BSNL
- MTNL சீரமைப்பு
இன்று 21/02/2019 DCC எனப்படும்
DIGITAL
COMMUNICATIONS COMMISSION
(முந்தைய TELECOM
COMMISSION) தொலைத்தொடர்பு
ஆணையம்
டெல்லியில்
கூடவுள்ளதாக
செய்திகள் வெளியாகியுள்ளன.
DCC தொலைத்தொடர்பில் கொள்கை
முடிவெடுக்கும் அதிகாரம்
படைத்த
உச்சக்கட்ட அமைப்பாகும்.
எனவே இந்தக் கூட்டம்
மிகமுக்கியமானதாக
கருதப்படுகின்றது.
இன்று நடைபெறும் DCC கூட்டத்தில் BSNL மற்றும் MTNL
நிறுவனங்களைச் சீரமைப்பு செய்வதற்கான
வழிமுறைகள் பற்றி ஆராய்ந்து முடிவெடுக்கப்படும்
என
தெரிகிறது.
BSNL மற்றும் MTNL
நிறுவனங்களைச் சீரமைப்பு
செய்வதற்கான ஆலோசனைகளை சம்பந்தப்பட்ட
நிறுவனங்களின் தலைவர்கள் ஏற்கனவே அரசிடம்
சமர்ப்பித்துள்ளனர்.
அவற்றில்…
ஓய்வு பெறும் வயதை 58 என குறைப்பது…
அதன் மூலம் 2019-20
நிதியாண்டில் சுமார் 3000 கோடி
சம்பளச்செலவைக் குறைக்க வகை செய்வது…
விருப்ப ஓய்வுத்திட்டத்தை அமுல்படுத்துவதன் மூலம்
மேலும் 3000 கோடி சம்பளச்செலவைக் குறைப்பது…
4G அலைக்கற்றையை உடனடியாக ஒதுக்குவது…
காலியாக உள்ள கட்டிடம் மற்றும் இடங்களை
வணிகரீதியாகப் பயன்படுத்தி வருமானம் சேர்ப்பது…
போன்ற ஆலோசனைகள் இடம்பெற்றுள்ளன.
இது தவிர… சீரமைப்பு சம்பந்தமாக DOT தனது பங்காக
சில ஆலோசனைகளை முன்வைத்துள்ளது..
அவற்றில்…
ஊழியர்களின் சம்பளச்செலவு நிறுவனங்களின்
மிகப்பெரிய பிரச்சினையாக கருதப்படுவதால்…
மிக அதிக எண்ணிக்கையில் இருக்கும்
ஊழியர் மற்றும் அதிகாரிகளை BBNL, BHARAT NET
போன்ற
நிறுவனங்களுக்கு
மாற்றுவதன் மூலம் சம்பளச் செலவினங்களை
பரவலாக்குவது…
நிறுவனங்களின் அன்றாடச் செலவுகளை சந்திக்கவும்,
நிதி ஆதாரங்களை உறுதிப்படுத்தவும்
வங்கிகளிடம்
கடன் கோருவது….போன்ற ஆலோசனைகளை DOT
முன்வைத்துள்ளது.
இன்றைய DCC கூட்டத்தில்…
BSNL மற்றும் MTNL
நிறுவனங்களைச் சீரமைப்பு
செய்வதற்கான முடிவுகள் எடுக்கப்படும்…
BSNL நிறுவனத்திற்கு 2100Mhz அலைவரிசையில் 4G
அலைக்கற்றை ஒதுக்கீடு செய்ய முடிவெடுக்கப்படும்
என எதிர்பார்க்கப்படுகின்றது. அலைக்கற்றை ஒதுக்கீடு
செய்வதில் இறுதி ஒப்புதல் மத்திய
அமைச்சரவையிடம் பெறப்படும். எனவே இன்று
நடைபெறும் DCC கூட்டம் மிக முக்கியத்துவம்
வாய்ந்ததாக கருதப்படுகின்றது.
BSNL ஊழியர்களும் அதிகாரிகளும் தொடர்ந்து
தங்களது கோரிக்கைகளுக்காக
போராடியும் மூன்று நாட்கள் வேலைநிறுத்தம்
நடத்தியும் தங்களது
எதிர்ப்பை அரசிற்கு மிக வலுவாக
தெரிவித்துள்ளதால்..
இன்று நடைபெறும் DCC கூட்டம் BSNL
மற்றும் MTNL
நிறுவனங்களைச் சீரமைப்பு செய்வதற்கான
முடிவுகளை நிதானத்தோடு
மேற்கொள்ளும்
என
எதிர்பார்க்கப்படுகின்றது.
No comments:
Post a Comment