Total Pageviews

Saturday, November 14, 2015

நவம்பர் - 14

குழந்தைகள் தினம்
 


வெள்ளை மனம் கொண்டவர்கள் குழந்தைகள். அவர்கள் விறுப்பு வெறுப்புக்கு அப்பாற்பட்டவர்கள் என்பதாலேயே இறைவனுக்கு சமமாக ஒப்பிடப்படுகின்றனர். கள்ளமற்ற இந்த குழந்தைகளுக்காக உலகம் முழுவதும் நவம்பர் மாதம் 20ம் தேதி சர்வதேச குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. இருப்பினும் நவம்பர் 14 ம் தேதி இந்தியாவில் குழந்தைகள் தினம் கொண்டாடப்படுவதற்கு காரணம் நம் நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு. இயற்கையிலேயே குழந்தைகள் மீது அதிக பிரியம் கொண்டவர் பண்டித ஜவகர்லால் நேரு. அதன் காரணமாக அவரை நேரு மாமா என்று அனைவரும் அன்போடு அழைத்தனர். குழந்தைகள் மீது கொண்ட அளவுகடந்த பாசம் காரணமாகவே தனது பிறந்தநாளை குழந்தைகள் தினமாக கொண்டாடுமாறு வலியுறுத்தினார் நேரு.

குழந்தைகளுக்கு நம் நெஞ்சு நிறை வாழ்த்துக்கள்.

S.பத்ரிநாராயணன்,மாவட்ட செயலர்(பொறுப்பு )   


Wednesday, November 11, 2015


அவுரங்காபாத் தேசிய செயற்குழு  - தீர்மானங்கள்


போனஸ் 

போனஸ் வழங்குவதற்கான  வரையறைகளை  போனஸ் குழு இறுதி செய்யாத நிலையில்.. தீபாவளிக்குள் தற்காலிக  போனஸ் வழங்கிடக்கோரி அகில இந்தியத்தலைவர்களும்.. மாநில மட்டத்தலைவர்களும் காலவரையற்ற உண்ணாவிரதத்தை மேற்கொள்ளுமாறு மத்திய செயற்குழு கேட்டுக்கொள்கிறது.

வைப்புநிதி - GPF

வைப்புநிதி பட்டுவாடா செய்வதில் நிகழும் தாமதங்களை வருத்தத்துடன் செயற்குழு உற்று நோக்குகிறது. வைப்பு நிதிக்கான நிதியை BSNLக்கு உடனுக்குடன்  DOT அனுப்ப வேண்டும் எனவும்.. தற்போது நிலவும் தாமதங்களை தீர்ப்பதற்கு BSNL  நிர்வாகம் முயல வேண்டும் எனவும் மத்திய செயற்குழு கேட்டுக்கொள்கிறது.

78.2சத IDA சம்பள அடிப்படையில் வீட்டு வாடகைப்படி 

12/06/2012 வேலை நிறுத்த உடன்பாட்டின்படி 01/04/2013 முதல் HRA  வாடகைப்படி  78.2 சத  IDA சம்பள அடிப்படையில் வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் வழக்கம் போல் நிர்வாகம் தனது உறுதிமொழியை நிறைவேற்றவில்லை. எனவே BSNL நிர்வாகம்  உடனடியாக 78.2 சத  IDA சம்பள அடிப்படையில் வீட்டு வாடகைப்படி வழங்கிட வேண்டும்.

நேரடி நியமன  ஊழியர்களுக்கு ஓய்வூதியப்பலன்கள்.

BSNLலில் நிரந்தரம் பெற்ற ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதியத்திட்டம் வகுக்கப்பட வேண்டும் என 12/06/2012 வேலை நிறுத்தத்தின் போது உடன்பாடு  எட்டப்பட்டது.  ஆனால் ஆண்டுகள் 3 கழிந்த போதும் எந்த அசைவுமில்லை. எனவே உடனடியாக BSNL நிர்வாகம் நேரடி நியமன ஊழியர்களுக்கு 12 சத பங்களிப்பின் அடிப்படியில் புதிய ஓய்வூதியத்திட்டத்தை அறிவிக்க வேண்டும்.

ஓய்வூதியப் பங்களிப்பு 

BSNL உருவாக்கத்தின் போது ஊழியர்களுக்கான ஒய்வூதிய நிதியை  அரசே வழங்கும் என உடன்பாடு போடப்பட்டது. ஆனால் 15/06/2006 அன்று அரசு 60 சத நிதிச்சுமையை மட்டுமே ஏற்கும் என்றும்..  40 சத நிதிச்சுமை BSNL  நிர்வாகத்தால் ஏற்கப்பட வேண்டும் எனவும் உத்திரவு இடப்பட்டுள்ளது. இந்த ஊழியர் விரோத உத்திரவு உடனடியாக விலக்கிக்கொள்ளப்பட வேண்டும். இதற்கான போராட்டங்களில் அனைத்து சங்கங்களையும் இணைத்து போராட மத்திய செயற்குழு கேட்டுக்கொள்கிறது.

