Total Pageviews

Saturday, February 28, 2015மார்ச் 17... காலவரையற்ற வேலைநிறுத்தம்...

ஒத்திவைப்பு...

ஏப்ரல் 21 & 22 இரண்டு நாட்கள் வேலை 

நிறுத்தம்... 

கூட்டமைப்பு முடிவு...நமது ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சங்கங்களின் 
கூட்டமைப்பின் கூட்டம் நமது பொதுச் செயலர் மற்றும் கூட்டமைப்பின்
தலைவர் தோழர். C.சந்தேஷ்வர் சிங் அவர்களின் தலைமையில்
27-02-2015 அன்று நடைபெற்றது. அனைத்து சங்க பிரதிநிதிகள் 
பங்கேற்ற இக்கூட்டத்தில் காலவரையற்ற வேலை நிறுத்தம்
தொடர்பாக நீண்ட... நெடிய... விவாதம் நடைபெற்றது.

இன்றைய சூழ்நிலைகளை... கருத்தில் கொண்டு... 
நடைபெற்ற... இந்த விவாதத்தில்... 
கீழ்க்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

 • ஏப்ரல் 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் இரண்டு நாட்கள் வேலை நிறுத்தம் நடத்துவது.
 • வேலை நிறுத்தத்திற்கான அறிவிப்பை மார்ச் 12 ஆம் தேதி வழங்குவது.
 • மார்ச் 12 ஆம் தேதி நாடு முழுவதும் மாவட்ட... மாநில... தலை நகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்துவது.
 • மார்ச் 12 ஆம் தேதி மாநில தலை நகரங்களில் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பை நடத்துவது.
 • மாநில மற்றும் மாவட்ட அளவிலான கருத்தரங்கங்களை நடத்தாத மாநிலங்கள் மற்றும் மாவட்டங்கள் உடனடியாக கருத்தரங்குகளை நடத்திட வேண்டும்.
 • பொது மக்களிடம் இருந்து கையெழுத்துக்களை பெறுவதற்கான கடைசி தேதி 31-03-2015 என்று நீட்டிக்கப்பட்டுள்ளது. 
                                  
                                                  S.சிவகுருநாதன்,மாவட்ட செயலர்   


            BSNL விரிவாக்கம் 

BSNL நிறுவனம் தனது விரிவாக்கத்திற்காக
ரூ.11,000/= கோடி முதலீடு செய்யவுள்ளது என்று  
இலாக்கா அமைச்சர் திரு.இரவிசங்கர் பிரசாத்
 நாடாளுமன்றத்தில் 25/02/2015 அன்று 
எழுத்து வடிவில் தகவல் அளித்துள்ளார்.

தொலைபேசி நிலையங்களை நவீனப்படுத்துவது...
 வலைப்பின்னல் அமைப்பை NETWORK  மேம்படுத்துவது. 
நக்சலைட்கள் தடம் பதித்த பகுதிகளில்
 செல் கோபுரங்கள் அமைப்பது 
போன்ற பணிகளில் இந்த முதலீடு செய்யப்படும்.

BSNL மற்றும் MTNL  நிறுவனங்கள் 
தங்கள் சேவையை மேம்படுத்துவதற்கும்.. 
வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப தரமான சேவை அளிக்கவும்  உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு  வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.                           அவர் அளித்துள்ள தகவல்களின்படி
 • ரூ.4804 கோடி செலவில் 14421 2G சேவை செல் கோபுரங்களும்...10605 3G சேவை செல் கோபுரங்களும் அமைக்கப்படும்.
 • ரூ.600 கோடி செலவில் தரை வழி சேவை மேம்படுத்தப்படும்,,, மற்றும்  தொலைபேசி நிலையங்கள்  நவீனப்படுத்தப்படும்...
 •  ரூ.350 கோடி செலவில் தொலைபேசி நிலையங்களில் C-DOT  மூலம் பழைய தொழில்நுட்பங்கள் புதிய தொழில் நுட்பங்களாக மாற்றப்படும்...
 •  ரூ.3568 கோடி செலவில் நக்சல் பகுதிகளில் செல் கோபுரங்கள் அமைப்பதற்கான பணி BSNLக்கு வழங்கப்படும்...
 •  ரூ.1976/= கோடி செலவில் அருணாச்சலப்பிரதேசம் மற்றும் அஸ்ஸாம் மாநிலங்களில் செல் சேவை வழங்கப்படும்.
 • டெல்லியில் 1080 3G கோபுரங்களும்.. 800  2G கோபுரங்களும்..மும்பையில் 566  2G கோபுரங்களும் அமைக்கப்படவுள்ளன.
        நாடாளுமன்றப் பேரணியை 
        நாம் நடத்திய  அதே தினத்தில் அமைச்சர் மேற்கண்ட 
        அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

        ஆள்வோர்கள்  சொல்லோடு இல்லாமல்...
         நிச்சயம் BSNL உயிர்த்தெழும்...

