்வெழுதும்
ஊழியர்களுக்கு உயர்
கல்வித்தகுதியை நிர்ணயம் செய்துள்ள நிலை
மாற்றப்பட வேண்டும்.
அவர்களது அனுபவத்தைக்
கணக்கில் கொண்டு அவர்களது கல்வித்தகுதி
தளர்த்தப்பட வேண்டும்.
BSNLன் நிதிநிலையைக் கணக்கில் கொண்டு
ஊதாரிச் செலவினங்கள்
உடனடியாக நிறுத்தப்பட
வேண்டும்.
நீண்ட நாட்களாகப்
பட்டுவாடா செய்யப்படாத
மருத்துவபில்கள் உடனடியாகப் பட்டுவாடாசெய்யப்பட
வேண்டும்.
பல்வேறு மாநிலங்களில்
இன்னும் TSM என்றதற்காலிக
நிலையில் பணிபுரியும் தோழர்கள் உடனடியாக
நிரந்தரம்
செய்யப்பட வேண்டும்.
சிற்சில மாநிலங்களில்
TERM INSURANCE
SCHEME என்ற ஆயுள் காப்பீடு அதிகாரிகளுக்கு
அமுல்படுத்தப்பட்டுள்ளது. இது
அனைத்து
ஊழியர்களுக்கும் விரிவு படுத்தப்படவேண்டும்.
RTP சேவைக்காலம் உச்சநீதிமன்ற தீர்ப்பின்
அடிப்படையில் பணிக்காலமாக
கருதப்பட வேண்டும்.
BSNLலில் நிரந்தரம் செய்யப்பட்ட நேரடி ஊழியர்களின்
ஓய்வூதியப்பலன்களுக்காக
வழங்கப்படும் ஓய்வூதியப்
பங்களிப்பு கூடுதலாக உயர்த்தப்பட
வேண்டும்.
ஒப்பந்த
ஊழியர்களுக்கு தொழிலாளர் நலச்சட்டங்கள்
அடிப்படையில் கிடைக்க வேண்டிய அனைத்து
சலுகைகளும் உரிமைகளும் தவறாமல் அளிக்கப்பட
வேண்டும். அவர்களது சம்பளம் ஒவ்வொரு
மாதமும் உரிய
தேதிக்கு முன் வழங்கப்பட வேண்டும்.
Friday, October 26, 2018
மத்திய செயற்குழுக்கூட்டம்
தோழர்.இஸ்லாம் அகமது அவர்களும்,
சங்கக்கொடியைத்
தோழர்.சந்தேஷ்வர்சிங் அவர்களும்
TEPU பொதுச்செயலர் தோழர்.சுப்புராமன் கலந்து
கொண்டார்.
தமிழகத்தில் இருந்து
அகில இந்திய சம்மேளனச்செயலர் தோழர்.காமராஜ்,
அகிலஇந்திய துணைத்தலைவர் தோழர்.பழனியப்பன்,
சிறப்பு அழைப்பாளர் தோழர்.செம்மல் அமுதம்,
மாநிலச்செயலர் தோழர்.நடராஜன்,
உதவிச்செயலர் தோழர்.முரளிதரன்,
மாநிலப்பொருளர் தோழர். சுப்பராயன்
உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
நமது NFTE சங்கத்தின் மத்திய செயற்குழுக்கூட்டம்
October- 24 மற்றும் 25 தேதிகளில் ஹரித்துவார்
நகரில்
நடைபெற்றது.
தேசியக்கொடியைத்
தோழர்.இஸ்லாம் அகமது அவர்களும்,
சங்கக்கொடியைத்
தோழர்.சந்தேஷ்வர்சிங் அவர்களும்
ஏற்றிவைத்து
செயற்குழுவைத் துவக்கி வைத்தனர்.
TEPU பொதுச்செயலர் தோழர்.சுப்புராமன் கலந்து
கொண்டார்.
தமிழகத்தில் இருந்து
அகில இந்திய சம்மேளனச்செயலர் தோழர்.காமராஜ்,
அகிலஇந்திய துணைத்தலைவர் தோழர்.பழனியப்பன்,
சிறப்பு அழைப்பாளர் தோழர்.செம்மல் அமுதம்,
மாநிலச்செயலர் தோழர்.நடராஜன்,
உதவிச்செயலர் தோழர்.முரளிதரன்,
மாநிலப்பொருளர் தோழர். சுப்பராயன்
உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
Wednesday, October 10, 2018
08/10/2018 அன்று டெல்லியில்...
