Total Pageviews

Friday, March 13, 2015


செய்திகள் 


நலிவடைந்த நிலையில் உள்ள 65 பொதுத்துறைகளில்
5 பொதுத்துறைகளைமூடுவதற்கு  அரசு உத்தேசித்துள்ளதாக கனரக தொழில் அமைச்சர் கேள்வி நேரத்தில் கூறியுள்ளார் . இவற்றில் MTNL ,
AIR INDIA மற்றும் HMT  ஆகிய பிரபலமான நிறுவனங்களும் அடங்கும் . ஏனைய நிறுவனங்கள் தொடர்ந்து நட்டத்தை  சந்தித்து தொழில் வாய்ப்பை இழந்த நிலையில் சென்ற
ஆண்டு லாபம் காட்டியுள்ள MTNL நிறுவனமும் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது கேள்விக்குறியது . BSNL மற்றும் MTNL  இணைப்பிற்கானமுன்னோட்டமான இந்த அறவிப்பு இருக்கலாம் .       


TRAI முடிவின்படி மார்ச் 2015 முதல் IUC  கட்டணம் ஒழிக்கபடுவதால் உழியர்களுக்கு வழங்கப்பட்ட  இலவச SIM க்கு  தனியார் தொலைபேசியை அழைப்பதற்கான வசதி தரப்பட வேண்டும் என நமது  மத்திய சங்கம் நிர்வாகத்தைக் கேட்டுக்கொண்டுள்ளது .

                                                                
                                                                           S . சிவகுருநாதன் ,மாவட்ட செயலர் 

Thursday, March 12, 2015


பி.எஸ்.என்.எல் சொத்து மதிப்பு 

 மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி 10.03.2015 
மாநிலங்களவை யில் தெரிவித்த தகவல் முதல் பத்து இடங்களில் இந்திய நிறுவனங்கள் விவரம் .


1.ரிலையன்ஸ்  ரூ. 3,67,583 கோடி 

2.இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன்  ரூ. 2,52,413 கோடி 

3.ஹெச்டிஎப்சி ரூ. 2,25,757 கோடி 

4.பவர் கார்ப்பரேஷன் லிமிடெட்  ரூ 1,94,164 கோடி 

5.என்டிபிசி லிமிடெட்  ரூ 1,79,554 கோடி 

6.ஆர்இசிஎல்  ரூ 1,52,852 கோடி 

7.பவர் கிரிட் கார்ப்பரேஷன்  ரூ. 1,39,589 கோடி 

8.எல்ஐசி ஹவுசிங் பைனான்ஸ் 95,777 கோடி 

9.செயில் 91,961 கோடி 

10.பிஎஸ்என்எல் 89,333 கோடி 

                                                                    S . சிவகுருநாதன் ,மாவட்ட செயலர் 

Wednesday, March 11, 2015

NFTE - BSNL 
மதுரை மாவட்ட அவசர செயற்குழு 11.03.2015 
PHOTOS 







































 S.சிவகுருநாதன், மாவட்ட செயலர்.   

Tuesday, March 10, 2015


14.03.2015 
மதுரை மாவட்ட FORUM சார்பாக கன்வென்சன் 
நாடு தழுவிய ஆர்ப்பாட்டம் 
12.03.2015அன்று ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடங்கள் 
காலை 10.00 மணி 
லெவல் 4 , EMM , 
வில்லாபுரம் ,எல்லிஸ் நகர் ,
தேனி ,திண்டுக்கல் 
மதியம் 1.00 மணி 
GM அலுவலகம் மதுரை. 

S.சிவகுருநாதன் ,மாவட்ட செயலர்  

Friday, March 06, 2015



NFTE - BSNL 
மதுரை மாவட்டச் சங்கம் 

சர்வதேச உழைக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள்

சர்வேதேச உழைக்கும் மகளிர் தின வாழ்த்துக்களை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் NFTE மதுரை மாவட்டச் சங்கம் பெருமை கொள்கிறது !! 

அமெரிக்காவில் தொழிற்சாலைகளில் 16 மணி நேரம் வேலை, குறைந்த கூலி, மோசமான பணிச்சுழல் காரணமாக பெண்கள் வீதிக்கு வந்து போராடியதன் விளைவாக மார்ச் 8 சர்வதேச  உழைக்கும் மகளிர் தின உருவானது.  உழைக்கும் மகளிர் போராட்டத்தில் தான், ஆணுக்கு நிகராக பெண்ணும் சலுகைகளைப் பெற முடிந்தது.

1990-ல் இந்திய மகளிர் ஆணையம் தொடங்கபட்டது. இந்தியாவில் 1993ல் நகர்பாலிக திட்டம் மூலமாக பஞ்சாயத்துகளில் பெண்களுக்கு இட ஒதிக்கீடு கிடைத்தது. இந்தியாவில் 53%பெண்கள் தலைமைப் பொறுப்புகளில் இருக்கிறார்கள் ,தற்பொழுது குடும்ப வன்முறை என்பது குறைந்துள்ளது .