                                                                  S.சிவகுருநாதன் மவ்ட்டசெயலர்  

Thursday, February 26, 2015
நாடாளுமன்றம் நோக்கிச் சென்ற நமது பேரணி...

பனி உறங்கும் காஷ்மீர் முதல் அலை உறங்கா குமரி வரை...
 பணி செய்யும் தோழர்கள்  தலைநகரில் சங்கமித்த காட்சி...
 
                                  இடர்பாடு களைவோம்...
                              வேறுபாடு மறப்போம்... என...
                     வீதி இறங்கிய தலைவர்கள் கூட்டம்...


BSNL காத்திட... தேசம் காத்திட...
பொதுத்துறை... நாசம் தடுத்திட...
காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை...
பணி செய்யும் 5000க்கும் அதிகமான தோழர்கள்
தலைநகர் டெல்லியில் 25-02-2015 அன்று
தலைமையிடமாம் நாடாளுமன்றம் நோக்கி...
தலைவர்கள் வழி நடத்திட...
ஓன்று திரண்டு... ஓரணியாய் சென்று...
பிரதமர் அலுவலகத்தில்... 
லட்சக்கணக்கான கையெழுத்து...
பிரதிகளை சமர்ப்பித்துள்ளனர்...

நாளொரு ஆடையும்... பொழுதொரு மேடையுமாக உள்ள...
நம்மை ஆள்வோர்கள்...
நமது கோரிக்கைகளை செவி மடுக்க வேண்டும்...
நம்மைத் திரும்பி பார்க்கக் கூட நேரமில்லை யெனில்...
மார்ச் -17 காலவரையற்ற வேலை நிறுத்தம்...
கட்டாயம் இவர்கள்...
கண்களையும்... காதுகளையும்... திறக்கும்...
.


                                                                                S. சிவகுருநாதன் மாவட்ட செயலர் 

Thursday, February 19, 2015


TTA இலாக்காத்தேர்வு 

TTA இலாக்கா போட்டித் தேர்வை நடத்துவதற்கு
 மாநில நிர்வாகங்களை டெல்லி தலைமையகம் கேட்டுக்கொண்டுள்ளது.

 • 07/03/2015க்குள் தேர்வு பற்றிய அறிவிப்பு வெளியிடப்படும் 
 • 07/06/2015 அன்று நாடு முழுக்க தேர்வு நடைபெறும்.
 • தேர்வு நடந்த 3 மாதங்களுக்குள் 07/09/2015க்குள் முடிவுகள் வெளியிடப்படும்.
 தோழர்கள்..  தயராகவும்..

S .சிவகுருநாதன் ,மாவட்ட செயலர் 

ERP - பிரச்சினைகள் தீர்வு 

ERP அமுல்படுத்தப்பட்ட பல மாநிலங்களில் பல்வேறு பிரச்சினைகள் எழுந்தன. இவை யாவும் சம்பந்தப்பட்ட  மாநிலங்களால் சுட்டிக்காட்டப்பட்டு தற்போது அந்த பிரச்சினைகள் தீர்க்கப்பட்டுள்ளன என்று டெல்லி தலைமை அலுவலகம் 17/02/2015 அன்று வெளியிட்டுள்ள கடிதக்குறிப்பில் கூறியுள்ளது.
அதன்படி...
 • வீட்டு வாடகைப்படி கணக்கீட்டில் ஏற்பட்ட குளறுபடி சரி செய்யப்பட்டுள்ளது.
 • ஒரு மாதம் முழுமையும் விடுப்பில் சென்றவர்களுக்கு போக்குவரத்துப்படி, தகுதி மேம்பாட்டுப்படி மற்றும் தொழில் மேம்பாட்டுப்படி TRANSPORT ALLOWANCE, PROFESSIONAL UP GRADATION ALLOWANCE மற்றும் SKILL UP GRADATION ALLOWANCE  ஆகியவை கிடையாது. தற்போது மேற்கண்டவை சரி செய்யப்பட்டுள்ளது.
 • மாற்றலில் செல்வோர் TA முன்பணம் பெறுவதற்கும், TA பில் செலுத்துவதற்கும் ERPயில் வசதிகள் இல்லை. தற்போது இந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
 •  அலைச்சல்படி என்னும் CONVEYANCE ALLOWANCE மற்றும் FURNISHING ALLOWANCE விண்ணப்பிக்கும் வசதி ERPயில் இல்லை. தற்போது தோழர்கள் ERP மூலம் விண்ணப்பிக்கலாம்.
 • வருமான வரி கணக்கீட்டில் வீட்டு வாடகைப்படி மற்றும் மருத்துவச்  செலவு ஆகியவற்றை கணக்கிடுவதில் நேர்ந்த தவறு சரி செய்யப்பட்டுள்ளது.
 • 01/08/2014க்குப்பின் பணியில் சேர்ந்தவர்களுக்கு GSLI என்னும் LIC ஆயுள் காப்பீடு கிடையாது. தற்போது இது சரி செய்யப்பட்டுள்ளது.
 • DIES-NON என்னும் பணிக்கு வராத நாட்களுக்கு HRA மற்றும்  போக்குவரத்துப்படி  அனுமதிப்பது நிறுத்தப்பட்டுள்ளது.
 • GPFல் வட்டி கணக்கீடு மற்றும் பிடித்தத்தில் உண்டான தவறுகள் சரி செய்யப்பட்டுள்ளன.
 • உடல் ஊனமுற்ற ஊழியர்களுக்கான குறைந்த பட்ச போக்குவரத்துப்படியான ரூ.1000/- வழங்கவும் அவர்களுக்கு வருமான வரிச்சலுகை வழங்கவும் உரிய திருத்தங்கள் ERPயில் செய்யப்பட்டுள்ளன.

