Total Pageviews

Thursday, June 21, 2018



செய்திகள்


Telecom Technician கேடர்உருவாக்கப்பட்டதிலிருந்து. 

பணிக்கு இதுவரை வெளியாட்கள் யாரும் 

நியமிக்கப்படவில்லை என்றும்.

கடந்த 12/06/2018 அன்று நடைபெற்ற 36வது (NJCM) 
       
        தேசிய கூட்டுக் குழுக் கூட்டத்தில் ஊழியர் தரப்பில் இருந்து

Telecom Technician கேடருக்கு ஆளெடுப்பு செய்திட கோரியிருந்தோம்.

அதனை தொடர்ந்து நமது மத்திய சங்கம் Telecom Technician  கேடருக்கு 

ஆளெடுப்பு செய்திடக் கோரி  20/06/2018 அன்று Director(HR) அவர்களுக்கு 

கடிதம் எழுதியுள்ளது. BSNL போன்ற பொதுத்துறைக்கு குறைந்த பட்சம் 

(Degree) பட்டய படித்த தகுதியோடும் உள்ள இளைஞர்கள் குறைந்த 

ஊதியத்தில் பணியாற்றவும்,  நிறைய இளைஞர்கள் காத்திருக்கிறார்கள் 

என்றும், அவர்கள் பணியமர்த்தப்பட்டால் குறைந்தபட்சம் 10 

ஆண்டுகளாவது நமது நிறுவனத்தின் ஊழியர்களாக நீடிப்பார்கள் என்றும் 

இதனால் நமது சேவைக்கும், நிறுவனத்திற்கும்பயனுள்ளதாக இருக்கும்.

.இத்தகைய சூழ்நிலையில்  இக்கோரிக்கையை முன்னுரிமை 
அடிப்படையில் பரிசீலிக்க வேண்டும் எனவும் மத்திய சங்கம் தனது 
கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது.
-------------------------------------------------------------------------------------------------------------------------
             
  JAO கேடருக்கான புதிய ஆளெடுப்பு விதிகளை உருவாக்குவது

சம்பந்தமாக நமது மத்திய சங்கம் இன்று 20.06.2018 அன்று Director(Finance)

அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளது.
      


v  மொத்த பதவிகளில் 50 சதவீத ஊழியர்களுக்கே ஒதுக்க வேண்டும்.

v  ஊழியர்களுக்கு   அவர்களது கேடரில் ஐந்து வருடங்கள் சேவையோடு எவ்வித ஊதிய கட்டுப்பாடும்  இன்றி JAO தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும்.

v  ஊழியர்களுக்கு 55வயது வரை தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும்.

v  ஸ்கிரீனிங் தேர்வில் தேர்வானவர்களையும் ,DOT காலத்தில் நடைபெற்ற JAO-1 தகுதித்தேர்வில் வெற்றி பெற்றவர்களையும் 40 சதவீத  இலாகா போட்டித்தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும்.

v  ஒவ்வொரு பரிட்சைக்கும் 30சதவீத  தகுதி மதிப்பெண்ணாகவும் , 37 சதவீத மொத்த   மதிப்பெண்ணாகவும் ஏற்றுக்கொள்ளவேண்டும். 

போன்ற கோரிக்கைகளை  புதிய ஆளெடுப்பு விதிகளில் இணைக்க நடவடிக்க 

எடுக்க வேண்டும் என்று 

நமது மத்திய சங்கம் NFTE -BSNL கடிதத்தில் 

குறிப்பிட்டுள்ளது.


Saturday, June 16, 2018




சமத்துவம் தழைக்கட்டும்

சகோதரத்துவம் வளரட்டும்

   அனைவருக்கும்

 புனித ரமலான்

 நல்வாழ்த்துக்கள்



Wednesday, June 06, 2018


தோழர்.ஜெகன் நினைவு தினம் ஜூன் -7


தோழர்.ஜெகன் தோழமையின் இலக்கணம்  நீங்கள் இல்லை....

தோழர்.ஜெகன் இங்கு இல்லை....

தோள்கொடுக்கும் தோழமையுள்ள தோழர்கள் இங்கு இல்லை....

தோழர்.ஜெகன் இங்கு இல்லை....

அவர் பெற்ற சலுகைகள் இங்கு இல்லை....

தோழர்.ஜெகன் இங்கு இல்லை....

தோழர்களிடம் சகிப்புத்தன்மையும் இங்கு இல்லை....

தோழர்.ஜெகன் இங்கு இல்லை....

தோழர்.ஜெகன் போன்ற தோழமை பண்பு யாரிடமும் இங்கு இல்லை....

தோழர்.ஜெகன் இங்கு இல்லை....

தோழர்.ஜெகன் போன்ற நேர்மை யாரிடமும் இங்கு இல்லை....

தோழர்.ஜெகன் இங்கு இல்லை....

தோழர்.ஜெகன் போன்ற எளிமையான தலைவர் யாரும் இங்கு இல்லை....

தோழர்.ஜெகன் இங்கு இல்லை....

