Total Pageviews

Wednesday, September 27, 2017

      மாவட்ட செயற்குழு 
மற்றும் 
வத்தலகுண்டுகிளை, நிலக்கோட்டை கிளை,
 இணைந்த கிளை மாநாடுநமது மாவட்ட செயற்குழு மற்றும் வத்தலகுண்டு கிளை மாநாடு, வத்தலகுண்டு துரை புஷ்பம் திருமணமண்டபத்தில் நடைபெற்றது.  
மாவட்டசெயலர், தலைவர் மற்றும் மாவட்டசங்க, மாநிலசங்க நிர்வாகிகளின் அனல்பறக்கும் விவாதம்,             தோழர். அசோகராஜன் மாநில சங்க சிறப்பு அழைப்பாளர், மதுரை  மாவட்டத்தின் பிரச்சனைகளையும் ஏனைய  பிரச்சனைகளையும் விளக்கி சிறப்புரையாற்றினார். தோழர். நடராஜன் மாநிலசெயலர், தனக்கே உரித்தான பாணியில் சிறப்புரையாற்றினார்.

வத்தலகுண்டு கிளை மாநாட்டில் வத்தலகுண்டு கிளை செயலராக தோழர்.கணேசன் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். 
சிறப்பான விருந்து உபசரிப்பு ஏற்பாடு செய்த   வத்தலகுண்டு தோழர்களுக்கு நன்றி.
  

அகில இந்தியச்செய்தி 

3வது சம்பள மாற்றம், டவர் கம்பெனி தொடர்பாக விவாதிப்பதற்காக அனைத்துச்சங்கங்களின் செயலர்கள் கூட்டம் என்.எப்.பி.டி சங்க அலுவலகத்தில் 26.09.17 அன்று டெல்லியில் நடைபெற்றது. ஒருமித்த கருத்து எட்டப்படாததால் மீண்டும் 04.10.17 அன்று கூடுவதென முடிவு செய்யப்பட்டது.  

Tuesday, September 26, 2017

மாவட்டசெயற்குழு 

வத்தலகுண்டு 
துரை புஷ்பம் திருமண மண்டபம் ( அரசு மருத்துவமனை அருகில்) 
26.09.2017 செவ்வாய் கிழமை 
காலை 10 மணி 
செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டு செழுமை சேர்க்கவும்

Friday, September 22, 2017

CSC- தனியார்மயம்  

வாடிக்கையாளர் சேவை மையங்களை தனியார்மயமாக்குவதை குறித்த கொள்கை முடிவினை ஓர் அங்கீகரிக்கப்பட்ட சங்கத்துடன் பேசி அந்தசங்கமும் தனியார்மயத்தை ஏற்றுக்கொண்டுள்ளதாக அதனுடைய இணையத்தளத்தில் செய்தி வெளியிட்டுள்ளது. 
இதனை ஏற்றுக்கொள்ளமுடியாது . தனியார்மய முடிவினை கைவிட வலியுறுத்தி சி.எம்.டி அவர்களுக்கு பொதுச்செயலர் தோழர் சந்தேஷ்வர் சிங் கடிதம் கொடுத்துள்ளார். 
'பெரிய' அங்கீகாரசங்கத்தின் தூரோகச்செயலை முறியடிப்போம்.  

Wednesday, September 20, 2017

போனஸ் - CHQ செய்தி 

19.09.2017 அன்று பொதுச்செயலர் தோழர் சந்தேஸ்வர் சிங் செயலர்கள் எஸ்.கோபாலகிருஷ்ணன், குல்கர்னி ஆகியோர் நிர்வாகத்தை சந்தித்து  போனஸ் வழங்க உடனடியாக உத்தரவு வெளியிட உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கடிதம் கொடுத்துள்ளனர்.    

Thursday, September 14, 2017

                 ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு      
      

BSNL நிறுவனத்தில் உள்ள ஏறத்தாழ 66000 செல் கோபுரங்களைப் பிரித்து தனி துணை நிறுவனம் உருவாக்கிட 12/09/2017 அன்று பிரதமர் மோடி தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த துணை நிறுவனம் BSNLன் கட்டுப்பாட்டில் இருக்கும் என கூறப்பட்டுள்ளது.
அனைத்து செல் கோபுரங்களும் அனைத்து நிறுவனங்களும் பகிர்ந்து கொள்ளும் வகையில் பயன்படுத்திக் கொள்ளப்படும் என கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சங்கங்கள் தனித்தனி
போராட்டம்  என்பது நமது உயிரினும் மேலான BSNL நிறுவனத்தை காக்க உதவாது.

அனைத்து சங்கங்கள் ஒன்றிணைந்து  போராடினால்   மட்டுமே நாம் நமது  BSNL  நிறுவனத்தை காக்க முடியும்.
சுவர் இருந்தால்தான் சித்திரம் வரையமுடியும்.