எப்படியோ ERP இடியாப்ப சிக்கல்கள்
 இனிதே தீர்ந்தால் சரிதான்...


                                       S .சிவகுருநாதன் ,மாவட்ட செயலர் 

Wednesday, February 18, 2015
                        பிப்ரவரி 25 நாடாளுமன்ற பேரணி 

                     S .சிவகுருநாதன் மாவட்ட செயலர் குடந்தையில் குவிந்திட்ட ...
சரம் சரமாய் ... சங்கமித்த ...
மீத்தேன் எதிர்ப்பு போராட்டம் ... இது 
என குவிந்திட்ட ... தோழர் ... தோழியர்க்கு
குவிந்த கரத்தோடு 
நன்றி ... நன்றி !

                                                                 S .சிவகுருநாதன் மாவட்ட செயலர் 


Saturday, February 14, 2015

சோறுடைத்த மண்... சுடுகாடு ஆவதா...
பசி தீர்க்கும் மண்... பாலைவனம் ஆவதா...
மீத்தேன் எதிர்ப்பு... தொடர் முழக்க போராட்டம்...


மீத்தேன்... எரிவாயு... எடுத்திடவே...!
விவசாயி... வயிறு... எரிப்பதா...?
ஓங்கி... எழுப்புவோம்... தொடர் முழக்கத்தை...!
       உறங்கிடும்... ஆட்சியாளர்கள்... உணரவே...!

தனக்கென... மட்டும் இல்லாது...!
சாமான்யனுக்கும்... போராடும் இயக்கம்...!
நம்... இயக்கம்... NFTE... என...!
உரக்க... கூவி... திரள்வோம்... குடந்தையில்...!

                                                                               
                                                                                  S .சிவகுருநாதன் ,மாவட்ட செயலர் பணி சிறக்க வாழ்த்துக்கள்

தமிழ் மாநில சங்கத்தின் 
புதிய மாநில தலைவர் 
தோழர் இலட்சம்
அவர்களுக்கும் 

புதிய மாநில துணைத்தலைவர்  
தூத்துக்குடி தோழர் பாலசுப்ரமணியன் அவர்களுக்கும் 

புதிய மாநில அமைப்பு செயலர் 
சேலம் தோழர் வெங்கட்ராமன்
அவர்களுக்கும்
பணி சிறக்க
 வாழ்த்துக்களை 
கடலூர் மாவட்ட சங்கம் 
தெரிவித்துக் கொள்கிறது.

                                   s  .சிவகுருநாதன், மாவட்ட செயலர் 

Sunday, February 08, 2015செய்திகள்
 • போனஸ் குழுக்கூட்டம் 10/02/2015 அன்று நடைபெறும்.
 • BSNL நேரடி நியமன ஊழியர்களுக்கான பணி ஓய்வுப்பலன்கள் அளிப்பதற்கான குறிப்பு நிர்வாகப் பரிசீலனையில் உள்ளது.
 • தமிழகத்திற்கு SIM CARD ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
 • கருணை அடிப்படை பணி வழங்குவதற்கான பணிகளை மார்ச் மாதத்திற்குள் முடிக்க நிர்வாகத்தை மாநிலச்சங்கம்  வலியுறுத்தியுள்ளது.
 • ERP இம்சைகளை சரி செய்ய மாநில நிர்வாகத்தை மாநில சங்கம் வலியுறுத்தியுள்ளது.
 • JTO தேர்வு முடிவுகளை வெளியிட உரிய நடவடிக்கைகள் தொடருகின்றன.
 • விடுபட்ட BSNL பணி  நியமன பிரச்சினைகள் பேசப்பட்டுள்ளன.
 • தமிழ் மாநில செயற்குழு 10/02/2015 அன்று சென்னையில் நடைபெறும்.
 • மீத்தேன் எரிவாயுத்திட்ட எதிர்ப்புக்கூட்டம் விரைவில் கும்பகோணத்தில் NFTE - TMTCLU சார்பாக நடைபெறும்.


