Total Pageviews

Tuesday, December 24, 2019


அனைவருக்கும்

 கிருஸ்துமஸ் 

ல் 

வாழ்த்துக்கள்

Thursday, December 12, 2019


மதுரை வணிகப்பகுதியில்

மொத்தம் 606 தோழர்கள் எஞ்சியுள்ளனர்.

இவர்களில் பலர் 2020ம் ஆண்டு

பணிநிறைவு பெறப்போகின்றவர்கள்.

கேடர் வாரியாக எஞ்சியுள்ள ஊழியர் விவரம்.


மதுரை
காரைக்குடி
BELOW 50
ABOVE50
BELOW 50
ABOVE 50
PGM
0
1
0
0
DGM
0
1
0
0
EE
0
1
0
0
AGM/DE
1
2
0
1
SDE
23
9
4
2
JTO
61
3
43
0
CAO
0
3
0
0
AO
15
7
2
1
JAO
4
1
2
0
STENO
1
1
0
0
CLERK
46
42
6
5
JE
24
13
15
4
TT
18
124
3
40
DRIVER
0
4
0
1
ATT / T.Man
39
20
8
5
TOTAL
232
232
83
59

சங்கம் விட்டு சங்கம் மாறும் வசதி

           தற்போதுள்ள விதிகளின்படி BSNL ஊழியர்கள் 

ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் சங்கம் விட்டு சங்கம் 

மாற விருப்பம் தெரிவிக்கலாம். 31/01/2020 அன்று விருப்ப 

ஓய்வில் அதிக ஊழியர்கள் செல்லவிருப்பதால் இம்முறை 

சங்கம் மாறும் சடங்கை நிர்வாகம் தள்ளிப்போட்டுள்ளது. 

எனவே இந்த முறை  யாரும் சங்கம் விட்டு சங்கம் மாற 

இயலாது. மேலும் சங்கம் விட்டு சங்கம் மாறும் விருப்பத்தை 

தற்போது அதற்கான படிவத்தில் நிரப்பி நிர்வாகத்திடம் அளிக்க 

வேண்டும். ஆனால் வருங்காலங்களில் ஊழியர்கள் VRSக்கு 

விருப்பம் தெரிவித்தது போல் சங்கம் மாறுவதற்கான 

விருப்பத்தையும் தங்களது ESS இணையத்தின் மூலமாக 

தெரிவிக்கலாம் என நிர்வாகம் கருத்து தெரிவித்துள்ளது. இது 

தொடர்பாக சங்கங்கள் தங்களது கருத்தினை 10/12/2019க்குள் 

தெரிவிக்க வேண்டும் என நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது. 

இணையதள வசதி மூலம் விருப்பம் தெரிவிக்கும் முறைக்கு 

BSNLEU சங்கம் வழக்கம் போல் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

                      ESS இணையத்தின் மூலம் சங்கம்மாறிட விருப்பம் 

தெரிவித்தாலும் VRSல் கடைப்பிடிக்கப்பட்டதைப் போல PRINT 

OUT எடுக்கப்பட்டு அந்தப்  படிவத்தில் சம்பந்தப்பட்ட  ஊழியர்

அவரது மேலதிகாரி, மாறவிருக்கும் சங்கத்தின்  சங்க நிர்வாகி 

ஆகியோரின்  கையெழுத்து பெறப்பட வேண்டும் என்ற 

தற்போதைய  நடைமுறை பின்பற்றப்பட வேண்டும்.


SAMPANN மூலம் ஓய்வூதிய விண்ணப்பங்கள்

                        விருப்ப ஓய்வு ஊழியர்கள் SAMPANN மூலம் 

தங்களது விவரங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும் 

என சொல்லப்பட்டது. ஆனால் இன்னும் 

நடைமுறைப்படுத்தப்படவில்லை. BSNL மாநிலங்கள் 

மற்றும் SSAக்கள் DOTயின் SAMPANN இணையத்துடன் 

இணைக்கப்பட்டு விட்டன. இனி ஒவ்வொரு 

ஓய்வூதியருக்கும் உபயோகிப்பாளர் வசதி USER ID 

ஏற்படுத்தப்பட வேண்டும். இந்தப் பணி முடித்த 

பின்புதான் விருப்ப ஓய்வு ஊழியர்கள் SAMPANN மூலம் 

தங்களது விவரங்களைப் பதிவேற்றம் செய்ய முடியும். 

எண்ணிக்கை அதிக அளவில் இருப்பதால் இந்தப்பணி 

சற்று தாமதமாகவே நடைபெறும் என்று தெரிகிறது.


பதவி உயர்வும் ஒழுங்கு நடவடிக்கைகளும்

             ஒழுங்கு நடவடிக்கைக்கு உள்ளான 

அதிகாரிகளுக்கு 5 கட்டப்பதவி உயர்வு வழங்குவது 

பற்றி BSNL நிர்வாகம் 25/09/2019 அன்று விளக்கம் 

அளித்திருந்தது. அதன்படி பதவி உயர்வுத்தேதிக்குப் 

பின்பாக ஒழுங்கு நடவடிக்கை அமைந்திருந்தால் அது 

பதவி உயர்வைப் பாதிக்காது என நிர்வாகம் விளக்கம் 

அளித்திருந்தது. இந்த நடைமுறை ஊழியர்களுக்கும் 

அமுல்படுத்தப்பட வேண்டும் என சங்கங்கள் 

கோரிக்கை எழுப்பியுள்ளன.





நிதி ஒதுக்கீடு

        BHARAT  NET –II  திட்டச் செலவுகளுக்காக 1500 கோடி ரூபாயை 

BSNL மற்றும் BBNL நிறுவனங்களுக்கு DOT ஒதுக்கியுள்ளதாக 

பத்திரிக்கைச் செய்திகள் வெளியாகியுள்ளன. 


                  BSNLக்கு 750 கோடியும் BBNLக்கு 750 கோடியும்  USO 

நிதியில் இருந்து ஒதுக்கப்பட்டுள்ளது.  இரண்டு நிறுவனங்களின் 

பணியிலும் ஈடுபட்ட குத்தகைக்காரர்களுக்கு பலகோடி ரூபாய் 

பில்கள் பாக்கி இருந்தன
       

         குத்தகைக்காரர்கள்  DOT அதிகாரிகளைச் சந்தித்து 

தங்களது பிரச்சினையை எடுத்துக்கூறியதன் அடிப்படையில் 

மேற்கண்ட நிதி ஒதுக்கீடு நடந்துள்ளதாக செய்திகள் 

வெளியாகியுள்ளன. 


       மேலும் 3300 கோடி ரூபாய் வங்கிக்கடனும் இம்மாதம் BSNL 

நிறுவனத்திற்கு கிடைக்கும் எனவும் செய்திகள் கூறுகின்றன. 

எனவே டிசம்பர் மாதம் அனைத்துப் பில்களும், நிலுவைகளும் 

பட்டுவாடா செய்யப்படும் என எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. 


       ஊழியர்கள்  VRSல் செல்வதால் ஆண்டிற்கு 7000 கோடி 

செலவு குறையும் எனவும்,BSNLன் நிதிநிலை விரைவில் மேம்படும் 

எனவும் தகவல்கள் கூறுகின்றன.