Total Pageviews

Sunday, February 25, 2018

கூட்டமைப்பு (AUAB) தலைவர்கள்  அமைச்சருடன் பேச்சுவார்த்தை  

                 
   23.02.18 பேரணியின் போது இலாக்கா (DOT) செயலருடன் 
நடந்த பேச்சு வார்த்தையின்  தொடர்ச்சியாக 24.02.18 அன்று
 அமைச்சர்  மாண்புமிகு மனோஜ்  சின்ஹா  அவர்களுடன் 
 பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இலாகா செயலர், சிறப்பு செயலர், CMD BSNL, இயக்குனர்
(மனித வளம்) மற்றும் அமைச்சரின் OSD ஆகியோருடன்
கூட்டமைப்பு  சார்பாக:
தோழர்கள்  அபிமன்யு,  BSNLEU,
 சந்தேஸ்வர்சிங்,  NFTE,
செபாஸ்டின்,  SNEA,
பிரகலாத் ராய்,  AIBSNLEA,
செயப்பிரகாஷ்,  FNTO,
 ராம்,  SEWA BSNL,
ரவி வர்மா ,AIGETOA,
மல்லிகார்ஜூன், BSNL MS
சர்மாBSNL ATM  
ஆகியோரும்  கலந்து கொண்டனர்.

3வது  சம்பளமாற்றம்
தொலைதொடர்பு இலாகா தொடர்ந்து சம்பள மாற்றத்தை மறுத்து 
வந்தது. சம்பள பேச்சுவார்த்தையை  தொடங்கிடவும்
பொதுத்துறை இலாகா (DPE )மற்றும் அமைச்சரவை ஒப்புதலை 
பெற்றிடவும்  நடவடிக்கை எடுக்கப்படும்.

துணை  கோபுர ( டவர் ) நிறுவனம்
அமைச்சரின் பதில் திருப்திகரமாக இல்லை. துணை  கோபுர
 ( டவர் ) நிறுவனத்தை திரும்பப்பெற  தேவையான  வழி  வகைகளை  கண்டறிந்து  முயற்சிக்கப்படும்.

ஓய்வூதிய  மாற்றம்
ஓய்வூதிய  மாற்றம் செய்திட தேவையான
நடவடிக்கை எடுக்கப்படும்.

ஓய்வூதிய  பங்களிப்பு
அதிகபட்ச  ஊதிய அடிப்படைக்கு (  maximum pay ) பதிலாகDoPT ன்  2006ம்  ஆண்டு  உத்தரவின்  அடிப்படையில்  நடப்புச் சம்பளத்தின்  ( actual pay ) படி கணக்கிட தேவையான  நடவடிக்கையை  இலாகா  செயலர்  ( DOT ) எடுப்பார்.



4G சேவை  வழங்குதல்
உரிய  நடவடிக்கை எடுத்திட உறுதியளித்துள்ளார்.

2வது  சம்பளமாற்ற  குளறுபடிகள்
சரிசெய்திட தேவையான  நடவடிக்கையை  இலாகா  செயலர்
 ( DOT ) எடுப்பார்.

இன்றைய  சந்திப்பின்  தொடர்ச்சியாக  அமைச்சரையும்

இலாகா  செயலரையும்  கூட்டமைப்பு  தலைவர்கள் மீண்டும் 

சந்தித்து  பேசவுள்ளனர் .


ஒற்றுமைக்கு கிடைத்த பலன்;   

                  விழிப்பாய்  இருபோம் ;

                                 வென்றிடுவோம்.





Friday, February 23, 2018

சம்பளமாற்றம் - DOT மறுப்பு   


அனைத்து சங்கக்கூட்டமைப்பு சார்பாக சமர்ப்பிக்கப்பட்ட போராட்ட அறிவிப்பு - கோரிக்கைமனுவிற்கு நமது துறை (DOT) அளித்துள்ள பதில் கடிதம்.


