Total Pageviews

Wednesday, January 21, 2015



செய்திகள் 


GPF மற்றும் திருவிழா முன் பணத்திற்கு (Festival advance) 
தேவையான (ரூபாய். 20 கோடி) நிதியை நமது மத்திய நிர்வாகம் 
20-01-2015 அன்று ரூபாய்.16 கோடியையும் 21-01-2015 இன்று
ரூபாய்.கோடியையும் ஒதுக்கீடு செய்துள்ளது.

இந்நிலையில்...GPF தொகைக்கு விண்ணபித்த தோழர்களுக்கு 
22-01-2015 அன்றும் திருவிழா முன் பணத்திற்கு
(Festival advance) விண்ணபித்த தோழர்களுக்கு 23-01-2015  
அன்றும் பணப்பட்டுவாடா செய்யப்படும் என்று
மாநில நிர்வாகம் தெரிவித்துள்ளது.

GPF மற்றும் திருவிழா முன் பணத்திற்கு தேவையான நிதியை... 
போராடி... பெற்றுதந்த... நமது மத்திய... மாநில...

சங்கத்திற்கு நமது நன்றியை உரித்தாக்குகிறோம்...

===========

BSNL  ஊழியர்களுக்கு பல்வேறு கடன் வழங்குவதற்காக 
அலகாபாத் வங்கியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஒப்பந்தம் 13/01/2018 வரை மூன்று ஆண்டுகளுக்கு அமுலில் இருக்கும்.

===========
குடும்ப ஓய்வூதியம் FAMILY PENSION திருமணமாகாத மகன் மகளுக்கு அவர்களின் திருமணம் வரை வழங்கப்பட்டு வந்தது. அவ்வாறு ஓய்வூதியம் பெறுபவர்கள் உடல் ஊனமுற்றவர்களாகவோ, மனநலம் பாதிக்கப்பட்டவர்களாகவோ, விதவையாகவோ  இருந்தால் அவர்களது திருமணத்திற்கு பின்னும் அவர்களுக்கு குடும்ப ஓய்வூதியம் வழங்கலாம் என அரசு உத்திரவிட்டுள்ளது. அத்தகையவர்கள் தங்களுக்கு வருமானம் ஏதும் இல்லை என வருடந்தோறும் சான்றிதழ் வழங்க வேண்டும்.

                                                      ===========

01/01/2015 முதல் 2.2 சதம் உயர்வு பெற்ற 
IDA உத்திரவு BSNL நிர்வாகத்தால் வெளியிடப்பட்டுள்ளது

                                                      =========== 

                                                                 S.SIVAGURUNATHAN , DS/NFTE


Sunday, January 18, 2015




BSNL ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள்  

சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக...

தமிழ் மாநில சங்கங்கள் நடத்தும்...

மாநிலம் தழுவிய சிறப்பு கருத்தரங்கம் - கடலூர்



                                                                                  S.Sivagurunathan,DS / NFTE

Friday, January 16, 2015

உழவர் திருநாள் நல் வாழ்த்துக்கள்...




                               
உழைத்த உழவனுக்கும்...
களைத்த கால்நடைகளுக்கும்...
கொதித்த கதிரவனுக்கும்...
உளமார்ந்த நன்றிகளை
உரித்தக்கும் பொங்கல்...!

அனைவருக்கும்... இனிய... 
உழவர் திருநாள் நல் வாழ்த்துக்கள்...

வாழ்த்துக்களுடன்...!
MADURAI  NFTE-BSNL மாவட்ட சங்கம்.




நமது BSNL க்கு... புதிய CMD...
     

நமது BSNL நிறுவனத்திற்கு... புதிய CMD வேண்டும்...
என்ற நமது FORUM கூட்டமைப்பின் முதல்
கோரிக்கை நிறை வேற்றப்பட்டுள்ளது. 

திரு. ஸ்ரீ அனுபம் ஸ்ரீவத்சவா

தற்போதைய இயக்குனர் (CM) அவர்களை 
CMD (தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர்) ஆக
நியமித்து DOT (தொலைத் தொடர்பு துறை)
15-01-2015 அன்று உத்திரவு வெளியிட்டுள்ளது.

புதியவரின் செயல்பாட்டை...
பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்...



                                                      S.Sivagurunathan, DS /NFTE Madurai

Wednesday, January 14, 2015




செய்திகள்

GPF நிதி ஒதுக்கீடு தமிழகத்திற்கு வந்து விட்டதாக
 செய்திகள் கூறுகின்றன. ஆயினும் பொங்கலுக்குப்  பின்தான்  
வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. 
வங்கிகளுக்கு இது வரிசையான  விடுமுறை காலம்.
 எனவே இந்த வாரம் கைக்கெட்டினாலும்
 வாய்க்கெட்டும் வாய்ப்பில்லை. 
சரிதான்... உலைக்கு வந்தது...  இலைக்கு வராமலா போகும்...


BSNL தனியாருக்குத்தாரை வார்க்கப்படாது... 
BSNL மற்றும் MTNL இணைப்பு கிடையாது.. என்று 
நமது துறை அமைச்சர் திரு.இரவிசங்கர் பிரசாத் 
முக்கடலும் சங்கமிக்கும் குமரி முனையில்
நம்பிக்கை நடை  என்னும் நடைப்பயண  
துவக்க நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளார்.  
நடையாய் நடந்தாலும் 
நாம் மந்திரிகளை சந்திக்க முடிவதில்லை. 
நடைப்பயண நிகழ்ச்சியிலாவது 
நமது நினைப்பு அவருக்கு வந்ததே என 
நாம் ஆறுதல் கொள்ளலாம். 
 நடக்கிற நிகழ்ச்சியில் சொன்ன விஷயம்
நடக்கிற விஷயமா   என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.



சம்பளப்பட்டுவாடாவில் ERPயினால் ஏற்பட்டுள்ள
 இம்சைகளைக் களையக்கோரி மாவட்ட கணக்கு அதிகாரிகளுக்கு 
மாநில நிர்வாகம் கடிதம் எழுதியுள்ளது.



கருணை அடிப்படை பணிக்கான உத்திரவுகளை டெல்லி தலைமையகத்தின் அனுமதி இல்லாமல் பிறப்பிக்க கூடாது என CORPORATE அலுவலகம் உத்திரவிட்டுள்ளது. 
31/01/2015 வரை பரிசீலிக்கப்பட்ட விண்ணப்பங்கள் பற்றிய விவரங்களை 07/02/2015குள் அனுப்பிட மாநில நிர்வாகங்களை  
CORPORATE அலுவலகம்கேட்டுக்கொண்டுள்ளது. 


                                            S.Sivagurunathan, DS / NFTE







                                              NFTE - BSNL
                            WISH YOU A 
                     HAPPY PONGAL 2015


                                      By
                       S.Sivagurunathan, D/S NFTE

Monday, January 12, 2015



1920-21ல் Dr B .R அம்பேத்கர் தங்கியிருந்த லண்டன் வீடு விற்பனைக்கு வந்துள்ளது.  மகாராஷ்டிரா B J P அரசை சார்ந்த திரு ஆஷிஸ் செலர் M L A இந்த வீட்டை மத்திய அரசு வாங்கி புராதன சின்னமாக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.  மத்திய அரசு முனைப்புடன் செயல்படும் என்று நம்புவோம்.  இந்த வீட்டின் விலை Rs 40 கோடி என்று அதிகார பூர்வ விற்பனையாளர் அறிவித்துள்ளார். 

                                                                                      ச.சிவகுருநாதன்