Monday, September 11, 2017

செப்டம்பர் - 11

மகாகவி பாரதி நினைவு நாள்

மகாகவி பாரதி காரைக்குடி வந்தபோது எடுத்த புகைப்படம்...
உடன் தமிழ்க்கடல் ராய.சொக்கலிங்கம் 
எண்ணிலா  நோயுடையார்

இவர்.. எழுந்து நடப்பதற்கும் வலிமையிலார் ..

கண்ணிலாக் குழந்தைகள் போல்..

பிறர் .. காட்டிய வழியிற் சென்று மாட்டிக்கொள்வார்..

நண்ணிய பெருங்கலைகள்… 

பத்து   நாலாயிரங் கோடி

நயந்து நின்ற புண்ணிய நாட்டினிலே

இவர்    பொறியற்ற விலங்குகள் போல வாழ்வார்

நெஞ்சு பொறுக்குதிலையே..

இந்த… நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்

 ---------------------------------------------------------------------------------------------------------------------------------------

பாரதியின் வரிகள்

பாரத தேசத்தின் வலிகள்

பாரதியை நினைவுறுவோம்...

தாழ்ந்திடும்... பாரதத்தை.. 

மேரு செய்வோம்...

நன்றி: காரைக்குடி இணையதளம் 

Thursday, September 07, 2017 லங்கேஷ் வார இதழின்
  
முதன்மை ஆசிரியர்.

கவுரிலங்கேஷ்

இடதுசாரி சிந்தனையாளர்

ரத்த வெறி பிடித்த 

 காவிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார்.  

   இறந்த விலங்கிற்காக    

வாழும் மனிதனை கொள்வது,

காம களியாட்டம் ஆடும்  காவிகள்,
  
இளம்பெண்கள் பலாத்காரம்,
  
நிர்வாணமாக சாமிகள்,வாழும்
  
புதியஇந்தியாவை உருவாக்கும் 

காவிகளை தோலுரித்தவர்.

 முற்போக்கு எழுத்தாளர். 

 கவுரிலங்கேஷ் 

சுட்டுக்கொல்லப்பட்டார். .

Tuesday, September 05, 2017

சமூக பாதுகாப்புத்திட்டம்

BSNL 

BENEVOLENT FUND

சமீபகாலமாக நமது துறையில் அகால மரணங்கள் அதிகரித்து வருகின்றன. ஆண்டுதோறும் ஏறத்தாழ 1500 ஊழியர்களும்,
 100க்கும் மேற்பட்ட அதிகாரிகளும் மரணத்தை தழுவுவதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. அகால மரணங்களால் துன்பப்படும் குடும்பங்களுக்குத் தற்போதுள்ள ஆயுள் காப்பீட்டுத்திட்டத்தால் முழுமையான நிவாரணம் அளிக்க இயலவில்லை. 
ஊழியர்களுக்கு ஒரு லட்சமும், அதிகாரிகளுக்கு 3லட்சம்/5லட்சம் ஆயுள் காப்பீடாக வழங்கப்படுகின்றது. இன்றைய பணமதிப்பில் ஒரு லட்சம் என்பது மிகக்குறைந்த தொகையாகும். 

எனவே BSNL அதிகாரிகளுக்கும் ஊழியர்களுக்கும் முழுக்க முழுக்க அவர்களது பங்களிப்பில் நமக்கு நாமே என்ற சுய நிதி ஆதார அடிப்படையில் BENEVOLENT FUND - உருவாக்க நிர்வாகம் திட்டமிட்டிருந்தது. ஏற்கனவே சங்கங்களிடம் இதுபற்றி கருத்து கேட்கப்பட்டிருந்தது.  தற்போது அதற்கான ஒரு முன்வரைவை நிர்வாகம் வெளியிட்டு ஊழியர்களிடமும், சங்கங்களிடமும் 04/09/2017க்குள் கருத்து தெரிவிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது.

இந்த திட்டத்தைப் பற்றி நாம் சிந்திக்கும் முன்பாக
தற்போது LIC மூலமாக நடைமுறையில் உள்ள GSLIS என்னும்
ஆயுள் காப்பீட்டுத்திட்டம் இன்னும் விரிவுபடுத்தப்பட வேண்டும்.
ஊழியர்களுக்கான ஒரு லட்சம் என்பது 5 லட்சமாகவும்.
அதிகாரிகளுக்கு 6லட்சம்/10 லட்சமாகவும் உயர்த்தப்பட வேண்டும்.

மேலும் இந்த திட்டம் கருணை அடிப்படையிலான 
வேலைக்கு மாற்றா என்ற சந்தேகம் எழுகின்றது….
எனவே இந்த சந்தேகம் தீர்க்கப்பட வேண்டும்.
இந்த திட்டம் வயது வரம்பின் அடிப்படையில் 4 பிரிவுகளாக
21 முதல் 40 வரை
40 முதல் 50 வரை
50 முதல் 55 வரை
55 முதல் 60 வரை என பிரிக்கப்பட்டுள்ளது.