1. சம்பளமாற்றம்: 


BSNL 2013-14 நிதியாண்டில் இருந்து தொடர்ந்து நட்டத்தில் உள்ளதால் சம்பளமாற்றம் கொடுக்க இயலாது. 

2. ஓய்வூதிய மாற்றம்:  


சம்பளமாற்றம் கொடுத்தபின் கொடுக்கப்படும். 

3. சென்ற சம்பளமாற்றத்தில் விடுபட்டுப்போனவை:


 அமைச்சகத்தின் பார்வைக்கு அனுப்பப்பட்டுள்ளது. 

4. டவர் கம்பெனி: 


BSNLலின் முழுக்கட்டுப்பாட்டில் செயல்படும் டவர் கம்பெனி 04.01.2018 அன்று அமைக்கப்பட்டு செயல்படத்தொடங்கியுள்ளது.

5. ஓய்வு வயதை 58டாக குறைப்பது: 


அப்படித்திட்டம் எதுவும் இல்லை. 


DOTஇன, மத்திய அரசின் தொழிலாளர் விரோத போக்கை முறியடிக்க கடும் போராட்டத்திற்கு தயாராவோம்.

Wednesday, February 21, 2018


ஊதிய மாற்றம் பிரதமர் அலுவலக விளக்கம்

BSNL ஊழியர்களுக்கு...
ஊதிய மாற்றம் வழங்குவது சம்பந்தமாக
22/12/2017 அன்று நமது NFTE சங்கம்
பிரதமர் அவர்களுக்கு கடிதம் எழுதியிருந்தது.  

DPE இலாக்காவிடமிருந்து நமது பொதுச்செயலருக்கு
அதற்கான பதில் 31/01/2018 அன்று அனுப்பப்பட்டுள்ளது.

பொதுத்துறை ஊழியர்களுக்கான 
8வது ஊதிய மாற்றம் சம்பந்தமாக
24/11/2017 அன்று DPE தனது 
வழிகாட்டுதலை வெளியிட்டுள்ளதென்றும்…
அதில் குறிப்பிடப்பட்டுள்ள வழிகாட்டுதல்களில் விலக்குப்பெறவேண்டுமெனில்
மத்திய அமைச்சரவையின் ஒப்புதல் வேண்டுமெனவும்….
அதற்காக DOTஐ அணுக வேண்டுமெனவும்
நமது பொதுச்செயலருக்கு கடிதம் அறிவுறுத்தியுள்ளது.

DOTஐச் சந்தித்து அதன் மூலம் ஊதிய மாற்றம் அளிப்பதற்கு
BSNLக்கு நட்டத்திலிருந்து விலக்கு என்னும் பரிந்துரை பெறப்பட்டு
மத்திய அமைச்சரவையின் ஒப்புதல் பெறப்பட்ட பின்பே
நமது ஊதிய மாற்றம் என்பது நடைமுறைக்கு வரும்.
அதற்குள் இந்த அரசின் காலம் முடிந்தாலும் முடிந்து விடலாம்.
ஊதிய மாற்றம் நமது காலம் முடிவதற்குள் வந்தால் சரிதான்.

Thursday, February 15, 2018



மாவட்ட செயற்குழு




நடைபெறும் இடம் தல்லாகுளம்      
                   வாடிக்கையாளர் 
                       சேவைமையம்
                         மனமகிழ்மன்றம் 

        நாள்:20.02.2018 செவ்வாய் கிழமை

        நேரம்:காலை 10.00 மணிக்கு 


ஆய்படு பொருள் :-

  • தணிக்கை செய்யப்பட்ட7 வது மாவட்ட மாநாடு வரவு செலவு கணக்கை சமர்ப்பித்தல் 
  • அமைப்பு நிலை.
  • அகிலஇந்திய மாநாடு சார்பாளர் தேர்வு.
  • தீர்க்கப்படவேண்டிய பிரச்சனைகள்... 
  • மலைப்பகுதி Tenure  முடித்த தோழர்கள் மாற்றல் பிரச்சினை .  
  • டிசம்பர்-12,13இரண்டு நாள் வேலைநிறுத்த போராட்ட ஆய்வு 
  • விதிப்படி வேலை/ஒத்துழையாமை இயக்க போராட்டத்தை தீவிரப்படுத்துதல் 
  • இன்ன பிற.......    