DELOITTE குழு அறிக்கை 

ஒரு லட்சம் ஊழியர்களை உபரியாக்கும் முயற்சியில் இறங்கியுள்ள ஊழியர் விரோத DELOITTE குழு அறிக்கை முழுமையாக ரத்து செய்யப்பட  வேண்டும். அகன்ற அலைவரிசை BROAD BAND பழுதுகளை தனியாருக்கு விட எத்தனிக்கும் முயற்சி கைவிடப்பட வேண்டும்.  BSNLன் வளர்ச்சிக்கு குந்தகமான  இத்தகைய மோசமான முடிவுகளை எதிர்த்து போராட்டக்களம் காண மத்திய செயற்குழு அறைகூவல் விடுக்கிறது.

செல் கோபுரம் தனி நிறுவனம் 

செல் கோபுரங்களைத் தனியாகப் பிரித்து துணை நிறுவனம் ஏற்படுத்த முயற்சிக்கும் அரசின் போக்கை செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. இதனால் ஏற்படும் செலவினங்கள் மற்றும் ஊழியர் பிரச்சினைகளை நிர்வாகம் கணக்கில் கொள்ளவில்லை.  மேலும் இதற்காக அமைக்கப்பட்ட குழுவில் ஊழியர் தரப்பில் இருந்து யாரும் நியமிக்கப்படவில்லை. எனவே தனி செல் கோபுர நிறுவன உருவாக்கத்தால் உருவாகும் தீய விளைவுகளை எதிர்த்து ஒன்றுபட்ட போராட்டம் காண செயற்குழு வேண்டுகோள் விடுக்கிறது.

மாற்றல் கொள்கை 

மாற்றல் கொள்கையில் கிராமப்புற பகுதிகளுக்கு 3 வருட கால நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது . இது ஏற்புடையதல்ல. 3 ஆண்டுகள் என்பது அதிகமான காலமாகும். எனவே 3 ஆண்டுகளுக்கு முன்னேயே சூழல்களைப் பொறுத்து மாற்றல் இடுவதற்கு உரிய திருத்தங்கள் மாற்றல் கொள்கையில் கொண்டு வரப்பட வேண்டும்.

S.பத்ரிநாராயணன்,மாவட்ட செயலர் (பொறுப்பு )  

Tuesday, November 10, 2015









NFTE  மதுரை  மாவட்ட சங்கத்தின் 

தீபாவளி நல்வாழ்த்துகள் 

S.பத்ரிநாராயணன்,மாவட்ட செயலர் (பொறுப்பு )  

Monday, November 09, 2015


பணி சிறக்க...வாழ்த்துக்கள்


மாநிலச்செயலர்  

தோழர்.பட்டாபி அவர்கள் 

விடுப்பில் சென்றுள்ளதால் 

மூத்த மாநில உதவிச்செயலர். 

தோழர்.சென்னக்கேசவன்...அவர்கள் 

 பொறுப்பு மாநிலச்செயலராகச் செயல்படுகிறார்.

அவரது பணி சிறக்க  நல்வாழ்த்துக்கள்...

அலைபேசி எண் : 9486103979


S.பத்ரிநாராயணன்,மாவட்ட செயலர் (பொறுப்பு )  

Friday, November 06, 2015


TTA பயிற்சி வகுப்பு...



07-06-2015 அன்று நடைபெற்ற TTA இலாக்காத்தேர்வில்
தேர்ச்சி பெற்ற தோழர், தோழியர்களுக்கான இரண்டாவது பயிற்சி
வகுப்பு 16-11-2015 முதல் சென்னை RGMTTC பயிற்சி
மையத்தில் துவங்குகிறது.


1.P .நாகநாதன் 


2.M .விஜயவேல்ராஜன் 


மதுரை  மாவட்டத்தில்... இருந்து பயிற்சிக்கு செல்லும்...
மேற்க்கண்ட 2 தோழர்களுக்கு நமது NFTE மதுரை மாவட்டச்சங்கத்தின் வாழ்த்துக்கள்.

S.பத்ரிநாராயணன்,மாவட்டசெயலர்(பொறுப்பு)  

செய்தி... துளிகள்...

நமது மத்திய செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் தீபாவளி பண்டிகைக்கு முன்பாக  உடனடியாக இடைக்கால போனஸ் வழங்கக்கோரி நிர்வாகத்திற்கு 05-11-2015 இன்று நமது மத்திய சங்கம் கடிதம் எழுதியுள்ளது.



ஊழியர்களுக்கு காலத்தே GPF வழங்கிட நமது NFTE-BSNL மத்திய சங்கம் 05-11-2015 இன்று CMD-க்கு கடிதம் கொடுத்துள்ளது.


தமிழ் மாநிலத்திற்கு GPF பட்டுவாடா செய்திட (நவம்பர் 2015) தேவையான நிதி ரூபாய். 11 கோடியில் 6 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.


நமது BSNL நிறுவனத்தின் புதிய இயக்குநர் (Consumer Mobility)-ஆக திரு. ராகேஷ்குமார் மிட்டல் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.

S.பத்ரிநாராயணன்,மாவட்ட செயலர் (பொறுப்பு ) 

Tuesday, November 03, 2015


NFTE

மத்திய செயற்குழு...


அவுரங்கபாத் - மகாராஷ்ட்டிரா

01-11-2015 முதல் 03-11-2015 வரை

நடைபெற்ற காட்சிகள் 
























                                        click for
மொபைல் நம்பர்: 9443805900,9489941164