NFTCL
மாநில செயற்குழு முடிவுகள்
கோரிக்கை மனு – 20/02/2018
ஒவ்வொரு மாவட்டத்திலும்
ஒப்பந்த
ஊழியர்களுக்குப் பல்வேறு பிரச்சினைகள் சிக்கல்கள் உள்ளன.
அவற்றை முழுமையாகத் தொகுத்து அந்தந்த மாவட்ட நிர்வாகத்திடம்
கோரிக்கை
மனு அளிக்க வேண்டும். அதன் நகல் அந்தந்த பகுதி
தொழிலாளர்
நல ஆணையர்களுக்கும் ...(ALC/RLC) சென்னை DY.CLC
துணைத்
தொழிலாளர் ஆணையருக்கும் அனுப்பப்பட
வேண்டும்.
பெருந்திரள் போராட்டம் – 02/03/2018…
தமிழகம்
முழுவதும் கடந்த இரண்டு மூன்று மாதங்களாக
சம்பளம் பட்டுவாடா செய்யப்படாத கொடுமையைக் கண்டித்தும்…
ஒவ்வொரு
மாதமும் 7ம்தேதி சம்பளம் வழங்கக்கோரியும்…
ஆட்குறைப்பு
என்ற தமிழ் மாநில நிர்வாகத்தின் கவைக்குதவாத
புதிய
பூச்சாண்டித்தனத்தைக் கடுமையாக கண்டித்தும்….
சென்னையில் உள்ள தமிழ்மாநில முதன்மைப்பொதுமேலாளர்
அலுவலகம் முன்பாக தமிழகம் முழுவதுமுள்ள ஒப்பந்த
ஊழியர்கள்
திரண்டு பெருந்திரள் போராட்டம் நடத்துவது.
தோழர்களே… அணி திரள்வோம்…. அநீதி
களைவோம்….
No comments:
Post a Comment