அனைத்து  மாவட்ட சங்க நிர்வாகிகளும்,  

கிளைசங்க நிர்வாகிகளும் 

முன்னணி தோழர்களும் கலந்து கொண்டு
சிறப்பிக்க வேண்டுகிறோம்.    
                              


   தோழமையுள்ள. 
                                      
   G. ராஜேந்திரன். 
                                     
 மாவட்ட செயலர் 
                                                    
  குறிப்பு :

அனைத்து தோழர்களும், தோழியர்களும் குறித்த நேரத்திற்கு வந்து மாவட்ட  செயற்குழுவை சிறப்பிக்க  வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம்.

கிளைமாநாடு நடத்த வேண்டிய கிளைகள் தங்கள் கிளைமாநாடு நடத்துவது தொடர்பாக மாவட்ட செயற்குழுவில் தேதி அறிவிக்கும் படி கேட்டுக்கொள்கிறோம்.

Tuesday, February 13, 2018

NFTCL 
மாநில செயற்குழு முடிவுகள்


                       கோரிக்கை மனு – 20/02/2018  ஒவ்வொரு மாவட்டத்திலும்

ஒப்பந்த ஊழியர்களுக்குப் பல்வேறு பிரச்சினைகள் சிக்கல்கள் உள்ளன.

அவற்றை முழுமையாகத் தொகுத்து அந்தந்த மாவட்ட நிர்வாகத்திடம்

கோரிக்கை மனு அளிக்க வேண்டும். அதன் நகல் அந்தந்த பகுதி 

தொழிலாளர் நல ஆணையர்களுக்கும் ...(ALC/RLC)  சென்னை DY.CLC

துணைத் தொழிலாளர்  ஆணையருக்கும்  அனுப்பப்பட வேண்டும்.


பெருந்திரள் போராட்டம் – 02/03/2018…

தமிழகம் முழுவதும் கடந்த இரண்டு மூன்று மாதங்களாக

சம்பளம்  பட்டுவாடா செய்யப்படாத கொடுமையைக் கண்டித்தும்

ஒவ்வொரு மாதமும் 7ம்தேதி சம்பளம் வழங்கக்கோரியும்

ஆட்குறைப்பு என்ற தமிழ் மாநில நிர்வாகத்தின் கவைக்குதவாத

புதிய பூச்சாண்டித்தனத்தைக் கடுமையாக கண்டித்தும்….


சென்னையில் உள்ள தமிழ்மாநில முதன்மைப்பொதுமேலாளர்

அலுவலகம் முன்பாக  தமிழகம் முழுவதுமுள்ள ஒப்பந்த ஊழியர்கள்

திரண்டு பெருந்திரள் போராட்டம் நடத்துவது.


தோழர்களேஅணி திரள்வோம்…. அநீதி களைவோம்….

Friday, February 09, 2018



தேசிய தொலைத்தொடர்பு

ஒப்பந்த தொழிலாளர் சம்மேளனம்

தமிழக மாநிலச்சங்கம்
----------------------------------------------------

மாநில செயற்குழுக் கூட்டம்

---------------------------------------------------
10/02/2018 – சனிக்கிழமை 

 காலை 10 மணி

ஆனந்த மகால் – கீரனூர் – 

(திருச்சி)

----------------------------------------------------
-: ஆய்படு பொருள் :-

தொடரும் சம்பளப்பிரச்சினை

அமைப்பு நிலை

மாவட்டப்பிரச்சினைகள்

ஆட்குறைப்பு - போராட்டத்திட்டம்

நிதிநிலை

இதர பிரச்சினைகள்
----------------------------------------------------
சிறப்புரை

தோழர் C.K.மதிவாணன்

NFTCL அகில இந்தியப் 

பொதுச்செயலர்

தோழர்களே... வருக...