அனைத்து சங்கக்கூட்டம் நடைபெற்றது.
அமைச்சரின் வாக்குறுதிகள் தண்ணீரில் எழுத்தாய்
தடமற்றுப்போன நிலை பற்றி ஆழ்ந்து விவாதிக்கப்பட்டது.
எனவே நமது ஒன்றுபட்ட போராட்டங்களைத்
தொடர்ந்து நடத்துவது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.
போராட்டத்திட்டம்
29/10/2018 அன்று நாடெங்கும் நமது கோரிக்கைகளை
ஊடகங்களின் மூலம் வெளிச்சத்துக்கு கொண்டு
வருவது…
30/10/2018 அன்று மாவட்டத்தலைநகர்கள்
மாநிலத்தலைநகர்கள்
மற்றும் தலைநகர்
டெல்லியில் மாபெரும் தர்ணா..
14/11/2018 அன்று கோரிக்கை ஊர்வலம் மற்றும்
கோரிக்கை
மனு அளித்தல்.
30/11/2018க்குப் பின் காலவரையற்ற
வேலை நிறுத்தம்
கோரிக்கைகள்
மத்திய அரசே…
BSNL நிர்வாகமே…
செல்கோபுரங்களைத் தனியார் பராமரிப்பிற்கு அனுமதிக்காதே.. ஆண்டிற்கு 1800
கோடி வீண் செலவுசெய்யாதே…
டெல்லி உயர்நீதிமன்ற உத்திரவின்படி ITS
அதிகாரிகளை DOTக்குத் திருப்பி அனுப்பு…
மூன்றாவது ஊதியமாற்றத்தை அமுல்படுத்து…
ஓய்வூதிய மாற்றத்தை அமுல்படுத்து…
ஓய்வூதியப்பங்களிப்பை முறைப்படுத்து…
4G அலைக்கற்றையை உடனடியாக ஒதுக்கீடு செய்…
தோழர்களே…
ஒற்றுமையே நமது பலம்.
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு...
மறுக்கப்பட்ட உரிமைகளுக்காக ..
தொடர்ந்து நாம் போராடுவோம்….
நம் உரிமைகளை வெல்வோம்..
CMD அவர்களுடன் NFTE அகில இந்திய
தலைவர்கள் சந்திப்பு.
NFTE அகில
இந்திய
தலைவர்
தோழர். இஸ்லாம்,
NFTE அகில
இந்திய
பொது
செயலர்
தோழர். சந்தேஸ்வர்
சிங்
09.10.2018 அன்று நமது
CMD அவர்களை
சந்தித்துப்பேசினார்கள், ஊழியர்கள்
மருத்துவ
பில்கள் பட்டுவாடா
பணமின்றி தேங்கி
கிடப்பது
பற்றி
விவாதித்தனர்
ஊழியர்களின்
மருத்துவ
பில்கள் நான்கு ஐந்து
நாட்களில்
சரி செய்யப்படும்
என்றார்
நமது
CMD, மற்றும்
ஊழியர்களின்
புதிய
பதவி
உயர்வு
கொள்கை
(New Promotion Policy ) பற்றி
விவாதித்தனர்,
புதிய
பதவி
உயர்வு
கொள்கை
பற்றி
சாதகமான
பதில்
அளித்தார்
CMD.
ஊதிய மாற்றத்திற்கான 7வது கூட்டம்
ஊதிய
மாற்றக் கூட்டுக்குழு
ஏழாவது
முறையாக 09.10.2018 அன்று கூடியது.
கூட்டத்தில் வீட்டு
வாடகை படி பற்றி
விவாதிக்கப்பட்டனர், நிர்வாக தரப்பில்
வீட்டு வாடகை படிஉயர்த்தப்பட்டமாட்டாது,
என நிர்வாக தரப்பில் கூறினார். ஊழியர்
தரப்பில் கடுமையாக எதிர்த்தனர், மற்றும்
வீட்டு வாடகை படியை ( HRA ) புதிய
அளவீடுகளில் உயர்த்தப்பட வேண்டும்
என்று வலியுறுத்தியது. நிர்வாகம் இந்த
முடிவை தற்போது திரும்பப்பெறுவதாகவும்
மேலும் வீட்டு
வாடகை படியை (HRA)
பற்றி அடுத்த கூட்டத்தில் விவாதங்கள்
நடைபெறும் என்றும் நிர்வாக
தரப்பில்
தெரிவித்தார்.
Subscribe to:
Posts (Atom)