Total Pageviews

Wednesday, October 10, 2018







08/10/2018 அன்று டெல்லியில்...

அனைத்து சங்கக்கூட்டம் நடைபெற்றது.

அமைச்சரின் வாக்குறுதிகள் தண்ணீரில் எழுத்தாய்

தடமற்றுப்போன நிலை பற்றி ஆழ்ந்து விவாதிக்கப்பட்டது.

எனவே நமது ஒன்றுபட்ட போராட்டங்களைத்

தொடர்ந்து நடத்துவது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.


போராட்டத்திட்டம்

29/10/2018 அன்று நாடெங்கும் நமது கோரிக்கைகளை 

ஊடகங்களின் மூலம் வெளிச்சத்துக்கு கொண்டு

வருவது

30/10/2018 அன்று மாவட்டத்தலைநகர்கள்

மாநிலத்தலைநகர்கள் மற்றும் தலைநகர் 

டெல்லியில் மாபெரும் தர்ணா..

    14/11/2018 அன்று கோரிக்கை ஊர்வலம்  மற்றும்
  
  கோரிக்கை மனு அளித்தல்.

30/11/2018க்குப் பின்    காலவரையற்ற வேலை நிறுத்தம் 


கோரிக்கைகள்

மத்திய அரசே… BSNL நிர்வாகமே

செல்கோபுரங்களைத் தனியார் பராமரிப்பிற்கு அனுமதிக்காதே.. ஆண்டிற்கு 1800 கோடி வீண் செலவுசெய்யாதே


டெல்லி உயர்நீதிமன்ற உத்திரவின்படி ITS
அதிகாரிகளை  DOTக்குத் திருப்பி அனுப்பு


மூன்றாவது ஊதியமாற்றத்தை அமுல்படுத்து

ஓய்வூதிய மாற்றத்தை அமுல்படுத்து

ஓய்வூதியப்பங்களிப்பை முறைப்படுத்து

4G அலைக்கற்றையை உடனடியாக ஒதுக்கீடு செய்

  
தோழர்களே

  ஒற்றுமையே  நமது பலம்.

   ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு...
       
         மறுக்கப்பட்ட உரிமைகளுக்காக ..
                    
                  தொடர்ந்து நாம் போராடுவோம்….
                                           
                                    நம் உரிமைகளை வெல்வோம்..

No comments:

Post a Comment