முதல் பிரிவான 21 முதல் 40 வரை என்பதில் முழுக்க முழுக்க
BSNLலில் பணியமர்த்தப்பட்ட ஊழியர்கள் மட்டுமே இருப்பார்கள்.

இவ்வாறு வயதை வைத்துப் பிரிப்பதற்குப் பதிலாக 
BSNL ஊழியர்கள்/DOT ஊழியர்கள் என பிரிக்கப்பட வேண்டும். ஏனெனில் DOT ஊழியர்களுக்கு குடும்ப ஓய்வூதியம் உண்டு. 
DCRG என்னும் பணிக்கொடை 20லட்சம் வரை உண்டு. 
ஆனால் BSNLலில் பணியமர்த்தப்பட்ட ஊழியர்களுக்கு 
குடும்ப ஓய்வூதியம் இல்லை. 
புதிய ஓய்வூதியத்திட்டம் அமுல்படுத்தப்பட்டாலும் 
அரசு ஓய்வூதியத்திற்கு இணையாக நிச்சயம் இருக்காது. 
மேலும் பணிக்கொடையின் அளவும் குறைந்த தொகையிலேயே உள்ளது. எனவே DOT ஊழியர்கள்/BSNL ஊழியர்கள் 
எனப்பிரிப்பதே சரியாக இருக்கும்.

55 வயதுக்கு மேற்பட்ட ஊழியர்களுக்கு 7லட்சம் நலநிதியாகவும்
21 முதல் 40 வரை உள்ள ஊழியர்களுக்கு 
14 லட்சம் நலநிதியாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

55 முதல் 60 வயது வரை உள்ள தோழர்களுக்குத்தான் 
குடும்ப பொறுப்புக்கள் கூடுதலாக இருக்கும்.
வயது முதிர்ந்த தாய்,தந்தையர்...
வயதுக்கு வந்த பெண்குழந்தைகள்...
வேலைவாய்ப்பு இல்லாத ஆண்பிள்ளைகள்...
இரத்த அழுத்தம், சர்க்கரை என நலிந்து போகும் தேகம்... 
அடிக்கடி உடல்நலம் கெடும் மனைவி...
ஊரைச்சுற்றிக் கடன்... 
என பலப்பல தொல்லைகள் துரத்தும் காலம் 55க்கு மேல்தான். 

தாமதத்திருமணம் LATE MARRIAGE செய்தவர்களுக்கு பிள்ளைகளைப் படிக்க வைக்க வேண்டிய காலமாகவும்...
அதன்பின் திருமணம் செய்து வைக்க வேண்டிய காலமாகவும் இருக்கும்.
எனவே 55 முதல் 60 வரையுள்ள ஊழியர்களுக்குத்தான கூடுதல் நலநிதி அளிக்கப்பட வேண்டும்.

மேலும் மாதந்தோறும் ரூ.500/600/700/800 
என்ற பங்களிப்பு கூடுதலான தொகையாகும். இந்த தொகையோ அல்லது ஒரு பகுதித்தொகையோ ஓய்வு பெறும்போது திருப்பிக்கிடைக்குமா என்பதும் சந்தேகமே.

ஊழியர்களுக்கு நல நிதி குறைந்த பட்சம் 7லட்சம் என்பதும்
அதிகாரிகளுக்கு நலநிதி அதிகபட்சம் 40 லட்சம் என்பதும் ஏற்புடையதல்ல

ஊழியர்களுக்கு 500 ரூபாய் பங்களிப்பாகவும்
அதிகாரிகளுக்கு 1000 ரூபாய் பங்களிப்பாகவும் நிர்ணயம் செய்யலாம்
ஊழியர்களுக்கு நலநிதி 30 லட்சம் எனவும்….
அதிகாரிகளுக்கு நலநிதி 40 லட்சம் எனவும் நிர்ணயம் செய்யலாம்

இதில் பணிக்கொடை அளவைக் கழித்து விட்டு 
மீதமுள்ள பணைத்தை பட்டுவாடா செய்யலாம். 
உதாரணமாக மரணமுற்ற ஊழியர் குடும்பம்  
16 லட்சம் பணிக்கொடை பெற்றால் 
மீதமுள்ள 14 லட்சம் நலநிதியாக வழங்கலாம்.

நலநிதி திட்டம் என்பது 
நல்லதொரு நமக்கு நாமே திட்டம்
இந்த திட்டம்  ஊழியர்களால் 
முழுமையாக விவாதிக்கப்பட வேண்டும்.
நாடு முழுவதும் சங்கங்களால் விவாதிக்கப்பட்டு
முழுமைப் படுத்தப்பட வேண்டும். 

ஒருவார கால அவகாசம் அளித்து விட்டு 
கருத்துக் கேட்பது அவசரக்கோலமாகவே முடியும்.

எண்ணித்துணிக கருமம் 
என்பது வள்ளுவன் வாக்கு….