             "ஏட்டையும் பெண்கள் தொடுவது தீமையென்றெண்ணி 
             இருந்தவர் மாய்ந்து விட்டார்  - வீட்டுக்குள்ளே 
             பெண்ணை பூட்டி வைப்போம் என்ற 
             விந்தை மனிதர் தலைகவிழ்ந்தார் "                -புரட்சிக்கவி பாரதியார் 


பெண் என்பவள் ஒரு ஆணின் "Bettar Half " ஆகும். அந்தப் பாதியின்  அழிவில் மீதியின் வாழ்வு நிலைப்பதில்லை. பெண்ணினத்தின் வாழ்வும் தாழ்வும் சமூகத்தின் உயர்வும் அழிவுமாகும்.

               "கண்கள் இரண்டில் ஒன்றைக் குத்தி 
               நல்ல காட்சி கெடுத்திடலாமோ?"                  -புரட்சிக்கவி பாரதியார் 


    பெண் விடுதலை என்பது ஆண்களின் சிந்தனை மாற்றத்தில் உருவாகும் புரிதலாகும். அந்தப் புரிதல் தான் புதிய பெண் உலகம் படைக்கும்

சர்வதேச மகளிர் தின  புரட்சிகர வாழ்த்துக்களுடன் !


தோழியர். T.பரிமளம்
மாநிலத் துணைத் தலைவர்

தோழியர் . இந்திராணி சுந்தரராஜ் 
மாவட்ட துணை செயலர் 


தோழியர் . K. R. கலாவதி 
மாவட்டத் துணைத் தலைவர் 

தோழியர் . பாத்திமா பீவி 
கிளைத் துணை செயலர்

தோழர். G. ராஜேந்திரன் 
   மாவட்டத் தலைவர் 


தோழர். S. சிவகுருநாதன் 

மாவட்டச் செயலர் 

Thursday, March 05, 2015




TTA... இலாக்கா... போட்டித் தேர்வு...


TTA இலாக்காப் போட்டித்தேர்வுக்கான அறிவிப்பு

தமிழ் மாநில நிர்வாகத்தால் வெளியிடப்பட்டுள்ளது.

  • தேர்வு 07-06-2015 அன்று நடைபெறும்.
  • இரண்டு பகுதிகள் அடங்கிய ஒரே கேள்வித்தாள்.
  • தேர்வு நேரம் மூன்று மணி நேரம்.
  • OBJECTIVE TYPE - குறியீட்டு முறையில் கேள்விகள் கேட்கப்படும்.
  • தவறான பதில்களுக்கு NEGATIVE MARKS 25 சத மதிப்பெண்கள் குறைக்கப்படும்.
  • தமிழகத்தில் மொத்த காலியிடங்கள் 439.
  • மாவட்ட வாரியான காலியிடங்கள் குறிப்பிடப்படவில்லை.
  • SC/ST காலியிடங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.
  • உடல் ஊனமுற்ற தோழர்களுக்கு 3 சத இட ஒதுக்கீடு செய்யப்படும்.
  • 01-07-2014 அன்று 55 வயதிற்கு கீழ் இருக்க வேண்டும்.
  • 01-07-2014 அன்று மொத்தம் 5 ஆண்டுகள் சேவை இருக்க வேண்டும்.
  • TM மற்றும் அதற்கு மேல் உள்ள கேடர்களில் சம்பள விகிதம் 9020 - 17430 ம் அதற்கு மேலும் இருக்க வேண்டும்.
  • கல்வித்தகுதி +2 அல்லது இரண்டாண்டு ITI அல்லது மூன்றாண்டு DIPLOMA இருக்க வேண்டும்.
  • விண்ணப்பங்கள் பரிந்துரைக்கப்பட்டு அனுப்பப்பட வேண்டும். பரிந்துரை இல்லாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
  • விண்ணப்பிக்க கடைசி தேதி 20-04-2015.
                                                                         S.சிவகுருநாதன், மாவட்ட செயலர்   

Tuesday, March 03, 2015


GPF... மார்ச் - 7 க்குள் விண்ணப்பிக்க வேண்டும்...

  
நமது தமிழ் மாநிலத்தில் ERP... ESS... பராமரிப்பு பணிகள்
இன்னும் தொடர்ந்து நடைபெற்று வருவதால் ஊழியர்கள் நேரடியாக
GPFயை... ERP... ESS... இல் விண்ணப்பிக்க முடியாது. 

எனவே... 2015 மார்ச் மாதம்  GPF வேண்டுவோர் முன்பு போல் 
விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து நமது மதுரை  பொது மேலாளர் அலுவலகத்தில் மார்ச் - 5 க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இம்மாத GPF விண்ணப்பத்தை ஊழியர்களிடம் பெற்று...
7ந்- தேதிக்குள் மாநில அலுவலகத்திற்கு அந்த பட்டியலை அனுப்ப
வேண்டும் என்று மாநில நிர்வாகம் உத்திரவிட்டுள்ளது.

                                                                                     S.சிவகுருநாதன்,மாவட்ட செயலர்