Total Pageviews

Thursday, August 10, 2017

NFBUA கூட்டமைப்பு தலைவர்கள் 
அமைச்சருடன் சந்திப்பு 
             BSNL ஊழியர்களுக்கு 3வது ஊதிய திருத்தம் அமுல்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி 08/08/2017 அன்று டெல்லியில் BSNL ஊழியர்கள் மற்றும்  அதிகாரிகள் தேசியகூட்டமைப்பு சார்பாக இலாக்கா அமைச்சர் திரு.மனோஜ் சின்கா அவர்களுடன் சந்திப்பு நடைபெற்றது. நாடாளுமன்ற மேலவை திமுக உறுப்பினர் திருச்சி சிவா அவர்களால் கூட்டமைப்பு வழிநடத்தப்பட்டது.
 NFTE பொதுச்செயலர் தோழர்.சந்தேஷ்வர் சிங் அவர்களின் தலைமையில் கூட்டமைப்புத் தலைவர்கள் கலந்து கொண்டனர். கோரிக்கை மனுவை ஏற்றுக்கொண்ட அமைச்சர் சாதகமாக பரிசீலிப்பதாக உறுதி அளித்துள்ளார். 
NFTE தலைமையிலான 
NFBUA கூட்டமைப்பிற்கு நமது வாழ்த்துக்கள். 


விருதுகள் அறிவிப்பு

BSNL நிறுவனத்தில் 2016ம் ஆண்டிற்கான
தேசிய அளவிலான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கான 
சஞ்சார் சேவா விருதுகள்

வினித் சின்கா – JTO – மத்தியப்பிரதேசம்
அலோக் குமார் – TDM – பீகார்
கல்யாண் சஹாய் மீனா – TM – இராஜஸ்தான்
சீதா ராஜகோபால் – SR. TOA – சென்னைத்தொலைபேசி
பதேகேட் அமிஷ் ராமாராவ் – TTA – மகாராஷ்டிரா
கபிராஜ் நாயக் – RM – ஒரிசா





சிறந்த வாடிக்கையாளர் சேவை மையம்
போபால் சந்த்ருப்தி CSC – மத்தியப்பிரதேசம்

சிறந்த தொலைபேசி நிலையங்கள்


CAT I – எர்ணாகுளம் – கேரளா
CAT II – இராஜமுந்திரி – ஆந்திரா
CAT III – திருநெல்வேலி – தமிழ்நாடு
CAT IV – ஜுன்ஜுனு  - இராஜஸ்தான்
CAT V – ஜலாவர் - இராஜஸ்தான்

சிறந்த விருது பெற்ற அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அனைவருக்கும்…
சிறந்த முறையில் வாடிக்கையாளர் சேவை மையத்தையும்..
தொலைபேசி நிலையங்களையும் பராமரிக்கும் அதிகாரிகளுக்கும் ஊழியர்களுக்கும் நமது நல்வாழ்த்துக்கள்.

Tuesday, August 08, 2017


ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கான  மருத்துவப்படி

           
                 01/04/2017 முதல் 30/06/2017 வரையிலான காலாண்டிற்கான மருத்துவப்படியை ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு உடனடியாக வழங்குமாறு நமது மத்திய சங்கம் நிர்வாகத்தை வலியுறுத்தியுள்ளது. மருத்துவப்படி ஜூலை மாதமே வழங்கப்பட்டிருக்க வேண்டும்.
------------------------------------------------------------------------------------------

பணிக்கொடை உச்சவரம்பு
                                      
                 01/01/2016க்குப்பின் ஓய்வு பெற்ற ஊழியர்களின் பணிக்கொடை உச்சவரம்பு  
 ரூ.20 லட்சம் என உயர்த்தப்பட்டது. 
7வது ஊதியக்குழு அமுலாக்கத்திற்குப்பின் ஓய்வுபெற்ற 
தோழர்களின் பணிக்கொடை  கணக்கிடப்பட்டு  தற்போது பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது.
   அடிப்படைச்சம்பளம் ஏறத்தாழ 30000 ரூபாய்க்கு அதிகமாக பெற்றவர்களுக்கும் அதிகாரிகளுக்கும் மட்டுமே கூடுதலாகப் பணிக்கொடை கிடைக்கும். 
வழக்கம்போல் அடிமட்ட ஊழியர்களுக்கு கூடுதல்
 பலன் கிட்டாது. 