                                                                         S . சிவகுருநாதன் , மாவட்ட செயலர் TTA - இலாக்காத்தேர்வு

TTA புதிய ஆளெடுப்பு விதிகளின்படி 2014ம் ஆண்டிற்கான
TTA  காலியிடங்களுக்கான இலாக்காப் போட்டித்தேர்வு
நடத்துவதற்கான ஒப்புதல் BSNL  நிர்வாகத்தால் வழங்கப்பட்டுள்ளது.
2014ம் ஆண்டிற்கான காலியிடங்களில் 50 சதம்
 இலாக்கா ஊழியர்களால் நிரப்பப்படும்.
ஏற்கனவே இந்த 50 சதத்தில் 40 சத காலியிடங்கள்  போட்டித்தேர்வாலும்
10 சத காலியிடங்கள்  உரிய கல்வித்தகுதி உள்ள ஊழியர்களால் நேரடி நியமனத்தாலும் WALK IN GROUP நிரப்பப்பட்டது. தற்போது இந்த 10 சத ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டுள்ளது.
01/07/2014 என்பது தகுதி தீர்மானிக்கும் தேதியாக இருக்கும்.
நாடு முழுக்க ஒரே தேதியில் தேர்வு நடைபெறும்.
இந்த தேர்வில் வெற்றி பெறும் தோழர்கள் தமிழகம் முழுவதும் பணி செய்யத்தயாராக இருக்க வேண்டும். ஏனெனில் TTA பதவி (CIRCLE CADRE ) மாநில மட்டப்பதவியாக மாற்றப்பட்டுள்ளது. ஆனால் இதே சம்பளம்தான் கிடைக்கும். இதே பெயர்தான் இருக்கும். பணி ஓய்வு,இறப்பு போன்றவற்றால் உருவாகும் TTA காலியிடங்களும் வருங்காலத்தில் மாநில மட்டப்பதவியாக மாற்றப்படும்.
தேர்வில் வழக்கம் போல் எதிர்மறை மதிப்பெண்கள் உண்டு.
குறைந்த பட்ச கல்வித்தகுதி +ஆகும்.
TTA  புதிய ஆளெடுப்பு விதிகளில் சங்கங்கள் கோரிய மாற்றங்கள்  எதனையும் நிர்வாகம் காதில் போட்டுக்கொள்ளவில்லை. குறைந்த பட்சம் தேர்வாவது நடக்கின்றதே என தோழர்கள் சமாதானம் அடைய வேண்டும். தகுதியுள்ள தோழர்கள் இன்றிலிருந்தே தேர்வுக்கும்,

மாற்றலுக்கும் மனதளவில் தயாராக வேண்டும்.

                                   S .சிவகுருநாதன் , மாவட்ட செயலர் 


Thursday, February 05, 2015மாநில செயலர்  தோழர்  பட்டாபிராமன் , தோழர்  முரளி , தோழர் மனோஜ் ஆகியோர்  தலைமை பொதுமேலாளர் அவர்களை  இன்று சந்தித்து  ERP ஐ  பற்றி அதில் உள்ள  தவறுகள்  பற்றி விவாதித்தனர்.


Circle Union discusses ERP issues with CGM :Com. Pattabi, Com. Murali and Com. Manoj met CGM and discussed the following issues, today.
ERP : Difference in GPF balance, TDS issues, difference in Family particulars, Union subscription, MOU loan recovery differences and delayed remittance, LIC, Welfare, non inclusion of Rs.500/- for NEs in January salary, delay in payment of Leave encashment to retired employees, delay in immediate relief payments to the family of emplyees dying in harness and all other issues that have come to the notice of the Circle Union have been discussed. Immediate, suitable, remedial measure has been assured.
JTO LICE results : The legal team will be instructed to expedite the Court case to enable early declaration of result
Compassionate appointments :Circle Union urged the Management to process all pending cases with in 31.03.2015.
Shortage of SIM cards : Out 7 lakh SIMs diverted from UP circle, 2 lakh SIMs have reached the circle and being distributed. Action for expediting the receipt of the remaining 5 lakh SIMs is being taken.
Left out POs case has also been discussed.

                                                                          S. சிவகுருநாதன், மாவட்ட செயளர்