தோழர்.ஜெகன் போன்ற தொழிற்சங்க வழிகாட்டி யாரும் இங்கு இல்லை....

தோழர்.ஜெகன் இங்கு இல்லை....

தோழர்.ஜெகன் போன்ற பணம் பதவி ஆசை இல்லாத
தலைவர் யாரும் இங்கு இல்லை....

தோழர்.ஜெகன் போன்ற தலைவர் இல்லாதது நமது தொழிற்சங்கத்திற்கும் இலாக்காவிற்க்கும் மாபெரும் சரிவு.

தோழர். ஜெகன் நினைவை போற்றுவோம்.




Non-Executive BSNL ஊழியர்களுக்கு
இலவச சர்வீஸ் SIMல் கூடுதல் வசதி



BSNL-ல் பணிபுரியும் Nnon-Executive ஊழியர்களுக்கு மாதந்தோறும் ரூ.200 மதிப்பிலான இலவச அழைப்புகளுக்கான தொகைக்குப் பதிலாக இனி மூன்று மாதம் செல்லுபடியாகும் (90 நாட்கள்) வகையில் (ரூ.600 மதிப்பு)  தினந்தோறும் 1GB Data, 100 SMS மற்றும் அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் வரம்பற்ற (Unlimited) Voice கால் வசதியுடன் கூடிய இலவசங்களை வழங்கி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. 


கடந்த ஆண்டு நவம்பர் 2017ல் மத்திய சங்கம் 35 வது NJCMல் எடுத்து விவாதிக்கப்பட்டதன் அடிப்படையில் இவ்வுத்தரவை மத்திய நிர்வாகம் இன்று வெளியிட்டுள்ளது. 


நமது மத்திய சங்கத்திற்கு நன்றி.........

Monday, May 28, 2018


சட்டரீதியான போராட்டம்


     
                  
செல்கோபுரங்களைத் தனிநிறுவனமாகப் பிரிக்கும்  

அரசின் முடிவினை எதிர்த்து  அனைத்து சங்கங்களின் 

முடிவின்படி டெல்லி உயர்நீதிமன்றத்தில்AIBSNLEA, SNEA 

மற்றும் AIGETOA அதிகாரிகள் சங்கங்களின் சார்பாக 

வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு 25/05/2018 

அன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.  

புதிய செல்கோபுரம் துணைநிறுவனம் ஆரம்பிப்பது 

என்பது நீதிமன்ற முடிவிற்கு உட்பட்டது என டெல்லி 

நீதிமன்றம் உத்திரவிட்டுள்ளது.

அடுத்த கட்ட விசாரணை 25/09/2018 அன்று நடைபெறும்.

Friday, May 18, 2018





 NFTE- BSNL
மாவட்ட செயற்குழு

மதுரை தொலைத்தொடர்பு மாவட்டம்

அருமை தோழர்களே ! தோழியர்களே  !

வணக்கம்,
                
        நமது மாவட்ட செயற்குழு வருகின்ற 22.05.2018 

அன்று செவ்வாய் கிழமை காலை 10.00  மணியளவில் 

திருமங்கலத்தில் உள்ள V.S.R. திருமண மண்டபத்தில்  

மாவட்ட தலைவர் தோழர். S. சிவகுருநாதன், 

தலைமையில் நடைபெற உள்ளது. அனைத்துகிளை 

செயலர்கள் மாவட்ட, மாநில சங்க நிர்வாகிகள் 

மற்றும்முன்னணி தோழர்கள் கலந்து கொண்டு 

சிறப்பிக்க வேண்டுகிறோம்.


செயற்குழு ஆய்படு பொருள் :-


 Ø முன்றாவது ஊதியமாற்றம் மற்றும் தனிடவர் துணைநிறுவனம்.

Ø அகிலஇந்திய மாநாடு முடிவுகள்.

Ø  அமைப்பு நிலை.

Ø  இன்னபிற ......

***************************************************************** 
முன்றாவது ஊதியமாற்றம்

மற்றும் தனிடவர் துணைநிறுவனம்

சிறப்புரை:-
தோழர்.K. நடராஜன் மாநிலசெயலர்.
----------------------------------------------------------------------------------------------------


அகிலஇந்திய அளவில் நமது இயக்கம்

விரிவுரை:
தோழர்.P.காமராஜ்

அகிலஇந்திய சமேளன செயலர்
---------------------------------------------------------------------------------------------------------------



அகிலஇந்திய மாநாடு முடிவுகள்

நிறைவுரை:

தோழர்.S.பழனியப்பன்

அகிலஇந்திய உதவி தலைவர்
***************************************************************************

நகல் :-


கிளை செயலர்கள் ,மாவட்ட சங்க நிர்வாகிகள், 

தோழர் .K. நடராஜன், மாநிலசெயலர்.

முதன்மை பொது மேலாளர், BSNL மதுரை.




தோழமையுள்ள.

G.ராஜேந்திரன்
NFTE –BSNL
மாவட்ட செயலர்