Saturday, August 05, 2017


நட்டத்தில் உள்ள BSNLலில் சம்பளமாற்றமில்லை 

பொதுத்துறை அதிகாரிகளுக்கான 3வது ஊதிய மாற்றம் 
01/01/2017 முதல் அமுல்படுத்தப்படுகின்றது. இதற்கான ஒப்புதலை 
DPE 03/08/2017 அன்று வெளியிட்டுள்ளது. நிறுவனங்களின் ஊதிய செலவினத்தைப் பொறுத்து 15 சதம் 10 சதம் 5 சதம் என ஊதிய நிர்ணயம் செய்யப்படும். தொடர்ந்து நட்டத்தில் இயங்கும் பொதுத்துறைகளுக்கு இது பொருந்தாது. 
குறைந்த பட்ச அடிப்படைச்சம்பளம் ரூ.30000/-ஆகும். 
அதிக பட்ச அடிப்படைச்சம்பளம் ரூ.2,00,000/-ஆகும். 
நமது BSNL நிறுவனம் தொடர்ந்து நட்டத்தில் இயங்குவதால் நமக்கு ஊதிய மாற்றத்திற்கான வாய்ப்பில்லை. ஊதிய மாற்றத்தோடு செலவினத்தை முடிச்சுப்போடும் அரசின் நியாயமற்ற செயலை எதிர்த்து நாம் கிளர்ந்தெழுவதைத் தவிர வேறுவழியில்லை.
 ----------------------------------------------------------------------------------------
NFTE மத்திய செயற்குழு அக்டோபர் 12 மற்றும் 13 தேதிகளில் 
ஆந்திர மாநிலம் விஜயவாடா நகரில் நடைபெறுகின்றது. 
மத்திய சங்க பொறுப்பாளர்கள் மட்டும் கலந்து கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடப்பட்டுள்ளது.

Tuesday, August 01, 2017

NFTE - BSNL

    
தொலைத்தொடர்பு ஊழியர்கள் சங்கம்
       
மதுரை மாவட்டம்.
         
மாவட்டச்செயற்குழு  
      
04/08/2017 – வெள்ளி  – காலை 10 மணி

மனமகிழ் மன்றம் – வாடிக்கையாளர்கள் சேவை மையம்      தல்லாகுளம், மதுரை.
                                                                            
கிளைச்செயலர்கள்.. 

மாவட்டச்சங்க நிர்வாகிகள் மற்றும்

 முன்னணித்தோழர்கள்  கலந்து கொள்ளவும்…

ஆய்படு பொருள்:- 
      
  •    7வது மதுரை மாவட்ட மாநாடு வரவு செலவு.  
  •    மாற்றல் பிரச்சினைகள். 
  •   இன்ன பிற  தலைவர் அனுமதியுடன்.
        
    அனைவரையும் அன்புடன் வரவேற்கும்

                                              NFTE -BSNL                                              மாவட்டச்செயலர் 
G.ராஜேந்திரன்
                                                                                         

Friday, July 28, 2017

                                பணித்தன்மைக்கேற்ப  கூலி

                                                          ஒப்பந்த ஊழியர்களுக்கு அவரவர்கள் செய்யும் பணித்தன்மைக்கேற்ப UNSKILLED/SEMI SKILLED/SKILLED எனத்தரம் பிரித்து அதற்கேற்ற கூலி வழங்க வேண்டும் என சென்னையில் உள்ள மத்திய துணை முதன்மைத்தொழிலாளர் ஆணையர் அவர்களிடம் NFTCL சங்கத்தின் மாநிலச்செயலர் தோழர்.ஆனந்தன் வழக்குத் தொடுத்திருந்தார்.
பல கட்டப்பேச்சுவார்த்தைகளுக்குப்பின் 26/07/2017 அன்று மகிழ்வான முடிவு எட்டப்பட்டுள்ளது. தமிழ் மாநில நிர்வாகம் தஞ்சைப் பொதுமேலாளர் திரு.வினோத் அவர்கள் தலைமையில் ஒரு குழுவை அமைத்து ஒப்பந்த ஊழியர்களை அவர்கள் செய்யும் பணிக்கேற்பத் தரம் பிரிப்பதற்குப் பணித்திருந்தது. குழுவின் முடிவின் அடிப்படையில் ஊழியர்கள் தரம் பிரிக்கப்பட்டு தமிழகம் முழுவதும் அதனை அமுல்படுத்துவதற்கு உத்திரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தைப் போலவே சென்னைத்தொலைபேசியிலும் இது போன்றதொரு உத்திரவு பிறப்பிக்கப்பட வேண்டும் என்ற நமது கோரிக்கை DY.CLC அவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு உரிய வழிகாட்டுதல் தரப்பட்டுள்ளது.
அடுத்த கட்டப்  பேச்சுவார்த்தை சென்னைத்தொலைபேசி நிர்வாகத்துடன் 24/08/2016 அன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒப்பந்த ஊழியர்களுக்கு
நல்லதொரு நியாயம் வழங்கிய..
தமிழ்மாநில நிர்வாகத்திற்கும்…
தஞ்சைப் பொதுமேலாளர் திரு.வினோத் அவர்களுக்கும்…
உதவிப்பொதுமேலாளர் திரு.இராஜசேகரன் அவர்களுக்கும்….
மத்திய துணை முதன்மைத் தொழிலாளர் ஆணையர் அவர்களுக்கும்…
NFTCL தமிழகத்தலைவர்களுக்கும்…
வழக்கின் இடையில் நம்முடன்
இணைந்து பணியாற்றிய
TNTCWU தோழர்களுக்கும்
நமது மனமார்ந்த நன்றிகள் உரித்தாகுக.
தரம் பிரிக்கப்பட்ட பணிகள்
UNSKILLED தொழிலாளர்கள்
துப்புரவுப்பணியாளர்கள் மற்றும் அலுவலக உதவியாளர்கள்.
SEMI SKILLED தொழிலாளர்கள்
கேபிள் குழி தோண்டுபவர்கள், TM தோழர்களுக்கு உதவியாளர்கள் மற்றும் காவல் பணியாளர்கள்.
தற்போதைய UNSKILLED கூலி
A பிரிவு நகரம் – ரூ.536/-
B பிரிவு நகரம் – ரூ.448/-
C பிரிவு நகரம் – ரூ.359/-

கிடைக்கவிருக்கும் SEMI SKILLED கூலி
A பிரிவு நகரம் – ரூ.593/- ரூ.57 நாளொன்றுக்கு உயர்வு
B பிரிவு நகரம் – ரூ.506/- ரூ.58 நாளொன்றுக்கு உயர்வு
C பிரிவு நகரம் – ரூ.420/- ரூ.61 நாளொன்றுக்கு உயர்வு

SEMI SKILLED தொழிலாளர்கள் ஓட்டுநர்கள், CABLE JOINT இணைப்பாளர்கள்,எழுத்தர்கள், கணிணியில் பணி புரிபவர்கள், ELECTRICIANS, CALL CENTREகளில் பணிபுரிபவர்கள்,
அகன்ற அலைவரிசை பழுது நீக்குபவர்கள்

தற்போதைய UNSKILLED கூலி
A பிரிவு நகரம் – ரூ.536/-
B பிரிவு நகரம் – ரூ.448/-
C பிரிவு நகரம் – ரூ.359/-

கிடைக்கவிருக்கும் SKILLED கூலி
A பிரிவு நகரம் – ரூ.653/- ரூ.117 நாளொன்றுக்கு உயர்வு
B பிரிவு நகரம் – ரூ.593/- ரூ.145 நாளொன்றுக்கு உயர்வு
C பிரிவு நகரம் – ரூ.506/- ரூ.147 நாளொன்றுக்கு உயர்வு


ஒப்பந்த ஊழியர்கள் பலவகையிலும் சுரண்டப்படுகின்றார்கள்.
அத்தகைய சுரண்டலின் ஒரு வடிவம்தான்
அவர்கள் அனைவருக்கும்
UNSKILLED என்ற வகையில்
ஒரேமாதிரியான கூலி வழங்கியது.
அதனைத் தடுத்து நிறுத்தியதில் நமக்கு மிக்க மகிழ்ச்சி.
இது ஒரு துளியே…
அவர்களது உரிமைகளை முழுமையாக அடைவதற்கான நமது போராட்டம் என்றும் தொடரும்…
                                                                                             நன்றி 
                                                                               காரைக்குடி வலை தளம் 

Thursday, July 27, 2017

அமைச்சருடன் சந்திப்பு    

நேஷனல் போராம் ஆப்  பி.எஸ்.என்.எல் யூனியன்ஸ் அண்ட் அஸோஸியேஷன்ஸ் கூட்டமைப்பு சார்பாக கன்வீனர் தோழர் சந்தேஸ்வர் சிங்(NFTE) தலைவர் சுப்புராமன்(TEPU) பிடியியூ(BTEU), சேவா(SEWA-BSNL) பொதுச்செயலர்கள்  மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் இளங்கோவன் ஆகியோருடன் துணை அமைச்சரை 26.07.17 அன்று சந்தித்து 3 வது சம்பளமாற்றம் குறித்து பேசி கோரிக்கையை வலியுறுத்தினர். அமைச்சர் தக்க  நடவடிக்கை  எடுப்பதாக  உறுதியளித்துள்ளார்.